என் மலர்tooltip icon

    மதுரை

    • செல்லத்தம்மன் கோவில் திருவிழா வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது.
    • மேற்கண்ட தகவலை மீனாட்சி அம்மன் கோவில் துணை ஆணையர் அருணாசலம் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உப கோவிலாக குறிப்பிடத்தக்கது, வடக்கு வாசல் செல்லத்தம்மன் கோவில். இங்கு கண்ணகி இடது கையில் சிலம்புடனும், வலது கையில் செண்டு ஏந்திய நிலையிலும் எழுந்தருளி உள்ளார்.

    மதுரை வடக்கு வாசல் செல்லத்தம்மனை வழிபடு வோருக்கு பேச்சாற்றல் ஏற்படும். பகைவரால் ஏற்படும் தொல்லைகள் நீங்கி பிரச்சினைகள் அகலும் என்பது ஐதீகம் ஆகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த வடக்கு வாசல் செல்லத்தம்மன் கோவிலில் வருகிற 12-ந் தேதி இரவு வாஸ்து சாந்தியுடன் திருவிழா தொடங்குகிறது.

    13-ந் தேதி கொடியேற்றத்துடன் உற்சவர் திருவிழா தொடங்கி 22-ந் தேதி வரை நடக்கிறது. இதில் முத்தாய்ப்பாக 20-ந் தேதி செல்லத்தம்மன் பட்டாபிஷேகம் நடக்கிறது. அப்போது செல்லத்தம்மன் மதுரை மீனாட்சி சுந்தரே சுவரர் கோவிலில் எழுந்தருளுகிறார்.

    21-ந் தேதி சட்டத்தேரும், 22-ந் தேதி மலர்ச்சப்பரமும் நடக்கிறது. மேற்கண்ட தகவலை மீனாட்சி அம்மன் கோவில் துணை ஆணையர் அருணாசலம் தெரிவித்துள்ளார்.

    • மதுரை மாவட்டத்தில் தமிழழகன் உள்பட 10 பேர் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளனர்.
    • போதை மருந்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்தார்.

    மதுரை

    மதுரை மாநகரில் புகையிலை, கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் போதை பொருட்களை விற்பனை செய்யும் சமூக விரோதிகளை பிடிக்க வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில் தல்லா குளம் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த தனிப்படை போலீ சார் நகர் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி வைகை வடகரை சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் போலீசாரை கண்டதும் தப்ப முயன்றனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 3 பேரில் ஒருவரை மட்டும் விரட்டி சென்று பிடித்த னர். அவரிடம் விசா ரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    இதையடுத்து அவர் போலீஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டார்.அங்கு விசாரணை நடத்தி யதில் பிடிபட்ட நபர் விக்கிரமங்கலம் அருகே உள்ள வடகாட்டுப்பட்டியை சேர்ந்த சேகர் மகன் தமிழழகன் என்பது தெரிய வந்தது. இவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    மதுரை மாவட்டத்தில் தமிழழகன் உள்பட 10 பேர் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளனர். தமிழழகன் கொடுத்த தகவலின்பேரில் அண்ணாநகர் முத்துராம லிங்கதேவர் தெருவில் உள்ள மருந்து கடையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 17,030 போதை மாத்திரைகள், 150 போதை தரக்கூடிய மருந்து பாட்டில்கள் இருந்தன. இவை அனைத்தும் காலாவதியானது.

    இதனை தமிழழகன், அவருக்கு உடந்தையாக இருந்த முரளிதாஜ் ஆகியோர் விற்று வந்துள்ளனர். இதை யடுத்து போதை மாத்திரை களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். இதற்கு மூளையாக செயல்பட்ட பி.பார்ம் பட்டதாரி தினேஷ் என்பவரை போலீ சார் தேடி வருகின்றனர்.

    இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கூறியதாவது:-

    போலீசாரின் கெடுபிடி காரணமாக கஞ்சா விற்பனை குறைந்து வருகிறது. ஆனால் போதை மாத்திரை புழக்கம் அதிகரித்துள்ளது. வலி நிவாரண மாத்திரை, மருந்துகளை போதைக்கு பயன்படுத்தி வருகின்றனர். டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் சிலர் இதனை அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.

    மேலும் ஆயிரக்கணக்கில் வாங்கி குடோன்களில் இருப்பு வைத்து அதிக விலைக்கு சமூகவிரோத கும்பல் விற்பனை செய்து வரு கிறது. இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் கிட்னி செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.

    காலாவதியான மாத்திரைகள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடி யவை. இது போதை கும்பலுக்கு நன்றாகவே தெரியும். இருந்தபோதிலும் அவர்கள் காலாவதியான போதை மாத்திரைகளை விற்று கொள்ளை லாபம் சம்பாதித்து உள்ளனர்.

    கஞ்சா, போதை மாத்திரைகள் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாடிப்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
    • மாவட்ட துணைச் செயலாளர் கராத்தே சிவா வரவேற்றார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம்-வாடிப்பட்டி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசனின் 59-வதுபிறந்தநாள் விழாவையொட்டி இலவச கண் பரிசோதனை முகாம் கிரட்வளாகத்தில் நடந்தது. வட்டார தலைவர் பாலசரவணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் பாரத் நாச்சியப்பன், பைரவ மூர்த்தி, மாநில இணைச் செயலாளர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் கராத்தே சிவா வரவேற்றார். மாவட்டத் தலைவர் தனுஷ்கோடி தொடங்கி வைத்தார்.

    நிர்வாகிகள் கச்சைகட்டி பாண்டி, தண்டீசுவரன், பொதும்பு செல்வம், புதுப்பட்டி கார்த்தி, பரவை ராமு, எம்.ஏ.முத்து, காமாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவ அலுவலர் நிஷா தலைமையில் 82 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 41 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். நகர தலைவர் ராம்குமார் நன்றி கூறினார்

    • வேலைக்கு செல்லாத 3 பேரும் எப்படி புதிய மோட்டார் சைக்கிளை வாங்கினார்கள் என்ற சந்தேகம் இருந்தது.
    • வீட்டில் பணத்தை திருடிய வாலிபர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள பொந்துகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனிச்சாமி(50).

    பழ வியாபாரியான இவர் கடந்த 23-ந் தேதி இரவு தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மினி வேனில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதிக்கு பழ வியாபாரத்திற்கு சென்றார். வியாபாரத்தை முடித்து விட்டு 24-ந் தேதி இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த பணம் ரூ.1லட்சத்து 2 ஆயிரம் ரொக்கம் திருட்டு போய் இருந்தது. இதுகுறித்து முனிச்சாமி பாலமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் முனிச்சாமி வீட்டின் அருகே வசிக்கும் வெள்ளைச்சாமி (வயது19), சேது (20), கேசவன் (21) ஆகியோர் புதிய மோட்டார் சைக்கிளை வாங்கி உள்ளனர். அதனை வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்சில் வைத்தனர். அதனை பார்த்த முனிச்சாமிக்கு, வேலைக்கு செல்லாத 3 பேரும் எப்படி புதிய மோட்டார் சைக்கிளை வாங்கினார்கள் என்ற சந்தேகம் இருந்தது.

    தனது வீட்டில் நடந்த திருட்டில் அவர்களுக்கு தொடர்பு இருக்கலாம்? என கருதி பாலமேடு போலீசில் முனிச்சாமி புகார் தெரிவித்தார். அதன்பேரில் பாலமேடு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் வெள்ளைச்சாமி, சேது, கேசவன் ஆகிய 3 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    அதில், இவர்கள் சம்பவத்தன்று முனிச்சாமி வீட்டில் பணத்தை திருடியதும், அதன் மூலம் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

    பழ வியாபாரியின் வீட்டில் பணத்தை திருடிய வாலிபர்கள், அதன் மூலம் வாங்கிய புதிய மோட்டார் சைக்கிள் படத்தை வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைத்ததால் மாட்டிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அனல் பறக்கும் வகையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பார்வையாளர்கள் வருவது மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருவார்கள்.
    • வாடிவாசலில் இருந்து பாய்ந்து வரும் காளையை எவ்வாறு பிடிப்பது? காளைகளை எப்படி அடக்க வேண்டும்? போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தமிழர்களின் வீரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடத்தப்படும் போட்டி ஜல்லிக்கட்டு. பொங்கல் பண்டிகை நேரத்தில் நடத்தப்படும் இந்த போட்டியில் இளைஞர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொள்வார்கள்.

    தமிழகத்தில் பல மாவட்டங்களில் நடந்த போதிலும் மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றது. இங்கு நடக்கும் ஜல்லிக்கட்டில் மதுரை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் வளர்க்கப்படும் காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்து பங்கேற்க செய்வார்கள்.

    களத்தில் திமிறிக்கொண்டு ஓடும் காளைகளை இளைஞர்கள் போட்டி போட்டு அடக்குவார்கள். போட்டியில் காளைகளை அடக்கக்கூடிய இளைஞர்களுக்கும், வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் சேர், கட்டில், பீரோ, சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், மோட்டார் சைக்கிள், தங்க காசு என தொடங்கி பம்பர் பரிசாக கார் வரை வழங்கப்படுகிறது. இதனால் காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்க வரும் வீரர்களுக்கும் களத்தில் கடும் போட்டி நிலவும்.

    அனல் பறக்கும் வகையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பார்வையாளர்கள் வருவது மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருவார்கள். இதனால் ஜல்லிக்கட்டு நடைபெறும் நேரத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகள் களை கட்டும்.

    இப்படிப்பட்ட ஜல்லிக்கட்டு கொரோனா பரவல் காரணமாக 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் நடத்த முடியாமல் போனது. ஆனால் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் நடத்தப்பட்டது. ஆனால் வீரர்கள் மற்றும் காளைகள் பங்கேற்பு, பார்வையாளர்கள் பங்கேற்பு என அனைத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் குறைவான அளவிலேயே காளைகள், வீரர்கள், பார்வையாளர்கள் பங்கேற்க முடிந்தது. இருந்தபோதிலும் வழக்கமான உற்சாகத்துடனே கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டுக்கு மாடுபிடி வீரர்கள் தயாராகி வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்று பீட்டா அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் ஜனவரி மாத தொடக்கத்தில் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலேயே ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது என்று தமிழக அரசு வாதாடி வருகிறது. இதனால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மாடுபிடி வீரர்களும், காளை உரிமையாளர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் நீச்சல், ஓட்டம், மண் குத்துதல், ஆரஞ்சு-எலுமிச்சம்பழம் போன்ற பழங்களை தரையில் உருட்டிவிட்டு அதனை கொம்பால் குத்த செய்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.

    அதேபோன்று ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை திருப்பாலை பகுதியில் முடக்கத்தான் மணி என்ற மாடுபிடி வீரரின் தலைமையில் ஏராளமான வீரர்கள் காளைகளை அடக்குவதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வாடிவாசலில் இருந்து பாய்ந்து வரும் காளையை எவ்வாறு பிடிப்பது? காளைகளை எப்படி அடக்க வேண்டும்? போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக ஒரு மைதானத்தில் வாடிவாசல் போன்று செயற்கையாக அமைத்து வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    50-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகிறார்கள். இதே போல் மதுரை மாவட்டத்தில் பல இடங்களிலும் மாடுபிடி வீரர்கள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு மற்றும் பல்வேறு இடங்களில் காலை-மாலை நேரங்களில் ஜல்லிக்கட்டு காளைகள் சாலைகளில் ஓட்டப்பயிற்சி அளிக்கப்படுவதையும், வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவதையும் காண முடிகிறது.

    • டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பால் இளைஞர்கள் ஏமாற்றமடைந்து உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டினார்.
    • குரூப்-4 பணியிடங்களுக்கான காலியிடங்கள் எவ்வளவு என்ற விவரங்கள் தெரி விக்காததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி .உதயகுமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டம் பெற்ற ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னு ரிமை வழங்கப்படும் என்றும், தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்களில் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு இந்த 18 மாத காலத்திலே எத்தனை பேர்களுக்கு வேலைகள் வழங்கி இருக்கிறது. 74 லட்சம் பேர் அரசு வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருக்கிறார்கள்.

    கடந்து சில மாதங்க ளுக்கு முன்பு குரூப் 4 பணியிடங்களுக்கு இது வரை இல்லாத வகை யில் 21, 85,328 பேர் விண்ணப்பித்தி ருக்கிறார்கள். அப்படி எதிர்பார்த்து காத்திருக்கிற பலருக்கு டி.என்.பி.எஸ்.சி. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட போட்டி தேர்வு அட்டவணை ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

    அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கக் கூடிய குரூப்-2, குரூப்- 3 பதவிகளுக்கான அறிவிப்பு இல்லாததும், குரூப்-4 பணியிடங்களுக்கான காலியிடங்கள் எவ்வளவு என்ற விவரங்கள் தெரி விக்காததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    குரூப்-1 தேர்வில் எத்தனை காலி இடங்கள் என்ற விவ ரங்கள் இல்லாததும் இளை ஞர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. எனவே தி.மு.க. தேர்தல் அறிக்கை யில் 5.50 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் என்று சொன்னது கானல் நீராகத்தான் உள்ளது. எனவே கடந்த 18 மாதத்தில் வழங்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளி யிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
    • ரேசன் அரிசி மூடைகளை ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    மதுரை

    மதுரை முனிச்சாலை சி.எம்.ஆர். ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 35). தனியார் நிதி நிறு வனத்தில் பணியாற்றி வந்த இவர் தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வது வழக்கம். அதன்படி இன்று காலை நாகராஜ் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார்.

    கூடல்நகர் மேம்பாலத்தில் சென்றபோது அந்த வழியாக ரேசன் அரிசி மூடைகளை ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. லாரியின் முன்பக்கம் நாகராஜ் தலை மோதியது. இதில் அவர் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த மாநகர போக்கு வரத்து போலீசார் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை சோலையழகு புரம் மகாலட்சுமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாமுகமது (46). இவர் சுப்பிரமணியபுரம் ராஜா தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள பள்ளி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த கார் ராஜாமுகமது மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் அருள்தாஸ்புரத்தை சேர்ந்த சுந்தரபாண்டியன் (31) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு பெண் அலுவலரிடம் நகை பறித்தவரை சி.சி.டி.வி. காமிரா பதிவு மூலம் போலீசார் பிடித்தனர்.
    • இதுகுறித்து திடீர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை

    மதுரை விளாங்குடியை சேர்ந்தவர் முத்துமாரி (32). இவர் தமுக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் கணக்காள ராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 15-ந்தேதி மொபட்டில் முத்துமாரி தத்தனேரி பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் முத்துமாரி அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினான்.

    இதுகுறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதன் அடிப்படையில் போலீசார் நடத்தி விசா ரணையில், முத்துமாரியிடம் நகையை பறித்தது நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த சிவபாண்டி (37) என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வீட்டிற்கு சென்று கொள்ளையனை கைது செய்தனர்.

    மூதாட்டியிடம் கைவரிசை

    மதுரை தனக்கன் குளத்தை சேர்ந்தவர் ரங்க ராஜ் மனைவி ராதாபாய் (62). இவர் சம்பவத்தன்று அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் பெரியார் பஸ் நிலையம் வந்தார். பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ராதாபாய் வைத்திருந்த 3 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர் அபேஸ் செய்து விட்டார்.

    இதுகுறித்து திடீர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பைக்கில் சென்று நகை பறித்த பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சம்பவங்கள் தொடர்பாக கண்காணிப்பு காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    மதுரை

    திருமங்கலம், உசிலம்பட்டி, வத்தலகுண்டு சுற்று வட்டாரப் பகுதி களில் கடந்த ஒரு மாதத்தில் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தன. பைக்குகளில் வந்தவர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

    திருமங்கலம், நரி யம்பட்டி, உத்தப்ப நாயக்கனூர் பகுதிகளில் நடந்த நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக கண்காணிப்பு காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அதன் அடிப்படையில் போலீசார் நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை பிடிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். விக்கிரமங்கலம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் பைக்கில் வந்தவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பதும், வத்தலகுண்டு அண்ணாநகரை சேர்ந்த சரோஜா (41), அதே பகுதியைச் சேர்ந்த பிரவீனா (22), நிலக்கோட்டை அருகே உள்ள தும்மலபட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த தர்மா (24) என்பதும் தெரியவந்தது.

    மேற்கண்ட 3 பேைரயும் விக்கிரமங்கலம் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.

    • பொங்கல் தொகுப்புடன் கரும்பு, வெல்லம் உள்ளிட்டவைகளை வழங்கக்கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • அந்த விவசாயிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்த பொங்கல் தொகுப்புடன் கரும்பு, வெல்லம், தேங்காய் ஆகிய பொருட்களை வழங்க வேண்டும்.

    மதுரை

    தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேசன் கார்டுதாரர்களுக்கு ரொக்கம் ரூ.1000 ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சீனி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு வழங்கமாக வழங்கப்பட்டு வந்த கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் இந்த ஆண்டு வழங்கப்பட வில்லை.

    இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. பொங்கல் தொகுப்புடன் கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்களை வழங்க கோரி இன்று மாநிலம் முழுவதும் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

    பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

    மதுரையில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு மாநகர் மாவட்ட பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில விவசாய அணி செயலாளர் செந்தூர் பாண்டியன் தலைமை தாங்கி னார். மாவட்ட தலைவர்கள் சுசீந்திரன் (மாநகர்), சசிக்குமார் (மேற்கு), ராஜ சிம்மன் (கிழக்கு) ஆகி யோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சுசீந்திரன் பேசியதாவது:-

    திராவிட மாடல் அரசு என்று ஆட்சி நடத்தும் தி.மு.க.வுக்கு விவசாயிகள் நலனில் அக்கறை இல்லை. டாஸ்மாக் வியாபாரத்தில் கவனம் செலுத்தும் இந்த அரசு, விவசாயிகளை பாதுகாக்க தவறி விட்டது.

    மத்திய அரசு வழங்கும் உதவி தொகையை பெற்று விவசாயிகள் இந்த ஆண்டு கரும்பு விவசா யம் செய்துள்ளனர். அந்த விவசாயிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்த பொங்கல் தொகுப்புடன் கரும்பு, வெல்லம், தேங்காய் ஆகிய பொருட்களை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் ஜெயவேல், நிர்வாகிகள் ராஜரத்தினம், சோலை மணி கண்டன், வினோத்குமார், ராஜா, ஏர்போர்ட் கார்த்திக், கீரைத்துறை குமார், மீனா இசக்கி, மணிமாலா, தமிழ்செல்வி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மதுரை பஸ் நிலைய கடைகளில் கோடிக்கணக்கில் வரி பாக்கி செலுத்தாதது தகவல் அறியும் சட்டத்தில் அம்பலமானது.
    • அதிகபட்சமாக ரூ.20 லட்சம் முதல் வரி பாக்கி வைத்துள்ளது

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பனகல் சாலை ஆகிய 3 இடங்களில் பஸ் நிலையங்கள் செயல்படுகிறது. இங்கு மாநகராட்சிக்கு சொந்தமாக 317 கடைகள் உள்ளன.

    இதில் அரசு போக்கு வரத்து கழக அலுவலகம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, ஏ.டி.எம். மையம் உட்பட 277 கடைகள் இயங்கி வருகின்றன. மதுரை 3 பஸ் நிலையங்களில் உள்ள சுமார் 277 கடைகள் வாடகை, வரி செலுத்துகிறதா? என்பது தொடர்பாக சமூக ஆர்வலர், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.

    இதற்கு மாநகராட்சி தகவல் தொடர்பு அதிகாரி பதிலளித்துள்ளார். அதில், மேற்கண்ட 3 பஸ் நிலையங்களில் உள்ள வியாபார கடை உரிமையாளர்கள் ரூ.1 கோடியே 69 லட்சத்து 87 ஆயிரத்து 370-க்கு வரி பாக்கி வைத்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    3 பஸ் நிலையங்களில் ஒரே நபருக்கு 3, 4 கடைகள் வாடகைக்கு வழங்கப்பட்டிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மதுரை பஸ் நிலையங்களில் செயல்படும் சில கடை உரிமையாளர்கள் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் முதல் வரி பாக்கி வைத்துள்ளது இந்த சட்டத்தின் வாயிலாக தெரிய வந்துள்ளது.

    வரி பாக்கி வைத்து உள்ள வியாபாரிகளிடம் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து பாக்கியை வசூல் செய்ய வேண்டும். அல்லது அவர்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்

    ×