என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுரை வந்த மத்திய மந்திரி வி.கே.சிங்கை பா.ஜ.க. நிர்வாகிகள் பேராசிரியர் சீனிவாசன், கதலி நரசிங்க பெருமாள், ராஜரத்தினம், ஏர்போட் கார்த்திக் உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.
தேவையான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை
- மதுரை விமான நிலைய விரிவாத்தில் தேவையான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை.
- டெல்லியில் இருந்து விமானம் மூலம் மத்திய மந்திரி வி.கே.சிங் இன்று மதுரை வந்தார்.
அவனியாபுரம்
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் மத்திய மந்திரி வி.கே.சிங் இன்று மதுரை வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்கு தேவையான நிலங்களை தமிழக அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை. 24 மணி நேரமும் மதுரை விமான நிலையம் இயங்கு வதற்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை பரிந்துரைத்துள்ளது. அதன் அடிப்படையில் வெளி நாட்டு விமானங்கள் வந்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதிகமான விமான சேவைகள் வந்ததும் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கும். இதன் மூலம் மதுரை விமான நிலையத்தில் நள்ளிரவு சேவைக்கான விமானங்கள் வந்தால் ஏற்பாடுகள் செய்ய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தயாராக உள்ளது.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே சுங்கஇலாகா சேவை இயங்கி வருகிறது. இதனால் மதுரை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் கூடுதலாக விமானங்கள் வந்து சென்றால் அதுகுறித்து பரிசீலனை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது.
கொரோனா விதி முறைகள் குறித்து மத்திய அரசு விதிகளை பின்பற்ற அறிவித்துள்ளது. அதனை அனைத்து விமான நிலை யங்களிலும் கடை பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை கடைபிடிக்க வேண்டியது பொது மக்களின் கடமை ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.க. நிர்வாகி பேரா சிரியர் சீனிவாசன்,மாவட்ட செயலாளர் சசிகுமார், கதலி நரசிங்க பெருமாள், ராஜரத்தினம், ஏர்போட் கார்த்திக், கோல்டன் ரவி, அவனி கருப்பையா,சடாச்சாரம், பெருங்குடி முத்துமாரி, முத்துகுமார், சுந்தர் வெற்றி செல்வி, தமிழ்செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.






