என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • மத சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்தும் இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
    • விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சி மற்றும் அமைப்பினர் பங்கேற்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சி மற்றும் அமைப்பினர் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

    தமிழகத்தில் வன்முறையை தூண்டி பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் அமைப்புகளைக் கண்டித்தும், மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும், தலித், பழங்குடியின மக்கள் மற்றும் மத சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்தும் இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையம் அருகில் காந்திஜி சாலையில் நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.சீனிவாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    இதில், ராஜகுமார் எம்.எல்.ஏ, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    • மயிலாடுதுறை மாவட்டத்தில் புத்தகத் திருவிழா தொடங்கி வைக்கப்படுகிறது.
    • இப்புத்தக்கண்காட்சியில் 60-–க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள்அமைக்கப்ட்டுள்ளன.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம், ஏ.வி.சி திருமண மண்டபத்தில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளார்கள் சங்கம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழாவினை் மாவட்ட கலெக்டர் கலெக்டர் லலிதா முதல் புத்தக விற்பனையை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    முதலமைச்சர் உத்தரவு்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் புத்தகத் திருவிழா தொடங்கி வைக்கப்படுகிறது. இப்புத்தக்கண்காட்சியில் 60-–க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள்அமைக்கப்ட்டுள்ளன.

    வாசிப்பு ஒன்றே நம் வாழ்வை மேம்படுத்தும்.

    பார்வையைவி சாலப்படுத்தும் மனிதனை மனிதனாகவும், சாதாரண மனிதனை சாதனை மனிதனாகவும் மாற்றவல்லது வாசிப்பு ஒன்றே.

    "ஒரு நூலகம்திறக்கப்படும் பொழுது 100 சிறைச்சா லைகள் மூடப்படுகிறது" என்பார் சுவாமி விவேகானந்தர்.

    இன்று இங்கு நூற்றுக் கணக்கான நூலகங்கள் போல் இப்புத்தகத் திருவிழாதுவக்கப்படுகிறது.

    இதை பயன்படுத்தி நம் அறிவை ஆற்றலை மேம்படுத்திக்கொள்வது நமது கடமை.

    உங்கள் விட்டுப்பிள்ளைகளைத் தவறாது அழைத்து வந்து, கையில் காசு கொடுத்து அவர்கள் விரும்புகின்ற புத்தகங்களை வாங்க செய்யுங்கள்.

    'புதிதாக மலர்ந்திருக்க மயிலாடுதுறை மாவட்டம் புத்தகத் திருவிழா மூலம்புதிய வரலாறு படைக்க வேண்டும்'நூலகத்தில் அதிக நேரம் செலவளித்தால் அறிவு வளரும்.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் நிவேதா எம்.முருகன், பன்னிர்செல்வம், ராஜகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், ஒன்றியக்குழுத்தலைவர்கள் காமாட்சி மூர்த்தி (மயிலாடுதுறை), கமலஜோதிதேவேந்திரன் (சீர்காழி), ஜெயபிரகாஷ் (கொள்ளிடம்), மகேந்திரன்(குத்தாலம்), சீர்காழி நகரமன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி, ஊரக வளர்ச்சி(ம) ஊராட்சிகள் துறை இணை இயக்குநர்முரு கண்ணன்இணைஇயக்குநர் (வேளாண்மை) சேகர் உதவிஆணையர் (கலால்) கோ.அர.நரேந்திரன், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) மஞ்சுளா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முத்தமிழ்செல்வன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (வேளாண்மை) ஜெயபால், ஜெ.பாலாஜி (பொது), துணைப்பதிவாளர் (கூட்டுறவு) ராஜேந்திரன், நாகப்பட்டினம் மாவட்ட நூலகர் ராஜேந்திரன், மற்றும் முன்னால் எம்.எல்.ஏ ஜெகவீரபாண்டியன், ஏ.வி.சி கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவி்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கொள்ளையன் வீட்டின் எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் கொண்ட கதவை உடைத்து உள்ளே நுழைந்து பீரோக்களை உடைத்து. கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளான்.
    • இரவு ரோந்து சென்ற காவல்துறை வாகனம் சைரன் சத்தம் கேட்டு முயற்சியை கைவிட்டு தப்பி ஓடிவிட்டான்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே சேந்தங்குடி கூட்டுறவு நகரை சேர்ந்தவர் ஜான் விக்டர் (64).தனியார் பாரா மெடிக்கல் கல்லூரி நடத்தி வருகிறார். இவரது மகன் சார்லஸ் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று ஜான் விக்டர் அவரது மனைவி ரோஸ்மேரி மற்றும் மருமகள் அரசி பேரக்குழந்தைகள் ஆகியோருடன் பட்டுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர்

    இந்நிலையில் கொள்ளையன் பூட்டி இருந்த வீட்டின் எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் கொண்ட கதவை உடைத்து வீட்டின் உள்ளே நுழைந்து பீரோக்களை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளான்.

    இந்நிலையில், இரவு ரோந்து சென்ற காவல்துறை வாகனம் சைரன் சத்தம் கேட்டு முயற்சியை கைவிட்டு தப்பி ஓடிவிட்டான்.

    மதியம் வீட்டிற்கு வந்த பணியாட்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து ஜான் விக்டருக்கு தகவல் அளித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் சிறப்பு பிரிவு போலீசார் ஜான் விக்டர் வீட்டுக்கு உடனடியாக சென்று விசாரணையில் ஈடுப்பட்டனர்.

    இதனிடையே வெளியூர் சென்றிருந்த ஜான் விக்டரும் உடனடியாக புறப்பட்டு தனது வீட்டிற்கு வந்தார்.

    அதிர்ச்சியுடன் வீட்டின் உள்ளே சென்று நகை பணம் கொள்ளை போகியுள்ளதா என்று பார்த்தபோது இரண்டு அறைகளை உடைத்து இருந்த திருடன் நகை பணம் உள்ள அறையினை உடைக்காமல் சென்றது தெரிய வந்தது.

    அந்த அறைகளில் சுமார் 70 பவுன் தங்க நகை மற்றும் ரொக்க பணம் இருந்தது என ஜான் விக்டர் தெரிவித்தார்.

    கொள்ளையன் மாஸ்க் மற்றும் கையுறைகள் அணிந்து வீட்டில் நுழையும் காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது இதனை கைப்பற்றி சீர்காழி போலீசார் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.

    • இந்து மேனிலைப்பள்ளியில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறந்து.
    • மாணவ, மாணவிகளுக்கு புத்தகம், நோட்டுகள், பள்ளி சீருடை அரசு வழங்கிய பொருட்களை வழங்கினார்.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளியில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறந்து 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகம், நோட்டுகள், பள்ளி சீருடை ஆகிய விலையில்லா அரசு வழங்கிய பொருட்களை உதவி தலைமை ஆசிரியர்கள் எஸ்.முரளிதரன், என்.துளசி ரங்கன், ஏ.வரதராஜன் முன்னிலையில், பள்ளி தலைமையாசிரியர் எஸ்.அறிவுடைநம்பி வழங்கினார்.

    பொறுப்பாசிரியர் ஜே.கண்ணன், உடற்கல்வி ஆசிரியர்கள் டி.முரளி, பி.மார்க்கண்டன், ச.ஹரிஹரன், ரராகேஷ் ஆகியோர் விலையில்லா பொருட்களை வழங்கும் ஏற்பாட்டினை செய்தனர்.

    • நீட் தேர்வில் சிறப்பு பெற்ற மாணவருக்கு பாராட்டு.
    • ரெயில் நிலையத்தில் தவறவிட்ட பணத்தை அலுவலரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனரை பாராட்டி பரிசளித்தார்.

    சீர்காழி:

    சீர்காழியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

    சீர்காழியில் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    மாநில துணை தலைவர் ராஜாராமன், மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம், மாவட்ட செயலாளர் (கடலூர்) சண்முகம், தேவார ஆசிரியர் ரத்தினசபாபதி ஓதுவார், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். சீர்காழி கிளை தலைவர் கோவிந்தராஜன் வரவேற்றார்.

    இதில் மாநில தலைவர் பண்ணை. சொக்கலிங்கம் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றி, 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு தொகை மற்றும் நீட் தேர்வில் சிறப்பு பெற்ற மாணவருக்கு பாராட்டு மற்றும் புகைவண்டி நிலையத்தில் தவறவிட்ட ரூ.62 ஆயிரத்து 500 பணத்தை நிலைய அலுவலரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர் சரவணன் ஆகியோரை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

    தொடர்ந்து 80 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு கவுரவிப்பு நிகழ்வு நடந்தது.

    இதில் சங்கத்தை சேர்ந்த கார்த்திகேயன், கார்த்தி, இளங்கோவன், சவுந்தரபாண்டியன் மற்றும் சீர்காழி, ஆச்சாள்புரம், குளத்தின்ங்கநல்லூர், கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு கிளை சங்க நிர்வாகிகள், பொறு ப்பாளர்கள் பலர் பங்கேற்றனர்.

    • வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க முதல்வர் வேட்பாளராக ராமதாஸை முன்னிறுத்த உள்ளோம்.
    • ராஜராஜசோழன் இந்துவாக இருந்தால் என்ன, மராட்டியராக இருந்தால் என்ன.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வன்னியர் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பாக்கம்.சக்திவேல் தலைமை வகித்தார்.வன்னியர் சங்க மாநில செயலாளர் தங்க.அய்யாசாமி, பாட்டாளி மக்கள் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சித்தமல்லி. பழனிச்சாமி, மாவட்ட தலைவர் அன்பழகன், முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் ஐயப்பன், முன்னாள் சமூக முன்னேற்ற சங்கத் தலைவர் மணி, மாநில செயற்குழு உறுப்பினர் தேனூர்.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

    வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் துரை.முத்து வரவேற்றார்.

    இக்கூட்டத்தில் மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    அப்போது பேசிய அவர் வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ம.க முதல்வர் வேட்பாளராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் முன்னிறுத்தி நாங்கள் தேர்தலை சந்திக்க உள்ளோம். ஆகவே நாங்கள் இப்பொழுதே பிரச்சாரத்தை தைரியமாக துவங்குவோம்.

    வன்னியர்களுக்கான 10.5சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு ராமதாஸ் அறிவிக்கும் அனைத்து போராட்டங்களையும் முன்னெடுப்போம் என்றார்.

    மேலும் ராஜராஜ சோழன் இந்துவாக இருந்தால் என்ன, மராட்டியராக இருந்தால் என்ன.

    சோழன் நாட்டை ஆண்டான்.

    அவர் இந்துவா என்ற சர்ச்சையை ஏன்? கிளப்ப வேண்டும்.

    கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு உபரி நீர் சென்று கடலில் கலந்தது அதனைப் பற்றி யாரும் பேசவில்லை.

    ராஜராஜ சோழன் இந்துவா என்று ஏன் பேச வேண்டும் என்றார்.

    நிறைவில் சீர்காழி நகர வன்னியர் சங்க தலைவர் வினோத்குமார் நன்றி கூறினார்.

    • மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவைகளை மனுக்களாக அளிக்கலாம்.
    • தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;-

    மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், வருவாய் வட்டாட்சியர்கள், சமூக பாதுகாப்பு வட்டாட்சியர்கள், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள், இணை இயக்குநர் சுகாதாரபணிகள் ஆகிய துறைகளை கொண்டு மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் வருகின்ற 13.10.2022 அன்றுகாலை 11 மணிஅளவில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகவளாகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மாற்றுத்தி றனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

    மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவையை மனுக்களாக அளிக்கலாம்.

    மேலும் இது நாள் வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் தாங்கள் மாற்றுத்தி றனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அனைத்து பக்கங்களின் நகல் மற்றும் மருத்துவ சான்றுநகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் அளிவிலான தற்போதைய போடடோ 1, கைப்பேசி எண், ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் புத்தகத்திருவிழா.
    • புத்தக திருவிழா நாளை தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடைபெறவுள்ளது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் இரா.லலிதா செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

    மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் ஏ.வி.சி.திருமண மண்டபத்தில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் புத்தகத்திருவிழாவை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நாளை 10-ந்தேதி மாலை 4 மணியளவில்திறந்து வைக்கிறார்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் இரா.லலிதாதலைமை வகிக்கிறார் ராமலிங்கம் எம்.பி முன்னிலை வகிக்கிறார்.எம்.எல்.ஏக்கள் நிவேதா. எம்.முருகன்,பன்னீர்செல்வம்,.ராஜகுமார், ஏ.வி.சி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிநீதியரசர் கே.வெங்கடராமன்(ஓய்வு), எஸ்.பி நிஷா, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர்ச.உமாமகேஸ்வரி, நாகப்பட்டினம் மாவட்ட நூலகர் ராஜேந்திரன், மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ்வ ரவேற்புரை ஆற்றுகிறார். இணை இயக்குநர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை முருகண்ணன் நன்றி கூறுகிறார்.

    இப்புத்தகத் திருவிழாவானது 10.10.2022 முதல் 20.10.2022 வரை காலை 11 மணிமுதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 500-க்கும் மேற்பட்ட பழமரக்கன்றுகள் நடப்பட்டு கூண்டு வைத்து பராமரிக்கும் பணி நடைபெற்றது.
    • செம்பனார்கோயில், குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் 2600 மரக்கன்றுகள் நட தீர்மானம்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த கன்னியாக்குடி கிராமத்தில் அரசு மனநல காப்பகம் அமையவுள்ள வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஒரு வீட்டிற்கு மூன்று மரக்கன்றுகள் என்ற அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சீர்காழி ஒன்றிய ஆணையர் இளங்கோவன் தலைமை வகித்தார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஒன்றிய பொறியாளர் கலைசெல்வன், ஒரு வீட்டிற்கு மூன்று மரக்கன்றுகள் அமைப்பினை சேர்ந்த யாமினிஅழகுமலர் முன்னிலை வகித்தனர். சீர்காழி கோட்டாட்சியர் உ.அர்ச்சனா பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு துவக்கிவைத்தார்.

    தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட பல்வேறு பலன் தரும் பழமரக்கன்றுகள் ஒரேநாளில் நடப்பட்டு கூண்டு வைத்து பராமரிக்கும் பணி நடைபெற்றது. இந்த அமைப்பு சார்பில் மயிலாடுதுறை, கொள்ளிடம், செம்பனார்கோயில், குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் 2600மரக்கன்றுகள் நட தீர்மானிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    • கடல் நீர் புகுந்து குடிநீர் ஆதாரமும், விவசாயமும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
    • லாரியில் ஏற்றப்பட்டிருந்த மண்ணை மீண்டும் அங்கேயே கொட்டிச் செல்ல அறிவுறுத்தினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நெய்தவாசல் கிராமத்தில் தனியார் சவுடு குவாரி கடந்த இரு தினங்களாக இயங்கி வருகிறது.

    அரசின் கனிம–வளத்துறை, மாசுக்–கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெற்ற நிலையில் ஊராட்சியின் அனுமதி பெறாமல் கிராம மக்களிடம் எவ்வித பேச்சுவார்த்தையையும் செய்யாமலும் கிராமத்தின் அருகிலேயே பல அடி ஆழத்திற்கு சவுடு மண் எடுத்து வருகின்றனராம்.

    இதனால் கடல் நீர் உட்புகும் ஆபத்து உள்ளதாக கூறுகின்றனர். ஏற்கனவே இப்பகுதியில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிய நிலையில் எஞ்சிய பகுதிகளிலும் கடல் நீர் புகுந்து குடிநீர் ஆதாரமும், விவசாயமும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    எனவே இப்பகுதியில் சவுடு குவாரி இயங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து நெய்தவாசல், புதுகுப்பம், கடைக்காடு, மடத்துக்குப்பம், வடபாதி, தென்பாதி உள்ளிட்ட ஏழு கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் சவுடுமண் குவாரியை தடுத்து நிறுத்தி லாரி மற்றும் மண் எடுக்க பயன்படுத்திய ஹிட்டாச்சி இயந்திரங்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் லாரியில் ஏற்றப்பட்டிருந்த மண்ணை மீண்டும் அங்கேயே கொட்டிச் செல்லவும் அறிவுறுத்தினர். மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்கள் கிராமங்களை பாதுகாக்க கோரி தனியார் சவுடு குவாரியை தடை செய்ய வலியுறுத்த உள்ளதாகவும் அதுவரை சவுடு மண் குவாரி இயங்கக் கூடாது எனவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

    இதனை அடுத்து பேச்சுவார்த்தை நடத்திய பூம்புகார் போலீசார் மாவட்ட ஆட்சியரை கிராம மக்கள் சந்திக்கும் வரை மண் எடுக்க வேண்டாம் என சவுடு குவாரி தரப்பினரிடம் எச்சரித்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அனைவரையும் கலைந்து போக அறிவுறுத்தினர். லாரி மற்றும் ஹிட்டாச்சி இயந்திரங்களை 7 கிராம மக்கள் சிறைபிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மூன்று மாதத்திற்குள் கட்டுமான பணிகள் முடிந்து நெல் சேமிப்பதற்கு ஏதுவாக அமையும்.
    • ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்கருகாவூர், வடகால், எடமணல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    அப்பொழுது திருகருக்காவூரில் இயங்கி வரும் அங்கன்வாடிக்கு சென்று அங்கன்வாடி குழந்தைகளிடம் ஒன்று, இரண்டு சொல்ல சொல்லி கேட்டு குழந்தைகளை தட்டிக் கொடுத்தார்.

    மேலும் இதைத்தொடர்ந்து எடமணலில் புதிதாக கட்டப்பட்டு வரும் 25 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளவுக் கொண்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான நெல் சேமிப்பு புதிய கிடங்கின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது கலெக்டர் லலிதா கூறும்போது, எடமணலில் உள்ள 25 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கின் கட்டுமான பணிகளை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    மூன்று மாதத்திற்குள் கட்டுமான பணிகள் முடிந்து நெல் சேமிப்பதற்கு ஏதுவாக அமையும் என்றார்.

    பின்னர் எடமணல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று மரக்கன்றுகளை நட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு நோயாளியிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

    ஆய்வின் போது கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பலராமன், பூரண சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா செல்வராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர் சுகன்யா பிரேம், தன்னார்வலர் யாமினி அழகு மலர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் வளைகோல் பந்து முதலிடம்.
    • 19 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் கூடைப்பந்து முதலிடம், பூப்பந்து முதலிடம்.

    சீர்காழி:

    சீர்காழியில் தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிளான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் சுமார் 57 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இப்போட்டிகளில் 125 ஆம் ஆண்டுகள் கல்வி பணியாற்றி இவ்வாண்டு விழாக்காணும் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளி மாணவ.-மாணவிகள் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 17 பதக்கங்களும், 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 25 பதக்கங்களும், 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 42 பதக்கங்களும் பெற்று 171 புள்ளிகள் பெற்று இப்பள்ளி மாணவ -மாணவிகள் சாதனை படைத்தனர்.

    குழுப்போட்டிகளில் 14 வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவில் வளைகோல்பந்து இரண்டாம் இடம், கபடி போட்டி முதலிடம், கால்பந்து இரண்டாம் இடம், மாணவிகள் பிரிவில் கூடைபந்து முதலிடம், வளையபந்து இரண்டாம் இடமும், 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் வளைகோல் பந்து முதலிடம், கூடைபந்து இரண்டாம் இடம், கபடி போட்டி முதலிடம், கால்பந்து இரண்டாம் இடம், மேசைபந்து முதலிடம். மாணவிகள் பிரிவில் கூடைபந்து முதலிடம், வளையபந்து போட்டியில் முதலிடமும் பெற்றனர்.

    19 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் வளைகோல் பந்து இரண்டாம் இடம். கூடைப்பந்து முதலிடம், பூப்பந்து முதலிடம்.

    மாணவிகள் பிரிவில் கூடைப்பந்து முதலிடம், வளையப்பந்து முதலிடம், பூப்பந்து முதலிடம் பெற்று பள்ளிக்கு சிறப்பு சேர்த்த மாணவ, மாணவிகளையும் பயிற்றுவித்த உடற்கல்வி இயக்குநர் முரளிதரன் உடற்கல்வி ஆசிரியர்கள் முரளி, பி.மார்கண்டன், .சக்திவேல், .ஹரிஹரன், .ராக்கேஷ் ஆகியோரை பள்ளி செயலர் ராமகிருஷ்ணன், முன்னாள் செயலர் பாலசுப்ரமணியன், பள்ளி குழுதலைவர்.சொக்கலிங்கம், பள்ளி தலைமையாசிரியர் அறிவுடைநம்பி, உதவித்த லைமை ஆசிரியர்கள்.துளசிரெங்கன், . வரதராஜன் மற்றும் பள்ளி ஆசிரியரிகள், ஆசிரியைகள், அலுவலர்கள் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    ×