என் மலர்
உள்ளூர் செய்திகள்

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர்.
விளையாட்டு போட்டியில் பள்ளி மாணவர்கள் சாதனை
- 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் வளைகோல் பந்து முதலிடம்.
- 19 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் கூடைப்பந்து முதலிடம், பூப்பந்து முதலிடம்.
சீர்காழி:
சீர்காழியில் தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிளான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் சுமார் 57 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் 125 ஆம் ஆண்டுகள் கல்வி பணியாற்றி இவ்வாண்டு விழாக்காணும் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளி மாணவ.-மாணவிகள் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 17 பதக்கங்களும், 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 25 பதக்கங்களும், 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 42 பதக்கங்களும் பெற்று 171 புள்ளிகள் பெற்று இப்பள்ளி மாணவ -மாணவிகள் சாதனை படைத்தனர்.
குழுப்போட்டிகளில் 14 வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவில் வளைகோல்பந்து இரண்டாம் இடம், கபடி போட்டி முதலிடம், கால்பந்து இரண்டாம் இடம், மாணவிகள் பிரிவில் கூடைபந்து முதலிடம், வளையபந்து இரண்டாம் இடமும், 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் வளைகோல் பந்து முதலிடம், கூடைபந்து இரண்டாம் இடம், கபடி போட்டி முதலிடம், கால்பந்து இரண்டாம் இடம், மேசைபந்து முதலிடம். மாணவிகள் பிரிவில் கூடைபந்து முதலிடம், வளையபந்து போட்டியில் முதலிடமும் பெற்றனர்.
19 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் வளைகோல் பந்து இரண்டாம் இடம். கூடைப்பந்து முதலிடம், பூப்பந்து முதலிடம்.
மாணவிகள் பிரிவில் கூடைப்பந்து முதலிடம், வளையப்பந்து முதலிடம், பூப்பந்து முதலிடம் பெற்று பள்ளிக்கு சிறப்பு சேர்த்த மாணவ, மாணவிகளையும் பயிற்றுவித்த உடற்கல்வி இயக்குநர் முரளிதரன் உடற்கல்வி ஆசிரியர்கள் முரளி, பி.மார்கண்டன், .சக்திவேல், .ஹரிஹரன், .ராக்கேஷ் ஆகியோரை பள்ளி செயலர் ராமகிருஷ்ணன், முன்னாள் செயலர் பாலசுப்ரமணியன், பள்ளி குழுதலைவர்.சொக்கலிங்கம், பள்ளி தலைமையாசிரியர் அறிவுடைநம்பி, உதவித்த லைமை ஆசிரியர்கள்.துளசிரெங்கன், . வரதராஜன் மற்றும் பள்ளி ஆசிரியரிகள், ஆசிரியைகள், அலுவலர்கள் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.






