என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரை அருகே வியாபாரியை தாக்கிய பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    • கடையில் பூக்கள் திருடுபோவது தொடர்பாக இவர்களுக்குள் முன்விரோதம் இருந்தது.

    மதுரை

    மதுரை வளர் நகர் அம்பலக்காரன் பெட்டியை சேர்ந்தவர் ராமன் (55). இவர் மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.அங்கு வண்டியூரைச்சேர்ந்த லெட்சுமி எனபவரும் வியாபாரம் செய்கிறார். கடையில் பூக்கள் திருடுபோவது தொடர்பாக இவர் களுக்குள் முன்விரோதம் இருந்தது.

    இந்த நிலையில் லட்சுமி யின் உறவினர்களான வண்டியூர் செம்மண் சாலையை சேர்ந்த கோபால கிருஷ்ணன் மனைவி மேனகா (37) , ராமசாமி மனைவி சாந்தி (50),சோனை மகள் ரேணுகா (39) ஆகிய 3 பேரும் ராமனை ஆபாச மாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து ராமன் மாட்டுத்தாவனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பெண்களையும் கைது செய்தனர்.

    மதுரை தென்னோ லைக் காரத் தெருவை தெருவை சேர்ந்தவர் அன்புமணி. இவரது மனைவி பூர்ணிமா (38).இவர் ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று தெற்கு வாசலில் உள்ள அரிசி கடைக்கு பூர்ணிமா சென்றிருந்தார். அப்போது அவரு க்கும் அங்கு வந்த ஆரப் பாளையம் ராஜேந்திரா மெயின்ரோடு கணேசன் மனைவி நிஷா காந்தி (45) என்பவருக்கும், இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நிஷா காந்தி, பூர்ணிமாவை ஆபாசமாக பேசி தாக்கினார். இந்த சம்பவம் குறித்து பூர்ணிமா தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவுசெய்து நிஷா காந்தியை கைது செய்தனர்.

    • ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்கியதற்கு முதல்-அமைச்சருக்கு 108 ஆம்புலன்ஸ் நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.
    • தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநாடு மதுரையில் நடந்தது.

    மதுரை

    தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநாடு மதுரையில் நடந்தது. இதில் கடந்த 2020-ம் ஆண்டு ஊதிய உயர்வு போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக பணியில் இருந்து நீக்கப் பட்ட 10 பேருக்கு தமிழக அரசு மீண்டும் வேலை வழங்கியதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநில தி.மு.க மருத்துவ அணி செயலாளர் எழிலன், நாகநாதன் எம்.எல்.ஏ. ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத்தொடர்ந்து தேனி மாவட்டத்தில் பணியில் இருந்தபோது விபத்தில் இறந்த டிரைவர் வெங்கடேசன் குடும்பத் திற்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.

    இந்தநிலையில் தமிழ் நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் இருளாண்டி தலைமையில் நிர்வாகிகள், சென்னைக்கு சென்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியனை சந்தித்தனர். அப்போது மானிய கோரிக்கைக்கு நன்றி தெரிவித்து, நிர்வாகிகள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    • மதுரையில் ஆயுதங்களுடன் சுற்றிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அதனை மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்தனர்.


    மதுரை

    மதுரை கீரைத்துறை சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் அனுப்பானடி பொண்ணுதோப்பு அருகில் சென்றபோது சந்தேகத்துக் கிடமான வகையில் 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர்.

    அவர்களை போலீசார் சோதனை செய்தபோது, அவர்களிடம் அரிவாள் மற்றும் ஆயுதங்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் அனுப்பானடி அம்பேத்கர் நகரை சேர்ந்த அண்ணன்-தம்பியான போஸ் மகன்கள் பிரவீன் குமார் என்ற அய்யர் (வயது25), செந்தில்குமார் (19) என்று தெரியவந்தது. அவர்கள் தாக்குதலுக்கு பதுங்கியிருந்ததால் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மற்றொரு சம்பவம்

    திருநகர் சப்-இன்ஸ்பெக்டர் குமாரி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் தனக்கன்குளம் போஸ்ட் ஆபீஸ் அருகில் சென்றபோது அவர்களை கண்டதும் 4 மர்ம நபர்கள் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் 3 பேர் பிடிபட்டனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். அவர்களிடம் சோதனை செய்தபோது கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்தன. அதனை மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்தனர். அவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் திருநகர் மெயின்ரோடு ஜோசப் நகர் சின்னசாமி மகன் சுந்தரமூர்த்தி (23), விளாச்சேரி ஆதி சிவன் நகர் உதயன் மகன் அலெக்ஸ் (23), திருநகர் ஜோசப் நகர் 3-வது தெரு பிச்சை மகன் சுரேஷ் (23), நெல்லையப்பபுரம் அருண் (41) என்று தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அருண் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • மதுரை அருகே முதியவரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பொதும்புவை சேர்ந்த ஸ்ரீமான் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை தெற்குவெளி வீதி பழைய மகாளிப்பட்டி ரோட்டை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது72). இவருக்கும், தெற்குமாசி வீதி ஜடாமுனி கோவில் தெருவை சேர்ந்த ராஜகோபாலன் (47) என்பவருக்கும் தங்களது மூதாதையர் சொத்து சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் ராஜகோபாலன் 4 பேருடன் சென்று லட்சுமணனை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து லட்சுமணன் தெற்குவாசல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜகோபாலன், ரங்கன் ஆசாரி தெரு ரமேஷ், அவரது மனைவி ராதிகா (43),பொதும்புவை சேர்ந்த மகேந்திரன் (63) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பொதும்புவை சேர்ந்த ஸ்ரீமான் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • மதுரை சித்திரை திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மேயர் ஆலோசனை நடத்தினர்.
    • குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

    மதுரை

    மதுரை மாநகரில் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெறும் சித்திரை திருவிழாவை சிறப்பாக நடத்த மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    சித்திரை திருவிழா வருகிற 23-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வு களான தினந்தோறும் மீனாட்சியம்மன் 4 மாசி வீதிகளில் வீதிஉலா வருதல், மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், திக்குவிஜயம், தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    சுவாமி தரிசனம் செய்வதற்கும், திருவிழாவை காண்பதற்கும் மதுரை மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டம், இதர மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரளான பக்தர்கள் வருவார்கள்.

    மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகள், மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகள் மற்றும் வைகை ஆற்றின் இரு கரைப்பகுதிகள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் சுழற்சி முறையில் தேவையான பணியாளர்களை கொண்டு சுத்தமாகவும், தூய்மை யாகவும் பராமரிக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக மருத்துவ குழு, தீயணைப்பு ஆம்புலன்சு வசதி, தகவல் மையம், கண்காணிப்பு காமிராக்கள், தன்னார்வ லர்கள், மின்சாரம், மின்விளக்கு, சாலைகள் சீரமைத்தல் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக கூடுதலாக குடிநீர் மற்றும் நடமாடும் கழிவறை மற்றும் இ-டாய்லெட் வசதி ஏற்படுத்துவது, கொசு புகை மருந்து அடித்தல் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப் படும்.

    திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் வாகனங்களை போக்கு வரத்து இடையூறின்றி நிறுத்தி செல்வதற்கும், பொதுமக்கள் ஆங்காங்கே திருவிழாவை பார்க்க வசதியாக எல்.இ.டி. திரை வசதி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் பாதுகாப்பிற்காக டிரோன் மூலமாக கண்காணித்தல், வாகனங்கள் நிறுத்து வதற்கான இடங்கள், மருத்துவ சேவை வழங்குதல், அவசர உதவி எண்கள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சித்திரை திருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வுக்கூட்டத்தில் காவல் துணை ஆணையாளர் அரவிந்த், துணை மேயர் நாகராஜன், போக்குவரத்து உதவி ஆணையாளர்கள் (காவல்துறை) மாரியப்பன், செல்வின், மாநகராட்சி துணை ஆணையாளர்கள் முஜிபூர் ரகுமான், தயாநிதி, மீனாட்சி அம்மன் கோவில் துணை ஆணையர் அருணாசலம், கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, நகரப்பொறி யாளர் அரசு, நகர்நல அலுவலர் வினோத்குமார், உதவி ஆணையாளர்கள் காளிமுத்தன், வரலட்சுமி, திருமலை, சையது முஸ்தபா கமால், மக்கள் தொடர்பு அலுவலர் மகேசுவரன், கல்வி அலுவலர் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சித்திரை திருவிழா 1-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை நடக்கிறது.
    • 5-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.

    அழகர்கோவில் இணை கமிஷனர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 1-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை நடக்கிறது. 3-ந் தேதியன்று மாலை 6 மணியில் இருந்து 7.10 மணிக்குள் அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் புறப்பட்டு மதுரை வருகிறார்.

    இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 5-ந்தேதி அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்போது பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சும் வைபவம் ராமராயர் மண்டபத்தில் நடக்க உள்ளது. அந்த நிகழ்ச்சிக்காக பக்தர்கள் விரதம் இருந்து தோல் பையில் தண்ணீர் சுமந்து சிறிய குழாய் மூலம் சுவாமியின் மீது தண்ணீர் பீய்ச்சி நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.

    கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் தோல் பையில் விரத ஐதீகத்தை மீறி, செயற்கையான மற்றும் அதிக விசையான குழாயை பொருத்தி தண்ணீரில் திரவியங்கள் மற்றும் வேதிப்பொருட்களை கலந்து பீய்ச்சுவதால் சுவாமி, குதிரை வாகனம் மற்றும் ஆபரணங்களும், பக்தர்கள், பட்டர்கள், பணியாளர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. மேலும் சிலர், தண்ணீர் பாக்கெட்டுகளை பற்களால் கடித்து அந்த பாக்கெட் தண்ணீரை சுவாமியின் மீது பீய்ச்சுகின்றனர்.

    இந்த ஆண்டு சித்திரைத்திருவிழாவின்போது பக்தர்கள் அதிக விசை உடைய குழாயை தோல் பையில் பொருத்தி தண்ணீர் பீய்ச்ச வேண்டாம். விரத ஐதீகத்தின்படி தோல் பையில் சிறிய பைப் பொருத்தி திரவியங்கள், வேதிப்பொருட்கள் கலக்காமல் சுத்தமான தண்ணீர் மட்டும் பீய்ச்சும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடத்தல் கும்பல் தங்கியிருப்பது தெரிய வந்தது.
    • கைதான 3 பேரும் முருகனிடம் இருந்து கடன் தொகையை வசூலிக்க அவரை கடத்திச் சென்றதாக தெரிவித்தனர்.

    மதுரை:

    சென்னையை சேர்ந்தவர் முருகன். இவர் மதுரை மாட்டுத்தாவணி எதிரே செயல்படும் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தார். இவரது உறவினர் நெல்லை மாவட்டம், முக்கூடலை சேர்ந்த முப்புடாதி மனைவி காளீஸ்வரி. இவர் தனது மாமா முருகனை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரே உள்ள லாட்ஜுக்கு சென்று சந்தித்தார். பின்னர் இருவரும் வெளியே வந்தனர்.

    அப்போது 4பேர் கொண்ட கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கியது. காளீஸ்வரியை கீழே பிடித்து தள்ளிவிட்டு முருகனை காரில் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து காளீஸ்வரி கே.புதூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல் கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்தனர். இந்த தனிப்படை போலீசார் கடத்தல் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும், செல்போன் எண்களையும் ஆய்வு செய்தனர். இதில் சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடத்தல் கும்பல் தங்கியிருப்பது தெரிய வந்தது.

    தனிப்படை போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அது ஆனந்த் என்பவரது வீடு என்று தெரியவந்தது. அந்த வீட்டில் முருகனை மர்ம கும்பல் அடைத்து வைத்திருந்தது. அவரை போலீசார் மீட்டனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட மணி, ஆனந்த், சுரேஷ்குமார், அலெக்ஸ் பாண்டியன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கடத்தலுக்கு பயன் படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான 3 பேரும் முருகனிடம் இருந்து கடன் தொகையை வசூலிக்க அவரை கடத்திச் சென்றதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் போலீசார் அதிரடி விசாரணை நடத்தி 48 மணிநேரத்தில் கடத்தல் கும்பலை பிடித்ததற்காக அவர்களுக்கு, மதுரை போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் பாராட்டு தெரிவித்தார்.

    • சமயநல்லூர் மின் கோட்ட அலுவலகத்தில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.
    • 10 கிளை அலுவலகங்களில் வசூல் மற்றும் களப்பணி மற்றும் அவசரப்பணிகள் செய்வதில்லை.

    வாடிப்பட்டி

    சமயநல்லூர் மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் அலங்காநல்லூர் மின்பாதை ஆய்வாளர் ராமநாதன், கேங்மேன் சுரேஷ் ஆகியோரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு. மாநில பொறுப்பாளர் அறிவழகன் தலைமையில் தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிலாளர் முன்னேற்ற சங்கம், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம், தொழிலாளர் சம்மேளன சங்கம், அனைத்து பணியாளர்கள் கூட்டமைப்புச் சங்கம், அட்டைப்பெட்டி பிரிவு அலுவலர்கள் சங்கம் அ.தி.மு.க. தொழிற்சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    இதன் காரணமாக அலங்காநல்லூர் துணை மின் நிலையத்திற்கு மதியம் 1 மணிக்கு செல்ல வேண்டிய அலுவலர்கள் செல்ல மாட்டார்கள் என்றும், மாலை 5 மணிக்கு அலங்காநல்லூர் துணை மின் நிலையம் பூட்டப்படும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். சமயநல்லூர் கோட்ட அலுவலகத்திற்கு உட்பட்ட வாடிப்பட்டி, சோழவந்தான், அய்யங்கோட்டை, அலங்காநல்லூர் உள்ளிட்ட 10 கிளை அலுவலகங்களில் வசூல் மற்றும் களப்பணி மற்றும் அவசரப் பணிகள் செய்வதில்லை என்றும் தெரிவித்தனர்.

    • மதுரையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
    • அனைத்து குடிமை பொருள் வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    மதுரை

    மதுரையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 20-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30 மணியளவில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் எண்ணெய் நிறுவன மேலாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர் அசோசியேசன் தலைவர்கள், எரிவாயு நுகர்வோர்கள், எரிவாயு முகவர்கள் மற்றும் தொழிலாளர் நல ஆய்வாளர், அனைத்து குடிமை பொருள் வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவல் மாவட்ட வழங்கல் மற்றும் பாதுகாப்பு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
    • 537 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்பு அரசு கலைக் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா நடை பெற்றது. கல்லூரி முதல்வர் லட்சுமி வரவேற்றார். விருது நகர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட துறை களை சேர்ந்த 537 மாணவ, மாணவிகளுக்கு பட்டங் களை வழங்கினார்.அப்போது அவர் பேசு கையில், பட்டம் பெற்றதன் மூலம் அறிவை மேம்படுத்திக் கொண்டு நாட்டிற்கு மாணவ, மாணவிகள் தங்களுடைய செயல்பாடு களை அளிக்க வேண்டும் என்றார்.

    பட்டமளிப்பு விழாவில் முன்னாள் முதல்வர் புவனேஸ்வரன், காங்கிரஸ் நிர்வாகி உலகநாதன், வட்டார தலைவர் முருகேசன், கவுன்சிலர் அமுதா சரவணன், நகர மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், நகரச் செய லாளர் ஸ்ரீதர் துணைத் தலைவர் ஆதவன் அதியமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மேலூர் தாலுகா மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வெங்கடேசன் எம்.பி. பங்கேற்றார்.
    • 100 நாள் பணியில் சேர்ந்துள்ள தொழிலாளர்களுக்கு அதற்கான அடையாள அடையாள அட்டைகளை வழங்கினார்.

    மேலூர்

    மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் மேலூர் தாலுகாவில் உள்ள கீழையூர், சாத்தமங்கலம், தனியாமங்கலம் சருகு வலையப்பட்டி, வடக்கு வலையபட்டி, வெள்ளலூர் உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி உட்பட பல்வேறு கிராம மக்களைச் சந்தித்து அவர்களது கோரிக்கைகள் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்துக் கேட்டறிந்தார்.

    அப்போது பொதுமக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை மக்கள் முன்வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என மக்களிடம் எம்.பி., உறுதியளித்தார்.

    இந்நிகழ்ச்சிகளில் மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசந்தர், ஜெயபாலன், வேளாண்மை அலு வலர் செல்வகுமார், உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடேசன், உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    வடக்கு வலைய பட்டி, வெள்ளலூர் கிரா மங்களில் விவசாயிகளுக்கு மானிய விலையில் தார்ப்பாய், மரக் கன்றுகள், மருந்து அடிக்கும் ஸ்பிரே ஆகியவற்றை எம்.பி. வழங்கினார். 100 நாள் பணியில் சேர்ந்துள்ள தொழிலாளர்களுக்கு அதற்கான அடையாள அடையாள அட்டைகளை வழங்கினார்.

    தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் கட்டப்பட்டு வரும் கீழையூர் பேருந்து நிறுத்தம், தனியாமங்கலம் ரேஷன் கடை ஆகியவற்றையும் வெங்கடேசன் பார்வையிட்டார்.

    • நோய் தீர்க்கும் புண்ணிய தீர்த்த குளமாக போற்றி பாதுகாத்து வந்தனர்.
    • லெட்சுமி தீர்த்தகுளம் 25 அடி உயரத்தில் 66 மீட்டர் நீளமும், 66 மீட்டர் அகலமும் கொண்டது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் 25 அடி உயரத்தில் 66 மீட்டர் நீளமும், 66 மீட்டர் அகலமும் கொண்ட லெட்சுமி தீர்த்தகுளம் அமைந்து உள்ளது.இந்த குளமானது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தெய்வானை அம்பாளுக்காக உருவாக்கப்பட்டதாக செவிவழி செய்தி கூறுகிறது. ஒரு காலத்தில் இந்த குளம் வற்றாத புனித தீர்த்தக் குளமாக இருந்து வந்துள்ளது.

    குறிப்பாக தேமல், பருவு உள்ளவர்கள் இந்த லெட்சுமி தீர்த்தக்குளத்தில் உப்பு வாங்கி போட்டு நோயை குணமாக்கி வந்துள்ளனர். ஆகவே நோய் தீர்க்கும் புண்ணிய தீர்த்த குளமாக போற்றி பாதுகாத்து வந்தனர்.

    இத்தகைய சிறப்பு பெற்ற லெட்சுமி தீர்த்த குளத்தின் சுற்றுச்சுவர் சமீபத்தில் அடுத்தடுத்து 3 முறைக்கு மேல் இடிந்து விழுந்தது. இதனையொட்டி கோவில் நிர்வாகம் லெட்சுமி தீர்த்த குளத்தை சீரமைப்பது என்று முடிவு செய்தனர். அதன்படியே ரூ.6½ கோடியில் பழமை மாறாமல் அதிநவீன தொழில் நுட்பத்துடன் குளத்தின் 3 பக்கமும் கற்கள் கொண்டு சுற்றுச்சுவரும், மற்றொரு பக்கத்தில் கான்கிரீட்டிலான சுவரும் கட்டப்பட உள்ளது.

    மேலும் கோடைகாலத்திலும் வற்றாத நீர் நிலையாக தண்ணீர் தேங்குவதற்கு வசதியாக குளம் ஆழமாக தூர்வாரப்படுகிறது. இதற்காக முதற்கட்டமாக இந்து சமய அறநிலையதுறை கமிஷனரிடம் அனுமதி பெறப்பட்டு பணிக்கான டெண்டர் விடப்பட்டு தயார் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் மதிப்பீடு மற்றும் தொழில்நுட்ப அனுமதி கமிஷனரிடம் கோரப்பட்டுள்ளது. உரியஅனுமதி கிடைத்தவுடன் ஒரு சில வாரத்தில் லெட்சுமி தீர்த்த குளம் தூர்வாரும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×