என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுடர் ஓட்டத்தை நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி தொடங்கி வைத்தார்.
உலக ஒற்றுமை தின சுடர் ஓட்டம்
- பிட் இந்தியா ப்ரீடம் ரன் 3.0 கொண்டாடப்பட்டது.
- ஜோதியை ஏற்றி மாணவர்களுக்கு நகர்மன்ற தலைவர் சிறப்புறையாற்றினார்.
சீர்காழி:
சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி உடற்கல்வித்துறை சார்பில் உலக ஒற்றுமை நாள் சுடர் ஓட்டமானது பிட் இந்தியா ப்ரீடம் ரன் 3.0 கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் எஸ். அறிவுடைநம்பி தலைமை வகித்தார். நகர்மன்ற துணை தலைவர் மா. சுப்பராயன் முன்னிலை வகித்தார்.
ஜோதியை ஏற்றி மாணவர்களுக்கு நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் சிறப்புறை யாற்றினார்.ஜோதி ஓட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாட்டினை காவல் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் காவல் துறையினர் செய்திருந்தனர்
உடற்கல்வி ஆசிரியர்கள் சக்திவேல் ஹரிஹரன், ராகேஷ் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் முரளி, மார்கண்டன் செய்திருந்தனர். உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் நன்றி கூறினார்.
Next Story






