காளியம்மன் கோவில் திருவிழா

மதுரை சோழவந்தான் காளியம்மன் கோவில் திருவிழா 10 நாட்கள் நடந்தது. உச்சிமாகாளியம்மன் 4 ரத வீதிகளில் பவனி வந்து கோவில் முன்பு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
காளியம்மன் கோவில் திருவிழா
Published on

சோழவந்தான்

சோழவந்தான் பூமேட்டுத்தெருவில் உள்ள உச்சிமாகாளியம்மன், வடக்கத்தி காளியம்மன் கோவில் திருவிழா 10 நாட்கள் நடந்தது.முதல் நாள் கொடியேற்றம், 4-ம் நாள் திருவிளக்குபூஜை, 7-ம்நாள் பூச்சொரிதல் விழா, 8-ம் நாள் வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தகுடம், பால்குடம் எடுத்து வந்தனர். அம்மனுக்கு சந்தனக்காப்பு நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து வந்த பக்தர்களுக்கு பா.ஜ.க. விவசாய அணி மாநில துணைத்தலைவர் மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

இரவு வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வருதல், 9-ம் நாளான இன்று இரவு உச்சிமாகாளியம்மன் சிம்மவாகனத்திலும், ஜெனகை மாரியம்மன் ரிஷபவாகனத்திலும், எழுந்தருளி 4 ரத வீதிகளில் பவனி வந்து வடக்கு காளியம்மன் கோவில் முன்பு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து முளைப்பாரி, மாவிளக்கு ஊர்வலம் நடைபெறும். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com