search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள் உள்ள லெட்சுமி தீர்த்தகுளம்  ரூ.6½ கோடியில் சீரமைக்க ஏற்பாடு
    X

    புனரமைக்கப்பட உள்ள லெட்சுமி தீர்த்தக்குளத்தை படத்தில் காணலாம்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள் உள்ள லெட்சுமி தீர்த்தகுளம் ரூ.6½ கோடியில் சீரமைக்க ஏற்பாடு

    • நோய் தீர்க்கும் புண்ணிய தீர்த்த குளமாக போற்றி பாதுகாத்து வந்தனர்.
    • லெட்சுமி தீர்த்தகுளம் 25 அடி உயரத்தில் 66 மீட்டர் நீளமும், 66 மீட்டர் அகலமும் கொண்டது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் 25 அடி உயரத்தில் 66 மீட்டர் நீளமும், 66 மீட்டர் அகலமும் கொண்ட லெட்சுமி தீர்த்தகுளம் அமைந்து உள்ளது.இந்த குளமானது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தெய்வானை அம்பாளுக்காக உருவாக்கப்பட்டதாக செவிவழி செய்தி கூறுகிறது. ஒரு காலத்தில் இந்த குளம் வற்றாத புனித தீர்த்தக் குளமாக இருந்து வந்துள்ளது.

    குறிப்பாக தேமல், பருவு உள்ளவர்கள் இந்த லெட்சுமி தீர்த்தக்குளத்தில் உப்பு வாங்கி போட்டு நோயை குணமாக்கி வந்துள்ளனர். ஆகவே நோய் தீர்க்கும் புண்ணிய தீர்த்த குளமாக போற்றி பாதுகாத்து வந்தனர்.

    இத்தகைய சிறப்பு பெற்ற லெட்சுமி தீர்த்த குளத்தின் சுற்றுச்சுவர் சமீபத்தில் அடுத்தடுத்து 3 முறைக்கு மேல் இடிந்து விழுந்தது. இதனையொட்டி கோவில் நிர்வாகம் லெட்சுமி தீர்த்த குளத்தை சீரமைப்பது என்று முடிவு செய்தனர். அதன்படியே ரூ.6½ கோடியில் பழமை மாறாமல் அதிநவீன தொழில் நுட்பத்துடன் குளத்தின் 3 பக்கமும் கற்கள் கொண்டு சுற்றுச்சுவரும், மற்றொரு பக்கத்தில் கான்கிரீட்டிலான சுவரும் கட்டப்பட உள்ளது.

    மேலும் கோடைகாலத்திலும் வற்றாத நீர் நிலையாக தண்ணீர் தேங்குவதற்கு வசதியாக குளம் ஆழமாக தூர்வாரப்படுகிறது. இதற்காக முதற்கட்டமாக இந்து சமய அறநிலையதுறை கமிஷனரிடம் அனுமதி பெறப்பட்டு பணிக்கான டெண்டர் விடப்பட்டு தயார் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் மதிப்பீடு மற்றும் தொழில்நுட்ப அனுமதி கமிஷனரிடம் கோரப்பட்டுள்ளது. உரியஅனுமதி கிடைத்தவுடன் ஒரு சில வாரத்தில் லெட்சுமி தீர்த்த குளம் தூர்வாரும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×