search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kaliamman"

    • காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
    • ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழு மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டியில் ஊமை காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா நடந்தது.

    இந்த விழாவையொட்டி முதல் நாள் இரவு 10 மணிக்கு பெரிய கிணற்றில் இருந்து பூங்கரகம் ஜோடித்து மேளதாளம் முழங்க கோவிலை வந்தடைந்தது. 2-ம் நாள் பொங்கல் வைத்து தீச்சட்டி எடுத்து மாவிளக்கு ஏற்றி அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.

    3-ம் நாள் முளைப்பாரியோடு ஊர்வலமாக சென்று அம்மன் பூஞ்சோலை அடைந்தது. இதில் ஏராளமான பெண்கள் முளைப்பாரிகள் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

    4-ம் நாள் அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழு மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • மதுரை சோழவந்தான் காளியம்மன் கோவில் திருவிழா 10 நாட்கள் நடந்தது.
    • உச்சிமாகாளியம்மன் 4 ரத வீதிகளில் பவனி வந்து கோவில் முன்பு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பூமேட்டுத்தெருவில் உள்ள உச்சிமாகாளியம்மன், வடக்கத்தி காளியம்மன் கோவில் திருவிழா 10 நாட்கள் நடந்தது.முதல் நாள் கொடியேற்றம், 4-ம் நாள் திருவிளக்குபூஜை, 7-ம்நாள் பூச்சொரிதல் விழா, 8-ம் நாள் வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தகுடம், பால்குடம் எடுத்து வந்தனர். அம்மனுக்கு சந்தனக்காப்பு நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து வந்த பக்தர்களுக்கு பா.ஜ.க. விவசாய அணி மாநில துணைத்தலைவர் மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

    இரவு வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வருதல், 9-ம் நாளான இன்று இரவு உச்சிமாகாளியம்மன் சிம்மவாகனத்திலும், ஜெனகை மாரியம்மன் ரிஷபவாகனத்திலும், எழுந்தருளி 4 ரத வீதிகளில் பவனி வந்து வடக்கு காளியம்மன் கோவில் முன்பு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து முளைப்பாரி, மாவிளக்கு ஊர்வலம் நடைபெறும். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்.

    சேலம் அம்மாப்பேட்டை மெயின் ரோட்டில், சின்னக் கடைத் தெருவில் அமைந்துள்ளது குஞ்சு காளியம்மன் ஆலயம். சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயமாகும்.
    சேலத்தில் பிரசித்தி பெற்றதான, கோட்டை மாரியம்மன் ஆலயத்திற்கு அடுத்ததாக, இந்த ஆலயத்தில் நிறைய பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இந்த ஆலயத்தில் இருந்து தான் அனைத்து ஆலயங்களுக்கும் சக்தி அழைப்பு என்னும் நிகழ்வு நடைபெறுகிறது.

    இவ்வாலயத்தில் உள்ள அரசு மற்றும் வேம்பு மரத்தடியில் ராகு மற்றும் கேது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். ராகு - கேது தோஷமுள்ளவர்கள் இங்கு வந்து வணங்கி பூஜை செய்து பலனடைகின்றனர்.

    விநாயகர் சன்னிதியில் வெற்றிலை, பாக்கு, ஒரு ரூபாய் நாணயம் வைத்து வழிபட மக்களுக்கு ஏற்படும் விஷக் காய்ச்சல் தீருகிறது என பலனடைந்தவர்கள் கூறுகின்றனர். திருமணத்தடை விலக, தொழிலில் மேன்மை பெற, நினைத்த காரியம் நிறைவேற, குழந்தை பாக்கியம் கிடைக்க, அம்மனை மனமார வேண்டி காரிய வெற்றியடைகின்றனர்.

    இந்த ஆலயத்தில் அம்மனுக்கு வளையல் சாத்தும் நிகழ்வு, முக்கியமான ஒரு நிகழ்வாக இருக்கிறது. அம்மனுக்கு ஆடி மாதத்தில் வளைகாப்பு நடத்தி, அம்மனுக்கு அணிவித்த வளையல்களை, குழந்தை பாக்கியம் வேண்டி வரும் பெண்களிடம் கொடுத்து அணியச் செய்கிறார்கள்.
    ×