search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பன்னிரு திருமுறை மறுபதிப்பு பணி- மணிப்பூர் ஆளுனர் தொடங்கி வைத்தார்
    X

    தருமபுர ஆதீனத்திடம் மணிப்பூர் ஆளுனர் இல.கணேசன் அருளாசி பெற்றார்.

    பன்னிரு திருமுறை மறுபதிப்பு பணி- மணிப்பூர் ஆளுனர் தொடங்கி வைத்தார்

    • தேவார பாடசாலை மாணவர்கள் வடமொழியிலும், தமிழிலும் திருமுறைகள் ஓதினார்கள்.
    • 18 ஆயிரம் பக்கங்கள் உரையுடன் கூடிய பன்னிரு திருமுறை நூல் மறுபதிப்பு பணி தொடக்கம்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோவில் அருகே உள்ள ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி சுவாமிகள் நிலையத்திற்கு மணிப்பூர் மாநில ஆளுனர் இல.கணேசன், அவரது அண்ணன் கோபாலன் மற்றும் குடும்பத்தினர் வந்தனர்.

    அவரை கட்டளை தம்பிரான் மற்றும் சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து ஆளுனர் இல.கணேசன், அவரது அண்ணன் மற்றும் குடும்பத்தினர் சீர்காழி மடத்தில் தங்கி கோவில் திருப்பணிகளை கண்காணித்து வரும் தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்து அருளாசி பெற்றார். அப்போது ஆளுனர் இல.கணேசன் தருமபுரம் ஆதீனம் சார்பில் 18 ஆயிரம் பக்கங்கள் உரையுடன் கூடிய பன்னிரு திருமுறை நூல் மறுபதிப்பு பணியை தொடங்கி வைத்தார்.

    தருமை ஆதீனம் வேத சிவாகமம் பாடசாலை மற்றும் தேவார பாடசாலை மாணவர்கள் வடமொழியிலும், தமிழிலும் திருமுறைகள் ஓதினார்கள். அதனைக் கேட்டு அவர்களை வணங்கி மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது ம.தி.மு.க மாவட்ட செயலாளர் மார்கோனி, விதிபி. பள்ளி செயலர் சாமிநாதன், கோயில் சொத்து பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி பாலசுப்ரமணியன், கோயில் கணக்கர் செந்தில், வி.எச்.பி நிர்வாகி செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×