search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
    X

    சதுரகிரி மலையேறுவதற்காக அடிவாரத்தில் காத்திருந்த பக்தர்கள்.

    பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

    • கடந்த 3-ந்தேதி முதல் நாளைவரை பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த 2 நாட்களில் 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

    விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களில் திரளான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    அதன்படி பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 3-ந் தேதி முதல் நாளை (6-ந் தேதி) வரை பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு காலையில் மலையின் அடிவாரமான தாணிப்பாறையில் நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர். காலை 7 மணிக்கு வனத்துறையினர் பக்தர்களின் உடமைகளை சோதனையிட்டபின் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

    10-வயதுக்குட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற தடை விதிக்கப்பட்டிருந்தது. இரவு கோவிலில் தங்க அனுமதி இல்லை. எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என பக்தர்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

    தற்போது கோடைகாலம் என்பதால் சதுரகிரி மலையில் வறண்டு காணப்படுகிறது. கோவில் மற்றும் மலைப்பாதை வழிகளில் குடிநீர் வசதி இல்லாததால் பக்தர்கள் கடும் அவதியடைந்தனர். எனவே வனத்துறையினர் வரும் காலங்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    பங்குனி உத்திர தினமான இன்று பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பக்தர்கள் குறைவாகவே வந்திருந்தனர்.

    Next Story
    ×