search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சூடான் உள்நாட்டு கலவரத்தால் எங்கள் உடைமைகளை இழந்துவிட்டோம்- மதுரை திரும்பியவர்கள் கண்ணீர் பேட்டி
    X

    சூடானில் இருந்து மீட்கப்பட்டு இன்று காலை மதுரை வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

    சூடான் உள்நாட்டு கலவரத்தால் எங்கள் உடைமைகளை இழந்துவிட்டோம்- மதுரை திரும்பியவர்கள் கண்ணீர் பேட்டி

    • குறிப்பாக 3 ஆயிரம் இந்தியர்கள் வாழும் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • சூடானில் கலவரம் நடக்கும் பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல முடியவில்லை.

    மதுரை:

    ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் உள்நாட்டிலேயே ராணுவத்துக்கும், துணை ராணுவத்திற்கும் இடையே நடந்து வரும் மோதலால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. ராணுவத்தின ருக்கு இடையேயான மோதலில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

    சூடான் நாட்டில் நிலவி வரும் அசாத்திய சூழல் காரணமாக அங்குள்ள வெளிநாட்டினர்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகள் ஈடுபட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் சூடானில் தங்கியுள்ள இந்தியர்களை மீட்க பிரதமர் மோடி உத்தரவின் பேரில் "ஆபரேஷன் காவேரி" மூலமாக மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சூடானில் உள்ள 360 இந்தியர்கள் முதற்கட்டமாக "ஆபரேஷன் காவேரி" மூலம் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட இவர்கள் பின்னர் அங்கிருந்து விமான மூலம் சென்னைக்கு வந்தனர். மீட்கப்பட்ட 9 பேரில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை ஜோன்ஸ் திரவியம், அவரது மனைவி சீத்ரூத் ஜெபா, மகள்கள் ஜென்னி ஜோன்ஸ், ஜோஸ்னா ஜோன்ஸ் ஆகியோர் இன்று காலை மதுரைக்கு விமானம் மூலம் வந்தனர். அவர்களை வரவேற்ற மாவட்ட வருவாய்துறை நிர்வாகிகள் 4 பேரையும் சொந்த ஊருக்கு கார் மூலம் அனுப்பி வைத்தனர்.

    முன்னதாக விமான நிலையத்தில் ஜோன்ஸ் திரவியம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சூடானின் தற்போது உள்நாட்டு நிலவரம் சரியாக இல்லை. கடந்த 15-ந் தேதி முதல் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் கடுமையான மோதல் நடந்து வருகிறது. இதனால் பொது மக்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக 3 ஆயிரம் இந்தியர்கள் வாழும் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் வசித்த பகுதியில் கடந்த 10 நாட்க ளாக மின்சாரம், இன்டர்நெட், குடிதண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்க வில்லை. துப்பாக்கி சூட்டுக்கு பயந்து வீட்டுக்கு ளேயே அடங்கி இருந்தோம்.

    சூடானில் கலவரம் நடக்கும் பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல முடியவில்லை. துணை ராணுவத்தினர் வீட்டுக்குள் புகுந்து மக்களை தாக்கி உடைமைகளை பறித்துக் கொண்டு வருகிறார்கள். தினமும் வெடிகுண்டு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஹெலிகாப்டரில் இருந்தும் துணை ராணுவம் குண்டு வீசி மக்களை தாக்கி வருகிறது. சூடானில் இந்தி யர்கள் தனித்து விடப்பட்டு உள்ளார்கள். வாட்ஸ்-அப் குழு ஏற்படுத்தி தமிழர்கள் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டோம்.

    இந்திய தூதரகமும் தினமும் எங்களின் நிலை மையை அறிந்து கொண்டது. பல்வேறு நடவடிக்கைகளின் பின் சூடானிலிருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் கடல் வழியாக 12 மணி நேரம் பயணம் செய்து ஜெட்டாவை அடைந்தோம். அங்கிருந்து விமான மூலம் நாடு திரும்பி உள்ளோம்.

    சூடானில் நானும் எனது மனைவியும் இந்தியன் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தோம். எங்கள் குழந்தைகள் அங்கு மருத்துவ படிப்பு படித்து வந்தார்கள். அந்த படிப்பு இங்கு இருக்கிறதா? என்ன தெரியவில்லை. உள்நாட்டு கலவரத்தால் சூடானில் எங்கள் உடைமைகளை இழந்து விட்டோம். எதிர்காலம் கேள்விக்குறி யாகி விட்டது. எங்கள் குழந்தைகள் இங்கு மருத்துவ படிப்பு தொடர அரசு உதவி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×