search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தரங்கம்பாடியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அரசு பணிகளை ஆய்வு
    X

    பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

    தரங்கம்பாடியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அரசு பணிகளை ஆய்வு

    • ஆண், பெண் நோயாளிகள் ஒரே இடத்தில் தங்க வைக்கப்படுவதாகவும், மின்விளக்கு வசதி இல்லாமல் இருப்பதாகவும் புகார் தெரிவிக்கபட்டது.
    • மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்யபடும் என்றும் தெரிவித்தார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட இயக்குனருமான அமுதவள்ளி அரசு பணிகளை ஆய்வு செய்தார். அவருடன் கலெக்டர் இரா.லலிதா உடனிருந்தார்.

    தரங்கம்பாடி வட்ட அலுவலகத்தில் இசேவை மையத்தை பார்வையிட்டு அலுவலக கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், வட்டாச்சியர் புனிதா தாலுகா அலுவலக பணிகள் குறித்து விளக்கினர்.

    அதனை தொடர்ந்து பொறையார் அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவமனையை ஆய்வு செய்து அங்குள்ள நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மருத்துவர்கள் ஸ்ரீநாத், சங்கர், ஆகியோர் மருத்துவமனையை சுற்றி காட்டி மருத்துவமனை செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.

    அதை தொடர்ந்து தரங்கம்பாடி வட்டாச்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்படுத்த கழிவறை வசதி, குடிநீர் வசதி இல்லை என்று புகார்கள் தெரிவிக்கபட்டது.

    பொறையார் மருத்துவமனையில் ஆண், பெண் நோயாளிகள் ஒரே இடத்தில் தங்க வைக்கப்படுவதாகவும், மின்விளக்கு வசதி இல்லாமல் இருப்பதாகவும் புகார் தெரிவிக்கபட்டது.

    அதற்கு பதில் அளித்த மாவட்ட கலெக்டர் லலிதா தாலுகா அலுவலகத்தில் விரைவில் கழிவறை வசதி, குடிநீர் வசதி செய்யபடும் என்றும் மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்யபடும் என்றும் தெரிவித்தார்.

    அதை தொடர்ந்து தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள டேனிஷ் கோட்டைக்கு சென்று அங்குள்ள அருங்காட்சியகத்தையும் கோட்டையையும் சுற்றி பார்த்தார்.

    தரங்கம்பாடியில் பேரூராட்சி உதவி இயக்குநர் கனகராஜ், பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி குமரவேல், பேரூராட்சி செயல் அலுவலர் கமலகண்ணன் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் பேரூராட்சியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கினர்.

    பிளாஸ்டிக் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு மஞ்சள் பையை மாவட்ட கண்காணிப்பு அலவலர் வழங்கினார்.

    Next Story
    ×