search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் உலக மாணவர் தின விழா கொண்டாட்டம்
    X

    போட்டியில் வென்ற மாணவர்களுக்கு தலைமையாசிரியர் பரிசு வழங்கினார்.

    அரசு பள்ளியில் உலக மாணவர் தின விழா கொண்டாட்டம்

    • மாணவர்களுக்கு துளிர் வினாடி- வினா போட்டி நடைபெற்றது.
    • மாணவர்களின் உளவியல் பூர்வமான மனநிலையை அறிந்து அவர்களுக்கு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 92வது பிறந்தநாள் உலக மாணவர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு துளிர் வினாடி- வினா போட்டி நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினிரமேஷ் துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் பாலு முன்னிலையில் போட்டி நடைபெற்றது.

    போட்டியின் நடுவராக பட்டதாரி ஆசிரியர் சந்திரன் செயல்பட்டார்.

    இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர் ஷர்மிலி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இது குறித்து தலைமை யாசிரியர் பாலு கூறுகையில், துளிர் வினாடி- வினாவில் மாணவர்கள் கலந்து கொண்டால் தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டு எளிதில் வெற்றி பெற முடியும்.

    மாணவர்களின் உளவியல் பூர்வமான மனநிலையை அறிந்து அவர்களுக்கு இதன் மூலம் போட்டி நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

    Next Story
    ×