என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு
- வாலிபர் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
- தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிய 5 பேரை தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை நெல்லையப்ப புரத்தைச் சேர்ந்தவர் அருள் (41). இவர் தனக்கன்குளம் இறைச்சி கடையில் இருந்தார். அங்கு வந்த 5 பேர் கும்பல் அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது.
இது தொடர்பாக திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் அருளிடம் இதே பகுதியில் வசிக்கும் மாணிக்கம் என்பவர் செல்போனை வாங்கி யுள்ளார். இதனை அவர் திருப்பி தரவில்லை.
அருள் செல்போனை கேட்டு நெருக்கடி கொடுத்தார். ஆத்திரமடைந்த மாணிக்கம், கூட்டாளிகளான மணிமாறன், சதீஷ், அன்புராஜூடன் சேர்ந்து அருளை தாக்கியது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமைறைவான கீழக்குயில்குடி தெற்கு தெரு முருகேசன் மகன் அன்புராஜ் (19), சிவபாரதி என்ற கலியா உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.
அனுப்பானடி பொண்ணு பிள்ளை தோப்பு, மச்சக்காளை மகன் ஆனந்தபாண்டி (21). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன் விரோதம் உள்ளது.
சம்பவத்தன்று காலை ஆனந்த பாண்டி அனுப்பானடி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றார். அப்போது அவரை 5 பேர் கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது.
இது குறித்த புகாரின்பேரில் தெப்பக்கு ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதே பகுதியில் வசிக்கும் கலை யரசன், கூட்டாளிகளான மதுசூதனன், தனசேகரன், வேல்பிரதாப், ஐராவத நல்லூர், பாபு நகர், வேலவன் தெரு பூமிநாதன் ஆகிய 5 பேரை தேடி வருகின்றனர்.