என் மலர்
மதுரை
- திருப்பரங்குன்றம் கோவிலில் தங்கத்தேர் இழுத்து ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. வழிபாடு செய்தார்.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பூச்செண்டு கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும் திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து கொண்டு சென்ற பிரசாதங்களை வழங்கினார். அவருடன் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன், இளைஞரணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், விக்டர் ஆகியோரும் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு தொகுதி, மேலூர் உள்ளிட்ட இடங்களில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- காமராஜர் அறநிலையம் சார்பில் மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
- நாடார் உறவின்முறை உறுப்பினர் மக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.
மதுரை
பாரதப்பெருந்தலைவர் காமராஜர் அறநிலையத்தின் சார்பில் மதுரை நாடார் உறவின்முறை உறுப்பினர் மக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இந்த திருமண திட்டத்தின் கீழ் உறவின் முறை உறுப்பினர் எம்.நாகராஜன்- பஞ்சவர்ணம் மகள் என்.கார்த்திகா ராணிக்கும், மதுரை ஆர்.தர்மராஜ்- முத்துமாரி ஆகியோரது மகன் டி.ஜீவானந்தனுக்கும் திருமணம் மதுரை நாடார் உறவின் முறை என்.சுப்புராஜ நாடார் கிருஷ்ணம்மாள் மன்றத்தில் நடந்தது. பாரதப்பெருந்தலைவர் காமராஜர் அறநிலைய பொதுச்செயலாளர் கே.பி.எம்.எம்.காசிமணி வரவேற்றார். அறநிலைய தலைவர் ஜெமினி எஸ்.பால் பாண்டியன் தலைமை தாங்கினார். அறநிலைய பொதுச்செயலாளர் டி.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
மதுரை நாடார் உறவின் முறை பொதுச்செயலாளர் எஸ்.கே.மோகன் திரும ணத்தை நடத்தி வைத்தார்.
மதுரை நாடார் உறவின் முறை தலைவர் அனிதா ஆர்.சிவானந்தன், துணைத்தலைவர் ஆர்.முத்தரசு, பொதுச் செயலாளர் வி.பி.மணி, காமராஜர் அறநிலைய துணைத்தலைவர் எம்.எஸ்.சோமசுந்தரம், ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி தலைவர் பி.தர்மராஜ், துணை செயலாளர் சி.பாஸ்கரன், துணைத் தலைவர் செந்தில்குமார், விடுதிக்குழு செயலாளர் பி.குமார், ஜெயராஜ் அன்ன பாக்கியம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி தலை வர் ஆர்.கணேசன், துணைத் தலைவர் எஸ்.பழனிக்குமார், செயலாளர் கே.ஆனந்த், இணைச் செயலாளர் ஒய்.சூசை அந்தோணி ஆகியோர் பேசினர். மணமக்களுக்கு சேலை, மாலை, கட்டில், பீரோ உள்பட சீர்வரிசைகள் காமராஜர் அறநிலையத்தில் இருந்து இலவசமாக வழங்கப்பட்டன.
- இளம்பெண்-வாலிபர் தற்கொலை செய்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மதுரை
இஸ்மாயில்புரம் 6-வது தெருவை சேர்ந்த செந்தில்குமார் மனைவி மகேஸ்வரி (28). இவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்தவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கோச்சடை கலை சம்பளக்காரர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (46). இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- பதவி உயர்வு கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடரும் என்று அரசு டாக்டர்கள் கூறினர்.
- கோரிக்கையை நிறைவேற்ற வில்லை யென்றால் அடுத்து நடத்தும் போராட்டம் நோயாளிகளை பாதிக்கும்.
மதுரை
மதுரையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தை சேர்ந்த மருத்துவர்கள் செந்தில், இளமாறன், குமரதேவன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டிய ளித்தனர். அவர்கள் கூறிய தாவது:-
தமிழக அரசு கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ந்தேதி அரசு மருத்துவர்க ளுக்கான பதவி உயர்வு தொடர்பான அர சாணை 293-ஐ அமல் படுத்துவோம் என்று தெரிவித்தது. ஆனால் இன்று வரை இந்த கோரிக் கைக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்ப்பு தெரி விப்பவர்கள் நீதிமன்றம் வரை சென்று இந்த அரசா ணைக்கு தடை விதிக்க உத்தரவு பெற இருப்பதா கவும் கூறினர்.
இந்த அரசாணையை பலமுறை நிறைவேற்ற எங்களது சங்க நிர்வாகி களிடம் அமைச்சர் பேசியும் இன்னும் நிறைவேற்றாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. எனவே முதல்- அமைச்சர் இதில் தலையிட்டு 16 ஆயிரம் மருத்துவர்கள் பயன்பெறக்கூடிய இந்த ஆணையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
தமிழக முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக ளில் காலியாக உள்ள 450 பேராசிரியர் பணியிடங்க ளையும், 550 இணை பேரா சிரியர்கள் பணியிடங்க ளையும் உடனடியாக நிரப்ப வேண்டும். இல்லையென் றால் வரும் காலங்களில் அரசு கல்லூரிகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்.
மேலும் வருகிற 14-ந் தேதி நடைபெறும் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் மே 29-ந்தேதி முதல் நடத்தவுள்ள போராட்டங்கள் குறித்து முடிவு செய்யப்படும். இதுவரை நாங்கள் நடத்திய போராட்டங்கள் அமைச்சரின் வாக்குறுதியை கேட்டு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த நிலையில் கால தாமதப்படுத்தாமல் உடனடி யாக எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வில்லை யென்றால் அடுத்து நடத்தும் போராட்டம் நோயாளிகளை பாதிக்கும் அளவில் இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கூறினார்.
- வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மதுரை
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா மேட்டுப்பட்டியை சேர்ந்த லட்சுமணகுமார் மதுரை ஐகோர்ட்டில தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். இளங்கலைப் பட்டப் படிப்பை முடித்துள்ளேன். 21.7.2022 அன்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கு 92 காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது.
முதல்நிலை தேர்வு கடந்த 19.11.2022 அன்று நடந்தது. இந்த சூழ்நிலையில் முதல்நிலை தேர்வு முடிந்து 10 நாட்களுக்கு பிறகு 28.11.2022 அன்று உத்தேச வினா விடை வெளி யிடப்பட்டது. அதில் தவறு கள் இருந்தால் இது குறித்து 7 நாட்களில்க்குடி.என்.பி.எஸ்.சி. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து நான் 5.12.2023 அன்று நான் 19 கேள்விகளின் விடை தவ றாக குறிப்பிடப்பட்டு உள்ளது என்று ஆதாரத்து டன் விண்ணப்பித்தேன். உத்தேச வினா-விடை குறித்து என்னுடைய ஆட்சே பனை குறித்து வல்லுநர் குழு எந்த பதிலும் வழங்க வில்லை.
இந்த நிலையில் 28.04.2023 அன்று முதல்நிலை தேர்வு முடிவு கள் டி.என்.பி.எஸ்.சி.யால் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுடைய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். நான் தேர்வு செய்யப்படவில்லை. குரூப்-1 மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கோரப்பட்டனர்.
எனவே உத்தேச வினாவிடை குறித்து என்னுடைய ஆட்சேபனை குறித்து வல்லுநர் குழு எந்த பதிலும் வழங்காமல் முதல் நிலை தேர்வுகள் முடிவு வெளியிடப்பட்டு உள்ள தால் என் போன்றோர் முதன்மை தேர்வுக்கு தகுதிபெற வில்லை. இது போல் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே உத்தேச வினா-விடை குறித்து என் போன்றோரின் ஆட்சே பனை குறித்து வல்லுநர் குழுவின் இறுதி வினா விடை பட்டியல் வெளியிட வேண்டும், அதன் பிறகு குரூப்-1 முதன்நிலை தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்.
92 பணியிடங்களுக்கு நடந்த குரூப்-1 முதன் நிலை தேர்வின் முடிவுகள் 28.4.2023 அன்று வெளி யிடப்பட்டது. இந்த முடிவு களுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
தேர்வில் கேட்கப்பட்ட வினாவிற்கான விடைகளை இறுதி செய்யும் வல்லுநர் குழுவை, டி.என்.பி.எஸ்.சி. நியமிக்காமல் உயர்கல்வி துறை நியமிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வழக்கு குறித்து டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
- மதுரை விமான நிலையம் சர்வதேச அங்கீகாரம் பெறுவதில் தாமதம் ஏன்? என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பப்பட்டது.
- இந்திய விமான நிலைய ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
மதுரை
தென் மாவட்டங்களில் முக்கிய விமான நிலையமாக திகழும் மதுரை விமான நிலையம் தென் மாவட்ட மக்களின் உள்நாட்டு சேவை மூலம் வான்வழி போக்குவரத்திற்கு பேருதவியாக விளங்கி வருகிறது. அதுமட்டுமின்றி சர்வதேச அங்கீகாரம் பெறாவிட்டாலும் துபாய், சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து செல்லலாம்.
மதுரை விமான நிலையம் அமைக்கப்பட்ட பின்னர் அமைக்கப்பட்ட கோயம்புத்தூர், திருச்சி விமான நிலையங்கள் சர்வதேச அங்கீகாரம் பெற்றநிலையில் மதுரை விமான நிலையம் தற்போது வரை சர்வதேச விமான நிலைய அங்கீகாரம் பெறவில்லை. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்பதே தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் மதுரை விமான நிலையம் விரிவாக்கம் நடைபெற உள்ளதாகவும், இந்தியாவில் 5 விமான நிலையங்கள் 24 மணி நேரம் செயல்பட உள்ளதாகவும், மத்திய அரசு ஒரு அறிவிப்பினை வெளியிட்டது. அதில் மதுரை விமான நிலையம் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேரமும் செயல்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது வரை மதுரை விமான நிலையம் 24 மணி நேரம் செயல்படவில்லை.
இது தொடர்பாக பாஸ்கரன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு இந்திய விமான நிலையம் ஆணையம் பதில் அளித்துள்ளது.
அதில், மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக 2 நீர்நிலை நிலப்பரப்பு தமிழக அரசாங்கத்திடம் நிலுவை யில் உள்ளது. நிலத்தை ஒப்படைத்த பின்னரே விமான ஓடுதள விரிவாக்கப் பணிகள் நடைபெறும்.
மதுரை விமான நிலைய கட்டுப்பாட்டு மைய விரிவாக்க பணிகள் இன்னும் வகுக்கப்படும் நிலையிலேயே உள்ளது. மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவைக்கான திட்டம் தற்போது வரை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. 24 மணி நேரம் மதுரை விமான நிலையம் செயல்படுவதற்காக புதிய விமானங்கள் இயக்கப் பட வேண்டி உள்ளது. இதற்காக விமான சேவை நிறுவனங்க ளுடன் அறிக்கை பெறப் பட்டுள்ளது. மதுரை விமான நிலை யத்தை தரம் உயர்த்தி சர்வதேச விமான நிலையமாக மாற்றுவது மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. கடந்த 2022 முதல் 2023 வரை மதுரை விமான 11லட்சத்து 38ஆயிரத்து 928 பயணிகள் பயணித்துள்ள னர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் மதுபான பாட்டில்களை சிலர் சட்டவிரோமாக பதுக்கிவைத்து விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது மதுபானம் பதுக்கி விற்ற சிலர் போலீசாரிடம் சிக்கினர்.
போலீசாரின் இந்த அதிரடி சோதனையின் போது பேரையூரை சேர்ந்த கண்ணன்(வயது42) என்பவரிடம் இருந்து 72 மதுபாட்டில்கள், ரூ.600, டி.குன்னத்தூர் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி(63) என்பவரிடம் இருந்து 36 மதுபாட்டில்கள் ரூ.1270, டி.கல்லுப்பட்டியை சேர்ந்த மாரிமுத்து பாண்டியன்(48) என்பவரிடம் இருந்து 23 மதுபாட்டில்கள் ரூ.1,610 ரொக்கம், அதேபகுதியை சேர்ந்த காசிபாண்டி(31) என்பவரிடம் இருந்து 6 மதுபாட்டில்களையும் ரூ.300 பறிமுதல் செய்தனர்.
இதேபோல் பேரையூர் மல்லபுரத்தை சேர்ந்த கேசரி(43) என்பவரிடம் இருந்து 19 மதுபாட்டில்கள், ரூ.3 ஆயிரத்து 930, வில்லூர் பகுதியை சேர்ந்த பொன்னு சாமி(36) என்பவரிடம் இருந்து 148 மதுபாட்டில்கள், ரூ.1,260 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மதுபாட்டி ல்களுடன் சிக்கிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களில் தங்கபாண்டி என்பவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- சிறுமியும், பிளஸ்-2 மாணவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்ததாக தெரிகிறது.
- மாணவரின் தொல்லை அத்துமீறவே தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம்:
மதுரை பசுமலையைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவர் தனது வீட்டின் அருகே வசிக்கும் 13 வயதுடைய 8-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
சிறுமியும், பிளஸ்-2 மாணவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்ததாக தெரிகிறது. அப்போது மாணவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை சிறுமி கண்டித்துள்ளார். ஆனாலும் மாணவரின் தொல்லை அத்துமீறவே தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பிளஸ்-2 மாணவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
- திருவாதவூர் அருகே ரூ.17 லட்சத்தில் கட்டப்பட்ட முதியோர் இல்ல கட்டிடம் கட்டப்பட்டது.
- இதனை ரோட்டரி ஆளுநர் திறந்து வைத்தார்.
மதுரை
மதுரை மாவட்டம் திருவாதவூரை அடுத்துள்ள முக்கம்பட்டு கிராமத்தில் ஏஞ்சல் தேவகி முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு 80 முதிய வர்கள் தங்கியுள்ளனர். முதியோர் இல்ல கட்டி டங்கள் பழுதடைந்த நிலை யில் மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.17லட்சம் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் ரோட்டரி மாவட்டம் 3ஆயிரம் ஆளுநர் ஜெரால்ட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் அதே வளாகத்தில் பசுமையை வலியுறுத்தும் வகையில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஸ்டார் ரோட்டரி சங்க தலைவர் கணேசன் வரவேற்று பேசினார்.
ரோட்டரி 3000 மாவட்டம் 2024-2025-ம் ஆண்டுக்கான ஆளுநர் ராஜா கோவிந்தசாமி, ஆடிட்டர் சேது மாதவா, ஓய்வு பெற்ற நீதிபதி மாயாண்டி, ரோட்டரி முன்னாள் ஆளுநர்கள் சண்முகசுந்தரம், புருஷோத்தமன் , மண்டல ஒருங்கிணைப்பாளர் சாந்தாராம், ஜெயபால், கொடையாளர் சந்திப் செந்தில்நாதன், சுரேந்திரன் தேவகி முதியோர் இல்லம் பொறுப்பாளர் பி. பிரபா கரன், மதுரை ரோட்டரி சங்க தலைவர்கள் ராமநாதன், வாஞ்சிநாதன், நாக ரத்தினம், கவிதா, பாலகிருஷ்ணன் மற்றும் நெல்லைபாலு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஸ்டார் ரோட்டரி சங்க செயலாளர் முருகன் நன்றி கூறினார்.
- சோழவந்தான் அருகே அய்யனார் கோவில் கோபுர கலசங்கள் திருடு போயின.
- இதுகுறித்து காடுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூவலிங்க அய்யனார் கோவில் உள்ளது. விசேஷ நாட்களில் இங்கு அப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
அய்யனார் கோவிலில் பிச்சைக்கண்ணு என்பவர் பூசாரியாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு பூசாரி பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டி வீட்டுக்கு சென்று விட்டார்.
நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து விநாயகர் சன்னதி விமான கோபுரத்தில் உள்ள கலசங்களை திருடி சென்றனர். மறுநாள் காலை கோவிலுக்கு வந்த பிச்சை கண்ணு கலசங்கள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் காடுப்பட்டி போலீசில் புகார் செய்தார்.
சிறப்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குபேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கோபுர கலசத்தை திருடியது இரிடியம் விற்கும் கும்பலா? எனவும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
- சிறுபான்மை மாணவ-மாணவிகளுக்கு ரூ.30 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும்.
- இந்த தகவலை மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
மதுரை
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
திட்டம்1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1லட்சத்து 20ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புற மாயிருப்பின் ரூ.98ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம்2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் மிகாமல் இருத்தல் வேண்டும்.
திட்டம்-1ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக ரூ.20லட்சமும், திட்டம் 2-ன்கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30லட்சம் வரை வழங்கப்படுகிறது.
கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5சதவீதம், பெண்களுக்கு 4சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக்குழு கடன் நபர் ஒருவருக்கு ரூ.1லட்சம் ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.
திட்டம் 2-ன்கீழ் ஆண்களுக்கு 8சதவீதமும், பெண்களுக்கு 6சதவீதம் வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1லட்சத்து 50ஆயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும் சிறுபான்மையின மாணவ- மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20 லட்சம் வரையில் 3 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம்-2ன் கீழ் மாணவர்களுக்கு 8சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் ரூ.30லட்சம் வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.
எனவே மதுரை மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய மதங்களை சேர்ந்த சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானச்சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுசான்றிதழ், உண்மைச்சான்றிதழ், கல்விக்கட்டணங்கள் செலுத்திய ரசீது, ெசலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அனைத்து சிறுபான்மையினர் இனத்தைச்சார்ந்த மக்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த தகவலை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
- கட்டிடத்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- கட்டிடத்தொழிலாளி, தற்கொலை, Construction worker, suicide,
திருமங்கலம்
பேரையூரை சேர்ந்தவர் முருகேசன்(வயது60), கட்டிடத்தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதற்கான அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோய் குணமாகவில்லை. இதில் மனமுடைந்த அவர் வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு பேரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் இறந்துவிட்டார். இதுபற்றி அவரது மகன் தர்மர் பேரையூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.






