சமயநல்லூர் அருகே வாகனம் மோதி பலியானவர் யார்?

சமயநல்லூர் அருகே வாகனம் மோதி பலியானவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையோரம் நடந்து சென்றபோது விபத்தில் சிக்கினாரா? என்று பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சமயநல்லூர் அருகே வாகனம் மோதி பலியானவர் யார்?
Published on

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே பரவை மில் காலனி முன்பு 2 நாட்களுக்கு முன் அங்குள்ள தடுப்பு சுவரில் சாலையோரம் மண் அள்ளிக் கொண்டு இருந்த டிராக்டர் மற்றும் தொழிலாளர்கள் கூட்டத்தில் தனியார் பஸ் புகுந்தது. இந்த விபத்தில் சிக்கிய ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் படுகாயமடைந்த 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதில் 2 பேர் அடையாளம் தெரியவந்தது. ஆனால் ஒருவர் மட்டும் யார்? என்று தெரியவில்லை. இது தொடர்பாக சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் அங்கு எப்படி வந்தார்? மண் அள்ள வந்த கூலி தொழிலாளியா? எப்படி அவர் இறந்தார்? சாலையோரம் நடந்து சென்ற போது விபத்தில் சிக்கினாரா? என்று பல கோணங்களில் சமயநல்லூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com