சீட்டு பணம் மோசடி: பஸ் ஊழியர் மீது வழக்கு

சீட்டு பணம் மோசடி செய்த பஸ் ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
சீட்டு பணம் மோசடி: பஸ் ஊழியர் மீது வழக்கு
Published on

மதுரை

மதுரை புதுராமநாதபுரம் ரோடு, கம்பர் வீதியைச் சேர்ந்த சேது பாஸ்கர் மனைவி பாண்டீசுவரி.

இவர் தெப்பக்குளம் போலீசில் கொடுத்த புகார் மனுவில், முத்துராமலிங்கபுரம், புது மேட்டு தெருவில் வசிக்கும் இளங்கோவன் (45), அவரது மனைவி கவிதா (40) ஆகியோரிடம் ரூ.10 லட்சத்துக்கு சீட்டு போட்டிருந்தேன்.

இதற்கான பணத்தை முறையாக செலுத்தி வந்தேன். இந்த நிலையில் இளங்கோவன் தம்பதியினர் சீட்டு பணம் வசூலிப்பதை பாதியில் முடிவுக்கு கொண்டு வந்தனர். நான் அவர்களிடம் செலுத்திய பணத்தை கேட்டேன்.

அவர்கள் திருப்பி தர மறுத்து விட்டனர். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாண்டீசுவரி புகார் கொடுத்துள்ள இளங்கோவன், மதுரை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஊழியராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com