என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • மணிப்பூர் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    தரங்கம்பாடி:

    மணிப்பூர் கலவரத்தை தடுக்கத் தவறிய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில் கிட்டப்பா அங்காடி அருகில்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்பா சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன், கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    கண்டன ஆர்ப்பாட்டத்தில் மகளிர் மற்றும் 2000 க்கும் மேற்பட்ட கழகத்தினர் பங்கேற்று நீதி வேண்டும் நீதி வேண்டும், மணிப்பூர் பெண்கள் மீது இழைத்த கொடுமைகளுக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தியும், மணிப்பூர் வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்.

    ஒன்றிய குழுத் தலைவர் காமாட்சி மூர்த்தி, ஆறுபாதி ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி, திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி, மகளீர் அணியினர் டெய்சி, சாந்தி உள்ளிட்ட திரளான மகளிர் அமைப்பினர் கலந்துகொண்டனர்.

    • சுற்றுலாத்துறை இணையதளத்தில் தங்கள் விபரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
    • தவறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்ட த்தில் சாகச சுற்றுலா உண்டு, உறைவிடம் முகாம் நடத்துபவர், முகாம் சுற்றுலா, முகாம் நடத்துபவர்கள், கேரவன் இயக்குபவர், கேரவன் சுற்றுலா நடத்துபவர் ஆகியோர் https://www.tntourismtors.com என்ற சுற்றுலாத்துறை இணையதளத்தில் தங்கள் விபரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

    மாவட்டத்தில் பதிவு செய்யாமல் இயங்கும் சுற்றுலா சார்ந்த தொழில் நிறுவனங்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பதிவு செய்வது மற்றும் வழிமுறைகள் குறித்த அரசாணை, மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மேலும் விபரங்களுக்கு: சுற்றுலா அலுவலகம், பூம்புகாரில் உள்ள மாவட்ட சுற்றுலா அலுவலரை தொடர்பு கொள்ளலாம் அல்லது 91769 95843 என்ற செல் நம்பரிலும், www.tourismpoompuhar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பரதநாட்டிய மாணவிகள் புஷ்பாஞ்சலி, காவடி சிந்து உள்ளிட்ட நடனமாடினர்.
    • ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் மயிலை சப்தஸ்வரங்கள் சார்பில் பரதநாட்டிய சலங்கை பூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில் 10க்கும் மேற்பட்ட மாணவிகளின் அரங்கேற்றம் நடைபெற்றது. இதில் ராகமாலிகா, சண்முகப்பிரியா, நாட்டை, ஆனந்தபைரவி உள்ளிட்ட ராகங்களில் பரதநாட்டிய மாணவிகள் நிகழ்த்திய புஷ்பாஞ்சலி, காவடி சிந்து, தில்லானா உள்ளிட்ட நடனங்கள் பார்வை யாளர்களை வெகுவாக கவர்ந்தது.

    இதில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெ ருமாள், ஒன்றிய குழுத் தலைவர் காமாட்சி மூர்த்தி, உள்ளிட்ட ஏராளமான பார்வை யாளர்கள் கலந்து கொண்டு பரதநாட்டியத்தை கண்டு ரசித்தனர்.

    • தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை நேரில் பார்வையிட்டார்.
    • அரிசி, காய்கறிகள், வேட்டி, புடவை போன்றவற்றை வழங்கினார்.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஒன்றியம், மாதானம் ஊராட்சியில் செருகுடி தியாகராஜன், ஆராயி , பாஸ்கரன் ஆகியோர்களின் வீடு மின்கசிவு காரணமாக முழுவதும் தீபற்றி எரிந்து அனைத்து பொருட்களும் சேதம் அடைந்துவிட்டது.

    தகவல் அறிந்த கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய அறிமுக செயலாளர் நற்குணன் , தீப்பற்றி எரிந்த வீடுகளை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ5000 பணமும், ஒன்றிய குழு உறுப்பினர் தமிழரசி ரூ.2000 பணமும் நிவாரண பொருட்களாக அரிசி, காய்கறிகள், வேட்டி, புடவை, பாய் போன்றவைகள் வழங்கினார்கள்.

    உடன் மாவட்ட மீனவர் அணி செயலாளர் நாகரத்தினம் பொறுப்பாளர்கள் சொக்கலிங்கம்,பாஸ்கரன், பூவராகவன், ஒன்றிய இளைஞரணி தலைவர் உத்திர.ராஜேஷ், பங்கேற்றார்.

    • மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த அம்பேத்கர் நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் அருண்ராஜ் (வயது 24). இவர் நேற்று இரவு சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்த மர்மநபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டியும், கம்பியால் தாக்கியும் தப்பித்து சென்றுள்ளனர்.

    தலை மற்றும் உடலில் பலத்த வெட்டு காயங்களுடன் கீழே சரிந்த அருள்ராஜை அருகிலிருந்தவர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    இது குறித்து சீர்காழி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவத்திற்கான காரணம் தெரிய வில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இளைஞரை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • சீதளாதேவி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
    • சீதளாதேவி மாரியம்மன் வளையல் அலங்காரத்தில் வீதிஉலா நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, ஆக்கூரில் பழமை வாய்ந்த சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் உள்ளது. இவ்வாலயத்தில் திருமண வரம் வேண்டுபவர்களுக்கு திருமணத்தடை நீக்கியும், குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் தந்தும் பக்தர்கள் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றி தருபவளாக ஸ்ரீதளா தேவி மாரியம்மன் விளங்குவதால் ஆக்கூர் சுற்றுவட்டாரப் பகுதியின் பல்வேறு கிராமத்தினர் தங்கள் குல தெய்வமாக பாவித்து வணங்கி வருகின்றனர்.

    பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆடிப்பூர வளையல் திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு சீதளாதேவி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

    தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல வண்ண நிறத்தில் பல்லாயி ரக்கணக்கான வளைய ல்கள் அணிவித்து ஸ்ரீசீதளாதேவி மாரியம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். தொடர்ந்து ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் வளையல் அலங்காரத்தில் வீதி உலா காட்சி நடைபெற்றது. வழிநெடுகம் பக்தர்கள்தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    அரசு பள்ளி மாணவன் மாவட்டத்தில் 2-ம் இடம் பிடித்து வெற்றி பெற்றார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட அளவில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் என்ற வகையில் தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழர் கலைஞரின் சுவடுகள்"என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடைபெற்றது.

    மாவட்ட அளவில் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட கட்டுரை போட்டியில் கொள்ளிடம் துளசேந்திரபுரம் அரசு பள்ளி 12-ம் வகுப்பு சந்தபடுகை கிராமத்தைச் சேர்ந்த மாணவன் முருகன் மாவட்டத்திலேயே 2-ம் இடம் பிடித்து வெற்றி பெற்றார்.

    இவருக்கு மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி கலந்து கொண்டு மாணவர் முருகனுக்கு 2-ம் பரிசான ரூ. 7000 ரொக்கம் மற்றும் சான்றிதழை வழங்கினார்.

    வெற்றி பெற்ற மாணவர் முருகனை பள்ளி தலைமை ஆசிரியர் மல்லிகா, பெற்றோர் ஆசிரியர் தலைவர் தட்சிணாமூர்த்தி, தமிழ் ஆசிரியர் சாமிநாதன் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

    • ஆடிப்பூர திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • மேளதாளங்கள் முழங்க சிறப்பு அலங்காரத்தில் அபிராமி அம்மன் தேரில் எழுந்தருளினார்.

    தரங்கம்பாடி:

    திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனுறை அமிர்தகடே ஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நிகழாண்டு ஆடிப்பூர திருவிழா கடந்த 13 ஆம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் வீதி உலா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதனைத் தொடர்ந்து 9 ஆம் நாள் நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது . பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கையோடு ஸ்ரீஅபிராமி எழுந்த ருளினார்.

    இதனையடுத்து மேல வீதியில் இருந்து தேர் புறப்பட்டு வடக்கு வீதி, கீழவதி, தெற்கு வீதி வழியாக வலம் வந்து மீண்டும் மேலவீதியில் நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இதில் தி.மு.க. செம்பை மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் செந்தில், கட்டளை தம்பிரான் சாமிகள், கோவில் கண்காணிப்பாளர் மணி, உள்துறை கண்கா ணிப்பாளர் விருத்தகிரி, கோவில் காசாளர் களியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 108 கலசாபிஷேகம் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • 100 கிலோ மலர்களை கொண்டு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

    சீர்காழி:

    சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த மே மாதம் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.

    இதனை தொடர்ந்து மண்டலபிஷேகம் பூர்த்தி விழா மூன்று நாட்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நிறைவு நாளான நேற்று காலை முத்து சட்டநாத சுவாமிக்கு 108 கலசாபிஷேகம் சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக எதாஸ்தானத்தி லிருந்து முத்து சட்டை நாதர் சுவாமி புறப்பாடாகி உற்சவம் மண்டபம் எழுந்தருளி சிறப்பு ஆராதனை நடந்தது.

    பின்னர் இரவு சிறப்பு அலங்காரத்தில் குத்து சட்டை நாதர் சுவாமி எதார்த்தம் எழுந்தருளும் நிகழ்வு நடந்தது . தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு நாதஸ்வர மேளக்கச்சே ரியுடன் சுவாமி பிரகார விழா நடந்தது .

    தொடர்ந்து முத்து சட்டை நாதர் சுவாமி சதாஸ்தானம் எழுந்தருளி 100 கிலோ மலர்களைக் கொண்டு புஷ்பாஞ்சலி நடைபெற்று, பின்னர் மகா தீபாராதனை நடந்தது.

    இதில் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், திருவாரூர் எஸ்.பி. சுரேஷ்குமார், தொழி லதிபர் மார்கோனி சியாமளா, பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலர் முரளிதரன், திருக்கோயில்கள் பாதுகாப்பு பேரவை செய லாளர் பாலசுப்பிரமணியன், ஆசிரியர் கோவி.நடராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • விவசாயிகளுக்கு மானியத்தில் ரசாயன உரங்கள் மற்றும் இடுபொருள்கள் வழங்கப்பட்டது.
    • பொம்மலாட்டம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாங்கூரில் வேளாண்மை துறை சார்பில் குருவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடுபொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் தலைமை வகித்தார். சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் முன்னிலை வைத்தார் துணை வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.

    சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ரசாயன உரங்கள் மற்றும் இடுபொருள்கள் தென்னங்கன்றுகள் வழங்கி பேசினார். தொடர்ந்து பொம்மலாட்டம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

    விழாவில் உதவி வேளாண்மை அலுவலர்கள் விஜய அமிர்தராஜ், தமிழரசன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் பார்கவி, ராமன், வேதை ராஜன், அலெக்சாண்டர், தொழில் நுட்ப வல்லுனர்கள் ராஜசேகர், சவுந்தரராஜன், பயிர் அறுவடை பரிசோதனையாளர்கள் விஜய் சாரதி, கோபி, மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன் ஊராட்சித் தலைவர் சுகந்தி நடராஜன் ஒப்பந்தக்காரர் பழனிவேல் கலந்து கொண்டனர்.

    • ஆடி உற்சவம் கடந்த 12-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    • பக்தர்கள் காவடி, பறவை காவடிகள் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை வந்தடைந்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி விளந்தி டசமுத்திரம் பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி மாதம் 10 நாட்கள் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு கடந்த 12-ம் தேதி காப்பு கட்டி உற்சவம் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று தீமிதி உற்சவம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு சீர்காழி மணிகூண்டு மங்கைய ர்க்கரசி விநாயகர் கோயிலில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்கள் எடுத்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

    அதேபோல் அலகு காவடி, பறவை காவடிகள் எடுத்து பக்தர்கள் முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை சென்றடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கோயிலில் பத்திரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் தீபாராதனை காட்ட ப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    • 10 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
    • விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி கடைசி நாளாகும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    மயிலாடுதுறை மாவட்ட திட்ட செயலாக்க அலகு, வாழ்வாதார திட்ட பணிகள் மேற்கொள்வதற்கு செம்பனார்கோயில், சீர்காழி, மயிலாடுதுறை, குத்தாலம் ஆகிய வட்டாரங்களில் காலியாக உள்ள 10 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இப்பணிகளுக்கு 28 வயதுக்கு மிகாமல் உள்ள பட்டதாரிகள் விண்ண ப்பிக்கலாம். MS-Office 3 மாத காலத்திற்கு படித்திருக்க வேண்டும் (சான்றுடன்), கணினி அறிவியலில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    வாழ்வாதார திட்டப்பணிகள் குறித்து 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    அதே வட்டாரத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

    எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு மூலம் விண்ணப்ப தாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி கடைசி நாளாகும், அதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது.

    விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு நடைபெறும் தேதி கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.

    விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: –

    திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், கச்சேரி ரோடு, ஆர்.டி.ஓ. அலுவலகம் பின்புறம், மயிலாடுதுறை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×