என் மலர்tooltip icon

    மதுரை

    • ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சில இடங்களில் சாட்டிலைட் போன் சிக்னல்கள் கிடைத்துள்ளது.
    • கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கும் நாட்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் சென்று வரலாம்.

    மதுரை:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் அரிய வகை வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி தற்போது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து வனத்திற்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் உள்ள செண்பகத்தோப்பில் பேச்சியம்மன் கோவில், காட்டழகர் கோவில்கள் உள்ளன. இங்கு விசேஷ நாட்களில் திரளான பக்தர்கள் கூடுவது வழக்கம்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு செண்பகத்தோப்பு காட்டழகர் கோவில் மேல்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் சாட்டிலைட் போன் செயல்பாடுகள் இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளதாக சென்னை சைபர் கிரைம் கண்காணிப்பு பிரிவுக்கு சிக்னல் கிடைத்தது.

    இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை போலீசார், நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருடன் குறிப்பிட்ட பகுதியில் சில நாட்களாக தங்கி கண்காணித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர், மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் திலீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சில இடங்களில் சாட்டிலைட் போன் சிக்னல்கள் கிடைத்துள்ளது. மேலும் இங்கு அவ்வப்போது சமூக விரோதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.

    எனவே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காட்டழகர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், ஊழியர்கள் கோவிலில் இரவு நேரங்களில் தங்க அனுமதியில்லை.

    மேலும் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கும் நாட்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் சென்று வரலாம். இரவு நேரங்களில் வனத்துறையினர் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையின்போது கோவில் மற்றும் கோவில் வளாகத்தில் தங்கியிருப்போர் மீது வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாட்டுத்தாவணியில் ஜவுளி கடையில் நகை திருடிய தாய்- மகள் கைது செய்யப்பட்டனர்.
    • கவரிங் நகையை வைத்து விட்டு ஒரிஜினல் நகையை திருடி சென்றது தெரிய வந்தது.

    மதுரை

    மதுரை மாட்டுத்தா வணியில் ஜவுளிக்கடை இயங்கி வருகிறது. அங்கு ஊழியர்கள் நேற்று மாலை பணியில் இருந்தனர். அப்போது அங்கு ரூ.2.10 லட்சம் மதிப்புடைய 5 பவுன் நகை திருடு போனது.

    இதுகுறித்து மாட்டுத்தா வணி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    இதில் பர்தா அணிந்த 2 பெண்கள், ஜவுளிக்கடையில் நகை திருடியது தெரியவந்தது. இருவரும் செக்கானூரணி, பன்னியான் ரோடு ராமகிருஷ்ணன் மனைவி சுமதி (50), சரவணன் மனைவி பிரியதர்ஷினி (28) என்பது தெரிய வந்தது. இருவரும் தாய்-மகள் ஆவார்கள்.

    மாட்டுத்தாவணி ஜவுளிக்கடையில் கவரிங் செயினை வாங்கிய அவர்கள், ஒரிஜினல் நகைக்கடை பிரிவுக்கு வந்தனர். அப்போது அவர்கள் பார்வையிடுவது போல், கவரிங் நகையை வைத்து விட்டு ஒரிஜினல் நகையை திருடி சென்றது தெரிய வந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • தெப்பக்குளத்தில் பிணமாக கிடந்தவர் யார்? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • ஆரஞ்சு கலர் முழுக்கை டி-சர்ட்டும், கருப்பு டவுசரும் அணிந்திருந்தார்.

    மதுரை

    மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் தியாகராஜர் மாடல் பள்ளி எதிரில் நேற்று (11-ந் தேதி) காலையில் 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. வலது முழங்காலின் கீழ் பழைய காயத்தழும்பும், இடது முழுங்காலில் பழைய காயத்தழும்பும் காணப்படுகிறது.

    ஆரஞ்சு கலர் முழுக்கை டி-சர்ட்டும், கருப்பு டவுசரும் அணிந்திருந்தார். இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் ராமநாதன் கொடுத்த புகாரின்பேரில் தெப்பக்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மக்கள் நீதி மய்யம் ஆலோசனை கூட்டம் சிவ.இளங்கோ தலைமையில் நடந்தது.
    • 10 நாட்களாக மண்டல ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.

    மதுரை

    மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் சிவ.இளங்கோ தலைமையில் 10 பேர் அடங்கிய குழுவினர், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். அவர்கள் மதுரை வந்துள்ளனர். இங்கு அவர்கள் 10 நாட்களாக மண்டல அளவில் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர்.

    மதுரை வடமேற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம், மாநில செயலாளர் சிவ.இளங்கோ தலைமையில் நடந்தது. பொறியாளர் அணி மாநில செயலாளர் வைத்தீசுவரன், கட்டமைப்பு மாநில இணை செயலாளர் ஜெய் கணேஷ், மாநில துணைச் செயலாளர் சண்முகராஜன், மண்டல செயலாளர் அழகர், ஊடக அணி மண்டல அமைப்பாளர் முத்து கிருஷ்ணன், மகளிரணி மண்டல அமைப்பாளர் பத்மா ரவிச்சந்திரன், இளைஞரணி மண்டல அமைப்பாளர் பரணி ராஜன், வக்கீல் அணி மண்டல அமைப்பாளர் கிருஷ்ணகுமார், ஆதி திராவிட நல அணி மண்டல அமைப்பாளர் நாகநாதன், நற்பணி இயக்க அணி மண்டல அமைப்பாளர் சிவபாலகுரு, மாவட்ட செயலாளர் வி.பி.மணி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஒவ்வொரு மாவட்ட த்திலும் நிர்வாகிகளிடம் வளர்ச்சிப்பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும்? வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது. பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, கட்சி தலைவர் கமல்ஹாசனிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

    மக்கள் நீதி மய்யத்தின் மண்டல வாரியான ஆலோசனைக் கூட்டம், நெல்லையில் தொடங்கியது. இதுவரை 6 மண்டலங்களுக்கு சுற்றுப்பயணம் முடிந்து ள்ளது. 7-வது மண்டலமாக மதுரையில் 10 நாட்களாக மண்டல ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. இதுவரை 124 சட்டமன்ற தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் முடிந்துள்ளது.

    கடந்த 5-ந் தேதி பழனி, திண்டுக்கல், தேனி, ஆண்டிப்பட்டி, 11-ந் தேதி மதுரை தெற்கு, மத்திய தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இன்று (12-ந் தேதி) மதுரை கிழக்கு, மேலூர் பகுதி நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. நாளை (13-ந் தேதி) மதுரை வடக்கு, சோழவந்தான், 14-ந் தேதி உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

    மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் மவுரியா தலைமையில் பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் பணிகளை மேற்கொள்வது தொடர்பான பாராளுமன்ற முன்னெடுப்பு கூட்டமும் நடந்து வருகிறது.

    • பெண்ணிடம் நகை பறித்த போலீசுக்கு டிமிக்கி கொடுத்த கொள்ளையர்கள் சிக்கினர்.
    • 2 மாதங்களுக்கு பிறகு மதுரைக்கு திரும்பிய தகவல் போலீசுக்கு கிடைத்தது.

    மதுரை

    மதுரை திருப்பாலை, பொன்விழா நகரை சேர்ந்தவர் அகி லாண்டேசுவரி (வயது 39). இவரது கணவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். சம்பவத்தன்று அகிலா ண்டேசுவரி ஓட்டலில் சாப்பாடு வாங்கிவிட்டு வீடு திரும்பி ெகாண்டிருந்தார்.

    மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பின் தொடர்ந்து அகிலாண்டேசுவரி அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.

    இந்த வழக்கில் தொடர்பு டைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகநாதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் குற்றவாளிகள் பற்றிய விவரம் தெரிய வந்தது. அவர்கள் மதுரையில் இருந்து போலீசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டதும் தெரியவந்தது.

    இந்த நிலையில் இருவரும் 2 மாதங்களுக்கு பிறகு மதுரைக்கு திரும்பிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வீட்டில் பதுங்கியிருந்த மூன்றுமாவடி மகாலட்சுமி நகர் உப்பிலி மாடசாமி என்ற மருது(25), வளர்நகர், அம்பலகாரன்பட்டி செல்வம் மகன் நவநீதன் (23) ஆகியோரை ேபாலீசார் கைது செய்தனர்.

    • தை அமாவாசையையொட்டி மதுரை-காசிக்கு ஜனவரியில் சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது.
    • நபருக்கு ரூ.21 ஆயிரத்து 500 கட்டணம், பயண சீட்டுகளை www.ularail.com இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

    மதுரை

    தை அமாவாசை அன்று காசியில் முன்னோருக்கு பித்ரு பூஜை செய்வதற்காக மதுரையில் இருந்து சிறப்பு ெரயில் இயக்கப்பட உள்ளது.

    இந்த ெரயில் மதுரையில் இருந்து ஜனவரி 16-ந்தேதி புறப்படுகிறது. இதில் பயணம் செய்பவர்கள் 19-ந் தேதி திரிவேணி சங்க மத்தில் புனித நீராடி, அலோபிதேவி சக்தி பீடம் தரிசனம் செய்யலாம்.

    20-ந்தேதி கங்கையில் புனித நீராடி காசி விசுவநாதர், அன்னபூரணி, விசாலாட்சி சக்தி பீடத்தை தரிசனம் செய்யலாம். மாலையில் ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, 21-ந்தேதி கயாவில் முன்னோருக்கு பிண்டபூஜை செய்து, மங்கள கவுரி சக்தி பீடத்தை தரிசிக்கலாம்.

    23-ந்தேதி காமாக்யா தேவி சக்திபீட தரிசனமும், 25-ந்தேதி கொல்கத்தா காளிதேவி, காளிகாட், பேளூர் மடம், தச்சினேசுவரர் தரிசனமும், 26-ந்தேதி ஒடிசா பூரி கொனார்க் சூரியகோவில், சந்திரபாகா கடற்கரை, பூரி ஜெகநாதர், பிமலாதேவி சக்தி பீடம் தரிசனமும் முடித்து 28-ந்தேதி சுற்றுலா ெரயில் மதுரை திரும்புகிறது.

    ெரயில் கட்டணம், தங்குமிடம், உணவு, உள்ளூர் பஸ் வசதி ஆகியவை உள்பட நபருக்கு ரூ.21 ஆயிரத்து 500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பயண சீட்டுகளை www.ularail.com இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 73058 58585 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ெரயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • தேனியில் மதுரை ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகையின் 4-வது கிளை திறப்பு விழா கோலாகலமாக நடந்தது.
    • வாடிக்கையாளர்களுக்கு நிர்வாக இயக்குனர்கள் வெள்ளி நாணயத்தை பரிசாக வழங்கினர்.

    மதுரை

    தேனியில் மதுரை ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகையின் 4-வது கிளை திறப்பு விழா கோலாகலமாக நடந்தது.

    மதுரையில் 1990-ல் முதல் கிளையை ஆரம்பித்த ஸ்ரீகிருஷ்ணா தங்க மாளிகை அயராத உழைப்பின் மூலம் தரமான தங்க நகைகள் மற்றும் வைர நகைகளை புதுப்புது கலெக்சன்களை வழங்கிவந்த நிலையில் வாடிக்கையாளர்களின் ஆதரவினாலும், தேனியில் ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகையின் 4-வது கிளை திறந்து வைக்கப்பட்டது.

    தேனி-மதுரை ரோட்டில் பிரமாண்ட ஷோரூமை நிர்வாக இயக்குனர்கள் செல்வம், ஜெகதீசன், மணிவாசகம், சங்கர் ஆகியோர் முன்னிலையில் தேனி ஏ.எம்.ஆர்.ஆர். குழுமத்தலைவர்-தொழிலதிபர் சந்திரகுமார் திறந்து வைத்தார். அகிலாகுமார் குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    திறப்பு விழா சலுகையாக தங்கம் பவுனுக்கு ரூ. 400 தள்ளுபடியாகவும், வைரம் கேரட்டிற்கு ரூ. 15 ஆயிரம் தள்ளுபடியாகவும், வெள்ளி பொருட்களுக்கு செய்கூலி சேதாரம் இலவசமாகவும், திறப்பு விழாவிற்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு நிர்வாக இயக்குனர்கள் பாலாஜி, நந்தகிருஷ்ணன், ஸ்ரீராம், கோகுல்நாத் ஆகியோர் வெள்ளி நாணயத்தை பரிசாக வழங்கினர்.

    • மதுரையில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.
    • இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. இடைக்கால பொது செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க தமிழ கத்தில் கடந்த 1½ ஆண்டு காலமாக பொதுமக்களை பல்வேறு வகைகளில் வாட்டி வதைக்கும் தி.மு.க. அரசு சமீபத்தில் சொத்து வரி உயர்வு, ஆவின் பால் விலை உயர்வு, மின்கட்டணம் உயர்வு என்பது போன்ற அத்தியாவசிய தேவைகளின் வரிகளை, விலைகளை அதிக அளவில் உயர்த்தி பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது.

    இந்த கட்டண உயர்வு களை திரும்ப பெற்றிட வலியுறுத்தி மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை முனிச்சாலை சந்திப்பில் (தினமணி தியேட்டர்) நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் இன்னாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், பகுதி, வட்ட நிர்வாகிகள், முன்னோடிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக பங்கேற்று மக்கள் விரோத தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்ட அன்புடன் வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • சீட்டு பணம் மோசடி செய்த பஸ் ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை புதுராமநாதபுரம் ரோடு, கம்பர் வீதியைச் சேர்ந்த சேது பாஸ்கர் மனைவி பாண்டீசுவரி.

    இவர் தெப்பக்குளம் போலீசில் கொடுத்த புகார் மனுவில், முத்துராமலிங்கபுரம், புது மேட்டு தெருவில் வசிக்கும் இளங்கோவன் (45), அவரது மனைவி கவிதா (40) ஆகியோரிடம் ரூ.10 லட்சத்துக்கு சீட்டு போட்டிருந்தேன்.

    இதற்கான பணத்தை முறையாக செலுத்தி வந்தேன். இந்த நிலையில் இளங்கோவன் தம்பதியினர் சீட்டு பணம் வசூலிப்பதை பாதியில் முடிவுக்கு கொண்டு வந்தனர். நான் அவர்களிடம் செலுத்திய பணத்தை கேட்டேன்.

    அவர்கள் திருப்பி தர மறுத்து விட்டனர். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாண்டீசுவரி புகார் கொடுத்துள்ள இளங்கோவன், மதுரை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஊழியராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாடு குறுக்கே புகுந்ததால் பைக்கில் சென்ற தம்பதி படுகாயம் அடைந்தனர்.
    • இந்த சம்பவம் குறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வசந்தம் நகரை சேர்ந்தவர் ஜெயசித்ரா.

    சம்பவத்தன்று இவர் கணவர் பாலசண்முகத்துடன், மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு வந்தார். சிலைமான் ெரயில்வே மேம்பாலம்- நான்கு வழிச்சாலை பகுதியில் வந்தபோது மாடு குறுக்கே பாய்ந்தது.

    இதில் வாகனம் நிலை தடுமாறி தம்பதியினர் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த பாலசண்முகம்- ஜெயசித்ராவை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஜெயசித்ரா சிலைமான் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 

    • மறியலில் ஈடுபட்ட 25-க்கும் மேற்பட்டோரை வேனில் ஏற்றி புதூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
    • ஜமால் சித்திக் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    பா.ஜனதா சிறுபான்மை பிரிவு தேசிய தலைவர் ஜமால் சித்திக் நேற்று மதுரை வந்தார். அவருடன் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், மாநில தலைவி டெய்சி தங்கையா, மாநில பொதுச்செயலாளர் கல்வாரி தியாகராஜன் உள்பட நிர்வாகிகள் பலரும் வந்திருந்தனர். இந்த தலைவர்கள் கோரிப்பாளையம் தர்காவுக்கு செல்ல முயன்றனர்.

    அதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் பா.ஜனதா போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பா.ஜனதா நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் மறியலில் ஈடுபட்ட 25-க்கும் மேற்பட்டோரை வேனில் ஏற்றி புதூர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    அதனை தொடர்ந்து மாநகர் மாவட்ட தலைவர் மகா. சுசீந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள், காவல் நிலையத்திற்கு திரண்டு வந்து போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர். பா.ஜ.க. தலைவர் எச்.ராஜாவும், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதையடுத்து போலீசார் அனுமதியின்றி கோரிப்பாளையம் தர்காவுக்கு செல்ல முயன்றது, சாலை மறியலில் ஈடுபட்டது உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஜமால் சித்திக் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்பு அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

    • ஒர்க்‌ஷாப்பில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
    • இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அண்ணாநகர் ஆவின் அலுவலகம் அருகே கார் ஒர்க்‌ஷாப் செயல்பட்டு வருகிறது. அங்கு கார் ஒன்றை ஊழியர்கள் இன்று பழுது பார்த்துக் கொண்டி ருந்தனர். அப்போது அந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சியில் ஈடுபட்டனர்.

    மேலும் இந்த தீ விபத்து குறித்து தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். ஆனால் அதற்குள் அந்த கார் முற்றிலுமாக எரிந்து விட்டது.

    கார் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×