என் மலர்
மதுரை
- சமத்துவ சமுதாய திருமண விழாவில் பொதுமக்கள் உற்சாகமாக பங்கேற்க வேண்டும் என திண்டுக்கல் சீனிவாசன் பேட்டியளித்தார்.
- அதிகாலை 4 மணி அளவில் யாகசாலை பூஜை நடந்தது.
மதுரை
ஜெயலலிதா பேரவையின் சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில், வருகிற பிப்ரவரி 23-ந் தேதி, டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவில் 51 ஏழை, எளிய மணமக்களின் சமத்துவ சமுதாய திரும ணத்தை முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கிறார்.
இந்த திருமணத்திற்கான முகூர்த்தக்கால் நடும் பணி டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் நடந்தது. முன்னதாக அதிகாலை 4 மணி அளவில் யாகசாலை பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் காலை 10 மணி அளவில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் முகூர்த்தக்கால் நட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கே.டி.ராஜேந்திர பாலாஜி, இசக்கி சுப்பையா, ராஜலட்சுமி, அமைப்புச் செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், வி.வி.ராஜன் செல்லப்பா, சின்னதுரை, சுதா பரமசிவம், மாவட்ட செயலாளர்கள் எஸ்.பி.சண்முகநாதன், குட்டியப்பா எம்.எல்.ஏ., செந்தில்நாதன் எம்.எல்.ஏ, எம்.ஏ.முனியசாமி, ரவிச்சந்திரன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன்.
மகளிர் இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், நீதிபதி, தமிழரசன், மாநில பேரவை நிர்வாகிகள் இளங்கோவன், சதன் பிரபாகரன், வெற்றிவேல், சினிமா தயாரிப்பாளர் ஜி.என்.அன்புசெழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது:-
எல்லோரும் சமம் என்பதன் அடிப்படையில், தனது மகள் திருமணத்தை ஆர்.பி. உதயகுமார் ஏழை-எளிய மணமக்களுடன் சேர்த்து நடத்துகிறார். இந்த திருமணத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கிறார்.
ஏற்கனவே அம்மா பேரவையின் சார்பில் 80 திருமணங்கள் நடந்தன.அதனைத் தொடர்ந்து 120 திருமணங்கள் நடை பெற்றன. தற்போது நடைபெறும் திருமணம் சமத்துவ சமுதாய திருமணமாகும். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார்.
அதற்கு முன்னதாக இந்த திருமணவிழா ஒரு முத்தாய்ப்பாக அமையும். இந்த திருமணத்தில் பொது மக்கள் அனைவரும் உற்சா கமாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
- அமைச்சர் சேகர்பாபு, யானைக்கு பழம் கொடுத்து மகிழ்ந்தார்.
மதுரை
மதுரை அழகர்கோவில் மலையில் உள்ள ராக்காயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் பழமுதிர்சோலை முருகன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர்.
அவர்கள் கோவில் திருப்பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார். அவர் கோவில் வளாகம் முழுவதும் சென்று பார்வையிட்டு, அங்கு நடைபெறும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணியை பார்வையிட்ட அவர், அந்த பணியை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.
மேலும் மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதி உடல்நலம் குறித்து விசாரித்த அமைச்சர் சேகர்பாபு, யானைக்கு பழம் கொடுத்து மகிழ்ந்தார். பின்னர் யானை குளிப்பதற்காக கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தையும் அவர் பார்வை யிட்டார்.
மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தின் திருப்பணிகளுக்கு வந்துள்ள கற்களை தூண்களாக அமைக்கும் பணிகள் மதுரை அருகே உள்ள பெருங்குடி சின்ன உடப்பு கிராமத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளையும் அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி ஆகியோர் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.
- 13-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்.
- தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை அனுப்பானடி துணைமின்நிலையம் மற்றும் மாரியம்மன் தெப்பக்குளம் துணைமின்நிலையங்களில் மழைகால அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக வருகிற 13-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகள் மின்தடை ஏற்படும்.
ராஜீவ் காந்தி நகர், பகலவன் நகர், தமிழன்தெரு, ஆசிரியர் காலனி, அரவிந்த் மருத்துவமனை, சினிப்பிரியா தியேட்டர், ஆவின் பால் பண்ணை, செண்பகம் மருத்துவமனை சுற்றுப்புறம், ஐராவத நல்லூர், பாபு நகர், கணேஷ் நகர், ராஜா நகர், சாரா நகர், வேலவன் தெரு, கிருபானந்தவாரியார் நகர், சுந்தரராஜபுரம், கல்லம்பல், சிந்தாமணி, அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய் நகர். கங்கா நகர், ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், காமராஜர் தெரு. எஸ்.எம்.பி.காலனி, முந்திரிதோப்பு மற்றும் கேசவப்பெருமாள் கோவில் பகுதிகள்.
தெப்பக்குளம் தெற்கு, அடைக்கலம் காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி- தெப்பக்குளம் ரோடு, அனுப்பானடி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், காமராஜர் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில் பகுதிகள், அழகர் நகர், குருவிக்காரன் சாலை. ஏ.பி.டி.சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், சி.எ.ம்.ஆர்.ரோடு, கொண்டித்தொழு.
சீனிவாச பெருமாள் கோவில் தெரு, சின்ன கண்மாய், பாலரங்காபுரம், சண்முகா நகர், நவரத்தினம், பிசர் ரோடு, இந்திராநகர், பழைய குயவர்பாளையம் ரோடு, லட்சுமிபுரம் 1 முதல் 6 வரை, கான்பாளையம் 1, 2-வது தெருக்கள் வரை, பச்சரிசிக்காரத்தோப்பு, மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஷ்ணாபுரம் பகுதி, மேல அனுப்பானடியின் கிழக்குபகுதி, தமிழன் தெரு.என்.எம்.ஆர்.புரம்,ஏ.ஏ.ரோடு,பி.பி. ரோடு,டி.டி. ரோடு, மீனாட்சி அவன்யூ, திருமகள் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
- வியாபாரிகளை ரவுடிகள் மிரட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- கூட்டத்திற்கான ஏற்பாடுகளை குட்டி என்ற அந்தோணிராஜ் செய்தி ருந்தார்.
மதுரை
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல ஆலோசனை கூட்டம் தெப்பக்குளம் சந்திர குழந்தை திருமண மண்டபத்தில் நடந்தது. மண்டல தலைவர் மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார். ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். ஸ்வீட்ராஜன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில தலைவர் முத்துக்குமார், மாநில நிர்வாகிகள் தங்க ராஜ், சூசை ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் வணிகர்களை அச்சுறுத்தும் டெஸ்ட் பர்சேஸ் முறையை தடுக்கக்கோரியும், அதிக ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்த்தும், தென்தமிழகத்தில் வியாபாரிகளை ரவுடிகள் மிரட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரியும், அதிக டோல்கேட் வசூலை தடுக்க கோரியும், மின் கட்டண உயர்வை கைவிடக்கோரியும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
மேலும் மாநகராட்சி, உணவு பாதுகாப்பு மற்றும் வணிக வரித்துறை அதிகாரிகள் அத்துமீறி செயல்படுவதை தடுக்க கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கோரிக்கைகளை வலி யுறுத்தி வருகிற 20-ந்தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவனஈர்ப்பு அறப்போராட்டத்தில் பங்கேற்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் மதுரை மண்டல நிர்வாகிகள், உறுப்பி னர்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடு களை குட்டி என்ற அந்தோணிராஜ் செய்திருந்தார்.
- மத்திய, மாநில அரசு மற்றும் பெட்கிராட் இணைந்து தையல் மற்றும் டி.டி.பி. கம்ப்யூட்டர் 4 மாத இலவச பயிற்சி நடத்தப்படுகிறது.
- பயிற்சிக்கு பின் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்று தரப்படும்.
வாடிப்பட்டி
மத்திய, மாநில அரசு மற்றும் பெட்கிராட் இணைந்து மதுரை எஸ்.எஸ் காலனியில் தையல் மற்றும் டி.டி.பி. கம்ப்யூட்டர் 4 மாத இலவச பயிற்சி நடத்தப்படுகிறது. இதில் அடிப்படை கணினி பயிற்ச்சி, பேஜ் மேக்கர் கோரல்டிரா, போட்டோசாப், ஸ்போக்கன் இங்கிலீஷ், திறன் மேம்பாட்டு பயிற்சியும், அடிப்படை தையல் முதல் பவர் மெஷினில் அனைத்து விதமான ஆடைகளும் மற்றும் ஆரி ஜர்தோசி, எம்பிராய்டிங் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதில் 18 வயது 35 வயது வரை உள்ள ஆண், பெண் இருவரும் கணினி பயிற்சிக்கும், பெண்கள் தையல் பயிற்சிக்கும் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியாளர்களுக்கு இலவச சீருடை, பாட புத்தகம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும். பயிற்சிக்கு பின் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்று தரப்படும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி, பெட்கிராட், வடக்கு வாசல், எஸ்.எஸ்.காலனி, மதுரை.தொடர்புக்கு 89030 03090.
- திருநெல்வேலி-திருச்செந்தூர் பாதையில் 110 கி.மீ. வேகத்தில் ரெயில்களை இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
- இந்தப் பகுதிகளில் 30 கி.மீ. வேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மதுரை
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரை இணைக்கும் வகையில் திருநெல்வேலியில் இருந்து 61 கி.மீ. தூர ரெயில் பாதை அமைந்துள்ளது. சென்னை, பாலக்காடு, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு 7 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மறு மார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து இந்த 7 ரெயில்கள் பல்வேறு பகுதிக்கு செல்கின்றன. தற்போது இந்த பகுதியில் ரெயில்கள் 70 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன. ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க ரெயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடந்தன. ரெயில் வேக சோதனை ஓட்டமும் நடைபெற்றது. இதையடுத்து திருநெல்வேலி-திருச்செந்தூர் ரெயில்வே பிரிவில் ரெயில்களை 110 கி.மீ. வேகத்தில் இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த பகுதியில் ரெயில்கள் 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும்.
மேலும் செங்கோட்டை-கொல்லம், திண்டுக்கல்-பழனி-பொள்ளாச்சி, மதுரை-விருதுநகர் ஆகிய பிரிவுகளில் உள்ள ரெயில் நிலையங்களில் ரெயில்கள் நேரடி ரெயில் பாதையில் இருந்து அருகில் உள்ள ரெயில் பாதையில் பயணிக்கும் போது இதுவரை 15 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது. இதுவும் தற்போது இந்தப் பகுதிகளில் 30 கி.மீ. வேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெயில்களை வேகமாக இயக்குவதால் பயணிகளின் பயண நேரம் குறைய வாய்ப்புள்ளது.
- உசிலம்பட்டியில் உள்ள 58 கிராம பாசன கால்வாயில் மீண்டும் தண்ணீர் திறந்து விட வேண்டும்என விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- 58 கிராமபாசன கால்வாயை நீர்பாசன திட்டமாக அறிவிக்கவும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்படுகிறது.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கிராம பாசன சங்க விவசாயிகள் கூட்டம் நடந்தது. தலைவர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தார்.
பொருளாளர் செந்தில்குமார், துணைத் தலைவர்கள் மகாராசன், சன்னாசி, துணைச் செயலாளர்கள் பொன் ஆதிசேடன், இரும்புத்துரை தலைமை ஆலோசகர் சின்னான், மாவட்ட கவுன்சிலர் காசிமாயன், விருவீடு ஊராட்சி தலைவர் தருமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
58 பாசன கால்வாயில் தண்ணீர் திறக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கும், முதல்வ ருக்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .
28.10.2022 அன்று வைகை அணையில் திறக்கப்பட்ட 58 கிராம பாசன கால்வாய் தண்ணீர் இடதுபுற கால்வாயில் ரெட்டியபட்டி, அய்யம்பட்டி, இன்னொரு பிரிவான பாறைப்பட்டி பிரிவில் போடுவார்பட்டி, புதுக்கோட்டை பிரிவில் சடச்சிபட்டி, கீரிப்பட்டி பிரிவில் பூதிப்புரம், கிருஷ்ணாபுரம், கட்டக்கரு ப்பன்பட்டி, போத்தம்பட்டி பிரிவில் வடுகபட்டி போன்ற கண்மாய்கள் பயனடையவில்லை.
மேற்கண்ட கண்மாய்க ளுக்கு மீண்டும் வைகை அணையில் 67 அடி தண்ணீர் வரும்பொழுது தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
58 கிராம பாசன கால்வாயில் பயன்பெறும் கண்மாய்களில் தண்ணீர் திறப்பின் போது முழுமையாக தண்ணீர் பெற வாய்ப்புள்ள கண்மா ய்களுக்கு தனிமடை அமைக்க அரசுக்கும், பொதுப்பணித்துறைக்கும் கோரிக்கை விடுக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் 58 கிராம பாசன கால்வாயில் அனைத்து கண்மாய்களும் பயன்பெற உறுதிப்படுத்தப்பட்ட, நிரந்தரமாக்கப்பட்ட நீரை பெற உரிய ஆணையை அரசு பிறப்பிக்கவும், 58 கிராமபாசன கால்வாயை நீர்பாசன திட்டமாக அறிவிக்கவும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்படுகிறது.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், மாரீஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.
- நகை கொள்ளை குறித்து கரிமேடு போலீசில் மாரீஸ்வரி புகார் கொடுத்தார்.
மதுரை:
மதுரை நாராயணபுரம் பேங்க் காலனியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சுகுணா (வயது 46). இவர் மதுரை மாநகர வரதட்சணை தடுப்பு பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.
சுகுணா நேற்று இரவு வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றார். அப்போது அவரை 2 மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்தனர். சுகுணா கிருஷ்ணாபுரம் காலனி சந்திப்புக்கு வந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், சுகுணா கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இது தொடர்பாக தல்லாகுளம் போலீசில் சுகுணா புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை கரிமேடு வேல்முருகன் நகர் வைகை தெருவை சேர்ந்தவர் கண்ணன் ஆசாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மாரீஸ்வரி (45). இவர் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் மதுரா கோட்ஸ் பாலம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், மாரீஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர். இது தொடர்பாக கரிமேடு போலீசில் மாரீஸ்வரி புகார் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாநகரில் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. எனவே அவர்களை கைது செய்ய போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சோலைமலை முருகன் கோவிலில் உபயதாரர்களிடமிருந்து பெறப்பட்ட நிதியில் ரூ.2 கோடி மதிப்பில் வெள்ளி கதவுகள் அமைக்கும் திருப்பணிகள் தொடங்கப்பட்டது.
- தமிழகத்தில் மொத்தம் 114 கோவில்கள் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை உச்சியில் உள்ளது பிரசித்தி பெற்ற நூபுரகங்கை ராக்காயி அம்மன் கோவில். இக்கோவில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,400 அடி உயரத்தில் அமைந்துள்ள நூபுரகங்கை தீர்த்தம் உற்பத்தியாகும் மாதவி மண்டபத்தில் அதி தேவதையாக கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.
இந்நிலையில் ராக்காயி அம்மன் கோவிலில் இன்று காலை 7.25 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க கும்ப கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், எம்.எல்.ஏ.க்கள் பெரிய புள்ளான், வெங்கடேசன் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
பின்னர் பழமுதிற்சோலை முருகன் கோவிலில் புதிய வெள்ளிக் கதவுகள் திருப்பணியை அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்ற இந்த ஆட்சியில் பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 394 திருக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
மதுரை அழகர்கோவிலில் உள்ள ராக்காயி அம்மன் கோவிலில் ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் உபயதாரர்கள் மற்றும் திருக்கோவில் நிதியுடன் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு பக்தர்கள் பங்கேற்புடன் இன்று கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
சோலைமலை முருகன் கோவிலில் உபயதாரர்களிடமிருந்து பெறப்பட்ட நிதியில் ரூ.2 கோடி மதிப்பில் வெள்ளி கதவுகள் அமைக்கும் திருப்பணிகள் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 114 கோவில்கள் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
திருக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்புக்காரர்களிடம் இருந்து தொடர்ந்து மீட்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த மலைக் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்யும் வண்ணம் ரோப் கார் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் சேவைகளை இந்து நிலைய அறநிலையத்துறை செய்து வருகிறது. திருக்கோவிலுக்கு வரவேண்டிருந்த வாடகை பாக்கி நிலுவையில் இருந்ததை இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை ரூ.260 கோடியை வசூலித்து திருக்கோவிலுக்கு கொண்டு சேர்த்துள்ளோம். பல கோவில்களில் சுவாமிக்கு பயன்படாத அணிகலன்களை உருக்கி தங்க வைப்பீட்டு திட்டத்தில் வைத்து அதில் வரும் வருமானத்தையும் திருக்கோவிலுக்கு பயன்படுத்தி வருகிறோம்.
இப்படி பல்வேறு வகையில் திருக்கோவிலுக்கு சேர வேண்டிய சொத்துக்கள் இருக்கின்றதோ அவற்றை எல்லாம் மீட்கின்ற முயற்சியில் ஈடுபட்டதால் இன்று ரூ.3 ஆயிரத்து 864 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த மீட்பு நடவடிக்கை தொடரும். பக்தர்கள் தேவையை நிறைவேற்றும் அரசாக, திருக்கோவில்களை புனரமைக்கும் அரசாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வீர வசந்தராயர் மண்டபம் ரூ.19 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. அந்த பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் செல்போன் தடை அமலில் இருக்கிறது. அங்கு பக்தர்களின் செல்போன்களை பாதுகாக்கும் நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. நீதியரசர் அறிவுறுத்தலின்படி 48 முதுநிலை கோவில்களில் செல்போன் தடை செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோவிலில் அந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
அறநிலையத்துறையில் போலி நியமனம் குறித்து தகுந்த ஆதாரம் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் போலிச் சான்றிதழ் வழங்கி திருக்கோவில்களில் பணியில் சேர்ந்த பணியாளர்கள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் அவர்கள் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் திருடு போன 10-க்கும் மேற்பட்ட சிலைகள் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. தி.மு.க. அரசின் முயற்சியால் தமிழகத்தில் சிலை கடத்தல் முற்றிலும் ஒடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடத்தப்பட்ட சிலைகள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- புகையிலை மற்றும் குட்கா புழக்கத்தை கட்டுப்படுத்த மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
- ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 35 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
மதுரை:
மதுரை மாநகரில் புகையிலை மற்றும் குட்கா புழக்கத்தை கட்டுப்படுத்த மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை தெற்குவாசல் தெற்கு வெளிவீதி பாண்டிய விநாயகர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.
தொடர்ந்து போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 35 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அந்த வீட்டில் இருந்த விக்னேஷ் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே கீரைத்துறை போலீஸ் நிலையத்தில் புகையிலை பொருட்கள் விற்றதாக வழக்குகள் நிலுவையில் உள்ளது.
வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்றால் போலீசாரால் கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்து தெற்குவாசலில் வீட்டை வாடகை எடுத்து அதை குடோனாக மாற்றியுள்ளார்.வட மாநிலங்களில் இருந்து புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்களை வாங்கி, வீட்டுக்குள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்று கைதான விக்னேசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரை மண்டல தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
- தெப்பக்குளம் சந்திர குழந்தை திருமண மண்டபத்தில் இன்று மாலை நடக்கிறது.
மதுரை
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல ஆலோசனை கூட்டம் இன்று மாலை தெப்பக்குளம் சந்திர குழந்தை திருமண மண்டபத்தில் நடக்கிறது.
மண்டல தலைவர் மைக்கேல் ராஜ் தலைமை தாங்குகிறார். ஜெயக்குமார் முன்னிலை வகிக்கிறார். ஸ்வீட்ராஜன் வரவேற்கிறார்.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில தலைவர் முத்துக்குமார், மாநில நிர்வாகிகள் தங்கராஜ், சூசை ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இதில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மதுரை மண்டல நிர்வாகிகள், உறுப்பினர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை குட்டி என்ற அந்தோணிராஜ் செய்துள்ளார்.
- மதுரை மேற்கு மண்டலத்தில் வருகிற 13-ந் தேதி குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது
- இந்த தகவலை மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுரை
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்களின் குறை களை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்கிழமை தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்க ளுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
அதன்படி வருகிற 13-ந் தேதி (செவ்வாய்கிழமை) திருப்பரங்குன்றம் நகர்ப்புற சுகாதார நிலையம் அருகில் உள்ள மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டலம் 5-ம் எண் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.
இதில் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாடக்குளம், முத்துராமலிங்கபுரம், முத்துப்பட்டி அழகப்பன் நகர் மெயின் ரோடு, பழங்காநத்தம், கோவலன் நகர், டி.வி.எஸ்.நகர் மெயின் ரோடு, தென்னகரம், ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு, வீரகாளியம்மன் கோவில் தெரு, ஜெய்ஹிந்துபுரம், சோலையழகுபுரம், எம்.கே.புரம், வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு.
மீனாட்சி நகர் அவனியாபுரம், பாம்பன் சுவாமி நகர், பசுமலை, திருநகர், சவுபாக்யாநகர், ஹார்விப்பட்டி, திருப்பரங்குன்றம், சன்னதி தெரு, பாலாஜி நகர், அவனியாபுரம்- அருப்புக்கோட்டை மெயின் ரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம்.
மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.






