என் மலர்
மதுரை
- மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டது.
- கொரோனாவை எதிர்கொள்ள தேவையான அனைத்து எற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்றார்.
மதுரை
சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் புதிய வகை கொரோனா பரவ தொடங்கி உள்ளது. இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவை மையங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கான முன்னேற்பாடு பணிகளை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதன்படி மதுரை அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான ஒத்திகை நடந்தது.
நோயாளிகள் சிகிச்சைக்கு வரும் போது அவர்களை எப்படி அணுக வேண்டும்? நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வது, சிகிச்சைக்கு அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக ஒத்திகை நடத்தப்பட்டது.
மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், படுக்கைகள், ஆக்சிஜன், முழுக்கவசம் ஆகியவற்றின் இருப்பு நிலவரம் குறித்து டீன் ரத்னவேல், மருத்துவக் குழுவினருடன் சென்று ஆய்வு செய்தார்.
அந்த சிகிச்சை மையத்தில் உள்ள ஆக்சிஜன் வெண்டிலேட்டர் கருவி, ஆக்சிஜன் சிலிண்டருடன் கூடிய ஸ்டெரெச்சர்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் டீன் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு என்பது தற்போது ஜீரோ நிலையில் உள்ளது.
கொரோனாவை எதிர்கொள்ள தேவையான அனைத்து எற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்றார்.
- இறகுபந்து போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
- போட்டிகளை முன்னாள் மாவட்ட ஆளுநர் முருகேசன் தொடங்கி வைத்தார்.
மேலூர்
மேலூர் சுப்ரீம் லயன்ஸ் கிளப் சார்பில் தாலுகா அளவிலான இறகு பந்து போட்டி நடந்தது. 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. போட்டிகளை முன்னாள் மாவட்ட ஆளுநர் முருகேசன் தொடங்கி வைத்தார்.
முதல் பரிசை அருண், பிரேம் நசீர் அணியும், 2-ம் பரிசை அசோக், அயூப்கான் அணியும், 3-ம் பரிசை ரபிக், பாண்டி அணியும், 4-ம் பரிசை துரை, முத்து நாச்சியப்பன் அணியும் வென்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு கோப்பை வழங்கப்பட்டது. இதில் லயன்ஸ் கிளப் தலைவர் சரவணன், செயலாளர் மணி, பொருளாளர் நீதிபதி, கூடுதல் பொருளாளர் செல்வம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், இணை ஒருங்கிணைப்பாளர் சேவுகமூர்த்தி மற்றும் பலர் பங்கேற்றனர்.
- ஓ.பி.எஸ். அணி அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
- அ.தி.மு.க. அடிமட்ட தொண்டர்கள் தான் அவர்களுக்கு வாரிசு என்றார்.
வாடிப்பட்டி
மதுரை மாநகர் மாவட்டம் பரவை பேரூர், மேற்குதொகுதி ஊராட்சி அ.தி.மு.க. ஓ.பன்னீர் செல்வம் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் எம்.பி.கோபால கிருஷ்ணன் கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், தற்போது அ.தி.மு.க.வில் ஓ பன்னீர் செல்வம் கரத்தை வலுப்படுத்த இருப்பவர்கள் உண்மையான அ.தி.மு.க. தொண்டர் அணியினர். எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருப்பவர்கள் டெண்டர் பெற்ற அணியினர். தனக்கு கிடைக்காதது யாருக்கு கிடைக்கக் கூடாது என்ற எண்ணம் படைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த இயக்கம் மனிதரால் ஆரம்பிக்கப்பட்டது அல்ல. மனித புனிதர் எம்.ஜி.ஆரால் ஆரம்பிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருக்கும் பிள்ளைகள் கிடையாது வாரிசுகள். கிடையாது. அ.தி.மு.க. அடிமட்ட தொண்டர்கள் தான் அவர்களுக்கு வாரிசு என்றார்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
- வருவாய் அலுவலர் பிரியா, கிராம நிர்வாக அலுவலர் நர்மதா, நில அளவையர் பிச்சைமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட கருக்கட்டான்பட்டி ஆதி திராவிடர் குடியிருப்பு பொதுமக்கள் இந்த பகுதிக்கு கழிவறை வேண்டி பலமுறை நகராட்சியிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் இன்குலாப், நகர செயலாளர் விடுதலை மாரி, ஒன்றிய செயலாளர் பழனிசாமி, தொகுதி அமைப்பாளர் கோ.சின்னான், விவசாய அணி மாநில துணைச் செயலாளர் தென்னரசு, நிர்வாகிகள் பெரியசாமி, ராமன், பண்ணை பாண்டியன், மகளிரணி பாண்டீஸ்வரி மற்றும் பலர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீஸ் டி.எஸ்.பி. நல்லு, நகராட்சி மேலாளர் சாந்தி, வருவாய் அலுவலர் பிரியா, கிராம நிர்வாக அலுவலர் நர்மதா, நில அளவையர் பிச்சைமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
- மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுரை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக, சென்னையில் இருந்து நாகர்கோவில், திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரெயில்களை இயக்க தென்னக ரெயில்வே முடிவு செய்துள்ளது.
அதன்படி தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13-ந் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண் 06041) அடுத்த நாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் செல்லும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 16-ந் தேதி மாலை 5.10 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டிஎண்06042) அடுத்த நாள் காலை 7.30 மணிக்கு தாம்பரம் சேரும். இந்த ரெயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டில் நின்று செல்லும்.
அதே போல தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12-ந் தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் ரெயில் (06021) அடுத்த நாள் காலை 9 மணிக்கு நெல்லை செல்லும். மறு மார்க்கத்தில் நெல்லையில் இருந்து ஜனவரி 13-ந் தேதி மதியம் 1 மணிக்கு புறப்படும் ரெயில் (06022), அடுத்த நாள் அதிகாலை 3.20 மணிக்கு எழும்பூர் செல்லும். இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்பு க்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டியில் நின்று செல்லும்.
கொச்சுவேலியில் இருந்து ஜனவரி 17-ந் தேதி காலை 11.40 மணிக்கு புறப்படும் ரெயில் (06044) அடுத்த நாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் செல்லும். மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து ஜனவரி 18-ந் தேதி காலை 10.30 மணிக்கு புறப்படும் ரெயில் (06043), அடுத்த நாள் அதிகாலை 3.20 மணிக்கு கொச்சுவேலி செல்லும்.
இந்த ரெயில்கள் திருவ னந்தபுரம், குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்பு க்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், துறைமுகம் சந்திப்பு, விழுப்புரம், செங்கல்பட்டில் நின்று செல்லும்.
தாம்பரத்தில் இருந்து ஜனவரி 16-ந் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் ரெயில் (06043), அடுத்த நாள் காலை 9 மணிக்கு நெல்லை செல்லும். மறு மார்க்கத்தில் நெல்லையில் இருந்து ஜனவரி 17-ந் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் ரெயில் (06058) அடுத்த நாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் செல்லும்.
இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டியில் நின்று செல்லும். மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.
- வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
- கொரோனா தொற்று உறுதியான 2 பேரும் தனிமைப்படுத்தி மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
மதுரை:
சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியால், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயணிகளுக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சீனாவில் இருந்து மதுரை வந்த தாய், சேய் ஆகிய 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மதுரை விமான நிலையத்தில் வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், சீனாவில் இருந்து வந்த தாய் மற்றும் குழந்தை என 2 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்களுடன் விமானத்தில் வந்த 67 பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
கொரோனா தொற்று பரவாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது பழங்காநத்தத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் விஷ்ணுசுதன் என்பது தெரியவந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 52). இவர் நேற்று இரவு மதுரை-திருப்பரங்குன்றம் சாலையில் நடந்து சென்றார்.
அழகப்பன் நகரில் சென்றபோது அதிவேகமாக வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் பாண்டியராஜன் படுகாயம் அடைந்தார். மேலும் அந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த வடை கடைக்குள் புகுந்தது.
அங்கு வடை சட்டியில் கொதித்து கொண்டிருந்த எண்ணெய் நாலாபுறமும் சிதறியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த விஷ்ணு சுதன், வடை கடை ஊழியர் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக சுப்பிரமணியபுரம் காவல்நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது பழங்காநத்தத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் விஷ்ணுசுதன் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாளுக்கு நாள் போதை கும்பலின் தொந்தரவு அதிகமாகவே திவ்யா அவர்களை கண்டித்ததாக தெரிகிறது.
- கடந்த சில நாட்களாக திவ்யா வீட்டு முன்பு பீர் பாட்டில்களை உடைத்து விட்டு கும்பல் சென்றது.
மதுரை:
மதுரை ஆழ்வார்புரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி திவ்யா (வயது 28). இவர்களது வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த சிலர் எந்த நேரமும் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் அங்குள்ள பெண்களையும் கேலி கிண்டல் செய்ததாக தெரிகிறது. நாளுக்கு நாள் போதை கும்பலின் தொந்தரவு அதிகமாகவே திவ்யா அவர்களை கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் அந்த கும்பல் கடந்த சில நாட்களாக திவ்யா வீட்டு முன்பு பீர் பாட்டில்களை உடைத்து விட்டு சென்றது. சம்பவத்தன்று இதுதொடர்பாக திவ்யா அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக மதிச்சியம் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் இன்று அதிகாலை திவ்யா வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதில் அந்த குண்டுகள் வீட்டின் முன்பு விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. சத்தம் கேட்டு அந்த பகுதியினர் திரண்டனர். உடனே அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பியது.
இதுகுறித்து தகவல் அறிந்த மதிச்சியம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர், சோணைமுத்து ஆகிய 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மதுரை விமான நிலைய விரிவாத்தில் தேவையான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை.
- டெல்லியில் இருந்து விமானம் மூலம் மத்திய மந்திரி வி.கே.சிங் இன்று மதுரை வந்தார்.
அவனியாபுரம்
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் மத்திய மந்திரி வி.கே.சிங் இன்று மதுரை வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்கு தேவையான நிலங்களை தமிழக அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை. 24 மணி நேரமும் மதுரை விமான நிலையம் இயங்கு வதற்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை பரிந்துரைத்துள்ளது. அதன் அடிப்படையில் வெளி நாட்டு விமானங்கள் வந்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதிகமான விமான சேவைகள் வந்ததும் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கும். இதன் மூலம் மதுரை விமான நிலையத்தில் நள்ளிரவு சேவைக்கான விமானங்கள் வந்தால் ஏற்பாடுகள் செய்ய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தயாராக உள்ளது.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே சுங்கஇலாகா சேவை இயங்கி வருகிறது. இதனால் மதுரை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் கூடுதலாக விமானங்கள் வந்து சென்றால் அதுகுறித்து பரிசீலனை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது.
கொரோனா விதி முறைகள் குறித்து மத்திய அரசு விதிகளை பின்பற்ற அறிவித்துள்ளது. அதனை அனைத்து விமான நிலை யங்களிலும் கடை பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை கடைபிடிக்க வேண்டியது பொது மக்களின் கடமை ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.க. நிர்வாகி பேரா சிரியர் சீனிவாசன்,மாவட்ட செயலாளர் சசிகுமார், கதலி நரசிங்க பெருமாள், ராஜரத்தினம், ஏர்போட் கார்த்திக், கோல்டன் ரவி, அவனி கருப்பையா,சடாச்சாரம், பெருங்குடி முத்துமாரி, முத்துகுமார், சுந்தர் வெற்றி செல்வி, தமிழ்செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.
- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பணியாளர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
- அவசர ஆபத்து காலத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பது பற்றி தெரிவிக்கப்பட்டது.
மதுரை
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் கோவில் பணியாளர்களுக்கு துணை ஆணையர் அருணாசலம், உதவி ஆணையர் யக்ஞநாரயணன் முன்னிலையில், மதுரை தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன், மாரிமுத்து, தீயணைப்பு-மீட்பு பணிகள் துறை பணியாளர்களால், தீ விபத்து தடுப்பு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில் தீயின் வகைகள், அவற்றை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? அவசர ஆபத்து காலத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பது பற்றி தெரிவிக்கப்பட்டது. தீயின் தன்மைக்கேற்ப தீயணைப்பான்கள், கார்பன்-டை ஆக்ஸைடு, நுரை, பவுடர், ஈர சாக்குகள், தண்ணீர், மற்றும் மணல் கொண்டு தீயணைக்கும் பயிற்சி, நிலைய அலுவலரால் செய்து காண்பிக்கப்பட்டது.
கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போது பக்தர்களுக்கு ஏற்படும் மூச்சு திணறல், மயக்கம், போன்றவற்றிற்கு எவ்வாறு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்புவது? பற்றியும் செயல்முறை விளக்கம் பற்றியும் அப்பல்லோ மருத்துவமனை முதலுதவி மருத்துவ நிபுணர் டாபிக், கோவிலின் முதலுதவி மருத்துவ மைய மருத்துவர்கள் ஜனார்த்தனன் ராஜா, சாம்ராட் பாலாஜி மற்றும் மருத்துவ குழுவினரால் நடத்தி காண்பிக்கப்பட்டது. இதில் கோவில் அயல்பணி கண்காணிப்பாளர்கள், காவல் துறை பணியாளர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- தமிழகத்திலேயே மிகவும் நீளமான மதுரை-நத்தம் பறக்கும் மேம்பாலம் ரூ.612 கோடி மதிப்பில் 7.5 கி.மீ.தூரம் கட்டப்பட்டுள்ளது.
- இதனை வருகிற ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மதுரை-நத்தம் பறக்கும் மேம்பாலம்.
மதுரை
தமிழகத்தில் 2-வது பெரிய நகரமாக விளங்கும் மதுரை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மதுரை நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு சாலை, மேம்பாலம் அமைக்கும் பணிகள் செயல்படுத்தப் பட்டு வருகிறது. அதன்படி மதுரை தல்லாகுளம் ஐ.ஓ.சி. அலுவலகம் அருகில் இருந்து நத்தம் வரை 35 கிலோ மீட்டருக்கு ரூ. 1028 கோடியில் மத்திய அரசின் "பாரத் மாலா" திட்டத்தின் மூலம் 4 வழிச் சாலையாக விரி வாக்கம் செய்யும் பணி கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொட ங்கப்பட்டது.
இந்த சாலை யில் மதுரை தல்லாகுளம் முதல் ஊமச்சி குளம் அருகே உள்ள மாரணி விலக்கு வரை சுமார் 7.5 கிலோ மீட்டர் தொலை வுக்கு பறக்கும் பாலம் கட்டப் ப ட்டு வருகி றது. ரூ. 612 கோடி யில் நவீன முறையில் இந்த பாலகட்டுமான பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன.
இந்த பாலத்தை தாங்கி பிடிக்கும் வகையில், பலமான அஸ்திவாரத்துடன் கூடிய 268 ராட்சத தூண்கள் அமைக்கப் பட்டுள்ளன. இது 150 அடிக்கு ஒன்று என்ற வீதத்தில் அமைக்கப் பட்டு உள்ளது. மேம்பால தூண்களுக்கு இடையே பாலத்தை இணைக்கும் வகையில் 'கான்கிரீட் கர்டர்கள்', கிடைமட்ட வாக்கில் பொருத்தப் பட்டு உள்ளன. ஊமச்சிக்குளம் அருகே கான்கிரீட் கர்டர்களை தயாரிப் பதற்காக பிரத்யேக பணிமனை ஏற்படுத்தப் பட்டது. இங்கு தயாரான கான்கிரீட் கர்டர்கள் சரக்கு லாரிகளில் கொண்டு வரப் பட்டு, ஹைட்ராலிக் கிரேன் மூலம் தூண்கள் மேலே பொருத்தப் பட்டது. இதனைத்தொடர்ந்து அவை கான்கிரீட் மற்றும் இரும்பு மோல்டுகள் வாயிலாக இணைக்கப் பட்டு வருகின்றன. இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது 95 சதவீதம் முடிந்து விட்டது.
பறக்கும் மேம்பாலத்தின் மேல் தார்ச் சாலை மற்றும் சென்டர் மீடியன் அமைக்கும் பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டன. பாலத்தின் கீழ் பகுதியில் 4 வழிச் சாலை அமைக்கும் பணி, தூண்களுக்கு இடையே இரும்புத்தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணி, சாலையோர நடைபாதை அமைக்கும் பணி ஆகியவை உச்சகட்ட வேகத்தில் நடந்து வருகின்றன. பறக்கும் மேம்பாலத்தின் கீழ் இரவை பகலாக்கும் வகையில் ஒவ்வொரு தூணுக்கும் இடையே பெரிய எல்.இ.டி. பல்பு, தூணைச்சுற்றி 4 திக்குகளிலும் சிறிய எல்.இ.டி. பல்புகள் பொருத்தும் பணி நடக்கிறது.

பாலத்தின் கீழ் பொதுமக்களை கவரும் வகையில் வைக்கப் பட்டுள்ள டால்பின் சிலை.
மதுரை-நத்தம் பறக்கும் பாலத்தின் கீழ் பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு திட்டப் பணிகள் நடந்துள்ளன.ஊமச்சிக்கு ளம், திருப் பாலை, அய்யர்பங்களா உள்ளிட்ட பகுதிகளில் பாலத்தின் கீழ் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வும், பொழுது போக்கும் வகையில் சிறிய அளவிலான பூங்காங்கள், குழந்தைகளை கவரும் வண்ணம் சோட்டாபீம், டால்பின், விவசாயி போன்ற சிலை கள் அமைக்கப் பட்டுள்ளன.
மதுரையில் இருந்து நத்தம் வரை 4 வழிச் சாலை அமைய உள்ளது. அடுத்த படியாக நத்தத்தில் இருந்து திருச்சி-துவரங்கு றிச்சி க்கு 4 வழிச் சாலை அமைக்கப் பட உள்ளது. எனவே மதுரை-நத்தம் பறக்கும் பாலம் வழியாக திருச்சி சென்றால் 24 கி.மீ. பயண தூரம் குறையும். மதுரையில் இருந்து சென்னை செல்வோரும், இந்த சாலையை பயன்படுத்த இயலும். அவர்களுக்கு ஒரு மணி நேரம் பயண நேரம் குறையும். நகரில் போக்குவரத்து நெரிசலும் இந்த பாலத்தின் மூலம் குறைய வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையே திண்டுக்கல் சாலையை திருச்சி உடன் இணைக்கும் வகையில், வாடிப் பட்டி- சிட்டம்பட்டி இடையே 4 வழிச் சாலை அமைக்கப் படுகிறது. இந்த சாலையும் பயன்பாட்டுக்கு வந்தால், மதுரையில் வசிக்கும் பெரும்பாலானோர் நத்தம் சாலையை போக்குவரத்துக்கு பயன்படுத்தும் வாய்ப்பு உண்டு. அதிலும் குறிப் பாக, நகரின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த சாலையை பயன்படுத்தி சீக்கிரமாக திண்டுக்கல் செல்ல முடியும். அதுவும் தவிர மதுரை மாநகரில் இருந்து வெளிநகரங்களுக்கு செல்லும் 30 சதவீதம் பேர், நத்தம் பறக்கும் பாலத்தை பயன்படுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை- நத்தம் இடையேயான பறக்கும் பாலம் சுமார் 7.5 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. தமிழகத்திலேயே மிகவும் நீளமான பாலமாக இந்த பாலம் விளங்குகிறது. இதனை வருகிற ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






