என் மலர்
மயிலாடுதுறை
- 108 கிலோ அரிசியால் அன்னம் மற்றும் பழங்களால் சிவனுக்கு அலங்காரம்.
- மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம்.
சீர்காழி:
சீர்காழியில் பொன்னாக வள்ளி அம்பாள் உடனாகிய நாகேஸ்வர முடையார் (ஆதி ராகு) கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு பவுர்ணமி முன்னிட்டு நாகேஸ்வரமுடையாருக்கு 108 கிலோ அரிசியால் அன்னம் மற்றும் வாழைப்பூ பரங்கிக்காய், திராட்சை, ஆப்பிள் உள்ளிட்ட பழங்களினால் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.
- புகையிலை பொருட்களை ஏற்றி கடைகளுக்கு எடுத்து செல்ல தயார்.
- ரூ. 1.25 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட 14 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல்.
சீர்காழி:
சீர்காழி அருகே தைக்கால் கிராமம் ஜாகிர்உசேன் தெருவை சேர்ந்தவர் முஹம்மதுயாசின் (வயது 44).
இவர் தைக்காலில் உள்ள அவரின் வீட்டிற்கு அருகே அவருக்கு சொந்தமான காரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ஏற்றி கடைகளுக்கு எடுத்துச் செல்ல தயார் நிலையில் இருந்துகொண்டிருந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின் பேரில், எஸ்.பி.யின் தனி பிரிவு படையினர் மற்றும் கொள்ளிடம் சிறப்பு பிரிவு போலீசார் திலகர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் விற்பனைக்கு எடுத்துச் செல்ல தயாராக இருந்த முகமதுயாசினை கைது செய்து, காருக்குள் வைத்திருந்த ரூ. 1.25 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட 14 மூட்டை புகையிலைப் பொருட்களை பறிமுதல்செய்தனர்.
- மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
- மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து ஏராள–மானோர் கலந்து கொள்வது.
சீர்காழி:
சீர்காழியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிங்காரவேல், மோகன், குமார், சீர்காழி மேற்கு ஒன்றிய செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி நகர செயலாளர் ரஞ்சித் குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ரமேஷ் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து பேசினார்.
மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அரசை வலியுறுத்துவது, வருகிற 27ஆம் தேதி தஞ்சையில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல். ஏ. தலைமையில் நடைபெறும் மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து ஏராளமானோர் கலந்துக் கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஒன்றிய செயலா–ளர்கள் செல்வகுமார், வேலுமணி மற்றும் நிர்வா–கிகள் ஆகாஷ், சக்திவேல், மணிவண்ணன், ராஜதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றார்.
முடிவில் நகர இளைஞரணி தலைவர் சந்தோஷ்குமார் நன்றி கூறினார்.
- அரிசி சாதம் கொண்டு சாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை.
- சேந்தங்குடி வள்ளலார் கோவிலில் சாமிக்கு அன்னாபிஷேகம்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் பாடல் பெற்ற அபயாம்பிகை சமேத மயூரநாத சுவாமி கோவிலில் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், திரவிய பொடி உள்ளிட்ட 18 வகை பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.
தொடர்ந்து அரிசி சாதம் கொண்டு சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை மற்றும் சோடச ஆராதனை செய்யப்பட்டது.
இதில் துணை கண்காணிப்பாளர் கனேசன், கணக்காளர் வெங்கட்ராமன், நகர மன்ற உறுப்பினர்கள் சர்வோதயம், சதீஸ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதே போல் சேந்தங்குடி வள்ளலார் கோயிலில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
ஆலய குருக்கள் பாலச்சந்திர சிவாச்சாரியார் பூஜைகள் செய்தனர்.
இதில் கண்காணிப்பாளர் அகோரம், நகர மன்ற உறுப்பி னர் ரமேஷ் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொன்டு தரிசனம் செய்தனர்.
- குமரக்கோவிலில் 36 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்.
- நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சட்டை நாதர் சுவாமி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட குமரக்கோட்டம் எனும் குமரக் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 36ஆண்டு களுக்குப் பிறகு கும்பாபி ஷேகம் நடைபெ ற்றது.
முன்னதாக கடந்த, சனிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, நவகிரக ஹோமம், லட்சுமி பூஜை மற்றும் பூர்வாங்க பூஜைகளுடன் நான்கு காலையாக சாலை பூஜைகள் நடைபெற்றது
விழா அன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு மேளதாளம் முழங்க கோவிலை பலம் வந்தது கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சந் நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமி கள் முன்னிலையில் கும்பாபி ஷேகம் நடைபெற்றது.
இதில் சுவிட்சர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை பீடாதிபதி சுவாமிகள், கோவில் கட்டளை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் கல்லூரி செயலர் செல்வநாயகம், சியாமளா பெண்கள் பள்ளி செயலர் முரளிதரன் டாக்டர் முத்துக்குமார் நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, நகராட்சி ஆணையர் வாசுதேவன், முன்னாள் நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி, மதிமுக மாவட்டச் செயலாளர் மார்க்கோனி, இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், உறுப்பினர்கள் ஜெயந்தி பாபு, வள்ளி முத்து, நித்யா தேவி பாலமுருகன், ராஜேஷ், கவன்சிலர் பாலமுருகன் தமிழக திருக்கோயில் சொத்து பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி பாலசுப்பி ரமணியன், கியான்சந்த், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தேவார பாடசாலை மாணவர்கள் வடமொழியிலும், தமிழிலும் திருமுறைகள் ஓதினார்கள்.
- 18 ஆயிரம் பக்கங்கள் உரையுடன் கூடிய பன்னிரு திருமுறை நூல் மறுபதிப்பு பணி தொடக்கம்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோவில் அருகே உள்ள ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி சுவாமிகள் நிலையத்திற்கு மணிப்பூர் மாநில ஆளுனர் இல.கணேசன், அவரது அண்ணன் கோபாலன் மற்றும் குடும்பத்தினர் வந்தனர்.
அவரை கட்டளை தம்பிரான் மற்றும் சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து ஆளுனர் இல.கணேசன், அவரது அண்ணன் மற்றும் குடும்பத்தினர் சீர்காழி மடத்தில் தங்கி கோவில் திருப்பணிகளை கண்காணித்து வரும் தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்து அருளாசி பெற்றார். அப்போது ஆளுனர் இல.கணேசன் தருமபுரம் ஆதீனம் சார்பில் 18 ஆயிரம் பக்கங்கள் உரையுடன் கூடிய பன்னிரு திருமுறை நூல் மறுபதிப்பு பணியை தொடங்கி வைத்தார்.
தருமை ஆதீனம் வேத சிவாகமம் பாடசாலை மற்றும் தேவார பாடசாலை மாணவர்கள் வடமொழியிலும், தமிழிலும் திருமுறைகள் ஓதினார்கள். அதனைக் கேட்டு அவர்களை வணங்கி மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது ம.தி.மு.க மாவட்ட செயலாளர் மார்கோனி, விதிபி. பள்ளி செயலர் சாமிநாதன், கோயில் சொத்து பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி பாலசுப்ரமணியன், கோயில் கணக்கர் செந்தில், வி.எச்.பி நிர்வாகி செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- பள்ளி கட்டிடம் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டவில்லை.
- கான்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சிக்–குட்பட்ட கீழத்தென்பாதி 17-வதுவார்டில் வார்டு குழு பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. நகர மன்ற கவுன்சிலர் ரம்யாதனராஜ் தலைமை வைத்தார்.
துணைத்தலைவர் சுப்பராயன், வருவாய் ஆய்வாளர் சார்லஸ், கணக்கர் ராஜகணேஷ் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் ஆணையர் வாசுதேவன் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து பின்பு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
கூட்டத்தில் பொதுமக்கள் கீழத்தென்பாதி நகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளி கட்டிடம் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டு ஒரு ஆண்டு கடந்தும் புதிய கட்டிடம் கட்டவில்லை. இதனால் மாணவ- மாணவிகள் சமுதாயக் கூடத்தில் கல்வி கற்கும் நிலை இருந்து வருகிறது.
மாணவ- மாணவிகளின் நலன் கருதி புதிய பள்ளி கட்டிடம் கட்ட வேண்டும். 17 வது வார்டில் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். குடிசை பகுதி நிறைந்த இப்பகுதியில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கூட்டத்தில் வார்டு குழு உறுப்பினர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கால்நடைகளுக்கு குடற்புழு நீக்குவதற்கான மருந்துகள்.
- செயற்கை முறையிலான கருவூட்டல் நிகழ்ச்சி.
சீர்காழி:
சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணி திட்டம் மற்றும் சீர்காழி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய கால்நடைகளுக்கு செயற்கை முறையிலான கருவூட்டல் நிகழ்ச்சி மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் கீழவெளி கிராமம், அட்டக்குளம் பகுதி மற்றும் சாந்தபுத்தூர் கிராமத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.எஸ்.சங்கர் தலைமை வகித்தார். வசந்த்குமார் பட்டேல், டாக்டர். வி.மனோகரன் முன்னிலை வகித்தனர்.
சுபம் வித்யாமந்திர் பள்ளி தாளாளர் ஜி.சுதேஷ் ஜெயின் மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் மயிலாடுதுறை கால்நடை பராமரிப்புத் துறையை சார்ந்த 3 கால்நடை உதவி மருத்துவர், 2 கால்நடை ஆய்வாளர், 4 கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், டாக்டர். ராமபிரபா தலைமையில் மருத்துவக் குழு கலந்து கொண்டனர்.
இதில் 50-க்கும் மேற்ப ட்ட பசு மாடுகளை உரிமையா ளர்கள் அழைத்து வந்தனர்.
இம் முகாமில் கலந்து கொண்ட அனைத்து கால்நடைகளுக்கும் குடல் புழு நீக்குவதற்கான மருந்துகள், சத்தூட்ட மருந்துகள், செயற்கை முறையிலான கருவூட்டல் நிகழ்ச்சி மேலும் இலவசமாக அனைத்து மருந்துகளும் கொடுத்தனர்.
நிகழ்ச்சியில் ரோட்டரி முன்னாள் தலைவர்கள் சுடர் எஸ்.கல்யாணசுந்தரம், சுசீந்திரன், சோலை, சி.பி.பிரசாந்த், சுபம் பள்ளியின் நிர்வாக அலுவலர் ஜி.அன்பழகன், உடற்கல்வி ஆசிரியர் ச.ஹரிஹரன், 30-க்கும் மேற்பட்ட தன்னார்வ நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள், கால்நடை உரிமையாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாட்டி னை நாட்டு நல பணித்திட்ட அலுவலர் எஸ்.முரளிதரன் செய்திருந்தார்.
- மின்விளக்குகள் சரிவர எரியாததால் பொதுமக்கள் அச்சம்.
- மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி வாணி விலாஸ் தொடக்கப்பள்ளியில் 14 வது வார்டு சார்பில் வார்டு குழு பகுதி சபா கூட்டம் நடைபெற்றது கவுன்சிலர் ஜெயந்தி பாபு தலைமை வைத்தார் வருவாய் ஆய்வாளர் சார்லஸ் கணக்கர் ராஜகணேஷ் முன்னிலை வகித்தனர்
கூட்டத்தில் சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார் பின்பு பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டார் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் 14வது வார்டில் மழை நீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும்.
மின்விளக்குகள் சரிவர எரியாததால் இருளில் மது பிரியர்கள் மது குடித்து வருவதால் அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.
எனவே அனைத்து மின் விளக்குகளும் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டன கூட்டத்தில் 14 வது வார்டு பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.
- திருவண்ணாமலை உள்பட பல கோவில்களில் யாக வேள்வி, பூஜை.
- கும்பகோணம் அருகே பல சிவ ஸ்தலங்களில் யாகபூஜை நடத்தி வழிபாடு.
சீர்காழி:
ஜப்பானில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வரும் தமிழ் ஆர்வலர் கோபால் பிள்ளை சுப்ரமணியன் தலைமையில் ஜப்பானைச் சேர்ந்த குருஜி பாலகும்ப குருமுனி எனும் தக்காயூகி உள்ளிட்ட 15 பேர் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு உலக அமைதிக்காக தமிழகத்தில் திருவண்ணாமலை உள்பட பல கோவில்களில் யாக வேள்வி, பூஜைகள் செய்து வருகின்றனர்.
நாடி ஜோதிடர் அடையார் கல்யாணசுந்தரம் வழிகாட்டலின் மூலம் கும்பகோணம் அருகே பல சிவ ஸ்தலங்களில் யாக பூஜை நடத்தி வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக சீர்காழி சட்டைநாதர் கோவிலில் ஜப்பான் நாட்டினர் சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக பிரம்மபுரீஸ்வரர் சுவாமி, திருநிலைநாயகி அம்மன், சட்டநாதர் சுவாமி, தோணியப்பர், திருஞானசம்பந்தர் சந்நிதிகளில் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
- பேரிடர் கால மீட்பு உபகரணங்களின் நிலை குறித்து நேரில் ஆய்வு.
- கூடுதல் உபகரணங்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சீர்காழி:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய தீவிரமடைந்துள்ள நிலையில் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள தீயணைப்பு நிலையங்களில் பேரிடர் கால மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டதன் பேரில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தலைவர் பி.கே.ரவி கடலோரப் பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்
இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பூம்புகாரில் அமைந்துள்ள தீயணைப்பு நிலையத்துக்கு வருகை தந்த அவர் தீயணைப்பு நிலையத்தில் உள்ள பேரிடர் கால மீட்பு உபகரணங்கள் நிலை குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார் மேலும் பேரிடர் காலங்களில் உதவுவதற்காக தேவையான உபகரணங்கள் குறித்தும் கேட்டறிந்த அவர் தேவையான கூடுதல் உபகரணங்களும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஆய்வின்போது மயிலாடுதுறை எஸ்.பி. நிஷா மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- கனமழையால் மழைநீர்வடிய வழியின்றி வீடுகளை சூழ்ந்துள்ளது.
- ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு மழைநீர் வடிய வைக்கும் பணி.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி தோட்ட மானியத்தில் சில மாதங்களுக்கு முன்பு மயான சாலை பேவர் பிளாக் முலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகளின் குறுக்கே செல்லும் வடிகால் வாய்கால்கள் பகுதி சாலை போடப்பட்டதால் குறுகியது.
தற்பொழுது பெய்து வரும் கனமழையால் மழை நீர்வடிய வழியின்றி வீடுகளை சூழ்ந்துள்ளது இதனால்பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் சிரமப்பட்டன மேலும் விசப்பூச்சிகள், பாம்புகள் வருவதால் பேரூராட்சி நிர்வாகம் விரைவாக புதிதாக அமைக்கப்பட்ட சாலை குறுக்கே வடிகால் குழாய்களை அமைத்துமழை நீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்க கோரி 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இது குறித்து தகவல் அறிந்த வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர் இதனால் மயிலாடுதுறை சிதம்பரம் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், ஜேசிபி எந்திரம் வரவழைக்கப்பட்டு வெட்டி மழை நீர் வடிய வைக்கப்பட்டது.






