ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

மதுரை மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டன. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற்று தேர்வில் கலந்து கொள்ளலாம்.
ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு
Published on

மதுரை

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. சேவை மனப்பான்மையுடைய ஆண்கள்,பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். வருகிற 20-ந் தேதி முதல்

22-ந் தேதி வரை 3 நாட்கள் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.மதுரை ஆயுதப்படை மைதானத்தில் அமைந்துள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் இந்த விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. 18 வயதுக்கு மேல் 45 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் இருபாலரும் தேர்வில் கலந்து கொள்ளலாம். தேர்வுக்கு வருபவர்கள் கல்வி, வயது, ஒரிஜினல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் வரவேண்டும். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற்று தேர்வில் கலந்து கொள்ளலாம் .

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com