என் மலர்tooltip icon

    மதுரை

    • ரெயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து மதுரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
    • ரெயில்வே போலீசார் முத்து முனியாண்டியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    திருமங்கலம்:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து கடந்த 16-ந் தேதி மாலை 6.15 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு புறப்பட்டது. இந்த ரெயில் மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த மறவன்குளத்தை கடந்து செல்லும்போது இரவு 9.20 மணி அளவில் முன்பதிவு இல்லாத பெட்டியில் மர்ம நபர்கள் சிலர் திடீரனெ கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதில் ரெயிலில் பயணித்த தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த கலா (வயது28), தென்காசி அய்யாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வி ஆகியோர் படுகாயமடைந்தனர். கலாவுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே 2 பெண்களும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    ரெயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து மதுரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு பொன்னுச்சாமி ஆலோசனையில் இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையில் தனிப்படை அமைத்து கல்வீசிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் ரெயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது திருமங்கலம் கூழையாபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் முத்து முனியாண்டி(20) என தெரியவந்தது. அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் இவர் சம்பவத்தன்று போதையில் ரெயில் மீது கல்வீசியுள்ளார்.

    இதையடுத்து ரெயில்வே போலீசார் முத்து முனியாண்டியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலக பிரசித்தி பெற்றது.
    • தாழ்வான மின் வயர்களை சரி செய்வது, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி அழகர் வைகையில் எழுந்தருளல் என தொடர்ச்சியாக விழாக்கள் நடைபெறும். இந்த ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி முதல் மே 9-ந் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது.

    இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து கலந்து கொள்வர். கடந்த ஆண்டு கூட்ட நெரிசலால் 2 பேர் மூச்சு திணறி உயிரிழந்ததோடு, 24 பேர் காயமடைந்தனர். ஆகவே இந்த ஆண்டு அதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாத வண்ணம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.

    இருப்பினும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. எனவே மதுரை சித்திரை திருவிழாவின்போது மீனாட்சி அம்மன் மற்றும் கள்ளழகர் கோவிலில் இலவச தரிசனம் செய்வதற்கும், குடிநீர், கழிப்பறை வசதிகளை செய்து தருவதற்கும், சாலைகளை முறையாகவும், தூய்மையாகவும் பராமரிப்பது, போதுமான மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருப்பது, தாழ்வான மின் வயர்களை சரி செய்வது, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதே போல மதுரையை சேர்ந்த ரமேஷ் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவில்களில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவிடுமாறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்குகள் நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சித்திரை திருவிழாவை நடத்தும் மீனாட்சி அம்மன் மற்றும் அழகர் கோவில் நிர்வாகத்தினரும், மாவட்ட நிர்வாகமும் சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்வர். மனுதாரரின் மனு தொடர்பாக அவர்களே முடிவெடுப்பர். ஆகவே நீதிமன்றம் இதில் தலையிட இயலாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • அழகர் கோவில் வளாகத்தில் தேங்காய் நார் கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது.
    • வெயில் கொடுமையில் இருந்து பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து, வீட்டுக்குள் முடங்கி உள்ளனர்.

    மதுரையில் நேற்று 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. இரவு நேரம் ஆன பிறகும் வீட்டுக்குள் வெக்கை அடிக்கிறது. நிம்மதியாக தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் சித்திரை பெருவிழா சில நாட்களில் தொடங்க உள்ளது. பக்தர்கள் அனல் வெயிலை பொருட்படுத்தாமல் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

    பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு அழகர் கோவில் வளாகத்தில் தேங்காய் நாருடன் கூடிய கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது.

    பக்தர்களின் பாதங்களை வெயிலில் இருந்து பாதுகாக்கும் வகையில் கோவில் பஸ் நிலையம், வாகனம் நிறுத்துமிடம், கிழக்கு நுழைவாயில் உள்ளிட்ட அனைத்து வளாக பகுதி களிலும் இந்த தேங்காய் நார் விரிப்பு போட்பட்டுள்ளது. அதில் பக்தர்கள் நடந்து சென்று வருகிறார்கள்.

    • போலீஸ்காரர் வீட்டில் நகை-பணம் திருடப்பட்டது.
    • கருப்பாயூரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை

    திருமங்கலம் அருகே உள்ள சிக்கம்பட்டி நடராஜ் நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது43). இவர் மதுரை மத்திய சிறையில் போலீஸ்காரராக உள்ளார். இவரது மனைவி மதுரை ஆவினில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார்.

    கணவன்-மனைவி வழக்கம்போல் வேலைக்கு சென்றனர். மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப் பட்டிருந்தது. பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகை, ரூ. 2 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டது தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின்பேரில் செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கருப்பாயூரணி கங்கைபுரம் 2-வது தெருவை சேர்ந்த போஸ் மகன் காவேரி (41). இவர் குடும்பத்துடன் சொந்த ஊரான திருப்புவனத்துக்கு சென்றார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப் பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அவர் கருப்பா யூரணி வீட்டிற்கு விரைந்து வந்தார்.

    அப்போது பீரோவில் இருந்த ரூ.2 லட்சத்து 69 ஆயிரத்தையும், வெள்ளி நகைகளையும் மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கருப்பா யூரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முற்கால பாண்டியர் கால அய்யனார் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
    • முற்கால பாண்டியர்களின் கைவண்ணத்தில் உருவான யானை சிற்பமும் இடம் பெற்றுள்ளது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திருமால் கிராமத்தில் பழமையான சிலைகள் இருப்பதாக நாக ரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்று துறை மாணவன் சிலம்பரசன் கொடுத்த தகவ லின் படி அந்த கல்லூரி யின் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாள ருமான தாமரைக் கண்ணன் மற்றும் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதர் போன்றோர் அங்கு சென்று களம் மேற்பரப்பாய்வு செய்தனர்.

    அப்போது அந்த சிலைகள் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சிற்பங்கள் என்பது தெரியவந்தது. இது குறித்து அவர்கள் கூறிய தாவது:-

    பொதுவாக அய்யனார் சிற்பங்கள் நீர்நிலைகள் ஓரமாக அதிகம் கிடைத்து வருகின்றன. தற்போது கண்டறிந்த சிற்பமும் கண்மாயின் கரை ஓரமாக உள்ளது. இந்த சிற்பம் மூன்றடி உயரமும், இரண்டடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப் பட்டுள்ளது. தலைப்பகுதி மகுடத்துடன் விரிந்த ஜடா பாரத்துடனும், கழுத்தில் ஆபர ணமும், மார்பில் முப்புரிநூலும், கைகளில் கை வளையல் களுடனும், வலது கரத்தில் பூச்சென்டினை பிடித்தபடி சிற்பம் நேர்த்தியாக வடிக்கப்பட்டு உள்ளது. இடது காலை குத்தவைத்தும் வலது காலை கீழே தொங்க விட்டும் உட்புதிஹாசன கோளத்தில் அமர்ந்தபடி அய்யனார் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

    அய்யனார் சிற்பத்தை மையமாகக் கொண்டு 2 பெண் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. அவை பூரண கலை மற்றும் புஷ்கலை சிற்பங்கள் ஆகும். தத்தம் வலது கைகளில் பூச்சென்டினை பிடித்தபடியும் இடது கையினை ஹடிஹஸ்த மாக வைத்துள்ளனர். வலது காலினை மடக்கியும் இடது காலை கீழே தொங்கவிட்டும் சுஹாசன கோளத்தில் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

    மேற்கண்ட சிற்பங்களின் வடிவமைப்பை வைத்துப் பார்க்கும்போது முற்கால பாண்டியர்களின் கலைநயத்தில் உருவானவைகளாக கருதலாம். இந்த சிற்பங்களுக்கு நேர் எதிரே முற்கால பாண்டியர்களின் கைவண்ணத்தில் உருவான யானை சிற்பமும் இடம் பெற்றுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கணவரை கத்தியால் குத்திய பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    • காயமடைந்த சுதர்சன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை இந்திரா நகரை சேர்ந்தவர் சுதர்சன் (34). இவர் மணிமேகலை என்ற பிரியா(29) என்பவரை திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார். சுதர்சனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதன் காரணமாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நேற்று மாலை சுதர்சன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதை மணிமேகலை தட்டி கேட்டார். இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த மணிமேகலை காய்கறி வெட்டும் கத்தியால் கணவரை குத்தினார். காயமடைந்த சுதர்சன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    தென்காசியில் உள்ள மார்க்கெட் வீதியைச் சேர்ந்தவர் ஜெரால்டு (வயது 52). இவர் செங்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சொந்த வேலை காரணமாக கோவைக்கு சென்றிருந்த ஜெரால்டு இன்று காலை காரில் ஊருக்கு புறப்பட்டார்.

    மதியம் மதுரை மாவட்டம், பேரையூர் சின்ன பூலாம்பட்டி அருகே வந்தபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையோரம் இருந்த திறந்த வெளி கிணற்றுக்குள் தலை குப்புற கவிழ்ந்து விழுந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக கிணற்றில் குதித்து கண்ணாடியை உடைத்து காருக்குள் சிக்கிய ஜெரால்டை மீட்டனர்.

    கிணற்றில் மூழ்கிக்கிடக்கும் கார்.

    தொடர்ந்து அங்கு வந்த வந்த கல்லுப்பட்டி தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி காரை மீட்டனர். விபத்தில் காய மடைந்த ஜெரால்டு பேரையூர் அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்றார். விபத்து குறித்து பேரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிய 5 பேரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை நெல்லையப்ப புரத்தைச் சேர்ந்தவர் அருள் (41). இவர் தனக்கன்குளம் இறைச்சி கடையில் இருந்தார். அங்கு வந்த 5 பேர் கும்பல் அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது.

    இது தொடர்பாக திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் அருளிடம் இதே பகுதியில் வசிக்கும் மாணிக்கம் என்பவர் செல்போனை வாங்கி யுள்ளார். இதனை அவர் திருப்பி தரவில்லை.

    அருள் செல்போனை கேட்டு நெருக்கடி கொடுத்தார். ஆத்திரமடைந்த மாணிக்கம், கூட்டாளிகளான மணிமாறன், சதீஷ், அன்புராஜூடன் சேர்ந்து அருளை தாக்கியது தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமைறைவான கீழக்குயில்குடி தெற்கு தெரு முருகேசன் மகன் அன்புராஜ் (19), சிவபாரதி என்ற கலியா உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.

    அனுப்பானடி பொண்ணு பிள்ளை தோப்பு, மச்சக்காளை மகன் ஆனந்தபாண்டி (21). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன் விரோதம் உள்ளது.

    சம்பவத்தன்று காலை ஆனந்த பாண்டி அனுப்பானடி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றார். அப்போது அவரை 5 பேர் கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது.

    இது குறித்த புகாரின்பேரில் தெப்பக்கு ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதே பகுதியில் வசிக்கும் கலை யரசன், கூட்டாளிகளான மதுசூதனன், தனசேகரன், வேல்பிரதாப், ஐராவத நல்லூர், பாபு நகர், வேலவன் தெரு பூமிநாதன் ஆகிய 5 பேரை தேடி வருகின்றனர்.

    • மதுரை மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டன.
    • ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற்று தேர்வில் கலந்து கொள்ளலாம்.

    மதுரை

    மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. சேவை மனப்பான்மையுடைய ஆண்கள்,பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். வருகிற 20-ந் தேதி முதல்

    22-ந் தேதி வரை 3 நாட்கள் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.மதுரை ஆயுதப்படை மைதானத்தில் அமைந்துள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் இந்த விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. 18 வயதுக்கு மேல் 45 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் இருபாலரும் தேர்வில் கலந்து கொள்ளலாம். தேர்வுக்கு வருபவர்கள் கல்வி, வயது, ஒரிஜினல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் வரவேண்டும். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற்று தேர்வில் கலந்து கொள்ளலாம் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிளஸ்-2 மாணவி-வாலிபர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
    • பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டி என்.ஜி.ஓ. நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி கருப்பாயி. இவர்களது இளைய மகள் அன்னலட்சுமி. பிளஸ்-2 தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்தார். தேர்வு சரியாக எழுதவில்லை என வீட்டில் இருந்தவர்களிடம் கூறி வருத்தப்பட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த டி.கல்லுப்பட்டி போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை பாலமேடு, வ.உ.சி தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 29). இவருக்கு நீண்ட காலமாக தீராத வயிற்று வலி தொல்லை இருந்து வந்தது. இதற்காக அவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தார். ஆனாலும் நோய் குணம் ஆகவில்லை. எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்த முத்துக்குமார், சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர்- பெண்ணிடம் செல்போன்கள் பறிக்கப்பட்டது.
    • திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    திருப்பரங்குன்றம் சந்திராலயம் முதல் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது36). இவரது உறவினர் கணேசன். இவர் திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி ரோட்டில் சென்று கொண்டி ருந்தார்.

    அப்போது 2 வாலிபர்கள் அவரை வழிமறித்து தாக்கினர் .இதில் கணேசன் மயங்கி விழுந்தார். அவரிடம் இருந்த செல்போனையும் ரூ.600-யும் வாலிபர்கள் பறித்து தப்பினர்.

    இது குறித்து கணேசனின் உறவினர் சுரேஷ் திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி திருப்பரங்குன்றம் படப்பட்டி தெருவை சேர்ந்த இளையராஜா (43), தனக்கன்குளம் கிழக்குபகுதி ஈஸ்வரன் (45) ஆகியோரை கைது செய்தனர்.

    மதுரை உலகநேரி மிருதுஞ்ஜெயன் மனைவி சித்ராதேவி (30). இவர் நேற்று மாலை அண்ணா பூங்காவில் நடை பயிற்சி சென்றார். அவரை மோட்டார் சைக்கிளில் வந்தவர் பின் தொடர்ந்தார்.

    பின்னர் அவர் சித்ரா தேவியின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினார். இது குறித்த புகாரின்பேரில் திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வலையங்குளம் கண்மாயில் மீன்பிடி குத்தகையை ரத்து செய்ய வேண்டும்.
    • கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வலையங் குளத்தைச் சேர்ந்த தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு பேரவை பொது செயலாளர் சிங்கராசு, தமிழ் மாநில சிவசேனா கட்சி செயல் தலைவர் தூதை செல்வம் ஆகியோர் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய கண்மாயை, அதே பகுதி யைச் சேர்ந்த 4 பேர் 2 ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் இதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ4.10லட்சத்தை லஞ்சம் வாங்கிக் கொண்டு, மீன் குத்தகை ஏலம் விட்டுள்ள னர். கண்மாயில் தண்ணீர் நிறைந்துள்ளதால், மீன் களை பிடிக்க முடியவில்லை.

    அவர்கள் மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றி வருகின்றனர். ஆடு, மாடுகளை கூட தண்ணீர் குடிக்க அனுமதிப்பதில்லை. மேற்கண்ட 4 பேரும் அங்குள்ள கடைகளில் கட்டாய வசூல் செய்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு பெரிய கண்மாய் குத்தகை ஏலத்தை ரத்து செய்ய வேண்டும். சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×