என் மலர்
மதுரை
- திருப்பரங்குன்றத்தில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- இந்த நிகழ்ச்சி 16 கால் மண்டபம் பகுதியில் நடந்தது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. 16 கால் மண்டபம் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு இளைஞரணி துணை அமைப்பாளர் விமல் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் ஆறுமுகம், ஜெயராமன், பெருங்குடி வசந்த் முன்னிலை வகித்தனர். மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல், பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினர். பகுதி துணை செயலாளர் ரமேஷ் வரவேற்றார். கவுன்சிலர்கள் சிவசக்தி ரமேஷ், கருப்பசாமி, வக்கீல் ஸ்ரீதர், தனுஷ்கோடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மின்தடை ஏற்படுகிறது.
- இந்த தகவலை செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை மாட்டுத்தாவணி துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (12ந்தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
எனவே மேற்குறிப்பிட்ட நேரத்தில் மாட்டுத்தாவணி நெல் வணிக வளாகம் பூ மார்க்கெட், பஸ் நிலையம், டி.டி.சி. நகர், லேக் ஏரியா பகுதி, சம்பக்குளம், 120 அடி ரோடு, கொடிக்குளம், சர்வேயர் காலனி, விவேகானந்தா நகர், ஆனந்தராஜ் நகர், மகாத்மா பள்ளி பகுதிகள், டென்னிஸ் கார்னர், வைரம் அபார்ட்மெண்ட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோ கம் இருக்காது.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொ றியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
இதேபோல ஆரப்பாளை யம் துணைமின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்ப தால் நாளை (12ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படு கிறது.
எனவே மேற்கண்ட நேரத்தில் சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, மணிநகர் மெயின் 1-வது, 2-வது தெரு, ஒர்க்ஷாப் ரோடு, பேச்சி யம்மன் படித்துறை, வெங்கடசாமி நாயுடு அக்ரகாரம், தமிழ்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் பிள்ளை அக்ரகாரம், திலகர் திடல் சந்து ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.
மேலும் கோவில் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட தொட்டியன்கிணற்று சந்து, கீழபட்டமார் தெரு, மேல பட்டமார் தெரு, வடக்கு ஆவணி மூல வீதி, தெற்கு ஆவணி மூலவீதி, ஜடாமுனி கோவில் தெரு, மீனாட்சி கோவில் தெரு, சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி, வெள்ளியம்பலம் தெரு ஆகிய இடங்களிலும்,
அனுப்பானடி துைண மின் நிலையத்துக்கு உட்பட்ட தாய் நகர், கங்கா நகர், ராஜமான் நகர், நேரு நகர், மல்லிகை நகர், மாருதி நகர், சோனையார் தெரு, சரவணா நகர், ஜே.ஜே.நகர், அம்மன் தெரு, சிந்தாமணி குறுக்கு ரோடு, கம்மாக்கரை ஆகிய இடங்களிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
- சிறுபான்மை மாணவ-மாணவிகளுக்கு ரூ.30 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும்.
- இந்த தகவலை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
மதுரை
தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுயஉதவி குழுக்க ளுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்க ளுக்கு கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
திட்டம்-1ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புற மாயிருப்பின் ரூ.98 ஆயிரத்துக்கும் மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம்-2ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் மிகாமல் இருத்தல் வேண்டும்.
திட்டம்-1ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சமும், திட்டம் 2-ன்கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.30 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
கைவினை கலைஞர்க ளுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. சுயஉத விக்குழு கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் வழங்கப்படு கிறது.
திட்டம் 2-ன்கீழ் ஆண்களுக்கு 8சதவீதமும், பெண்களுக்கு 6சதவீதம் வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 50ஆயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும் சிறுபான்மையின மாணவ- மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20 லட்சம் வரையில் 3 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம்-2ன் கீழ் மாணவர்களுக்கு 8சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்தி லும் ரூ.30 லட்சம் வரையி லும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.
எனவே மதுரை மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய மதங்களை சேர்ந்த சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானச்சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச்சான்றிதழ், கல்விக்கட்டணங்கள் செலுத்திய ரசீது, ெசலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்க ளின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்ப ட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அனைத்து சிறுபான்மையினர் இனத்தைச்சார்ந்த மக்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த தகவலை கலெக்டர் அனீஷ்சேகர் தெரி வித்துள்ளார்.
- வன அதிகாரியை தாக்கினர்.
- புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரியபுத்திரனை கைது செய்தனர்.
மதுரை
மதுரை புதூர் கற்பகம் நகரை சேர்ந்தவர் வெற்றிவேல்(வயது65), ஓய்வு பெற்ற வன அதிகாரி. சம்பவத்தன்று இவரது வீட்டு வாசல் முன்பு கே.கே.நகரை சேர்ந்த அரியபுத்திரன் என்பவர் தனது காரை நிறுத்தியிருந்தார். காரை வேறு பகுதியில் நிறுத்துமாறு வெற்றிவேல் கூறினார். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அரியபுத்திரன், வெற்றிவேலை தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரியபுத்திரனை கைது செய்தனர்.
மதுரை ஜீவா நகரை சேர்ந்தவர் ராஜா(வயது44). இவர் சம்பவத்தன்று பழங்காநத்தம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், ரூ.3 ஆயிரத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், வழிப்பறியில் ஈடுபட்டது ஜீவா நகரை சேர்ந்த விக்னேஷ்(24), பழங்காநத்தம் தினேஷ்குமார்(25), தினேஷ்வரன்(30), அஜய்குமார்(19) என தெரியவந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- சமயநல்லூர் அருகே வாகனம் மோதி பலியானவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலையோரம் நடந்து சென்றபோது விபத்தில் சிக்கினாரா? என்று பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே பரவை மில் காலனி முன்பு 2 நாட்களுக்கு முன் அங்குள்ள தடுப்பு சுவரில் சாலையோரம் மண் அள்ளிக் கொண்டு இருந்த டிராக்டர் மற்றும் தொழிலாளர்கள் கூட்டத்தில் தனியார் பஸ் புகுந்தது. இந்த விபத்தில் சிக்கிய ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் படுகாயமடைந்த 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதில் 2 பேர் அடையாளம் தெரியவந்தது. ஆனால் ஒருவர் மட்டும் யார்? என்று தெரியவில்லை. இது தொடர்பாக சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் அங்கு எப்படி வந்தார்? மண் அள்ள வந்த கூலி தொழிலாளியா? எப்படி அவர் இறந்தார்? சாலையோரம் நடந்து சென்ற போது விபத்தில் சிக்கினாரா? என்று பல கோணங்களில் சமயநல்லூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- உசிலம்பட்டியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.
- கஞ்சா மற்றும் போதை பொருள் வியாபாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்ட காவல்துறை சார்பாக உசிலம்பட்டி மதுரை ரோட்டில் தனியார் மகாலில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் மற்றும் உசிலம்பட்டி டி.எஸ்.பி. நல்லு ஆகியோர் தலைமையில் உசிலம்பட்டி பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யும் மற்றும் கஞ்சா தொழில் செய்யும் கஞ்சா வியாபாரிகளுக்கு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.
போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப்பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்.
போதைப்பொருட்களின் உற்பத்தி, நடவடிக்கைகளின் மூலம் நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு போதைப்பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் எனவும், கஞ்சா மற்றும் போதை பொருள் வியாபாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இதில் உசிலம்பட்டி போலீசார் கலந்து கொண்டனர்.
- காலை உணவு திட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
- இவர்களுக்கான பயிற்சி கள்ளிக்குடி வட்டார மேலாண்மை அலுவலகத்தில் நடந்தது.
திருமங்கலம்
மதுரை மாவட்டத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் உணவு சமைக்கும் பணியை மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அதன் அடிப்படையில் ஒரு பள்ளிக்கு 3 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இவர்களுக்கான பயிற்சி கள்ளிக்குடி வட்டார மேலாண்மை அலுவலகத்தில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் தர்மராஜ், வடிவேலு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் மேலாளர் வெற்றி விநாயகம், ஒருங்கிணைப்பாளர்கள் வசந்தமீனா, பஞ்சவர்ணம், அழகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் சென்னை அணி வென்றது.
- வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மதுரை
மதுரை ரேஸ் கோர்ஸ் ஸ்டேடியத்தில் மாவட்ட டேபிள் டென்னிஸ் மேம்பாட்டு சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான 4 நாள் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. இதனை தேசிய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு முன்னாள் துணைத் தலைவர் டி.வி.சுந்தர் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் முதல் முறையாக 22 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. இதில் சென்னை ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்க செயலாளர் வித்யாசாகர், மதுரை மாவட்ட டேபிள் டென்னிஸ் வளர்ச்சி சங்க செயலாளர் நாகராஜன் கணேசன், விளையாட்டு இயக்குனர் நாகராஜன், கௌரவ உறுப்பினர் பிரகதீஷ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- விண்ணப்பதாரர்கள் அவர்களது குடும்பத்தினர் கோவிலுக்கு எதிராக புகாரோ, வழக்கோ பதிந்து இருக்கக் கூடாது.
- காலி பணியிடங்களுக்கு 80 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மதுரை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி கோவிலில் 281 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை அறங்காவலர் குழு கடந்த மார்ச் மாதம் வெளியிட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களில் ஆசிரியர்கள், நூலகர் அலுவலக உதவியாளர், சமையலர், கணினி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர்கள், நாதஸ்வர வித்துவான், தவில் வித்வான், தாள கருவி இசைப்பவர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 281 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பாணையில் அரசு உள் இட ஒதுக்கீடு அறிவிப்பு இல்லை. மேலும் இந்த அறிவிப்பில் பல்வேறு விதிமீறல்கள் உள்ளன. எனவே இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து பொது அறிவிப்பாணையை உரிய விதிமுறைகளை பின்பற்றி புதிய அறிவிப்பாணை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. முடிவில் இந்த வழக்கு பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மனுதாரர் வேலை கேட்டு விண்ணப்பிக்கவில்லை. இந்த அறிவிப்பினால் பாதிக்கப்படவும் இல்லை. ஆகையால் இந்த அறிவிப்பாணைக்கு தடை விதிக்க முடியாது.
அதே நேரத்தில் விண்ணப்பதாரர்கள் அவர்களது குடும்பத்தினர் கோவிலுக்கு எதிராக புகாரோ, வழக்கோ பதிந்து இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என்ற நிபந்தனை என்பது அடிப்படை உரிமை மீறலாகும்.
இந்த நிபந்தனையை அறநிலையத்துறை கமிஷனர் நீக்கி உத்தரவிட வேண்டும். மேலும் இந்த காலி பணியிடங்களுக்கு 80 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே பணி நியமனங்களில் வெளிப்படை தன்மை வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
- மதுரையில் ரேசன் பொருட்கள் ஏற்றி வந்த லாரிகள் சகதியில் சிக்கி தவித்தன.
- ரேசன் கடைகளுக்கு பொருட்கள் சப்ளை செய்வதில் பிரச்சினை ஏற்பட்டது.
மதுரை
மதுரை மாவட்டத்தில் 1200-க்கும் மேற்பட்ட ரேசன் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணை, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்கள் சுந்தரராஜபுரம் பகுதியில் உள்ள குடோனுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
பின்பு அங்கிருந்து மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளுக்கு லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. அதேபோல் ரேசன் பொருட்கள் இந்த குடோனுக்கு கொண்டு வரப்படுகின்றன.
மதுரையில் தொடர்ந்து 10நாட்களுக்கு மேலாக மழை பெய்ததன் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகள் ேசதமடைந்து கிடக்கிறது. சுந்தரராஜபுரம் குடோன் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக மாறி சகதிக்காடாக இருக்கிறது.
இதனால் குடோனில் இருந்து ரேசன் பொருட்களை எடுத்துச் சென்ற லாரிகள் சகதியில் சிக்கின. அதிலிருந்து லாரிகளை வெளியே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த குடோனில் இருந்து தினமும் 20லாரிகளில் 300-க்கும் மேற்பட்ட ரேசன் கடைகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்லப்படுகிறது.
சகதியில் லாரிகள் சிக்கி தவித்ததால் ரேசன் கடைகளுக்கு பொருட்கள் சப்ளை செய்வதில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து சகதியில் சிக்கிய லாரிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- மதுரையில் மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் ரூ23.83 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
- மேற்கண்ட தகவலை மதுரை மண்டல மின்வாரிய அமலாக்க பிரிவு செயற் பொறியாளர் பிரபாகரன் தெரிவித்தார்.
மதுரை
மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, துாத்துக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மின்வாரிய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் துாத்துக்குடி மின்பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட ஒட்டநத்தம், ஒட்டப்பிடாரம், கங்கை கொண்டான், தாழையூத்து, வெள்ளாரம், கவர்னகிரி, பாஞ்சாலங்குறிச்சி, துாத்துக்குடி, புதியம்புதூர், முப்புலிவெட்டி, அய்யன் பொம்மையபுரம், விளாத்தி குளம் மற்றும் இருவேலி ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது 17 இடங்களில் மின்சாரம் திருடியது கண்டறியப்பட்டது. இதற்காக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ.22 லட்சத்து 18 ஆயிரத்து 576 அபராதம் விதிக்கப்பட்டது. இது தவிர மின் திருட்டில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டவர்களிடம் ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் அபராதம் பெறப்பட்டது.
மதுரை கோட்டத்தில் மின் திருட்டில் ஈடுபட்ட வர்களிடம் ஒட்டு மொத்தமாக ரூ.23லட்சத்து 83ஆயிரத்து 576 அபராதம் பெறப்பட்டது. மதுரை கோட்டத்தில் மின்திருட்டு தொடர்பாக ஏதேனும் தகவல் இருந்தால் மதுரை கோட்ட மின்வாரிய அமலாக்க பிரிவு செயல் பொறியாளர் தொலைபேசி எண் 94430 37508-ல் தகவல் தெரிவிக்கலாம் என்று மதுரை மண்டல மின்வாரிய அமலாக்க பிரிவு செயற் பொறியாளர் பிரபாகரன் தெரிவித்தார்.
- திருமங்கலம் அருகே ஓய்வு பெற்ற துணை தாசில்தார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இது தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் சிவகு மார்(வயது60). துணை தாசில்தாராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மாலா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிவகுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை பிரிந்து தனியாக சென்றுவிட்டார். அவரது மகன் தாயுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகுமார் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள தனது பூர்விக வீட்டிற்கு சென்றார். அங்கு மனம் உடைந்த நிலையில் இருந்து வந்த அவர், நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றிய புகாரின்பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்பு சிவகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிவகுமார் தற்கொலைக்கு என்ன காரணம்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.






