தனியார் பஸ் மோதி டாஸ்மாக் சூப்பர்வைசர் பலி

மயிலாடுதுறையில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஒரு தனியார் பஸ் சென்றது. அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
பலியான இளங்கோவன்.
பலியான இளங்கோவன்.
Published on

தரங்கம்பாடி:

தரங்கம்பாடி அருகே இலுப்பூர் கிராமம், அரசலங்குடியைச் சேர்ந்தவர்

இளங்கோவன் (வயது 49). இவருக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ளது

இவர் பூம்புகாரில் உள்ள டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் மயிலாடுதுறையில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஒரு தனியார் பஸ் சென்றது.

இந்த பஸ் அரும்பாக்கம் அருகே சென்ற போது இளங்கோவன் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் இளங்கோவன் படுகாயம் அடைந்தார்.

உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இச்சம்பவம் குறித்து பெரம்பூர் காவல் நிலைய போலீசார்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com