என் மலர்
மயிலாடுதுறை
- ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி தர வேண்டும் மற்றும் தேங்கி நிர்க்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும் என பல கோரிக்கை விடுத்தனர்.
- பொதுமக்களின் குறைகளை கண்டறிந்து மனுக்கள் பெறப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி வாணி விலாஸ் தொடக்கப்பள்ளியில் ஈசான்ய தெரு 6வது வார்டு சார்பில் வார்டு குழு பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. நகர மன்ற கவுன்சிலர் பாலமுருகன் தலைமை வைத்தார் கணக்கர்கள் ராஜகணேஷ் ரமேஷ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜ சேகர் கலந்து கொண்டு பொதுமக்களின் குறை களை கேட்டறிந்தார் பின்பு பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்று க்கொண்டார் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் சீர்காழி ஈசான்ய தெருவில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் அருகே கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது உடனடியாக தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈசான்ய தெருவில் மழை நீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி செய்து தர வேண்டும் மழைக் காலம் தொடங்கி விட்டதால் கொசு மருந்து அடிக்க வேண்டும் சீர்காழி நகராட்சி பகுதியில் வார சந்தை செயல்பட்ட வந்த நிலையில் கொரோனா காலத்தில் மூடப்பட்ட நிலையில் தற்போது வரை வாரசந்தை நடைபெறவில்லை உடனடி யாக மக்கள் பயன்பெறும் வகையில் இடத்தை தேர்வு செய்து வார சந்தை அமைத்து தினந் தோறும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர் கூட்டத்தில் 6வது வார்டு பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொ ண்டனர்.
- தொடர்ந்து 3 மணி நேரத்துக்கு மேல் பலத்த மழை அதன் பிறகும் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது.
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
சீர்காழி:
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த 29ம் தேதி தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் கனமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காலை முதல் மாலை வரை மேகமூட்டமாக இருந்து வந்தது.
தொடர்ந்து இரவு 8 மணி முதல் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து 3 மணி நேரத்துக்கு மேல் பலத்த மழை பெய்த நிலையில் அதன் பிறகும் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது.
இதனால் பணியை முடித்து வீடு திரும்பியவர்கள் ஆங்காங்கே மழையினால் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
இந்த மழையால் சீர்காழி நகரில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.
வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் சாலையை கடந்து சென்றனர்.சீர்காழி பழைய பேருந்து நிலையம், தேர் வடக்கு வீதி உள்ளிட்ட சாலைகளில் மழைநீருடன் கழிவு நீரும் தேங்கி நின்றதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
இந்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
- விழிப்புணர்வு பேரணி நடைபெற்று சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
- மாணவர்கள் பங்கேற்று முக்கிய வீதிகளின் வழியாக கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.
சீர்காழி:
சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியும், ரோட்டரி கிளப் ஆப் சீர்காழி டெம்பிள் டவுன், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் இணைந்து பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதை எதிர்த்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.சங்கத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
முகாம் அலுவலர் முரளிதரன், டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்தினுடைய முன்னாள் தலைவர்கள், மற்றும் முன்னாள் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், என். எஸ்.எஸ் மாணவர்கள் பங்கேற்று முக்கிய வீதிகளின் வழியாக கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.
முன்னதாக பொருளாளர் வினோத் வரவேற்றார்.நிறைவில் செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.
- கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.
- புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளதால் கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் லலிதா விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதேபோல் கனமழை எதிரொலியால் கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
- பாய் நாற்றாங்கால், எந்திர நடவு போன்ற விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரம்.
- கூடுதல் பரப்பளவில் சம்பா சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் ஆர்வம்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்திற்கு உட்பட்ட சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், புங்கனூர், திருவெண்காடு, கொள்ளிடம், ஆரப்பள்ளம், நல்லூர், வடகால், ஆச்சாள்புரம், கொண்டல், பெருமங்களம், ஆதமங்கலம், வள்ளுவக்குடி, திருப்புன்கூர், கற்கோயில் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 22 ஆயிரம் ஹெக்டேர் விலை நிலங்களில் சம்பா சாகுபடி பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை கடந்த 29 முதல் தொடங்கி மழை பெய்து வரும் நிலையில் மழையில் நனைந்தபடியே பாய் நாற்றாங்கால், நடவு பணி, எந்திர நடவு போன்ற விவசாயப் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.கடந்த இரண்டு ஆண்டுகளாக சீர்காழி பகுதியில் இயற்கை இடர்பாடுகளால் விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டது.
மேலும் விதை நெல், டீசல் விலை, உரம் விலை உயர்வு காரணங்களால் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு முன்கூட்டியே பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டை விட கூடுதல் பரப்பளவில் சம்பா சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- மேல்தல கான்கிரீட்டுகள் சிதைந்து கம்பிகளும் சிமெண்ட் காரைகளுமே எஞ்சியுள்ளது.
- அத்தியாவசிய பொருட்களை மட்டும் வைத்துவிட்டு வெளிப்புறத்தில் தடுப்புகள் அமைத்து வசித்து வருகின்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வானகிரி மீனவர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்கு பின்னர் கடலோர பகுதியிலிருந்து மீனவ குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு அருகிலேயே சுனாமி குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு அரசின் சார்பாக 725 சுனாமி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.
இந்த வீடுகள் கட்டப்பட்டு 18 ஆண்டுகள் கடந்த நிலையில் போதிய பராமரிப்பு இல்லாததால் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உட்புற மேல்தல கான்கிரீட்டுகள் சிதைந்து கம்பிகளும் சிமெண்ட் காரைகளுமே எஞ்சியுள்ளது.
மேலும் அவ்வப்பொழுது சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுவதால் அச்சமடைந்த மீனவர்கள் வீட்டின் உள்ளே அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வைத்துவிட்டு வெளிப்புறத்திலேயே தடுப்புகள் அமைத்து தனியாக வசித்து வருகின்றனர்.
தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் சிதிலமடைந்த வீடுகளை சீரமைத்து தர வேண்டுமென மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- டெங்கு காய்ச்சலில் இருந்து நம்மை பாதுகாக்க வேண்டும் என கோஷம்.
- முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பஸ் நிலையத்தில் நிறைவு.
சீர்காழி:
சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுடன் சீர்காழி லயன்ஸ் சங்கம் இணைந்து டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணிக்கு லயன்ஸ் சங்க வட்டாரத்தலைவர் கே.வேல்முருகன் தலைமை வகித்தார். கே.எஸ்.செயலர் சந்துரு, பொருளாளர் எஸ்.ராமராஜ் முன்னிலை வகித்தனர். சங்க தலைவர் எம்.சுரேஷ் பேரணியை துவக்கி வைத்தார்.
பேரணியில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று கொசுவை ஒழிக்க வேண்டும், டெங்கு காய்ச்சலில் இருந்து நம்மை பாதுகாக்க வேண்டும் என கோஷங்கள் இட்டு சென்றனர்.
முக்கியவீதிகளின் வழியாக சென்று மீண்டும் பேருந்து நிலையத்தில் நிறைவு செய்தனர். துணை முகாம் அலுவலர் ஏ.மணிகண்டன், பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ச.ஹரிஹரன் கலந்து கொண்டனர். திட்ட அலுவலரும், உதவி தலைமை ஆசிரியருமான எஸ்.முரளிதரன் நன்றி கூறினார்.
- பிட் இந்தியா ப்ரீடம் ரன் 3.0 கொண்டாடப்பட்டது.
- ஜோதியை ஏற்றி மாணவர்களுக்கு நகர்மன்ற தலைவர் சிறப்புறையாற்றினார்.
சீர்காழி:
சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி உடற்கல்வித்துறை சார்பில் உலக ஒற்றுமை நாள் சுடர் ஓட்டமானது பிட் இந்தியா ப்ரீடம் ரன் 3.0 கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் எஸ். அறிவுடைநம்பி தலைமை வகித்தார். நகர்மன்ற துணை தலைவர் மா. சுப்பராயன் முன்னிலை வகித்தார்.
ஜோதியை ஏற்றி மாணவர்களுக்கு நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் சிறப்புறை யாற்றினார்.ஜோதி ஓட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாட்டினை காவல் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் காவல் துறையினர் செய்திருந்தனர்
உடற்கல்வி ஆசிரியர்கள் சக்திவேல் ஹரிஹரன், ராகேஷ் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் முரளி, மார்கண்டன் செய்திருந்தனர். உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் நன்றி கூறினார்.
- மாத்தூர் வயல்வெளி பகுதியில் வலை வைத்து மடையான் பறவைகளை வேட்டையாடினர்.
- வழக்குப்பதிவு செய்து இருவருக்கும் தலா ரூ.20 ஆயிரம் அபராதம்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வனசரகத்திற்கு உட்பட்ட வயல்வெளிகள், சமவெளிப் பகுதிகளில் மடையான், கொக்கு பறவைகளை வேட்டையாடியவர்களை பிடிக்க திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் உத்தரவின் பேரில் சீர்காழி வன சரக அலுவலர் ஜோசப் டேனியல் தலைமையில் தனி குழு அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தரங்கம்பாடி வட்டம் ஆக்கூர் புங்கையன் தோப்பு மாத்தூர் வயல்வெளி பகுதியில் வலை வைத்து மடையான் பறவைகளை வேட்டையாடியவர்களை பிடித்து வனத்துறையினர். விசாரணை செய்ததில் ஆக்கூர் புங்கையன் தோப்பு பகுதியை சேர்ந்த சத்தியராஜ் (40) மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (37) என்பது தெரிய வந்தது.
வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்த வனத்துறையினர் தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.40 ஆயிரம் இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து வலைகள் மற்றும் பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- தடுப்புகள் இல்லாமல் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மண்ணை ஏற்றி செல்கின்றனர்.
- சாலைகள் முழுவதும் சவுடு மண்சிதைந்து கிடப்பதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதி.
சீர்காழி:
விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் முதல் தரங்கம்பாடி வரை நான்கு வழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்பணிக்காக சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் சவுடுமண் குவாரிகள் அமைக்கப்பட்டு நாள்தோறும் ஆயிரக்–கணக்கான லாரிகள் சவுடுமண் கொண்டு–வரப்பட்டு நான்கு வழிசாலையில் கொட்டப்படுகிறது.
இரவு பகல் என 24 மணி நேரமும் சவுடுமண் ஏற்றிய லாரிகள் நகர் பகுதியை கடந்து புறவழிச் சாலைக்கு சென்று வருகிறது. இந்த லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக எவ்வித பாதுகாப்பும் இன்றி சவுடு மண்ணை ஏற்றி செல்கின்றனர்.
இந்த மண் மீது முறையான பாதுகாப்புடன் தடுப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அரசு விதி இருந்தும், அதனை கண்டு கொள்ளாத லாரி ஓட்டுநர்கள் பெயரளவில் ஒரு சில லாரிகளில் மட்டுமே வலைகளை அமைத்துள்ளனர்.
மாலை 6 மணிக்கு மேல் எந்த லாரிகளிலும் இதுபோன்ற தடுப்புகள் இல்லாமல் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மண்ணை ஏற்றி செல்கின்றனர்.
இதனால் வளைவுகள், வேகத்தடைகளில் இந்த லாரிகள் செல்லும் போது அதிகப்படியான மண் சரிந்து சாலை முழுவதும் சிதைந்து கிடக்கிறது.
இதனால் நகர் பகுதி முழுவதும் சாலைகள் சவுடு நிறைந்து இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமலும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி நேரங்களில் கூட இந்த லாரிகள் நூற்றுக்கணக்கில் இயக்கப்படுகிறது.
நகர் பகுதி சாலைகள் முழுவதும் சவுடு மண்சிதைந்து கிடப்பதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்லும் பலர் சாலையில் சிதறி கிடக்கும் மண்ணில் சறுக்கி விழுந்து அடுத்தடுத்து விபத்துகளிலும் சிக்கி வருகின்றனர்.
எனவே நான்கு வழிச்சாலைக்கு மண் ஏற்றி செல்லும் லாரிகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து தகுந்த பாதுகாப்புடன் இயக்கவும், அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே மண்ணை எடுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நடைபாதைகளில் உள்ள செடி, கொடிகளை தூய்மைப்படுத்தினர்.
- நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு விழிப்புணர்வு கலந்தாய்வு நடைபெற்றது.
சீர்காழி:
விழுதுகள் இயக்கத்தின் சார்பில் சீர்காழி ரெயில் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு விழுதுகள் இயக்கத்தின் தலைவர் ஏ.கே.ஷரவணன் தலைமை வகித்தார். ரெயில் நிலைய அதிகாரி முன்னிலை வகித்தார்.
சீர்காழி எல்.எம்.சி. மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ரயில் நிலையத்தில் நடைபாதைகளில் இருந்த செடி, கொடிகளை தூய்மைப்படுத்தினர்.
கடும் வெயிலிலையும் பொருட்படுத்தாமல் தூய்மைப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
நிகழ்ச்சி முடிவில் விவசாய பயிர்களை அழிக்கும் எலிகளின் எதிரியான பாம்புகளை அடித்து கொல்லாமல் பாம்புகளை பாதுகாப்பான முறையில் பிடித்து கையாளுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு விழிப்புணர்வு கலந்தாய்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாம்பு பாண்டியன், நாட்டு நலப்பணி திட்ட ஆசிரியர்கள், விழுதுகள் இயக்கத்தினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் விழுதுகள் இயக்கத்தின் காமராஜ் நன்றி கூறினார்.
- தங்க கொடிமரம் அருகே சிவபெருமானிடம் தங்கவேல் வாங்கி கோவிலை வலம் வந்தார்.
- சூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்யும் ஐதீக நிகழ்வு.
சீர்காழி:
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகியவைத்திய நாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 25ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது.
தொடர்ந்து வள்ளி தெய்வானை உடனாகிய செல்வ முத்துக்குமா ரசாமிக்கு நாள்தோறும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வந்தன.
விழாவில் முக்கிய நிகழ்வாக சூரசம்ஹாரம் விழா நடைபெற்றது. முன்னதாக சிறப்புவழி பாட்டுக்கு பின் நவரத்தின அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெ ருமான் கோவில் தங்க கொடிமரம் அருகே சிவபெருமானிடம் தங்கவேல் வாங்கி கோவிலை வலம் வந்து மேற்கு கோபு வாசல் வழியாக சூரசம்ஹாரத்திற்கு புறப்பட்டார்.
சூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்யும் ஐதீக நிகழ்வு சிவாச்சாரி யார்களால் தருமபுரம் ஆதீனம் 27-வதுகுருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சா ரியார் சுவாமிகள் முன்னி லையில் நடைபெற்றது.
இதில் வைத்தீஸ்வரன் கோயில் கட்டளைதிருநா வுக்கரசு தம்பிரான் சுவா மிகள், ஆன்மீகப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராம.சேயோன், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், சீர்காழி நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, திமுக பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், சேவாதள காங்கிரஸ் மாநில செயலாளர் பால. எழிலரசன், மயிலாடுதுறை முன்னாள் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






