என் மலர்tooltip icon

    மதுரை

    • மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க நினைக்கும் பாசிச கூட்டத்தை அனுமதிக்க மாட்டோம்.
    • வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் பேசினார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் மேலூரில் மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    மனிதநேயம் தளைத்தோ ங்க, மத நல்லிணக்கம் செழித்திட, அறம், நெறி தொடர்ந்திட உலகம் முழுவதும் உள்ள இஸ்லா மிய பெருமக்கள் ரமலான் நோன்பை கடைபிடித்து வருகிறார்கள்.

    இன்றைய உலகத்தில் இந்திய ஒன்றியம் தான் குடியரசு இந்தியா என்று டாக்டர் அம்பேத்கர் பிரக டனம் செய்தார். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோர் இந்தியா மதச்சார்பற்ற நாடு என்ற அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை ஏற்படுத்தினார்கள்.

    மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், கடவுளின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி அதன் மூலம் பதவி சுகத்தை அனுபவிக்க மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு நாட்டின் அரசிய லமைப்பு சட்டத்தை செல்லாக் காசாக மாற்ற நினைக்கிறது. அரசியல மைப்பு சட்டத்தை தகர்த்தெ றிய துடிக்கிறது. இந்த பாசிச வாதிகளின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

    அமைதி பூங்காவாக திகழும் தமிழ் மண் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் வளர்த்த பொதுவுடமை மண்ணாக தமிழ்நாடு பக்குவப்பட்டு உள்ளது. திமுக மற்றும் திராவிட இயக்கங்கள் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக திகழ்ந்து வருகிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத பாசிச ஆர். எஸ். எஸ். கூட்டம் மத நல்லிண க்கத்தை சீர்குலைக்க விஷமத்தனமான காரியங்களில் ஈடுபட நினைக்கிறார்கள். அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஜனநாயக மரபுகளுக்கு மாறாக செயல்படும் மத்திய பாஜக அரசை வருகிற பொதுத் தேர்தலில் விரட்டி அடிக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபடுவோம். வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மதுரையில் செல்போன்-செயின் பறிக்கப்பட்டது.
    • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை திருமால்புரம் வீரபாண்டி காலனியை சேர்ந்தவர் லோகேஷ் குமார் (19). இவர் சம்பவத்தன்று மேலூர் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3பேர் முகவரி கேட்பது போல் நடித்து லோகேஷ் குமாரின் செல்போனை பறித்து சென்றனர்.

    மதுரை நாராயணபுரத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (30). தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவர் அவனியாபுரம் பகுதியில் ஒரு கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள தங்க செயினை பறித்து சென்றனர். 2 சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

    மதுரை

    மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்ச கத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மதுரை அதன் மண்டலத் துக்கு உட்பட்ட 6 மாவட்டங்களில் "நிதி உங்கள் அருகில்" குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் 27-ந்தேதி நடைபெறுகிறது.

    அதன்படி இந்த மாதம் வருகிற 27-ந்தேதி காலை 9 மணி முதல் நடைபெறுகிறது. இதுகுறித்து மதுரை மண்டல ஆணையாளர் அமியகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் பதிவுபெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தாதாரர்கள், ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்கு பெற்ற நிறுவனங்களில் உள்ள பி.எப்.டிரஸ்ட் சந்தாதாரர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த முகாம் நடைபெறுகிறது.

    முகாமில் பங்கேற்பவர்கள் t.ly/nPTtஎன்ற இணைய தள முகவரியில் தங்கள் விவரங்களை பதிவு செய்த பின்னரே இந்த கூட்டத்தில் பங்கேற்கலாம்.

    மதுரை மாவட்டத்துக்கு திருமங்கலம் பி.கே.என். மேல்நிலைப் பள்ளியிலும், தேனி மாவட்டத்துக்கு கம்பம் ஸ்ரீசக்தி விநாயகா மெட்ரிக்குலேசன் பள்ளியிலும், சிவகங்கை மாவட்டத்துக்கு தேவகோட்டை ஆர்ச் அருகில் வீரா மருத்துவ மனையிலும், விருதுநகர் மாவட்டத்துக்கு விருதுநகர் பழைய பஸ் நிலையத்தின்பின்புறம் கே.வி.எஸ்.நடுநிலைப் பள்ளியிலும், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பரமக்குடி கணபதி செட்டியார் வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல் நிலைப்பள்ளியிலும், திண்டுக்கல் மாவட்டத்துக்கு கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்திலும் குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை மதுரை வருங்கால வைப்பு நிதி அலுவலக மண்டல ஆணையாளர் பி.சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

    • கொத்தடிமை தொடர்பாக புகார் தெரிவிக்க புதிய தொலைபேசி எண் உருவாக்கப்பட்டுள்ளது.
    • குழந்தை தொழிலாளர் குறித்த புகார்களை தெரிவிக்கலாம்.

    மதுரை

    குழந்தை தொழிலாளரை பணி அமர்த்துவது, வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்துவது, தொழிலாளரை கொத்தடிமையாக நடத்துவது ஆகியவை சட்டப்படி குற்றம். தமிழகத்தில் கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்ற, அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக புகார் தெரிவிக்க ஏற்கனவே 1800 4252 650 தொலைபேசிஎண் பயன்பாட்டில் உள்ளது.

    இந்த நிலையில் பொதுமக்கள் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் புதிய கட்டணமில்லா தொலைபேசிஎண்: 155214 உருவாக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் மேற்கண்ட தொலைபேசி எண்களில் கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர் குறித்த புகார்களை தெரிவிக்கலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் தெரிவித்துள்ளார்.

    • மதுரை மண்டலத்தில் மின் திருட்டு சம்பந்தமாக ரூ. 9 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • மின் திருட்டு கண்டறியப்பட்டது.

    மதுரை

    மதுரை மின்வாரிய மண்டலத்துக்குட்பட்ட திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள மின்வாரிய அமலாக்க பிரிவு அதிகாரிகள், திண்டுக்கல் மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது நிலக்கோட்டை, என்.ஆண்டிபட்டி, கன்னிவாடி, ஒட்டன் சத்திரம், க.கீரனுார், சித்தை யன்கோட்டை, ஜவ்வாது பட்டி, கே.எஸ்.பட்டி, தர்மத்துப்பட்டி, ஆத்தூர், கலிமந்தையம், வேலாயு தபுரம், கொசவ பட்டி, மார்க்கம்பட்டி இடையகோட்டை, சின்னக் களையம் புத்தூர், சாமிநாதபுரம் ஆகிய பகுதிகளில் 18 இடங்களில் மின் திருட்டு கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் ரூ.9லட்சத்து 2ஆயிரத்து 96 அபராதம் விதிக்கப்பட்டது. இதுதவிர மின் திருட்டில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்ட வாடிக்கையாளர்களிடம் 55ஆயிரம் ரூபாய் அபராதம் பெறப்பட்டது.

    மதுரை மண்டலத்தில் ஒட்டுமொத்தமாக மின் திருட்டில் ஈடுபட்டதாக 9 லட்சத்து 57 ஆயிரத்து 96 ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளது.

    மதுரை மண்டலத்தில் எவரேனும் மின் திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தால் 94430-37508 என்ற செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்று மதுரை மண்டல மின்வாரிய அமலாக்கப் பிரிவு செயற்பொறியாளர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

    • தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பேரூராட்சி இணைந்து உதவி பொறியாளர் உஷாராணி தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மளிகை மற்றும் ஜவுளி உள்ளிட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்கள் என 12 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

    இதற்காக ரூ.3 ஆயிரத்து 600 வரை அபராதம் விதித்தனர். அனைத்து வியாபாரிகளுக்கும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. தொடர்ச்சியாக பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்து வோருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

    இந்த ஆய்வின்போது செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின், துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • சோழவந்தானில் பிரதோஷ விழா நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. விழாவையொட்டி சனீஸ்வரன் லிங்கம் நந்திகேசுவரர் சிவனுக்கு பால், தயிர் உள்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை வலம் வந்தனர்.

    விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் சுவாமியுடன் கோவிலை வலம் வந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடந்தன. தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பா.ஜ.க. விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர்- எம்.வி.எம். குழும தலைவர் மணிமுத்தையா, நிர்வாகி வள்ளிமயில், எம்.வி.எம். குழும தாளாளர்-சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் மருது பாண்டியன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல திருவேடகம் ஏழவார் குழலி சமேத ஏடகநாதர் கோவிலிலும், சோழவந்தான் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவாலயங்களிலும் பிரதோஷ விழா நடந்தது.

    • கல்லூரி மாணவி மாயமானார்.
    • போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளி க்குடி போலீஸ் சரக்கத்தி ற்குட்பட்ட டி.வலை யங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது 17 வயது மகள் விருது நகரில் உள்ள தனி யார் கல்லூ ரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்ப வி ல்லை. பல இட ங்களில் தே டிப் பார்த்தும், விசாரித்தும் கண்டு பிடிக்க முடிய வில்லை. இதை தொடர்ந்து மகளை கண்டு பிடித்து தரு மாறு தாய் கருப்பாயி கள்ளிக்குடி போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மா ணவியை தேடி வருகின்றனர்.

    • ஓ.பி.எஸ்.சின் திருச்சி மாநாடு அ.தி.மு.க.வுக்கு திருப்புமுனையாக அமையும் என மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் கூறினார்.
    • மாநாடு நடைபெறுகிறது.

    மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் திருச்சியில் வருகிற 24-ந்தேதி அ.தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்கும் பிரமாண்ட மாநாடு நடை பெறுகிறது.

    இந்த மாநாட்டிற்கு மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்க வசதியாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன் கூறியதாவது:-

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆசி பெற்ற தொண்டர்களின் காவலர் முன்னாள் முதல்- அமைச்சர், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தலைமை யில் திருச்சியில் வருகிற 24-ந்தேதி 5 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் பிரமாண்ட மாநாடு நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டில் மதுரை மாநகர் மாவட்டம் சார்பில் 125 வாகனங்களில் சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்கி றோம். இதற்காக வருகிற 24-ந்தேதி காலை 11 மணிய ளவில் மதுரை நகர் பகுதி யில் இருந்து அனைத்து வாகனங்களும் ஒத்தக்கடை விவசாய கல்லூரி அருகே ஒன்றிணைந்து திருச்சியை நோக்கி புறப்படுகிறோம்.

    திருச்சி மாநாடு அ.தி.மு.க. வரலாற்றில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு பிறகு அ.தி.மு.க. ஒருங்கி ணைப்பாளர் ஒ. பன்னீர் செல்வம் தலைமையில் கட்சி தொண்டர்கள் அணி வகுத்து விட்டார்கள் என்ற புதிய திருப்புமுனையை நிச்சயம் ஏற்படுத்தும்.

    இந்த மாநாட்டில் மதுரை, விருதுநகர், சிவ கங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் இருந்து சுமார் 5 லட்சத்திற் கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றி மாநாடாக அமையும் என்பதில் ஐயமில்லை.

    இதை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தொண்டர்களை நேரில் சந்திக்க முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும்

    • டாக்டர்கள் பரிசோதித்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
    • திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சமூக நல அலுவலர் ராமுத்தாய் புகார் செய்தார்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த சிறுமி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    மருத்துவ பரிசோதனைக்கு வந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது தொடர்பாக அரசு ஆஸ்பத்திரியிலிருந்து சமூக நல அலுவலர் ராமுதாய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர், கர்ப்பமான சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்.

    அதில் அந்த சிறுமிக்கும், திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டையை சேர்ந்த 17வயது சிறுவனுக்கும் பழக்கம் இருந்ததும், 19-9-22 அன்று சிறுமியின் வீட்டில் வைத்து அவருக்கு அந்த சிறுவன் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டதும், அதைத்தொடர்ந்து இருவரும் சேர்ந்து வாழ்ந்ததால் சிறுமி கர்ப்பம் அடைந்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சமூக நல அலுவலர் ராமுத்தாய் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய மகளிர் போலீசார், சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையானது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.
    • குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் 4 மாதங்களாக குறுக்கு விசாரணை என்ற பெயரில் வழக்கு விசாரணையை தாமதமாக்கி வருகின்றனர்.

    மதுரை:

    சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளேன். இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை செய்து பின் சி.பி.ஐ. போலீசார் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர்.

    இந்த வழக்கில் உள்ள 132 சாட்சிகளில், முக்கிய சாட்சிகளான ரேவதி மற்றும் பியூலா உட்பட 47 சாட்சிகளை மட்டுமே இதுவரை விசாரித்துள்ளனர். 47 சாட்சிகளிடம் விசாரணை நடத்த ஏறக்குறைய 3 ஆண்டுகள் ஆகியுள்ளது. மீதமுள்ள சாட்சிகளை விசாரிக்க இன்னும் குறைந்தது 5 வருடங்கள் ஆகும்.

    கடந்த 3 ஆண்டுகளாக நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளேன். ஏற்கனவே பல முறை ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே, எனக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் நீதிமன்றம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையானது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் 6 சாட்சிகளை மட்டுமே விசாரணை செய்ய வேண்டி உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் 4 மாதங்களாக குறுக்கு விசாரணை என்ற பெயரில் வழக்கு விசாரணையை தாமதமாக்கி வருகின்றனர். ஒரு சாட்சியை விசாரணை செய்வதற்கு கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆகின்றனது.

    எனவே மே மாத நீதிமன்ற விடுமுறை காலத்திலும் இந்த வழக்கினை கீழமை நீதிமன்றம் விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமீன் வழக் கினை தீர்ப்பிற்காக வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    • விரகனூர் சுற்றுச்சாலையில் லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது.
    • இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மதுரை

    மதுரை அருகே, விரகனூர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் இருந்து பழைய பேப்பர் கழிவுகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி இன்று காலை புறப்பட்டது.விரகனூர் சுற்றுச்சாலை ரவுண்டானாவில் இருந்து டிரைவர் லாரியை திருப்பினார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    லாரியில் இருந்த பேப்பர் கழிவுகள் ரோட்டில் சிதறின. இந்த விபத்தில் சிக்கிய லாரி டிரைவரை அங்கிருந்த வர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த உதவி போலீஸ் கமிஷனர் செல்வின் தலைமையில் தெப்பக்குளம் போக்கு வரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவிழ்ந்து கிடந்த லாரியை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    முதற்கட்ட விசாரணையில் லாரியில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்தது. இது தொடர்பாக லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×