என் மலர்
மயிலாடுதுறை
- காலை, மாலை இரு வேளைகளிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை.
- சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை.
சீர்காழி:
கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் ரங்கநாயகி உடனாகிய பாலவடரங்கநாதர் கோயில் உள்ளது.
இந்த கோவிலில் நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு பால வடரங்கநாதர் மற்றும் ரங்கநாயகிக்கு காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து அங்குள்ள ஆஞ்சநேயர், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சார்பில் கோவில் அர்ச்சகர் ரமேஷ்ஐயர் செய்திருந்தார்.
- மணல் காற்றில் பறப்பதால் பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
- பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சில இடங்களில் விபத்துகளும் நடந்து வருகிறது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே மாதிர வேலூர், பாலுரான்படுகை பகுதிகளில் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது.
இங்கிருந்து தினமும் பல லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் விழுப்புரம்- நாகப்பட்டினம் நான்கு வழி சாலை விரிவாக்க பணிக்கு மணல் எடுத்து செல்லப்படுகிறது.
அவ்வாறு, மணல் ஏற்றி செல்லும் லாரி, டிராக்டர்கள் பெரும்பாலும் தார்பாய் கொண்டு மூடாமல் மணல் எடுத்து செல்வதால் காற்றில் மணல் பறந்து சாலையில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்களில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
சில இடங்களில் மணல் சாலையில் சிதறி கிடப்பதால் வாகன ஓட்டிகள் சறுக்கி கீழே விழுகின்றனர்.
மேலும், சாலைகளில் கிடக்கும் மணல் காற்றில் பறப்பதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் கண், மூக்கை மூடிக் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சில இடங்களில் விபத்துகளும் நடந்து வருகிறது.
எனவே, மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் கட்டாயம் தார்ப்பாய் கொண்டு மூடி எடுத்துச் செல்ல வேண்டும் என குவாரி உரிமையாளர்கள், நிர்வாகிகள், லாரி டிரைவர்களுக்கு போலீசார் அறிவுறுத்த வேண்டும்.
அவ்வாறு, தார்ப்பாய் கொண்டு மூடாமல் எடுத்துச் செல்லும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்தால் அவர்களது முடிவிற்கு நான் கட்டுப்படுவேன்.
- கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
தரங்கம்பாடி :
மயிலாடுதுறையில் மாமனிதன் வைகோ ஆவணப்படம் திரையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ம.தி.மு.க மாவட்ட செயலாளர் மார்கோனி ஏற்பாட்டின் பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் துரை வைகோ பங்கேற்றார்.
தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
பின்னர் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
இதில் தொண்டர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்று ஆவணப் படத்தை கண்டு ரசித்தனர்.
பின்னர் துரை வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-
தி.மு.க.வின் ஆட்சி தங்களுக்கு திருப்தி அளிக்கிறது.
கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்தால் அவர்களது முடிவிற்கு நான் கட்டுப்படுவேன் என்றார்.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ. வுமான நிவேதா முருகன், ம.தி.மு.க நகர செயலாளர் மார்க்கெட் கணேசன், செம்பை ஒன்றிய செயலாளர் குளஞ்சிநாதன், மற்றும் கூட்டணி கட்சி பொருப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்துக்கொன்டனர்.
- மக்கள் வெளியே சென்று மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் செல்ல சிரமமடைந்து வந்தனர்.
- ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியம், கோபாலசமுத்திரம் ஊராட்சியில் எவரெஸ்ட் நகர் உள்ளது.
இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி சாலை மிகவும் மோசமாகி உள்ளதால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி அப்பகுதி மக்கள் வெளியே சென்று மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் செல்ல சிரமமடைந்து வந்தனர்.
சாலையை மேம்படுத்திதர வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் கடந்த பத்தாண்டு காலமாக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இந்நிலையில் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து எவரெஸ்ட் நகரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 15-வது மத்திய நிதிக்குழு மானியத்தின் மூலம் ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிமெண்ட் சாலை அமைக்கப்ப ட்டது.
சிமெண்ட் சாலை அமைக்கப்ப ட்டதற்கு பன்னீர்செ ல்வம் எம்.எல்.ஏ., கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி ராஜேந்திரன்ஆகியோருக்கு எவரெஸ்ட் நகரை சேர்ந்த மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
- தேங்கிய மழைநீரை உரிய எந்திரங்களை கொண்டு அகற்ற நடவடிக்கை.
- கொள்ளிடம் ஆற்றில் ஓரிரு நாட்களில் சுமார் 60 ஆயிரம் கன அடிநீர் மயிலாடுதுறைக்கு வரும் என எதிர்பார்ப்பு.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கத்தில் அரசின் திட்டங்கள் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர்அமுதவல்லி தலைமையில், மாவட்ட கலெக்டர் லலிதா முன்னிலையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தி ல்மழைநீர் வடிகால்வாய்கள் சத்தம் செய்யப்பட்டு தூர்வாரி ஆழப்படுத்துவதையும், தேங்கிய மழைநீரினை உரிய இயந்திரங்களைக் கொண்டு அகற்ற நடவடிக்கை எடுப்பது குறித்து உறுதி செய்ய சம்மந்தப்பட்ட அலுவலரிடம் அறிவுறுத்தப்பட்டது.
மயிலாடுதுறையில் பாதாள சாக்கடைத் திட்டத்தில் உள்ள இடற்பாடுகளை களையவும், நிரந்தர தீர்வு காணுவதற்கு விரிவான ஆய்வறிக்கை திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தற்காலிகமாக உள்ள சிக்கல்களை களைய நடவடிக்கை எடுக்க நகராட்சி அலுவலர்களிடம் உத்தரவிடப்பட்டுள்ளது என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதவல்லி பேசினார். அதனை தொடர்ந்து கலெக்டர் லலிதா பேசியதாவது:
மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டு கொள்ளிடம் ஆற்றில் ஓரிரு தினங்களில சுமார் 60 ஆயிரம் கன அடிநீர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது.
இதனால் பொது மக்கள் யாரும் நீர்நிலைகள் அருகில் செல்லவோ, குளிப்பதோ, கால்நடைகளை அழைத்து செல்லவோ வேண்டாம் என கேட்டுக்கொள்ள ப்படுகி றார்கள். மாவட்டத்திலுள்ள 4 பல்நோக்கு நிவாரன முகாம்கள் மற்றும் தற்காலிக நிவாரன முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு எதிர் பாராத அசம்பாவிதங்களை தவிர்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்முருகதாஸ், உதவி ஆணையர் (கலால்) அர நரேந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள்அ ர்ச்சனா (சீர்காழி), யுரேகா (மயிலாடுதுறை), இணை இயக்குனர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை முருகண்ணன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர்கவித பிரியா, ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கல்லூரி வளாகத்தினுள்ளேயே அமர்ந்து உணவருந்தும் விதமாக ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் உணவருந்தும் மேடை.
- தொடர்ந்து வளாகத்தில் மரக்கன்றுகளை எம்.எல்.ஏ நட்டு வைத்தார்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த புத்தூரில் சீனிவாசா சுப்புராயா அரசு பல் தொழிநுட்பக் கல்லூரியில் 2000-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் மதிய உணவு இடைவேளையின் போது மாணவிகள் கல்லூரி மைதானம் மற்றும் மரத்தின் நிழல்களில் அமர்ந்து உணவருந்துவதை அறிந்த கல்லூரியின் முன்னாள் மாணவரும் சென்னை துர்கா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் உரிமையா ளருமான சண்முகம் மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ளேயே அமர்ந்து உணவருந்தும் விதமாக ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் உணவருந்தும் மேடை அமைத்து கொடுத்துள்ளார்.
இதையடுத்து உணவரு ந்தும் வளாகம் திறப்பு விழாவில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவிகள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
பின்னர் பருவ தேர்வு களில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் விளையாட்டு துறையில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கல்லூரி முதல்வர் முனைவர் தங்கமணி தலைமை வகித்தார்.
இயந்திரவியல் துறை தலைவர் செந்தில்குமார் வரவேற்றார்.
ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி ராஜேந்திரன், அமைப்பியல் துறை தலைவர் முகமதுஆஷிக் அலி முன்னிலை வகித்தனர்.
கண்காணிப்பாளர் வைத்தியநாதன், ஆசிரிய ர்கள் பிரேம்நாத், தாமரைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் கணினியில் துறை விரிவுரையாளர் சத்யா நன்றி கூறினார்.
- எந்தெந்த தொழிலுக்கு என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள்.
- விழாவில் 296 மாணவ- மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
சீர்காழி:
கொள்ளிடம் அருகே புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் மற்றும் மேம்பாடு குறித்து ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரியின் தொழில் முனைவோர் மற்றும் மேம்பாடு மையம் சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமை வகித்தார்.
வணிகவியல் துறை தலைவர் திருநாராயணசாமி வரவேற்றார்.
கருத்தரங்கில் சிதம்ப ரம் அண்ணாமலை பல்கலை க்கழக தொழில் முனைவோர் மைய ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளும் அதன் திட்டங்களையும், எந்தெந்த தொழிலுக்கு என்னென்ன விதிமுறை களை எல்லாம் பின்பற்ற வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த கருத்துக்களை வழங்கினார்.
இதில் பல்வேறு துறை சார்ந்த தொழில் முனைவோர் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர்களும், உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் 296 மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை தமிழ் துறை தலைவர் அனுசியா தொகுத்து வழங்கினார்.
கருத்தரங்கில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் மாணவர்கள் அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் வணிக நிர்வாகவியல் துறை தலைவர் குமார் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் தலைமையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் செய்திருந்தனர்.
- செல்வ முத்துக்குமாரசாமிக்கு 21 வகையான நறுமண திரவியபொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம்.
- கேதார்நாத்திலிருந்து 20 மணி நேரத்தில் வருகை புரிந்து தருமபுரம் ஆதீனம் சாமி தரிசனம்.
சீர்காழி:
வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலில் புரட்டாசிமாத கிருத்திகையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
முன்னதாக வள்ளி, தெய்வானைஉடனாகிய செல்வ முத்துக்குமாரசுவாமிக்கு 21 வகையான நறுமன திரவியபொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு மலர்கள், ஆபரணங்கள் கொண்டு அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து சண்முகா ர்ச்சனை செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
இந்நிகழ்வில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தார்.
உடன் வேளாக்குறிச்சி இளவரசு சுவாமிகள், திருப்பனந்தாள் காசிமடத்து இளவரசு சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
கேதார்நாத்திலிருந்து 20 மணி நேரத்தில் வருகை புரிந்து தருமபுரம் ஆதீனம் பங்கேற்று தரிசனம் செய்தது குறிப்பிடதக்கது.
- மாணவர்களுக்கு துளிர் வினாடி- வினா போட்டி நடைபெற்றது.
- மாணவர்களின் உளவியல் பூர்வமான மனநிலையை அறிந்து அவர்களுக்கு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 92வது பிறந்தநாள் உலக மாணவர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு துளிர் வினாடி- வினா போட்டி நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினிரமேஷ் துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் பாலு முன்னிலையில் போட்டி நடைபெற்றது.
போட்டியின் நடுவராக பட்டதாரி ஆசிரியர் சந்திரன் செயல்பட்டார்.
இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர் ஷர்மிலி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து தலைமை யாசிரியர் பாலு கூறுகையில், துளிர் வினாடி- வினாவில் மாணவர்கள் கலந்து கொண்டால் தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டு எளிதில் வெற்றி பெற முடியும்.
மாணவர்களின் உளவியல் பூர்வமான மனநிலையை அறிந்து அவர்களுக்கு இதன் மூலம் போட்டி நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
- ஆண், பெண் நோயாளிகள் ஒரே இடத்தில் தங்க வைக்கப்படுவதாகவும், மின்விளக்கு வசதி இல்லாமல் இருப்பதாகவும் புகார் தெரிவிக்கபட்டது.
- மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்யபடும் என்றும் தெரிவித்தார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட இயக்குனருமான அமுதவள்ளி அரசு பணிகளை ஆய்வு செய்தார். அவருடன் கலெக்டர் இரா.லலிதா உடனிருந்தார்.
தரங்கம்பாடி வட்ட அலுவலகத்தில் இசேவை மையத்தை பார்வையிட்டு அலுவலக கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், வட்டாச்சியர் புனிதா தாலுகா அலுவலக பணிகள் குறித்து விளக்கினர்.
அதனை தொடர்ந்து பொறையார் அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவமனையை ஆய்வு செய்து அங்குள்ள நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மருத்துவர்கள் ஸ்ரீநாத், சங்கர், ஆகியோர் மருத்துவமனையை சுற்றி காட்டி மருத்துவமனை செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.
அதை தொடர்ந்து தரங்கம்பாடி வட்டாச்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்படுத்த கழிவறை வசதி, குடிநீர் வசதி இல்லை என்று புகார்கள் தெரிவிக்கபட்டது.
பொறையார் மருத்துவமனையில் ஆண், பெண் நோயாளிகள் ஒரே இடத்தில் தங்க வைக்கப்படுவதாகவும், மின்விளக்கு வசதி இல்லாமல் இருப்பதாகவும் புகார் தெரிவிக்கபட்டது.
அதற்கு பதில் அளித்த மாவட்ட கலெக்டர் லலிதா தாலுகா அலுவலகத்தில் விரைவில் கழிவறை வசதி, குடிநீர் வசதி செய்யபடும் என்றும் மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்யபடும் என்றும் தெரிவித்தார்.
அதை தொடர்ந்து தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள டேனிஷ் கோட்டைக்கு சென்று அங்குள்ள அருங்காட்சியகத்தையும் கோட்டையையும் சுற்றி பார்த்தார்.
தரங்கம்பாடியில் பேரூராட்சி உதவி இயக்குநர் கனகராஜ், பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி குமரவேல், பேரூராட்சி செயல் அலுவலர் கமலகண்ணன் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் பேரூராட்சியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கினர்.
பிளாஸ்டிக் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு மஞ்சள் பையை மாவட்ட கண்காணிப்பு அலவலர் வழங்கினார்.
- வேலவன் நகர் குடியிருப்பு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
- சாலையோரம் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்ட நிலையில் அதன் அருகிலேயே குடிநீர் குழாயும் பதிக்கப்பட்டுள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கதிராமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட வேலவன் நகர் குடியிருப்பு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி சாலைகள் முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்து கிடக்கிறது. சாலையோரம் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்ட நிலையில் அதன் அருகிலேயே குடிநீர் குழாயும் பதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் கால்வாய் உடைந்து கழிவு நீர் தண்ணீரும் மழை நீரும் சேர்ந்து சாலை சேரும் சகதியும் ஆக மாறி உள்ளது.
குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் கழிவுநீர் கால்வாய் உடைந்ததால் குடிநீரும் கழிவுநீராக மாறி பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இதனால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் சாலையை சீரமைத்து, கழிவு நீர் கால்வாயும் சீரமைக்கவும் குடிநீர் குழாயை முறையாக பராமரிக்கவும் வலியுறுத்தி சாலையில் நடவு செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
- ஒவ்வொருவரிடமும் பணத்தை வாங்கிக் கொண்டு எங்களிடம் பாஸ் ேபார்ட்டையும் பெற்றுக் கொண்டு கடந்த ஒரு வருடமாக அலைக்கழித்துவருவதாக தெரிவித்தார்.
- வெளிநாடு வேலை வேண்டாம், வாங்கிய பணத்தை திருப்பி கொடுங்கள் எனக் கேட்டால் மிரட்டல் விடுக்கிறார் என பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புத்தூர் பகுதியில் ரகுமான் என்பவர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ரகுமானிடம் வெளிநாடு வேலை செல்வதற்கு பணம் கொடுத்து இதுவரை விசா வராமல் ஏமாற்றம் அடைந்ததாக 40-க்கும் மேற்பட்டவர்கள் புகார் கொடுக்க சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் வந்தனர்.
இதில் குத்தாலம் பகுதியை சேர்ந்த ராஜதுரை, கும்பகோணம் பகுதி யாசர், திருப்பத்தூர் பகுதி மணிமொழி, மற்றும் தைக்கால், கூத்தியம்–பேட்டை, மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டவர்கள் பணம் கொடுத்ததற்கான புகைப்பட ஆதாரங்களுடன் புகார் மனு அளித்தனர்.
இது குறித்த பாதிக்கப்பட்ட ஒருவர் கூறுகையில், ரகுமான் ஒவ்வொருவரிடமும் 1 லட்சம், 90 ஆயிரம், 1 லட்சத்து 20 ஆயிரம் என வெளிநாடு வேலைக்கு தகுந்தாற்போல் பணத்தை வாங்கிக் கொண்டு எங்களிடம் பாஸ் ேபார்ட்டையும் பெற்றுக் கொண்டு கடந்த ஒரு வருடமாக அலைக்கழித்துவருவதாக தெரிவித்தார்.
மேலும் வெளிநாடு வேலை வேண்டாம், வாங்கிய பணத்தை திருப்பி கொடுங்கள் எனக் கேட்டால் மிரட்டல் விடுக்கிறார் என பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.
காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தையும், பாஸ்போர்ட்டையும் மீட்டு தர வேண்டும் என்றனர்.






