என் மலர்
மதுரை
- வாலிபர்களிடம் செல்போன், பணம் வழிப்பறி செய்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்த முகம்மது மகன் நூர் (18). இவர் சம்பவத்தன்று நள்ளிரவு, மதுரை பைபாஸ் ரோட்டில் நடந்து சென்றார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.
இந்த தொடர்பாக கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ராமசுப்ரமணியபுரத்தை சேர்ந்தவர் ராமராஜ் ( 26). இவர் நேற்று நள்ளிரவு மதுரை டோக் நகர் பகுதியில் நடந்து சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நர்சரி பள்ளிக்கூடம் அருகே வழிமறித்து, கத்தி முனையில் செல்போன் மற்றும் மணிபர்சை பறித்து சென்றனர்.
இது தொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரை சூர்யா நகரில் 2 டிரான்ஸ்பார்மர்கள் புதிதாக நிறுவப்பட்டது.
- இதனை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
மதுரை
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூர்யாநகர் அருண்சிட்டி பகுதியில் மின் பகிர்மான கழகம் சார்பில் 100 கே.வி.ஏ. திறன் கொண்ட 2 புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டன.
இவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி அவர்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூர்யா நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் தேர்தல் நேரத்தின்போது இந்த பகுதியில் சீரான மின் விநியோகம், குடிநீர் விநியோகம், சாலை வசதி மற்றும் தெரு விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி தற்போது இந்த பகுதியில் உள்ள அருண் சிட்டியில் 2 புதிய மின்மாற்றி கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் சீரான மின் விநியோகம் உறுதி செய்யப்படும்.
அதேபோல சுத்தமான குடிநீர் விநியோகிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதி களில் மாநகராட்சியின் மூலம் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 10 ஆண்டு களில் இந்த பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு பொதுமக்கள் அனைவருக்கும் அரசு நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடையும் வகையில் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டலத் தலைவர் வாசுகி சசிகுமார், கவுன்சிலர் ராதிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரை அருகே விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- இதுகுறித்து கூடக்கோவில், மண்டலமாணிக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூடக்கோவில் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கல்லணையைச் சேர்ந்தவர் இருளப்பன் (வயது 70), விவசாயி. இவருக்கு 4 வருடங்களுக்கு முன்பு இடது கண்ணில் அடிபட்டது.
அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டார். ஆனால் அதன் பின்னரும் கண்ணில் தொடர்ந்து வலி இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த இருளப்பன் தனக்கு சொந்தமான தோட்டத்தில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து கூடக்கோவில் போலீஸ் நிலையத்தில் இருளப்பன் மகன் மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள கே. நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வலம்புரி (75) என்பவருக்கு கடந்த சில மாதங்களாக கண்பார்வை குறைந்தது.
இதில் விரக்தியடைந்த வலம்புரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மண்டலமாணிக்கம் இன்ஸ்பெக்டர் விமலா வழக்குபதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்.
- வாடிப்பட்டி அருகே அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசினார்.
சோழவந்தான்
வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடிமங்கலத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசினார். ஒன்றிய செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். மன்னாடிமங்கலம் தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி வரவேற்றார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா, ஒன்றிய செயலாளர்கள் செல்லம்பட்டி ராஜா, மதுரை மேற்கு அரியூர் ராதாகிருஷ்ணன், யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா,பொதுக்குழு நாகராஜ், பேரூர் செயலாளர்கள் சோழவந்தான் முருகேசன், வாடிப்பட்டி அசோக், மாவட்ட மகளிரணி செயலாளர் லட்சுமி, இணை செயலாளர் வனிதா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர்கள் சண்முக பாண்டியராஜா, ரேகா ராமச்சந்திரன், கணேசன், சோழவந்தான் நகர இளைஞரணி மணி, எம்.ஜி.ஆர். ஒன்றிய இளைஞரணி செயலாளர் தண்டபாணி, மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வெற்றிலை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவரிடம் இருந்து ரூ5,115 பணம் மற்றும் செல்போனையும் பறித்துக்கொண்டு தப்பினர்.
மதுரை
மதுரை மாவட்டம் சோழவந்தான் மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியை சேர்ந்தவர் செல்லப் பாண்டி(வயது 60). வெற்றிலை வியாபாரியான இவர் தினமும் நகரி வழியாக சித்தாலங்குடி, குமாரம் ஆகிய கிராமங்களுக்கு சென்று வியாபாரம் செய்து வருகிறார்.
அதன்படி சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வெற்றி லைகளை ஏற்றிக்கொண்டு செல்லப்பாண்டி வியாபாரத்திற்கு புறப்பட்டார்.
தோடனேரி விலக்கில் சென்றபோது, 3வாலிபர்கள் திடீரென மோட்டார் சைக்கிளை மறித்தனர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி செல்லப்பாண்டியிடம் இருந்த ரூ5,115 பணம் மற்றும் செல்போனையும் பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன், சப்-இன்ஸ்பெக்டர் தியாக ராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் தேனூர் பாலத்தில் நேற்று போலீசார் வாகன சோதனை செய்த போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் செல்லப்பாண்டியிடம் பணம் மற்றும் செல்போன் பறித்தவர்கள் என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அவர்கள் தோடனேரியை சேர்ந்த ஜெயசூர்யா(வயது24), சமயநல்லூர் அமீர்(18) மற்றும் 16வயது சிறுவன் என தெரியவந்தது. அவர்கள் 3பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- சோழவந்தானில் திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
- விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர் செய்து வருகின்றனர்.
சோழவந்தான்
சோழவந்தானில் பிரசித்திபெற்ற திருவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று விழாவில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. வடக்கு ரதவீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தலைவர் சுகுமாரன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர்.
பிரசாத் சர்மா தலைமையில் திருக்கல்யாண யாகபூஜை நடந்தது. பரம்பரையை அறங்காவலர்கள் அர்ச்சுனன், திருப்பதி, ஜவஹர்லால், குப்புசாமி ஆகியோர் மாப்பிள்ளை விட்டார், பெண்வீட்டாராக இருந்து திருமணத்தை நடத்தி வைத்தனர். அனைவருக்கும் திருமாங்கல்ய பிரசாதம், முன்னாள் நிர்வாக பரம்பரை அறங்காவலர் ஆதிமூலம்பிள்ளை குடும்பத்தினர் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.
பேரூராட்சி தலைவர் ஜெயராமன், வார்டு கவுன்சிலர் குருசாமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேசன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் கோவிலைச் சேர்ந்தவர்கள் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இரவு அம்மனும் சுவாமியும் யானை வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தனர்.
இன்று மாலை சக்கரக்கோட்டை சைந்தவன் வதம் செய்யும் நிகழ்ச்சியும், நாளை கருப்பட்டியில் பீமன் கீசகன், வருகிற சனிக்கிழமை சோழவந்தானில் பீமன் கீசகன் வதம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர் செய்து வருகின்றனர்.
- குறிப்பாக 3 ஆயிரம் இந்தியர்கள் வாழும் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
- சூடானில் கலவரம் நடக்கும் பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல முடியவில்லை.
மதுரை:
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் உள்நாட்டிலேயே ராணுவத்துக்கும், துணை ராணுவத்திற்கும் இடையே நடந்து வரும் மோதலால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. ராணுவத்தின ருக்கு இடையேயான மோதலில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
சூடான் நாட்டில் நிலவி வரும் அசாத்திய சூழல் காரணமாக அங்குள்ள வெளிநாட்டினர்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகள் ஈடுபட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் சூடானில் தங்கியுள்ள இந்தியர்களை மீட்க பிரதமர் மோடி உத்தரவின் பேரில் "ஆபரேஷன் காவேரி" மூலமாக மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சூடானில் உள்ள 360 இந்தியர்கள் முதற்கட்டமாக "ஆபரேஷன் காவேரி" மூலம் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட இவர்கள் பின்னர் அங்கிருந்து விமான மூலம் சென்னைக்கு வந்தனர். மீட்கப்பட்ட 9 பேரில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை ஜோன்ஸ் திரவியம், அவரது மனைவி சீத்ரூத் ஜெபா, மகள்கள் ஜென்னி ஜோன்ஸ், ஜோஸ்னா ஜோன்ஸ் ஆகியோர் இன்று காலை மதுரைக்கு விமானம் மூலம் வந்தனர். அவர்களை வரவேற்ற மாவட்ட வருவாய்துறை நிர்வாகிகள் 4 பேரையும் சொந்த ஊருக்கு கார் மூலம் அனுப்பி வைத்தனர்.
முன்னதாக விமான நிலையத்தில் ஜோன்ஸ் திரவியம் நிருபர்களிடம் கூறியதாவது:-
சூடானின் தற்போது உள்நாட்டு நிலவரம் சரியாக இல்லை. கடந்த 15-ந் தேதி முதல் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் கடுமையான மோதல் நடந்து வருகிறது. இதனால் பொது மக்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக 3 ஆயிரம் இந்தியர்கள் வாழும் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் வசித்த பகுதியில் கடந்த 10 நாட்க ளாக மின்சாரம், இன்டர்நெட், குடிதண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்க வில்லை. துப்பாக்கி சூட்டுக்கு பயந்து வீட்டுக்கு ளேயே அடங்கி இருந்தோம்.
சூடானில் கலவரம் நடக்கும் பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல முடியவில்லை. துணை ராணுவத்தினர் வீட்டுக்குள் புகுந்து மக்களை தாக்கி உடைமைகளை பறித்துக் கொண்டு வருகிறார்கள். தினமும் வெடிகுண்டு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஹெலிகாப்டரில் இருந்தும் துணை ராணுவம் குண்டு வீசி மக்களை தாக்கி வருகிறது. சூடானில் இந்தி யர்கள் தனித்து விடப்பட்டு உள்ளார்கள். வாட்ஸ்-அப் குழு ஏற்படுத்தி தமிழர்கள் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டோம்.
இந்திய தூதரகமும் தினமும் எங்களின் நிலை மையை அறிந்து கொண்டது. பல்வேறு நடவடிக்கைகளின் பின் சூடானிலிருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் கடல் வழியாக 12 மணி நேரம் பயணம் செய்து ஜெட்டாவை அடைந்தோம். அங்கிருந்து விமான மூலம் நாடு திரும்பி உள்ளோம்.
சூடானில் நானும் எனது மனைவியும் இந்தியன் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தோம். எங்கள் குழந்தைகள் அங்கு மருத்துவ படிப்பு படித்து வந்தார்கள். அந்த படிப்பு இங்கு இருக்கிறதா? என்ன தெரியவில்லை. உள்நாட்டு கலவரத்தால் சூடானில் எங்கள் உடைமைகளை இழந்து விட்டோம். எதிர்காலம் கேள்விக்குறி யாகி விட்டது. எங்கள் குழந்தைகள் இங்கு மருத்துவ படிப்பு தொடர அரசு உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அவனியாபுரம் அருகே அயன்பாப்பாகுடி கண்மாயில் கழிவுநீர் கலப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
- கண்மாயில் வெண் நுரை ததும்ப கலக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.
மதுரை
மதுரை அவனியா புரத்தை அடுத்துள்ள வெள்ளக்கல் பகுதியில் அயன்பாப்பாக்குடி கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் மூலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 400 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.
வறண்ட நிலையில் காணப்பட்ட கண்மாய் 2 நாட்கள் பெய்த மழை காரணமாக தற்போது ஓரளவு நீர் நிரம்பியுள்ளது. கண்மாய் அருகே சில கிலோ மீட்டர் தொலைவில் மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.
கடந்த சில மாதங்களாக இங்கு கழிவுநீரை சரியாக சுத்திகரிப்பு செய்யாமல் வாய்க்காலில் இருந்து வெளியேற்றப்படுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையை யொட்டி வாய்க்காலில் அதிகளவு சுத்திகரிக்கப் பட்ட கழிவுநீர் வெளி யேற்றப் பட்டு வருகிறது. இந்த கழிவுநீர் அயன்பாப்பாக்குடி கண்மாயில் வெண் நுரை ததும்ப கலக்கிறது. இதனால் கண்மாயில் துர்நாற்றம் வீசுகிறது.
கழிவுநீர் கலப்பதால் அயன்பாப்பாக்குடி கண்மாயை நம்பியுள்ள விவசாயிகள் கவலை யடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
வெள்ளக்கல்லில் உள்ள மாநகராட்சிக்கு சொந்த மான சுத்திகரிப்பு நிலை யத்தில் இருந்து 50 சதவீதத்திற்கும் மேலான கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் வெளியேற்றப்படுகிறது. இந்த கழிவுநீர் அயன்பாப் பாக்குடி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 130 ஏக்கர் கொண்ட திறந்த வெளி நிலப்பரப்பு மற்றும் தோட்டங்களை ஆக்கிர மிக்கிறது.
இதனால் அந்த பகுதியில் விவசாயம் கேள்வி குறியாகி உள்ளது. மேலும் அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு தோல் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே அயன்பாப்பாக்குடி மற்றும் விவசாய நிலங்களில் கழிவுநீர் செல்வதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மதுரையில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
- அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
மதுரை
திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள அகரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 40). இவர் கடந்த 21-ந்தேதி, அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தபோது தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அங்கிருந்த வர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் சேர்த்த னர். அங்கு உடல்நிலை மோச மானதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஜெய ராமன் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில் 24-ந் தேதி ெஜயராமன் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். அப்போது உடல் உறுப்பு தானம் குறித்து டாக்டர்கள் குடும்பத்தினரிடம் விளக்கினர்.
இதையடுத்து அவர்கள் ெஜயராமனின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு ஒப்புதல் அளித்தனர். அதனை தொடர்ந்து டீன் ரத்தினவேல் அறிவுறுத்தலின் பேரில், சிறப்பு குழுவினர் மூலம் கல்லீரல், சிறுநீரகம், கண்கள் ஆகியவை அகற்றப்பட்டன.
இதில் கல்லீரல், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கும், ஒரு சிறுநீரகம் நெல்லை அரசு மருத்துவ மனைக்கும், மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கும், கண்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கும் தானமாக வழங்கப்பட்டன. உடல் உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினருக்கு, அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
- மதுரை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் மே தின சிறப்பு கிராமசபை கூட்டம் நடக்கிறது.
- இந்த தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் வெளியிட்டுள்ளார்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மே 1-ந்தேதி தொழிலாளர் தினத்தன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கிராமசபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணிகள் குறித்து விவாதிக் கப்படவுள்ளது.
இந்த கூட்டங்களில் அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். மேலும், கிராமசபை விவாதங்களில் பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. எனவே, மதுரை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் அனைவரும் பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மதுரை அருகே சிறுமி மாயமானார்.
- திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை
மதுரை சிம்மக்கல் வெங்கடசாமி நாயுடு அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மகள் தர்ஷினிபிரியா(வயது15). நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் இருந்து யாரிடம் சொல்லாமல் வெளியேறிய இவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடிப் பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மதுரை 4-வது மண்டல பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் ஆய்வு செய்தார்.
- அடிப்படை வசதி பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அலுவலருக்கு உத்தரவிட்டார்.
மதுரை
மதுரை மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் ஆகியோர் ஆய்வு ெய்தனர்.
41-வது வார்டு டீச்சர்ஸ் காலனியில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் சரிசெய்யும் பணிகள், பாபுநகர் பகுதியில் வாய்க்காலை தூர்வாரி தூய்மை செய்வது குறித்தும், ஐராவதநல்லூரில் உள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டி மராமத்து பணிகள், எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள மாநகராட்சி கழிவறைகளை மராமத்து பணிகள் மேற்கொள்ளுதல், அனுப்பானடி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டிட பணிகளையும் மேயர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அந்த வளாகம் அருகே அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் ஆய்வு செய்தார். அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது மக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் மேயர் ஆய்வு செய்து நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் மற்றும் அடிப்படை வசதி பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது நகரப்பொறியாளர் அரசு, மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா, உதவி ஆணையாளர் திருமலை, நகர்நல அலுவலர் வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேசுவரன், கவுன்சிலர்கள் செந்தாமரைகண்ணன், காளிதாஸ், பிரேமா, உதவி செயற்பொறியாளர்கள் மயிலேறிநாதன், சுப்பிரமணியன், சுகாதார அலுவலர் கோபால் ஆகியோர் பங்கேற்றனர்.






