என் மலர்
மதுரை
- சாதி மோதல்களை முதல்-அமைச்சர் கண்காணிக்க வேண்டும் என்று ஜான் பாண்டியன் கூறினார்.
- தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்து விட்டது.
மதுரை
மதுரை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பட்டியல் இனத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர்களை விடுவிக்க வேண்டும் என்று 40 ஆண்டுகளாக நீண்ட போராட்டம் நடத்தி வருகிறோம். விரைவில் அதற்கான சூழல் வரும் என்று நம்புகிறோம்.
மேலும் அ.தி.மு.க. பொதுக்குழு கூடி எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்து விட்டது. தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்து விட்டது.
எனவே தற்போதைய சூழ்நிலையில் எடப்பாடி தான் பழனிசாமி தான்
தமிழக அரசு தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது. இது தொழிலாளர்களுக்கு எதிரான செயல்.
தமிழகத்தில் ஜாதி மோதல் இருக்கிறது. சமீபத்தில் பரமக்குடியில் நடந்த கல்லூரி விழாவில் தாழ்த்தப்பட்ட மாணவன் மீது பிற மாணவர்கள்-ஆசிரியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும், கடலாடியில் பள்ளி ஆசிரியரை அதிகாரிகள் தாக்கியுள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாரையும் கைது செய்யவில்லை.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக காவல்துறை துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் இதுபோன்ற சம்பவங்களை முதல்-அமைச்சர் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாலமேடு அருகே பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் மாடு பலியானது.
- விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

பலியான மாடு.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் முழுவதும் சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் நேற்று அலங்காநல்லூர் பகுதிக ளில் மதியம் 2 மணி அளவில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
பாலமேடு அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளின் மீது மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. கூரை, ஓட்டு வீடுகள் பலத்த காற்றுக்கு தூக்கி வீசப்பட்டன.
தோட்டங்களில் போடப் பட்டிருந்த தகர செட், மற்றும் கொட்டகைகள் காற்றில் சேதமடைந்தன.
கொட்டகையில் கட்டப்பட்டிருந்த பசுமாடு பரிதாபமாக இறந்தது. மின் கம்பங்கள் சாய்ந்ததால் அந்தப்பகுதியில் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப் பட்டது. மின்சார ஊழி யர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்ற னர்.
சில நாட்களாக வெயில் வாட்டிய நிலையில் நேற்று பெய்த கனமழையால் அலங்காநல்லூர், பாலமேடு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
- ஓ.பி.எஸ். அணி சார்பில் திருச்சி பொன்மலை ஜி. கார்னர் மைதானத்தில் நாளை முப்பெரும் விழா மாநாடு நடைபெறுகிறது.
- எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் எங்கள் மாநாட்டிற்கு மட்டுமல்ல அ.தி.மு.க.விற்கே முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்.
திருச்சி:
ஓ.பி.எஸ். அணி சார்பில் திருச்சி பொன்மலை ஜி. கார்னர் மைதானத்தில் நாளை முப்பெரும் விழா மாநாடு நடைபெறுகிறது. இதனைப் பார்வையிட்ட அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
1956-ல் அண்ணா திருச்சியில் மாநாடு நடத்தினார். அந்த ஆண்டு தான் நான் தி.மு.க.வில் இணைந்தேன். அந்த மாநாட்டில் தான் தி.மு.க. தேர்தலில் போட்டியிடலாமா, வேண்டாமா என்கிற வாக்கெடுப்பு நடந்து தி.மு.க. தேர்தல் நடந்தது. 67 ஆண்டுகளுக்கு பிறகு அறிஞர் அண்ணா வழியில் இந்த மாநாடு நடக்க உள்ளது. இது வரலாற்றை படைக்கும் மாநாடாக இருக்கும்.
அ.தி.மு.க.வில் ஒருங்கிணைந்த என்கிற பேச்சுக்கே இடமில்லை. எம்.ஜி.ஆரிடம் உங்கள் அரசியல் வாரிசு யார் என கேட்ட போது அ.தி.மு.க.வின் தொண்டர்கள் தான் என் அரசியல் வாரிசு என்றார். அந்த வழியில் தொண்டர்களை அழைத்து உங்கள் இயக்கத்தை நீங்களே நடத்துங்கள் என கூறுவதற்கு தான் இந்த மாநாடு.
ஒரு சிலர் பொதுக்குழுவை அவர்களே நியமித்து தலைமை கழக நிர்வாகிகளை நியமித்தார்கள். அது இட்டுக்கட்டிய சிறு கும்பல். அவர்களுக்கும் இந்த இயக்கத்துக்கும், தொண்டர்களுக்கும் சம்மதமில்லை.
அ.தி.மு.க. தனி தன்மை வாய்ந்தது. தொண்டர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். தேர்தல் கமிஷன் சின்னம் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை ஏனென்றால் இங்கு நிர்வாகம் முடங்கவே இல்லை. ஒருங்கிணைப்பாளருக்கு முரணாக செயல்பட்டால் அந்த பொதுக்குழுவை கலைக்க ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் உள்ளது. அ.தி.மு.க.வின் சட்ட விதிகளை புரிந்து கொள்ளாமல் நீதிபதிகள் தீர்ப்பு வழங்குகிறார்கள். அவர்களுக்கு புரிய வைக்கும் அளவுக்கு எங்களுக்கு சக்தி இல்லையோ என தோன்றுகிறது.
அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகம் ஜானகி அம்மையார் எம்.ஜி.ஆருக்கு கொடுத்தது. அது எடப்பாடி பழனிச்சாமிக்கு சொந்தமானது அல்ல, அந்த கட்டிடத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லும் அ.தி.மு.க.வின் ஒவ்வொரு தொண்டர்களுக்கும் உரியது. எங்கள் தலைவரும், அண்ணியாரும் எங்களுக்கு கொடுத்த சீதனம் இது.
திருச்சியில் நாளை நடைபெறும் மாநாட்டிற்கு சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் பங்கேற்பு குறித்து தற்பொழுது உறுதியாக எதுவும் கூற முடியாது. ஒரு கட்சியிலிருந்து மற்றொருவர் வேறொரு கட்சிக்கு சென்றால் அது யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. கட்சி இயங்குவதற்கு தொண்டர்கள் முக்கியம், அதை வெற்றி பெற செய்ய மக்கள் ஆதரவு முக்கியம்.
அ.தி.மு.க.வில் தொண்டர்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கிறதா, ஓ.பி.எஸ்.க்கு இருக்கிறதா என்பதை நாளை மாநாட்டின் மூலம் தெரிந்து கொள்வீர்கள்.
எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் எங்கள் மாநாட்டிற்கு மட்டுமல்ல அ.தி.மு.க.விற்கே முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீட்கப்பட்டார்.
- போலீசார் அவரை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் முகமதுஷா புரம் தேவர் தெருவை சேர்ந்தவர் மதன பிரகாஷ் (வயது 36), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து அவர் தன்னுடைய தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்த சிலர் முன்விரோதம் காரணமாக மதன பிரகாஷை தாக்கியதாகவும், அவருடைய இருசக்கர வாகனத்தை எரித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் மதன பிரகாஷ் புகார் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், இன்று திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள உயர் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி நின்று கொண்டு தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அந்தப் பகுதியில் பொதுமக்கள் கூடினர். தகவல் அறிந்த திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் 2 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தியும், மதனபிரகாஷ் அவர்களுக்கு உடன்படாமல் கீழே இறங்கிவர மறுத்தார். இதைத் தொடர்ந்து அங்கு வந்த நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்மகை எடுக்கச் செய்வதாக உறுதியளித்ததை அடுத்து அந்த வாலிபர் செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கிவந்தார்.
உடனடியாக திருமங்கலம் டவுன் போலீசார் அவரை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். மேலும் அவர் செல்போன் கோபுரம் மீது ஏறி மிரட்டல் விடுத்தது தொடர்பாக அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
- மதுரையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த வாலிபர்கள் சிக்கினர்
- அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரை
தல்லாகுளம் போலீசார் சொக்கிகுளம் பகுதியில் ரோந்து சென்றனர். வல்லபாய் மெயின் ரோட்டில் 5 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்து கொண்டி ருந்தனர். இதன் காரணமாக அந்தப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் 5 பேரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அவர்கள் ஜம்புரோபுரம் பெருமாள்சாமி தெரு, அர்ஜுனன் மகன் சுப்பிரமணியராஜ் ( 20), பழனி மகன் பிரகாஷ் (20), செல்லூர் பாரதி தெரு சையதுஅலி மகன் அசாருதீன் (20), கோரிப் பாளையம் சோமசுந்தரம் தெரு சீனி சுல்தான் மகன் முகமது உமர் பாரூக் (23), செல்லூர் தியாகி பாலு தெரு தன பாண்டியன் மகன் ராமமூர்த்தி (19) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதே போல சிந்தாமணி-பழைய குயவர்பாளையம் ரோடு சந்திப்பில், அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற காமராஜர்புரம், முத்துராமலிங்கம் தெரு சின்ன முனீஸ் மகன் சண்முகவேலை (19) கீரைதுறை போலீசார் கைது செய்தனர்.
- கபடி போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.
- இதில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை
மேல பொன்னகரம், கொம்ப முத்து மகன் கார்த்திக் என்ற கொம்பன் (வயது19). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் கபடி போட்டி தொடர்பாக முன்விரோதம் உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு கார்த்திக் கோமஸ்பாளையம், அங்கன்வாடி மையம் அருகே நின்று கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் அவரை கத்தியால் குத்தியதுடன் இரும்பு கம்பியால் தாக்கி விட்டு தப்பினர். இது குறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்மாய்க்கரை ஜான்பாஷா மகன் ஹபிமுகமது (23), கிருஷ்ண பாளையம் மாடசாமி மகன் ஆனந்தகுமார் என்ற ஏட்டு கண்ணன் (24), புது ஜெயில் ரோடு சைலேந்திரன் மகன் அஜய்குமார் என்ற குள்ளமணி (23), முரட்டன்பத்திரி, ராம் நகர் பிச்சைமுத்து மகன் வினித்குமார் என்ற மீசை (23), திண்டுக்கல் குமரன் திருநகர், கவுதம்ராஜ் (25) ஆகியோரை கைது செய்தனர்.
- மது குடிக்க பணம் தராதவர் மீது தாக்குதல் நடந்தது.
- தப்பி ஓடிய வேல்முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை
பழங்காநத்தம், பசும்பொன் நகர், சுருளி ஆண்டி தெருவை சேர்ந்தவர் குரு பரதன் (வயது 32). இவரும் தண்டல்காரன்பட்டியை சேர்ந்த அருண்குமாரும் (36) நண்பர்கள்.நேற்று மதியம் குருபரதன் நண்பர்களுடன் பழங்காநத்தம், ராமர் கோவில் ஊரணிக்கு சென்றார். அப்போது அருண்குமார்,வேல்முருகன் ஆகியோர் மது குடிக்க பணம் கேட்டனர். இதற்கு குரு பரதன் தர மறுத்தார். ஆத்திரம் அடைந்த கும்பல் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியது. இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்டல்காரன்பட்டியை சேர்ந்த அருண்குமாரை கைது செய்தனர். தப்பி ஓடிய வேல்முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.
கோரிப்பாளையம் ஜம்புரோபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் உமேஷ் (31). சம்பவத்தன்று இரவு இவர் 'நல்உள்ளங்கள் கூட்டமைப்பு" சார்பில், கோரிப்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதற்கு அதே பகுதியில் வசிக்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை உமேஷ் தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த கும்பல் உமேசை கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியது. இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனாஸ், சையது அப்துல் என்ற தில்ரூபா, சம்சுதீன், சோட்டு, ஏழு மண்டை என்ற முகமது, காலித் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்தில் இறந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவருக்கு தொழிற்சங்க நிர்வாகிகள் நிதி உதவி வழங்கினர்.
- காளிதாஸ் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.
மதுரை
கோவை மாவட்டம் வால்பாறை அரசு ஆஸ்பத்திரி முன்பு 108 ஆம்புலன்ஸ் டிரைவர் காளிதாஸ் (27) நேற்று உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். அவருக்கு மனைவி கீதா (24), மகன்கள் புகழ்அறிவு (3), கவி (1) ஆகியோர் உள்ளனர்.
விபத்தில் கணவனை பறிகொடுத்து நிற்கதியற்று நின்ற குடும்பத்திற்கு தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் முடிவு செய்தது. மாநில பொது செயலாளர் இருளாண்டி, பொருளாளர் கணேசன், துணை செயலாளர் உதய குமார், துணைத்தலைவர் குணா ஆகியோர் உடனடி யாக வால்பாறைக்கு புறப்பட்டுசென்றனர்.
அங்கு கோவை மாவட்ட தலைவர் பொய்யாமொழி மற்றும் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகி களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
விபத்தில் இறந்த காளிதாசுக்கு தர்மபுரி சொந்த ஊராகும். உடலை அங்கு கொண்டு செல்வது என்று குடும்பத்தினர் முடிவு செய்தனர். இக்கட்டான சூழ்நிலையில் காளிதாஸ் குடும்பத்திற்கு, சங்கம் சார்பில் முதல் கட்டமாக ரூ. 37 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.
இதற்கான காசோ லையை நிர்வாகிகள் காளிதாஸ் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இதனை காளிதாஸ் குடும்பத்தினர் கண்கலங்க பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தனர்.
- மதுரையில் கொத்தனார் கல்வீசி தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
- இந்த சம்பவத்தில் தொடர்புடைய கணவன்-மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை பி.பி.குளம் இந்திரா நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 61), கொத்தனார். இவரது மனைவி சிவகாமி. மோகனும், ஆட்டோ டிரைவர் வடிவேல் (43) என்பவரும் ஒரே பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு இடையே வாகனம் நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று வடிவேல் ஓட்டி வந்த ஆட்டோ நிலை தடுமாறி மோகன் வீட்டின்மீது மோதியது.
இதனை மோகன் தட்டி கேட்டார். அப்போது அங்கு வந்த வடிவேல் மனைவி விஜி கணவருக்கு ஆதரவாக பேசினார். இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வடிவேல், அவரது மனைவி விஜி ஆகியோர் கல்வீசி மோகனை கொடூரமாக தாக்கினர். இந்த சம்பவத்தில் மோகன் படுகாயம் அடைந்தார்.
அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக மோகன் மனைவி சிவகாமி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் மோகனை ஆட்டோ டிரைவர் வடிவேல், அவரது மனைவி விஜி ஆகிய 2 பேரும் கல்வீசி தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.
போலீசார் மோகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொத்தனாரை கொடூரமாக கொலை செய்த கணவன்-மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
- சோழவந்தான் அருகே புனித ஜெர்மேனம்மாள் தேர்பவனி நடந்தது.
- வாடிப்பட்டி, மதுரை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள ராயபுரம் கிராமத்தில் புனித ஜெர்மேனம்மாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 110-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் கொடி பவனி, ஜெபமாலை, திருப்பலி நடைபெற்றது. நேற்று இரவு திருவிழா திருப்பலி, தேர் பவனி, நற்கருணை ஆசீர் நடந்தது. மதுரை, கரூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ராயபுரம் திருவிழா இரவு முழுவதும் விழாக்கோலமாக காட்சி அளித்தது. இன்று (ஞாயிறு) புதுநன்மை விழா, தேர் பவனியும், நாளை (திங்கட்கிழமை) காலை நன்றி திருப்பலி, கொடியிறக்கமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை புனித ஜெர்மேனம்மாள் ஆலயம் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். சமயநல்லூர் டி.எஸ்.பி. பாலசுந்தரம், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர். சோழவந்தான், வாடிப்பட்டி, மதுரை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுகாதாரம், குடிநீர் வசதிகளை ரிஷபம் ஊராட்சி மன்ற தலைவர் சிறுமணி மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- குருவித்துறை கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
- மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கிறார்.
சோழவந்தான்
குருவித்துறை குருபகவான் கோவிலில் குரு பெயர்ச்சி விழா நேற்று இரவு நடந்தது. மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குருபெயர்ச்சி ஆனார். குருபெயர்ச்சி விழா 3 நாள் நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை காலை லட்சார்ச்சனை தொடங்கியது. நேற்று மதியம் வரை லட்சார்ச்சனை நடந்தது.
நேற்று இரவு 9 அளவில் மணி பரிகார மகா யாக பூஜை நடந்தது. இதில் ஸ்ரீதர்பட்டர், ரங்கநாதபட்டர், சடகோப பட்டர், ஸ்ரீ பாலாஜிபட்டர், ராஜாபட்டர் உள்பட 15 அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் ஓதி யாகபூஜை நடத்தினர். இதைத்தொடர்ந்து மகாபூர்ணா குதி நடந்து அர்ச்சகர்கள் புனித நீர் குடங்களை சுமந்து மேளதாளத்துடன் கோவிலை வலம் வந்தனர்.
குருபகவானுக்கு திரு மஞ்சனம், சிறப்பு அபி ஷேகம், ஆராதனை செய்தனர். குருபகவான்- சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பரிகார ராசிகளுக்கு அர்ச்சனை நடந்தது. குருபெயர்ச்சியை யொட்டி குருவித்துறை கோவிலில் திரளான பக்தர்கள் குவிந்தனர்.
அவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி யுடன் குருபகவானை தரிசித்தனர். கொரோனோ தொற்றுநோய் காரணமாக அரசு உத்தரவின்படி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் பக்தர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்திரன் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் அறநிலையத்துறையினர் ஆகியோர் போலீசாருடன் தடுப்பு வேலி ஏற்படுத்தி பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். சமூக இடைவெளியுடன் பக்தர்கள் வரிசையாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சமயநல்லூர் டி.எஸ்.பி. பாலசுந்தர், சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் உள்பட 400-க்கும் மேற்பட்ட போலீசார், சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் பசும்பொன் போக்குவரத்து அலுவலர் பழனிமுத்து தலைமையில் தீயணைப்பு படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சோழவந்தானில் இருந்து குருவித்துறைக்கு அரசு சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இளங்கோவன், செயல் அலுவலர் பாலமுருகன், பணியாளர்கள், நாகராஜ், மணிபிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
- நிதி அமைச்சர் பேசிய ஆடியோவை ஆய்வு செய்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.
- 12 மணி நேர வேலை மனித வாழ்க்கைக்கு சரியாக வராது.
மதுரை:
முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ புனையப்பட்டதா? இல்லையா? என்பதை அவரே எப்படி கூற முடியும்? நிதி அமைச்சர் பேசிய ஆடியோவை ஆய்வு செய்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். ரூ.30 ஆயிரம் கோடி தொடர்பான அமைச்சரின் ஆடியோ விவகாரத்தில் மத்திய அரசு விசாரிக்க வலியுறுத்துவோம்.
12 மணி நேர வேலை மனித வாழ்க்கைக்கு சரியாக வராது. மனித வாழ்க்கை சுவிட்ச் போட்டால் ஓடும் எந்திரம் போன்றது அல்ல. 12 மணி நேர வேலைக்கு தி.மு.க. கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு என்பது தான் ஸ்டாலினின் பண்பாடு. சட்டப்பேரவையில் நான் பேசுவதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






