என் மலர்
மதுரை
- மதுரை வாடிப்பட்டி ஜெமினி பூங்கா முன்பு மூவேந்தர் முன்னேற்ற கழக கொடியேற்று விழா நடந்தது.
- மாவட்ட செயலாளர் செந்தில்பாண்டி தலைமை தாங்கினார்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி ஜெமினி பூங்கா முன்பு மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தந்தை மாரியப்ப வாண்டையாரின் நினைவு தினம் மற்றும் பி.கே.மூக்கையா தேவர் நூற்றாண்டு விழாவையொட்டி கொடியேற்று விழா நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்பாண்டி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் நாகராஜன், மாநில இணை தலைவர் ஆறுமுக நாட்டார், மாவட்ட தலைவர் கணேசன் முன்னிலை வகித்துனர்.
மாவட்ட இளைஞரணி செயலாளர் கணேசன் வரவேற்றார். தென் மண்டல தலைவர் குஷி செந்தில் கொடியேற்றினார். மறத்தமிழர் சேனை மாநில துணை பொதுச்செயலாளர் ஆதி முத்துக்குமார், மாவட்ட செயலாளர் மருதுபாண்டி, நிர்வாகிகள் வையாபுரி, கருப்பையா, முத்துமணி, சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் மருதுபாண்டி நன்றி கூறினார்.
- மதுரை சோழவந்தான் காளியம்மன் கோவில் திருவிழா 10 நாட்கள் நடந்தது.
- உச்சிமாகாளியம்மன் 4 ரத வீதிகளில் பவனி வந்து கோவில் முன்பு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
சோழவந்தான்
சோழவந்தான் பூமேட்டுத்தெருவில் உள்ள உச்சிமாகாளியம்மன், வடக்கத்தி காளியம்மன் கோவில் திருவிழா 10 நாட்கள் நடந்தது.முதல் நாள் கொடியேற்றம், 4-ம் நாள் திருவிளக்குபூஜை, 7-ம்நாள் பூச்சொரிதல் விழா, 8-ம் நாள் வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தகுடம், பால்குடம் எடுத்து வந்தனர். அம்மனுக்கு சந்தனக்காப்பு நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து வந்த பக்தர்களுக்கு பா.ஜ.க. விவசாய அணி மாநில துணைத்தலைவர் மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன் ஆகியோர் பரிசு வழங்கினர்.
இரவு வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வருதல், 9-ம் நாளான இன்று இரவு உச்சிமாகாளியம்மன் சிம்மவாகனத்திலும், ஜெனகை மாரியம்மன் ரிஷபவாகனத்திலும், எழுந்தருளி 4 ரத வீதிகளில் பவனி வந்து வடக்கு காளியம்மன் கோவில் முன்பு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து முளைப்பாரி, மாவிளக்கு ஊர்வலம் நடைபெறும். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்.
- மதுரை வாடிப்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- அனைத்து துறை ஓய்வூதியர் சங்க அமைப்பாளர் வேல்மயில் பேசினார்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம், ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம், பணிக்கொடை ரூ.5 லட்சம், காலி பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் சூசைநாதன் தலைமை தாங்கினார். மூர்த்தி, பிச்சையம்மாள் முன்னிலை வகித்தனர். ராஜகுமாரி வரவேற்றார்.
டி.என்.ஜி.ஏ. தலைவர் மூர்த்தி தொடங்கி வைத்தார். அனைத்து துறை ஓய்வூதியர் சங்க அமைப்பாளர் வேல்மயில் பேசினார். இதில் பானு, தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இணைச்செயலாளர் கார்த்திகை லட்சுமி நன்றி கூறினார்.
- மேலூர் பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
- விழா ஏற்பாடுகளை பாலமுருகன் கோவில் கல்வி மற்றும் அன்னதான சொசைட்டி மற்றும் திருப்பணி குழுவினர் செய்து வருகின்றனர்.
மேலூர்
மேலூர் காந்திஜி பூங்கா அருகில் உள்ள பாலமுருகன் கோவிலின் 38-ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் வழங்கினர். இன்று காலை முருகனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
அதனைத் தொடர்ந்து கோவில் முன்பு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பாலமுருகன் கோவில் கல்வி மற்றும் அன்னதான சொசைட்டி மற்றும் திருப்பணி குழுவினரும், செயலாளர் மலைச்சாமி, நிர்வாக கமிட்டியாளர்கள் தயாநிதி சிங்காரம், கார்மேகம், சீத்தாராமன், மணி, ஹரிகிருஷ்ணன், மோகன், ராமச்சந்திரன், வைராத்தாள் ஆகியோரும் செய்திருந்தனர்.
- திருப்பரங்குன்றம் பங்குனி உத்திர விழாவில் பவுர்ணமி கிரிவலமாக வந்து திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
- நாளை சூரசம்காரம் நடக்கிறது.

9-ந் தேதி நடைபெறும் தேரோட்டத்தையொட்டி தயார் நிலையில் உள்ள தேர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் பங்குனி பெரு விழா பிரசித்தி பெற்றதாகும். இந்த விழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை யொட்டி சுப்ரமணிய சுவாமி-தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க பல்லக்கிலும், மாலையில், தங்க குதிரை, வெள்ளி பூதம், அன்னம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
பங்குனி பெருவிழாவின் 9-ம் நாளான இன்று பங்குனி உத்திர திருவிழா நடந்தது. பவுர்ணமி தினமான இன்று ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள கிரிவலப்பாைதயை வலம் வந்து வழிபாடு செய்தனர்.
சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் இரவு தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். நாளை (6-ந் தேதி) சொக்கநாதர் கோவில் வாசல் முன்பு சூரசம்கார லீலை நடைபெறுகிறது.
இதில் சுப்பிரமணிய சுவாமி, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். வருகிற 7-ந்தேதி சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். 8-ந்தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் முன்னிலையில் சுப்பிரமணியசுவாமி- தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 9-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை எழுந்தருள பெரிய தேரோட்டம் நடைபெறும். தேரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க கிரிவலப் பாதைகளில் சுற்றி வரும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
- யூனியன் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த பெண் மீது புகார் கொடுக்கப்பட்டது.
- திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பெண்ணை வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் சோைன மீனாநகரை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி இந்திராணி(39). ஓட்டல் நடத்தி வருகிறார். திருமங்கலம் ஜாகீர்நகரை சேர்ந்த கதிர்வேல் மனைவி நாகதுர்கா(36). இந்திராணியின் தோழியின் மூலமாக நாகதுர்காவுக்கு இந்திராணியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் அரசு வேலைக்கு முயற்சி செய்வதை அறிந்த நாகதுர்கா, தான் திருமங்கலம் யூனியன் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக இந்திராணியிடம் கூறினார். இதனை நம்பி கடந்த ஆண்டு ரூ.4 லட்சத்தை நாகதுர்காவிடம், இந்திராணி கொடுத்தார். பணத்தை வாங்கி கொண்டு அரசு வேலை வாங்கி தராமல் இழுத்தடிக்கவே இந்திராணி பணத்தை திருப்பி தரும்படி கேட்டார். அதற்கு நாகதுர்கா மறுத்தார்.
அதிர்ச்சியடைந்த இந்திராணி மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்திடம் புகார் செய்தார். அவரது உத்தரவின்படி திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான நாகதுர்காவை தேடி வருகின்றனர்.
- மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை மதுரை வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை வருவாய் கோட்டாட்சியரின் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளை
(6-ந்தேதி) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள், 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், காதொலி கருவி, போன்ற உதவி உபகரணங்கள், மாதாந்திர உதவித்தொகை மற்றும் இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு உதவிகள் பெறும் வகையில் விண்ணப்பங்கள் வழங்கலாம்.
இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் மதுரை வருவாய் கோட்டத்திற்குட்பட்ட மதுரை மேற்கு வட்டம், வடக்கு வட்டம் மற்றும் வாடிப்பட்டி வருவாய் வட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களுடன் மாற்றுத் திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை நகல், தனித்துவ அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போட் புகைப்படம்-1 ஆகியவற்றுடன் மதுரை வருவாய் கோட்டாட்சியரிடம் நேரில் வழங்கி பயனடையலாம்.
மேற்கண்ட தகவலை மதுரை வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
- தமிழர் தேசம் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- தமிழ் தேச கட்சி தலைவர் பிறந்தநாள் விழா, மன்னர் முத்தரையர் சதய விழாவை முன்னிட்டு இந்த கூட்டம் நடந்தது.
மதுரை
தமிழர் தேசம் கட்சி சார்பில் தமிழர் தேசம் கட்சியின் நிறுவன தலைவர் கே.கே.செல்வகுமார் பிறந்தநாள் விழா மற்றும் மன்னர் முத்தரையர் சதய விழாவை முன்னிட்டு மதுரையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில செயலாளர் வி.எம்.எஸ். அழகர் தலைமை தாங்கினார்.
மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் சிங்ககண்ணன், மதுரை மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜ்குமார், மகளிரணி தலைவர் கவிதா, இளைஞரணி துணை செயலாளர் ஆதிமுருகன், புறநகர் மாவட்ட அமைப்பாளர் பரசுராமன், மாவட்ட அவைதலைவர் பிடாரன், வால்டர்மொக்கை, மதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கம், மேலூர் ஒன்றிய அவைத்தலைவர் சண்முகம், மேலூர் ஒன்றிய ஒருங்கி ணைப்பாளர் நெவுலியப்பன், விருதுநகர் மாவட்டம் கருப்புசாமி, மகளிரணி பொறுப்பாளர் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- குருத்திகாவின் உறவினர் மற்றும் பெற்றோர்கள் என 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- அரசு தரப்பில் ஏற்கனவே முன்ஜாமீன் கோரிய வழக்கில் மனுதாரர்கள் போலீஸ் நிலையத்தில் சரணடைய உத்தரவிடப்பட்டது.
மதுரை:
தென்காசியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் குருத்திகா பட்டேலை அவரது குடும்பத்தினர் கடத்தியதாக காதலன் மாரியப்பன் வினித் தென்காசி மற்றும் குற்றாலம் போலீஸ் நிலையங்களில் புகார் செய்தார்.
அதன் பேரில் குருத்திகாவின் உறவினர் மற்றும் பெற்றோர்கள் என 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தங்களுக்கு ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழங்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் அவர்கள் மனு தாக்கல் செய்தனர்.
அப்போது ஜாமீன் கோரியவர்களுக்கு ஜாமீன் வழங்கியும், முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த நிலையில் குருத்திகா பட்டேலின் உறவினர்களான விஷால், கீர்த்தி பட்டேல் மற்றும் சண்முகராஜ் ஆகியோர் தங்களுக்கு முன் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஏற்கனவே முன்ஜாமீன் கோரிய வழக்கில் மனுதாரர்கள் போலீஸ் நிலையத்தில் சரணடைய உத்தரவிடப்பட்டது. ஆனால் மனுதாரர்கள் சரணடையவில்லை. மேலும் விசாரணை நடைபெற்று வருவதால் முன்ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி, மனுதாரர் தரப்பில் முந்தைய முன்ஜாமீன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. மேலும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்து கொண்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
- கடந்த 3-ந்தேதி முதல் நாளைவரை பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- கடந்த 2 நாட்களில் 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களில் திரளான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
அதன்படி பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 3-ந் தேதி முதல் நாளை (6-ந் தேதி) வரை பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
இன்று பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு காலையில் மலையின் அடிவாரமான தாணிப்பாறையில் நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர். காலை 7 மணிக்கு வனத்துறையினர் பக்தர்களின் உடமைகளை சோதனையிட்டபின் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
10-வயதுக்குட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற தடை விதிக்கப்பட்டிருந்தது. இரவு கோவிலில் தங்க அனுமதி இல்லை. எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என பக்தர்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
தற்போது கோடைகாலம் என்பதால் சதுரகிரி மலையில் வறண்டு காணப்படுகிறது. கோவில் மற்றும் மலைப்பாதை வழிகளில் குடிநீர் வசதி இல்லாததால் பக்தர்கள் கடும் அவதியடைந்தனர். எனவே வனத்துறையினர் வரும் காலங்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
பங்குனி உத்திர தினமான இன்று பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பக்தர்கள் குறைவாகவே வந்திருந்தனர்.
- பல்வேறு மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களையொட்டி ஆடல்-பாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டு ஏராளமான மனுக்கள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
- கோவில் திருவிழாக்களில் ஆடல்-பாடல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. கடந்த 2019-ம் ஆண்டு பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளார்.
மதுரை:
மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களையொட்டி ஆடல்-பாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டு ஏராளமான மனுக்கள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தன. விசாரணை முடிவில், கோவில் திருவிழாக்களில் ஆடல்-பாடல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. கடந்த 2019-ம் ஆண்டு பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளார்.
எனவே அந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அந்தந்த போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுதாரர்களின் மனுக்களை பரிசீலனை செய்து, சட்டத்திற்கு உட்பட்டு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, மனுக்களை முடித்து வைத்தார்.
- திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளை ஆன்மீக சொற்பொழிவு நடைபெறுகிறது.
- இந்த நிகழ்ச்சியில் ஜோதிடர் கரு.கருப்பையா பேசுகிறார்.
மதுரை
முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணி யசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இதையொ ட்டி நாள்தோறும் சன்னதி தெருவில் உள்ள கலையரங்கில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பங்குனி உத்திர தினமான நாளை (5-ந்தேதி) மாலை 6 மணிக்கு சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு நடைபெறுகிறது.
தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவரும், பட்டிமன்ற நடுவருமான மடப்புரம் விலக்கு ஜோதிடர் கரு.கருப்பையா "கந்தன் கருணை" என்ற தலைப்பில் பேசுகிறார்.
முன்னதாக திருப்பரங்குன்றம் வக்கீல் அழகுசுந்தரம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகிறார். இதையடுத்து இரவு 7 மணிக்கு பசுமலை ஜெயாலயா நாட்டிய பள்ளி கீதாபாலா கலைக்குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.






