search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு ரெயில்கள் இயக்கம்
    X

    சிறப்பு ரெயில்கள் இயக்கம்

    • பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக, சென்னையில் இருந்து நாகர்கோவில், திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரெயில்களை இயக்க தென்னக ரெயில்வே முடிவு செய்துள்ளது.

    அதன்படி தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13-ந் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண் 06041) அடுத்த நாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் செல்லும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 16-ந் தேதி மாலை 5.10 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டிஎண்06042) அடுத்த நாள் காலை 7.30 மணிக்கு தாம்பரம் சேரும். இந்த ரெயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டில் நின்று செல்லும்.

    அதே போல தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12-ந் தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் ரெயில் (06021) அடுத்த நாள் காலை 9 மணிக்கு நெல்லை செல்லும். மறு மார்க்கத்தில் நெல்லையில் இருந்து ஜனவரி 13-ந் தேதி மதியம் 1 மணிக்கு புறப்படும் ரெயில் (06022), அடுத்த நாள் அதிகாலை 3.20 மணிக்கு எழும்பூர் செல்லும். இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்பு க்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டியில் நின்று செல்லும்.

    கொச்சுவேலியில் இருந்து ஜனவரி 17-ந் தேதி காலை 11.40 மணிக்கு புறப்படும் ரெயில் (06044) அடுத்த நாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் செல்லும். மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து ஜனவரி 18-ந் தேதி காலை 10.30 மணிக்கு புறப்படும் ரெயில் (06043), அடுத்த நாள் அதிகாலை 3.20 மணிக்கு கொச்சுவேலி செல்லும்.

    இந்த ரெயில்கள் திருவ னந்தபுரம், குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்பு க்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், துறைமுகம் சந்திப்பு, விழுப்புரம், செங்கல்பட்டில் நின்று செல்லும்.

    தாம்பரத்தில் இருந்து ஜனவரி 16-ந் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் ரெயில் (06043), அடுத்த நாள் காலை 9 மணிக்கு நெல்லை செல்லும். மறு மார்க்கத்தில் நெல்லையில் இருந்து ஜனவரி 17-ந் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் ரெயில் (06058) அடுத்த நாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் செல்லும்.

    இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டியில் நின்று செல்லும். மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×