என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.17 லட்சத்தில் கட்டப்பட்ட முதியோர் இல்ல கட்டிடம்
    X

    ரூ.17 லட்சத்தில் கட்டப்பட்ட முதியோர் இல்ல கட்டிடம்

    • திருவாதவூர் அருகே ரூ.17 லட்சத்தில் கட்டப்பட்ட முதியோர் இல்ல கட்டிடம் கட்டப்பட்டது.
    • இதனை ரோட்டரி ஆளுநர் திறந்து வைத்தார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் திருவாதவூரை அடுத்துள்ள முக்கம்பட்டு கிராமத்தில் ஏஞ்சல் தேவகி முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு 80 முதிய வர்கள் தங்கியுள்ளனர். முதியோர் இல்ல கட்டி டங்கள் பழுதடைந்த நிலை யில் மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.17லட்சம் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    இதில் ரோட்டரி மாவட்டம் 3ஆயிரம் ஆளுநர் ஜெரால்ட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் அதே வளாகத்தில் பசுமையை வலியுறுத்தும் வகையில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஸ்டார் ரோட்டரி சங்க தலைவர் கணேசன் வரவேற்று பேசினார்.

    ரோட்டரி 3000 மாவட்டம் 2024-2025-ம் ஆண்டுக்கான ஆளுநர் ராஜா கோவிந்தசாமி, ஆடிட்டர் சேது மாதவா, ஓய்வு பெற்ற நீதிபதி மாயாண்டி, ரோட்டரி முன்னாள் ஆளுநர்கள் சண்முகசுந்தரம், புருஷோத்தமன் , மண்டல ஒருங்கிணைப்பாளர் சாந்தாராம், ஜெயபால், கொடையாளர் சந்திப் செந்தில்நாதன், சுரேந்திரன் தேவகி முதியோர் இல்லம் பொறுப்பாளர் பி. பிரபா கரன், மதுரை ரோட்டரி சங்க தலைவர்கள் ராமநாதன், வாஞ்சிநாதன், நாக ரத்தினம், கவிதா, பாலகிருஷ்ணன் மற்றும் நெல்லைபாலு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஸ்டார் ரோட்டரி சங்க செயலாளர் முருகன் நன்றி கூறினார்.

    Next Story
    ×