மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்உறுப்புகள் தானம்

மதுரையில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்உறுப்புகள் தானம்
Published on

மதுரை

திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள அகரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 40). இவர் கடந்த 21-ந்தேதி, அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தபோது தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அங்கிருந்த வர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் சேர்த்த னர். அங்கு உடல்நிலை மோச மானதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஜெய ராமன் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில் 24-ந் தேதி ெஜயராமன் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். அப்போது உடல் உறுப்பு தானம் குறித்து டாக்டர்கள் குடும்பத்தினரிடம் விளக்கினர்.

இதையடுத்து அவர்கள் ெஜயராமனின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு ஒப்புதல் அளித்தனர். அதனை தொடர்ந்து டீன் ரத்தினவேல் அறிவுறுத்தலின் பேரில், சிறப்பு குழுவினர் மூலம் கல்லீரல், சிறுநீரகம், கண்கள் ஆகியவை அகற்றப்பட்டன.

இதில் கல்லீரல், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கும், ஒரு சிறுநீரகம் நெல்லை அரசு மருத்துவ மனைக்கும், மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கும், கண்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கும் தானமாக வழங்கப்பட்டன. உடல் உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினருக்கு, அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com