என் மலர்
மதுரை
- பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது.
- இதற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நன்றி தெரிவிக்கிறது.
மதுரை
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் நா.சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி மூப்பின்படி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.
இந்த நிலையில் தொடக்க கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறையில் தற்போது ஆசிரியர் பொது மாறுதல்-பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நன்றி தெரிவிக்கிறது.
தமிழக அரசு இனிவரும் காலங்களில் பணிமூப்புடைய தொடக்க-நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்வு உரிமையை பாதுகாக்கும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
எங்களது பிரச்சினைகளுக்கு முழுமையாக தீர்வு கிடைக்கும் வகையில் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடவடிக்கைகளை தொடங்குவதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மதுரையில் 342 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினார்.
மதுரை
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு 2 ஆண்டு நிறைவு பெற்றது. இதையொட்டி அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மதுரையில் இன்று நடந்தது.
கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை தாங்கினார். மேயர் இந்திராணி,மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு 342 பயனாளி களுக்கு ரூ.2 கோடியே 62 லட்சத்து 21 ஆயிரத்து 116 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கொள்கை வேண்டும். சமூகநீதி, சமத்துவம், எல்லோருக்கும் வாய்ப்பு, கல்வி எல்லோருக்கும் எல்லாம் என்று முதல்-அமைச்சர் கூறும் அடிப்படை இலக்கு எங்கள் அரசின் முக்கியமாகும்.
நிதி பற்றாக் குறையில் இருந்த நிலையை மாற்றி நிதி பற்றாக்குறையை குறைத்து தி.மு.க. அரசு மேலும் ஒரு லட்சத்திற்கும் மேலான புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. இது தவிர சட்டமன்ற உறுப்பி னர்கள் மூலம் உண்மையான பயனாளிகளை தேர்வு செய்து அவர்களுக்கு உரிய பயன்களை பெற்று தருவதும் கடமையாகும்.
அரசின் செயல்பாடுகள் ஒருபுறம் இருக்க நான் எனது சொந்த பணத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைத்து தந்திருக்கிறேன். 54 மாற்று திறனாளி பயனாளிகளுக்கு உதவி செய்திருக்கிறேன். 18 மாற்று திறனாளிகளுக்கு 3 சக்கர நகரும் வண்டிகளுக்கு ஏற்பாடு செய்து தந்திருக்கிறேன்.
தமிழக அரசு எல்லா வகையிலும் மக்களுக்கு சென்றடைய கூடிய திட்டங்களை செய்து வரு கிறது. ஆனால் மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான திட்டங்களை செய்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் பாண்டிச் செல்வி மிசா பாண்டி, வக்கீல் பொன்வசந்த், மேலமாசிவீதி சரவணன், ராஜேந்திரன், ஐ.டி.விங் சதாம் உசேன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- டீக்கடைகளில் புகை பிடிப்பவர்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
- இனிமேலாவது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுமா?
மதுரை
பொது இடங்களில் புகைபிடிக்க கூடாது என்று சட்டம் உள்ளது. ஆனால் அது வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது. இது தொடர்பாக எந்த விழிப்புணர்வு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக மதுரையில் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முக்கியமாக டீக்கடை களில் புகைப்பிடிப்பவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு ஹாயாக நின்று புகையை ஊதி தள்ளுகின்றனர். இதனால் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் உள்பட பலரும் பாதிக்கப்படுகின்றனர். இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீ சார் கண்டும் காணாமல் இருக்கின்றனர். பஸ் மற்றும் ரெயில்களிலும் ரகசியமாக சிலர் புகை பிடிக்கிறார்கள்.
புகை பழக்கத்தால் புற்று நோய் வரும் என்பது அனை வருக்கும் தெரிந்ததே. அந்தப் புகையை சுவாசித்தால் மற்றவர்களுக்கும் புற்றுநோய் வரும் என்பது விஞ்ஞான பூர்வமாக கண்டறியப்பட்ட உண்மை.
பொது இடத்தில் புகை பிடிப்பதால் அந்தப் பழக்கம் இல்லாதவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டு பொது இடத்தில் புகை பிடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
இது தொடர்பாக பொது மக்கள் மத்தியில் விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இனி மேலாவது பொது இடத்தில் புகை பிடிப்பதை தடுக்க இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுமா?
- மதுரை அருகே சிறுமியை கர்ப்பமாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
- இது தொடர்பாக மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை
பழங்காநத்தம் நேரு நகர் முருகன் மகன் கார்த்தீசுவரன் (23). இவர் அதே பகுதியில் வசிக்கும் சிறுமியை திருமணம் செய்துள்ளார். அவர் சிறுமி என்பது தெரிந்தும் கட்டாயமாக வல்லுறவு செய்தார்.
இதன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பமடை ந்தார். அவருக்கு மதுரை ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தீசுவரனை கைது செய்தனர்.
- நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைத்தனர்.
- மாணவ, மாணவிகள் 98.60 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளி யாகின. இதில் மதுரை தெற்கு வாசல் நாடார் வித்தி யாபிவிருத்தி சங்கத்துக்கு பாத்தியப்பட்ட நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்துள்ளனர். அதன்படி பள்ளியில் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் 98.60 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் வேதியியல், கணினி அறிவியல், வணிக வியல் பாடங்களிலும் மாணவ, மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப் பெண்கள் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.
பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாண வர்களையும், அவர்களை ஊக்குவித்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் அலுவலக பணி யாளர்கள் ஆகியோருக்கு மதுரை தெற்குவாசல் நாடார் வித்தியாபிவிருத்தி சங்கம் (உறவின்முறை) துணை செயலாளர் அருஞ்சுணை ராஜன், நாடார் மேல் நிலைப்பள்ளி தலைவர் பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள் வாழத்து தெரிவித்து உள்ளனர்.
- மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி இறந்தார்.
- அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மதுரை
சிம்மக்கல் முத்து இருளப்பன் சந்தை சேர்ந்தவர் அருண் பாண்டி (27), கட்டிட தொழிலாளி. யாகப்பா நகர் பாண்டியன் தெருவில் உள்ள சங்கரன் (56) என்பவரது வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அருண்பாண்டியை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வழியிலேயே அருண்பாண்டி பரிதாபமாக இறந்தார். அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.
- மேற்கண்ட தகவலை மதுரை அரசரடி மின்பகிர்மான செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை அரசரடி துணைமின் நிலையம் பொன்னகரம் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (9-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஏ.ஏ. மெயின்ரோடு, மேலபொன்னகரம் 2 முதல் 8-வது தெரு வரை, ஆர்.வி.நகர் 1 முதல் 4 தெருக்கள், ஞானஒளிவுபுரம், விசுவாசபுரி 1-5 தெருக்கள், ஆரப்பாளையம் பஸ் நிலையம், ஆரப்பாளையம் அதை சுற்றியுள்ள பகுதிகள், இ.எஸ்.ஐ.மருத்துவமனை, கைலாசபுரம், அசோக் நகர், அருள்தாஸ்புரம், களத்து பொட்டல், பெரியசாமிகோனார் தெரு, தத்தனேரி மெயின் ரோடு முதல் தத்தனேரி மயானம் வரை, பாரதிநகர், கணேசபுரம், பாக்கியநாதபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மேற்கண்ட தகவலை மதுரை அரசரடி மின்பகிர்மான செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.
- 42 பவுன் நகை திருடிய 2 பேர் கைது
- ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரையில் சித்திரை திருவிழா நடந்தது. இதனை பார்ப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆண்கள், பெண்கள் வந்திருந்தனர்.
இந்த நிலையில் வழிப்பறி கும்பல் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபடலாம் என்று கருதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் 9 பெண்களிடம் 42 பவுன் நகைகள் திருடுபோனது.
மதுரை எஸ்.ஆலங்குளம், கமலேசுவரன் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி அங்கம்மாள் (60). இவர் சித்திரை திருவிழா பார்ப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு பங்களா அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் அவரிடம் இருந்து 4 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பியது.
தல்லாகுளம் இந்திரா நகரை சேர்ந்த சேகர் மனைவி சங்கரேசுவரி (62). இவர் ரேஸ்கோர்ஸ் சாலை நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்தார். அவரிடம் 7 பவுன் நகை பறிக்கப்பட்டது.
புதூர் மண்மலை மேடை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவர் கலெக்டர் பங்களா அருகே நின்று கொண்டி ருந்தார். அடையாளம் தெரியாத மர்மகும்பல் அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து தப்பியது.
மதுரை ஜவகர்புரம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த பஞ்சவர்ணம் மனைவி சுந்தரி (60). இவர் டி.ஆர்.ஓ. காலனியில் நின்று கொண்டி ருந்தார். அவரிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்டது. சென்னை பனப்பாக்கம், நாராயணன் மனைவி சீதம்மாள்(74). இவர் சித்திரை திருவிழா பார்ப்பதற்காக, தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வந்தார். அவரிடம் மர்மகும்பல் 4 பவுன் நகைைய பறித்து தப்பியது.
ஆத்திகுளம் கனகவேல் நகர் ராமலிங்கம் மனைவி சண்முகவடிவு. இவர் தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வந்தார். அவரிடமும் மர்ம கும்பல், 5 பவுன் நகையை பறித்து தப்பியது. ஆனையூர் செந்தூர் நகர் சோனைமுத்து மனைவி நாகம்மாள்(70). இவர் தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வந்திருந்தபோது 3 பேர் 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.
மதுரை வசந்தநகர் கல்யாணசுந்தரம் மனைவி ராமதிலகம் (53). இவரிடம் மர்ம கும்பல் 9 பவுன் நகையை பறித்து தப்பியது. மதுரை அருகே உள்ள திருமால்புரம் இந்திரா நகர் இதயதுல்லா மனைவி ராஜாத்தி (64). இவர் சித்திரை திருவிழா பார்ப்பதற்காக, தமுக்கம் பஸ் நிறுத்தம் வந்தார். அவரிடம் 2 பவுன் நகை பறிக்கப்பட்டது.
இவ்வாறு மதுரை மாநகரில் 9 பெண்களிடம் 42 பவுன் நகைகள் பறிக்கப்பட்டன. இதில்ெ ெதாடர்புடைய குற்றவாளிகளை பிடிக்கும் வகையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் இது குறித்து விசாரணை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக அந்தந்த பகுதிகளில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இதில் குற்றவாளிள் பற்றிய விவரம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் குமுளிபேட்டை பாபு மனைவி வில்டா (62), மேற்குவங்காள மாநிலம் கல்கத்தா ராபின் நகரை சேர்ந்த ரவிபிரசாத் மனைவி லதா (39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பிக்பாக்கெட் அடித்தவர் கைது
தஞ்சாவூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் செந்தில் தேவன் (37). இவர் சித்திரை திருவிழா பார்ப்பதற்காக யானைக்கல் பாலம் பகுதியில் நின்று கொண்டி ருந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒரு வாலிபர் செந்தில்தேவனிடம் செல்போன், பவர் பேங்க், ப்ளூடூத் ஆகியவற்றை அபேஸ் செய்து தப்ப முயன்றார். செந்தில் தேவன் கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து விளக்குத்தாண் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் செல்லூர் மேலதோப்பை சேர்ந்த 18 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை சுண்ணாம்பு காளவாசலை சேர்ந்தவர் பால்பாண்டி (43). இவர் எம்.கே.புரம் பகுதியில் நடந்து சென்றார். சத்துணவு கூடம் ரோட்டில் 3 பேர் கும்பல் பால்பாண்டியை வழிமறித்து கத்தி முனையில் ரூ.10 ஆயிரத்தை பறித்து தப்பியது. இது குறித்த புகாரின்பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு சாமரம் வீசி தாத்தா சிவத்தொண்டாற்றி வருகிறார்.
- அவர் மயில் தோகை விசிறியால் சாமரம் வீசி பக்தர்களின் மனதையும், உடலையும் குளிர வைப்பார்.
மதுரை
'அடியாருக்கு அடியேன்' என்பது சுந்தரமூர்த்தி நாயனாரின் வாக்கு. இதற்கு மதுரை விசிறி தாத்தா என அழைக்கப்படும் நடராஜன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார். இவருக்கு 93 வயதாகிறது.
மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு பக்தனாக சாமரம் வீசி, கடந்த 70 ஆண்டுகளாக நடராஜன் சிவத்தொண்டாற்றி வருகிறார்.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோடை வெயிலில் தவிக்கும்போது விசிறி தாத்தா அருகில் வருவார். அவர் மயில் தோகை விசிறியால் சாமரம் வீசி பக்தர்களின மனதையும், உடலையும் குளிர வைப்பார். அதற்காக இவர் சன்மானம் பெறுவதில்லை. ஒரு புன்னகையுடன் கடந்து சென்று விடுவார்.
அதிலும் சித்திரைத் திருவிழா வந்துவிட்டால் போதும், தாத்தாவை கையில் பிடிக்க முடியாது. திருவிழா நேரத்தில் வியர்க்க விறுவிறுக்க நிற்கும் பக்தர்கள் மீது விசிறி வீசி குளிர்வித்து ஆசீர்வாதம் செய்வார்.
பக்தர்களுக்கு சாமரம் வீசும் சேவையில், விசிறி தாத்தாவுக்கு முன்னோடி சுந்தரநாயனார். தேவாரம் பாடிய நாயன்மார்களில் ஒருவர். சுந்தர நாயனாரின் 7-ம் திருமுறை, 39-வது பதிகத்தில் திருத்தொண்டத் தொகை என்ற அத்தியாயம் உண்டு. அதில் 'தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்' என்ற குறிப்பு உள்ளது.
அதாவது ஒருவர் தான் செய்யும் தொழில் வாயி லாகவும் இறையடியார்க்கு தொண்டு செய்யலாம். காஞ்சிபுரத்தில் பிறந்த திருக்குறிப்புத் தொண்ட நாயனார், சிவனடியார் துணிகளை இன்முகத்தோடு சலவை செய்து அளிப்பதையே தொண்டாக எண்ணி, அதில் இன்பம் கண்டார். அடியார்க ளின் ஆடையில் உள்ள மாசு நீக்குவதால், தன் பிறப்பின் மாசு நீங்கும், அதுவே தெய்வப்பணி' என்பது அவரின் நம்பிக்கையாக இருந்தது. சிவனடியார் குறிப்பறிந்து தொண்டு செய்த திருக்குறிப்பு நாயனாரை போல், விசிறி தாத்தா இறை சேவையில் ஈடுபட்டு வருகிறார்.
மதுரை வாசிகளால் நடராஜன் விசிறி தாத்தா என்று அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். அவரிடம் பேசிய போது, "நான் கடந்த 1941-ம் ஆண்டு முதல் விசிறி சேவை செய்து வருகிறேன். எனக்கு இப்போது 93 வயது ஆகிறது. இந்த மண்ணுக்கு என் உடல் போகும்வரை, விசிறி சேவையை விடாமல் செய்வேன். அனைத்து பக்தர்களும் சீரும் சிறப்புமாக இருக்க வேண்டும். அதற்காக தான் பகவான் மட்டுமின்றி என் மக்க ளுக்கும் சேவை செய்து வருகிறேன். நான் தமிழ கத்தில் கிட்டத்தட்ட அனைத்து கோவில்களுக்கும் போய் வந்து இருக்கிறேன். ஆனாலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலே எனக்கு தாய் வீடு. 93 வயதிலும் எதிர்பார்ப்பு இல்லாமல் தெய்வ செயலாக நினைத்து, பக்தர்களுக்கு சாமரம் வீசும் சேவை செய்து வருகிறேன். அடியார்க்கு அடியாராய் சேவை செய்ய கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்கிறார்.
'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்று அடியார்க்கு அடியாராய், இறைபணியில் ஈடுபட்டு வரும் நடராஜனுக்கு, வயது ஒரு பொருட்டே அல்ல!.
- மதுரை அருகே ரெயில் மோதி ஓட்டல் ஊழியர் பலியானார்.
- மதுரை ெரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் கற்பகம் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(51).ஓட்டல் ஊழியர். நேற்று மாலை இவர் திருமங்கலம்-விமான நிலைய ரோட்டில் உள்ள ரெயில்வே கேட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. இதில் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
அவரது உடலை ரெயில் என்ஜின் 20 மீட்டர் தூரத்திறகு இழுத்து சென்றது. மதுரை ெரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சித்திரா பவுர்ணமி திருவிழாவில் கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளினார்.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சோழவந்தான்
மதுைர மாவட்டம் சோழவந்தானி உள்ள பிரசித்தி பெற்ற ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் சித்திரா பவுர்ணமி திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. திருவிழாவை முன்னிட்டு ஜெனக நாராயண பெருமாள் ஒவ்வொரு ஆண்டும் சித்திரா பவுர்ணமி அன்று சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் அலங்காரத்தில் இறங்குவார்.
அதன்படி கடந்த 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. அன்று இரவு கருடாழ்வார் வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடந்தது. 2-ம் நாள் சோழவந்தான் இரட்டை அக்கிர காரத்தில் சந்தான கோபாலகிருஷ்ணன் கோவில் முன்பு உள்ள மண்டபடியில் விடிய விடிய தசாவதாரம் நடந்தது.
3-ம் நாள் (7-ந்தேதி) சோழவந்தான் முதலியார்கோட்டை கிராமத்து சார்பாக பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கள்ளழகர் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார். அப்போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.
- மதுரை திருமங்கலத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
- பார்வை இழப்பு தடுப்பு சங்கம், தனியார் கண் மருத்துவமனை இணைந்து இந்த முகாமை நடத்தியது.
திருமங்கலம்
திருமங்கலத்தில் பெருந்தலைவர் காமராஜர் நினைவாக மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் தனியார் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. நகர்மன்றத் தலைவர் ரம்யா முத்துக்குமார் தொடங்கி வைத்தார். தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார்.
இதற்கான ஏற்பாட்டை 23-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் அமுதா சரவணன் செய்திருந்தார். நகர தலைவர் சவுந்தரபாண்டியன் முன்னிலை வைத்தார். இதில் கண்புரை, சர்க்கரை நோய், கண்ணீர் அழுத்த நோய், குழந்தைகளின் கண் நோய், கிட்ட பார்வை, தூரப்பார்வை, வெள்ளை எழுத்து பார்வை உள்ளவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. நகர செயலாளர் பால்பாண்டி, நிர்வாகிகள் செல்லப்பாண்டி, துரை சண்முகம், முன்னாள் கவுன்சிலர் பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






