விரகனூர் சுற்றுச்சாலையில் நடுரோட்டில் கவிழ்ந்த லாரி

விரகனூர் சுற்றுச்சாலையில் லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விரகனூர் சுற்றுச்சாலையில் நடுரோட்டில் கவிழ்ந்த லாரி
Published on

மதுரை

மதுரை அருகே, விரகனூர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் இருந்து பழைய பேப்பர் கழிவுகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி இன்று காலை புறப்பட்டது.விரகனூர் சுற்றுச்சாலை ரவுண்டானாவில் இருந்து டிரைவர் லாரியை திருப்பினார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

லாரியில் இருந்த பேப்பர் கழிவுகள் ரோட்டில் சிதறின. இந்த விபத்தில் சிக்கிய லாரி டிரைவரை அங்கிருந்த வர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்த உதவி போலீஸ் கமிஷனர் செல்வின் தலைமையில் தெப்பக்குளம் போக்கு வரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவிழ்ந்து கிடந்த லாரியை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் லாரியில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்தது. இது தொடர்பாக லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com