search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்கள் நீதி மய்யம் ஆலோசனை கூட்டம்
    X

    மக்கள் நீதி மய்யம் ஆலோசனை கூட்டம்

    • மக்கள் நீதி மய்யம் ஆலோசனை கூட்டம் சிவ.இளங்கோ தலைமையில் நடந்தது.
    • 10 நாட்களாக மண்டல ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.

    மதுரை

    மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் சிவ.இளங்கோ தலைமையில் 10 பேர் அடங்கிய குழுவினர், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். அவர்கள் மதுரை வந்துள்ளனர். இங்கு அவர்கள் 10 நாட்களாக மண்டல அளவில் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர்.

    மதுரை வடமேற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம், மாநில செயலாளர் சிவ.இளங்கோ தலைமையில் நடந்தது. பொறியாளர் அணி மாநில செயலாளர் வைத்தீசுவரன், கட்டமைப்பு மாநில இணை செயலாளர் ஜெய் கணேஷ், மாநில துணைச் செயலாளர் சண்முகராஜன், மண்டல செயலாளர் அழகர், ஊடக அணி மண்டல அமைப்பாளர் முத்து கிருஷ்ணன், மகளிரணி மண்டல அமைப்பாளர் பத்மா ரவிச்சந்திரன், இளைஞரணி மண்டல அமைப்பாளர் பரணி ராஜன், வக்கீல் அணி மண்டல அமைப்பாளர் கிருஷ்ணகுமார், ஆதி திராவிட நல அணி மண்டல அமைப்பாளர் நாகநாதன், நற்பணி இயக்க அணி மண்டல அமைப்பாளர் சிவபாலகுரு, மாவட்ட செயலாளர் வி.பி.மணி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஒவ்வொரு மாவட்ட த்திலும் நிர்வாகிகளிடம் வளர்ச்சிப்பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும்? வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது. பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, கட்சி தலைவர் கமல்ஹாசனிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

    மக்கள் நீதி மய்யத்தின் மண்டல வாரியான ஆலோசனைக் கூட்டம், நெல்லையில் தொடங்கியது. இதுவரை 6 மண்டலங்களுக்கு சுற்றுப்பயணம் முடிந்து ள்ளது. 7-வது மண்டலமாக மதுரையில் 10 நாட்களாக மண்டல ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. இதுவரை 124 சட்டமன்ற தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் முடிந்துள்ளது.

    கடந்த 5-ந் தேதி பழனி, திண்டுக்கல், தேனி, ஆண்டிப்பட்டி, 11-ந் தேதி மதுரை தெற்கு, மத்திய தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இன்று (12-ந் தேதி) மதுரை கிழக்கு, மேலூர் பகுதி நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. நாளை (13-ந் தேதி) மதுரை வடக்கு, சோழவந்தான், 14-ந் தேதி உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

    மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் மவுரியா தலைமையில் பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் பணிகளை மேற்கொள்வது தொடர்பான பாராளுமன்ற முன்னெடுப்பு கூட்டமும் நடந்து வருகிறது.

    Next Story
    ×