மாரத்தான் போட்டியில் பள்ளி மாணவன் சாதனை

மாரத்தான் போட்டியில் மாணவன் விஷ்வா முதலிடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவனுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாணவனுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
Published on

தரங்கம்பாடி:

தஞ்சாவூர் அத்லடிக் அசோசியேட் மற்றும் கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி இனணந்து நடத்திய பசுமை பூமி கும்பகோணம் மாரத்தான் போட்டி நடைப்பெற்றது.

இதில் 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 8-மாணவர்கள் பங்கேற்றனர். அதில் 12ஆம் வகுப்பு மாணவன் வி. விஷ்வா முதலிடத்தில் வெற்றி பெற்று ரூபாய். 5,000 மற்றும் சான்றிதழ் பரிசாக பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவனையும் உடற்கல்வி ஆசிரியர்களையும் ஆட்சிமன்றக்குழுத் துணைத்தலைவர்கள் பேராசிரியர் முருகேசன், ஞானசேகரன் ஆட்சிமன்றக்குழு செயலர் எஸ். பாஸ்கரன் நிர்வாகச் செயலர் வி.பாஸ்கரன் , பொருளாளர் சுப்பிரமணியன் முதல்வர் சரவணன் மற்றும் இருபால் ஆசிரியர் பெருமக்களும் வாழ்த்தினை தெரிவித்தார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com