என் மலர்
மதுரை
- மதுரை ரெயில் நிலையத்தில் புதுமண தம்பதிகள் ‘போட்டோ சூட்’ நடத்த ரூ.5 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
- ரெயில்வே துறையின் வருவாய் பிரிவு செயல்படுத்தி வருகிறது.
மதுரை
இருமனங்கள் இணையும் திருமணம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கிய தருணமாகும். அப்படிப்பட்ட திருமண நிகழ்வு காலத்திற்கும் நம் மனதில் நினைவுகளாக இருப்பதற்கு முக்கிய சாட்சியாக இருப்பதில் புகைப்படங்க ளும் ஒன்று.
தற்போது திருமணத்திற்கு முன்பு, திருமணத்திற்கு பின்பு என மணமக்களை விதவிதமாக போட்டோசூட் எடுப்பது தற்போது டிரெண்டாகி வருகிறது. சிலர் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளிலும், சிலர் மலை உச்சிகளிலும் போட்டோ சூட் நடத்துவது வழக்கம்.
அப்படி போட்டோ சூட்டிங்கிற்கு ஆர்வமுள்ள நபர்களுக்காகவே ஒரு புதுமையான ஸ்பாட் கிடைத்துள்ளது. தற்போது ரெயில் நிலையங்களில் புதுமண தம்பதிகள் போட்டோ சூட் நடத்திக் கொள்ள தெற்கு ரெயில்வே அனுமதி வழங்கி உள்ளது.
ரெயில் நிலையங்களில் சினிமா திரைப்படங்க ளுக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. பல்வேறு வழிகாட்டு நெறிமுறை களுடன் அனுமதிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சி யாக, தற்போது இளை ஞர்கள் மத்தியில் பிரபல மாக அறியப்பட்டு வரும் திருமண ஜோடிகள் போட்டோ சூட், வெட்டிங் சூட் எடுப்பதற்கு அனுமதி வழங்கி, அதற்கான கட்டணமும் நிர்ணயிக்கப் பட்டு உள்ளது.
இந்திய ரெயில்வே துறை வருவாயை பெருக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ரெயில்வே நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு பிளாட்பார்ம் கட்டணம் வசூல் செய்வது, ரெயில் நிலையங்களுக்கு வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது, ரெயில் பெட்டிகளில் விளம்பரம் செய்ய அனுமதிப்பது என பல வழிகளில் வருமானத்தை பெருக்கும் நடவடிக்கை களை ரெயில்வே துறையின் வருவாய் பிரிவு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் மதுரை ரெயில் நிலையத்தில் புதுமண தம்பதியர் ரூ.5 ஆயிரம் கட்டணம் செலுத்தி புகைப் படங்கள் எடுத்துக் கொள்ளலாம். ரெயில் பெட்டியை சேர்த்து புகைப்படங்கள் எடுக்க வேண்டுமென்றால் கூடுதல் கட்டணம் ரூ.1500 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மற்ற ரெயில் நிலையங்களுக்கான கட்டணம்
ரூ.3ஆயிரமும், ரெயில் பெட்டிக்கு முன்பு எடுக்க கூடுதலாக ரூ.1000-மும் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.
- ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் ரேசன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- போலீசார் திடீர் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரையில் ரேசன் அரிசி மற்றும் பொருட்கள் கடத்தப்படுவதாக குடிமை பொருள் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து ரேசன் அரிசி மற்றும் பொருட்கள் கடத்தலை தடுக்கவும், அதில் ஈடுபடும் நபர்களை பிடிக்கவும் போலீசார் திடீர் சோதனை களை நடத்தி வருகின்றனர்.
இதன் மூலம் ரேசன் பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்தும், கடத்தலுக்கு பயன்படும் வாகனங்களை பறிமுதல் செய்தும் நட வடிக்கை எடுத்து வரு கின்றனர்.
இந்த நிலையில் மதுரை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை துணை சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் மாரி முத்து, ராமச்சந்திரன் ஆகியோர் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் ஆய்வு செய்தனர்.
ரேசன் கடைகளில் பொருட்களின் இருப்பு மற்றும் எடை அளவு ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- குற்றசம்பவங்களில் ஈடுபட வாளுடன் பதுங்கியிருந்த வாலிபர்-சிறுவன் கைது செய்யப்பட்டனர்.
- சந்தேகப்படும் படியாக ஒரு சிறுவன் நின்று ெகாண்டிருந்தான்.
மதுரை
மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சோலையழகு புரம் மூன்றாவது தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அங்கு வாள் ஒன்றுடன் பதுங்கி யிருந்த வாலிபரை பிடித்த னர். அவரிடம் விசாரித்த போது வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பூமாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோபி மகன் மணிகண்டன் என்ற கரிக்கடை மணி (வயது33) என்பது தெரியவந்தது.
அவரும் குற்ற சம்பவங்க ளில் ஈடுபடுவதற்காக அந்த பகுதியில் வாளுடன் சுற்றி திரிந்திருக்கிறார். இதை யடுத்து அவரையும் போலீ சார் கைது செய்தனர்.
மதுரை திடீர் நகர் போலீசார் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது டி.எம். கோர்ட்டு சந்திப்பு அருகே சந்தேகப்படும் படியாக ஒரு சிறுவன் நின்று ெகாண்டி ருந்தான்.
அவனை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவனிடம் வாள் ஒன்று இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து அவனிடம் விசாரித்தபோது, அவன் அச்சம்பத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பதும், அந்த பகுதியில் குற்ற சம்பவங்களில் ஈடுபட பதுங்கியிருந்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
- மதுரையில் பெண் ஆடிட்டர் வீட்டில் 25 பவுன் நகைகள், ரூ2 லட்சம் திருட்டு சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பெண் வேலையாள் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை மதிச்சியம் காந்தி நகர் ஆசாத் தெருவை சேர்ந்தவர் கீதா. இவர் செராமிக்ஸ் கடையில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவரது வீட்டில் வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை திருட்டு போனது.
திருட்டு
நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றது யார்? என்பது தெரியவில்லை. இந்த திருட்டு குறித்து ஆடிட்டர் கீதா மதிச்சியம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அவர் தனது புகாரில், தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் பெண் வேலையாள் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். திருட்டு போன நகைகள் மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.14 லட்சம் என்று கூறப்படுகிறது. திருட்டு சம்பவம் தொடர்பாக ஆடிட்டர் கீதா வீட்டில் பணிபுரியும் பெண் ஊழியர் மற்றும் சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மதுரை புதூர் மண்மலைச் சாமி தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவர் செக்யூரிட்டி சர்வீஸ் மற்றும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நடத்தி வருகிறார். இவருடைய அலுவலகம் திலகர்திடல் பகுதியில் உள்ளது. இவர் வெளியே சென்றிருந்தபோது அலுவலகத்துக்குள் புகுந்த மர்ம நபர், அங்கு வைக்கப் பட்டிருந்த
ரூ.36ஆயிரம் பணம் மற்றும் கம்ப்யூட்டர் மானிட்டர், சி.பி.யூ., கீபோர்டு, மவுஸ் முதலியவைகளையும் திருடிச் சென்றுவிட்டார்.
இந்த திருட்டு குறித்து திலகர்திடல் போலீசில் ஆனந்த் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அலுவலகத்தில் புகுந்து பணம் மற்றும் பொருட்களை திருடி சென்ற மர்மநபர் யார்? என்று துப்பு துலக்குகின்றனர்.
- பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.
- பலர் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டதாக தெரிய வருகிறது.
மதுரை
மதுரை ஆண்டாள்புரம் எச்.எம்.எஸ்.காலனியை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
மதுரை கீழசந்தைபேட்டை பகுதியில் சாம்பியன்ஸ் கார்ட்ஸ் பி.லிட். என்ற பெயரில் மதுரையை சேர்ந்த கருணாகரன், மணிகண்டன், ரமா மற்றும் தேனியை சேர்ந்த பாண்டியராஜன், சிவகாமி ஆகியோர் தாங்கள் திருமண அழைப்பிதழ், கவர் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் பணம் டெபாசிட் செய்தால் அதிக வட்டி தருகிறோம் என்று கூறினார்கள்.
மேலும் அவர்கள் முதலீடு செய்தால் கம்பெனியில் இருந்து வரும் லாபத்தில் பங்கு தருகிறோம் என்று ஆசை வார்த்தைகளை கூறி நம்ப வைத்தனர். இதனால் அந்த நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வைத்து முதிர்வு காலம் முடிந்த நிலையில் பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்தனர். எனவே தனது பணத்தை மீட்டு தருமாறு புகாரில் கூறியிருந்தார்.
அதன்பேரில் பொருளா தார குற்றப்பிரிவு போலீ சார், அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நிறுவனத்தில் பலர் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டதாக தெரிய வருகிறது.
எனவே அந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து திரும்ப கிடைக்காத பொதுமக்கள் யாரேனும் இருப்பின் தக்க ஆவணங்களுடன் மதுரை தபால்தந்திநகர் விரிவாக்கம், சங்கரபாண்டியன் நகரில் இயங்கி வரும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் நேரில் ஆஜராகி புகார் மனு அளிக்கலாம். புகாரின் பேரில் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புகார் தொடர்பாக அலுவலக தொலைபேசி எண் 0452-2642161 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
- ரெயில்வே சுரங்கப்பாதை பணிக்காக நாகர்கோவில்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் உள்பட 12 ரெயில்கள் நாளை மறுநாள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
- தூத்துக்குடி, விருதுநகர் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.
மதுரை
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் யார்டு பகுதியில் நாளை மறுநாள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை ரெயில்வே சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுவதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து ரெயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வருகிற 13-ந் தேதி ஈரோடு - நெல்லை செல்லும் விரைவு ரெயில் (வ.எண்.16845) திண்டுக்கல்- நெல்லை இடையேயும், நெல்லை - ஈரோடு விரைவு ரெயில் (வ.எண்.16846) நெல்லை,திண்டுக்கல் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.
கோவை-நாகர்கோவில் சந்திப்பு விரைவு ரெயில் (வ.எண்.16322) திண்டுக்கல் நாகர்கோவில் சந்திப்பு இடையேயும், நாகர்கோவில் சந்திப்பு- கோவை விரைவு ரெயில் (வ.எண்.16321) நாகர்கோவில் - திண்டுக்கல் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.
பாலக்காடு சந்திப்பு- திருச்செந்தூர் விரைவு ரெயில் (வ.எண்.16731) திண்டுக்கல்-திருச்செந்தூர் இடையேயும், திருச்செந்தூர்- பாலக்காடு சந்திப்பு விரைவு ரெயில்
(வ.எண்.16732) திருச்செந்தூர், திண்டுக்கல் இடையேயும், பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
திருச்சி- திருவனந்தபுரம் விரைவு ரெயில் (வ.எண்.22627) திருவனந்தபுரம் இடையேயும், திருவனந்த புரம்-திருச்சி விரைவு ரெயில் (வ.எண்.22628) திருவனந்தபுரம், விருதுநகர் பகுதியாக ரத்து இடையேயும் செய்யப்படும்.
மைசூர்-தூத்துக்குடி விரைவு ரெயில் விருதுநகர், தூத்துக்குடி இடையேயும், தூத்துக்குடி - மைசூர் செல்லக் கூடிய விரைவு ரெயில், (வ.எண்.16235) தூத்துக்குடி, விருதுநகர் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.
தாம்பரம்-நாகர்கோவில் செல்லக்கூடிய விரைவு ரெயில் (வ.எண்.20691) திருச்சி-நாகர்கோவில் சந்திப்பு இடையேயும், நாகர்கோவில்-தாம்பரம் செல்லக்கூடிய விரைவு ரெயில் (வ.எண்.20692) நாகர்கோவில், திருச்சி இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.
குருவாயூர்-சென்னை எழும்பூர் செல்லக்கூடிய விரைவு ரெயில் (வ.எண்.16128) நாளை (12-ந் தேதி) நெல்லை, தென்காசி, விருதுநகர் வழியாக சென்னை எழும்பூர் சென்றடையும்.
நாகர்கோவில் சந்திப்பு- மும்பை சி.எஸ்.எம்.டி. செல்லக்கூடிய விரைவு ரெயில் (வ.எண் 16340) நாளை மறுநாள் 13-ந் தேதி நெல்லை, தென்காசி, விருதுநகர் வழியாக மும்பையை சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வடக்கு நாவினிபட்டியில் பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிபட்டி ஊராட்சியை சேர்ந்த வடக்கு நாவினிபட்டியில் உள்ள பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி 3 கால யாக சாலை பூஜைகளுடன் வேத பாராயணம் முழங்க, கருட பகவான் வானத்தில் தோன்றி காட்சி அளிக்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது.
- இளம்பெண்-முதியவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை
மதுரை புதூர் அழகர்நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் தெய்வேந்திரன். இவரது மனைவி ஷீலாராணி(வயது35). இவர் குடும்ப தேவைக்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி செய்துள்ளனர். இதனால் வாழ்க்கையில் விரக்திய டைந்த ஷீலாராணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிந்தாமணி அழகர்நகரை சேர்ந்தவர் மகாலிங்கம்(60). இவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்தார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் விரக்தியடைந்த மகாலிங்கம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி சரோஜா கொடுத்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் காமரா ஜர்புரம் வ.உ.சி. தெருவை சேர்ந்த கணேசன்(30) என்பவரும் குடிப்பழக்கத் தால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- எஸ்.வி.சேகரை கண்டித்து தமிழகம் முழுவதும் விரைவில் போராட்டம் நடத்தப்படும்.
- மாநில பொறுப்பாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
மதுரை
பாரதீய ஜனதா கட்சியின் பொருளாதார பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா இன்று கூறியதாவது:-
தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் தேவையற்ற கருத்துக்களை கூறியுள்ளார். இதை பா.ஜ.க. பொருளாதார பிரிவு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது.
பா.ஜ.க. மாநிலத்தலை வராக பொறுப்பேற்றதில் இருந்து இளம் வயதாக இருந்தாலும் அனைத்து கேள்விகளுக்கும் அச்சமின்றி பதில் கூறி வருகிறார். அவரது திறமை மற்றும் அறிவாற்றல் காரணமாக தமிழகம் முழுவதும் திராவிட இயக்கங்களுக்கு இணையாக பா.ஜ.க. காலூன்றி உள்ளது.
இப்படி அனைத்து தகுதி படைத்த தலைவரை எஸ்.வி. சேகர் சமூக ஊடகங்களி லும், வலைதளங்களிலும் அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் தேவையற்ற கருத்துக்களை கூறியுள்ளார். அவரது தவறான விமர்சனத்தை ஏற்க முடியாது.
எனவே எஸ்.வி.சேகரின் இந்த பேச்சை கண்டித்து தமிழகம் முழுவதும் மாநில தலைவரின் அனுமதியை பெற்று விரைவில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம், உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தப்படும். இது தொடர்பாக நாளை மாநில பொறுப்பாளர் களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாளுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
அவனியாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கண்மாய்க்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். உடனே போலீசார் அவரை விரட்டிச்சென்று பிடித்தனர்.
அந்த வாலிபரை சோதனையிட்டபோது வாள் வைத்திருந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில், பெரியார் நகரை சேர்ந்த அவர் கார்கி மகன் ஆதிகேசவன்(வயது22) என்பது தெரியவந்தது. அவர் எதற்காக வாளுடன் பதுங்கியிருந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழகத்தின் கடன் சுமை அதிகரிப்பது ஏன்?
- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலை வரும், முன்னாள் அமைச்ச ருமான ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு தனியார் வேலை வாய்ப்பு மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறினார்கள். தற்பொழுது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் பயிற்சி நிறுவனங்கள், பொறியியல் பட்டய மற்றும் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆண்டு தோறும் 8 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று வெளியே வருகின்றனர்.
சுமார் 2 லட்சம் பேர் கல்வி நிலையங்களில் தேர்ச்சி பெறுவதில்லை. ஆக மொத்தம் 10 லட்சம் பேர் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரிகளில் இருந்து வெளியேறி வேலை வாய்ப்புக்காக காத்தி ருக்கின்றனர். இது குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை.
வாக்களித்த மக்களுக்கு எந்த தேர்தல் வாக்குறுதி யையும் நிறை வேற்றாத தி.மு.க. அரசு, ஆண்டுக்கு ரூ.45-50 ஆயிரம் கோடி அளவுக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்து வெற்றி கரமாக நிறைவேற்றி உள்ளது. இப்படியே சென்றால் 5 ஆண்டுகள் தி.மு.க. ஆட்சியின் முடிவில் மது விற்பனை பல கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்து தமிழகத்தில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம் சீரழித்து விடும்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் இளைய சமுதாயத்திற்கு பல்வேறு திட்டங்களை செய்துள்ளார். ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 7 புதிய கல்லூரிகள், 21 பல்வகை தொழில்நுட்ப கல்லூரிகள், நான்கு பொறியியல் கல்லூரிகள், 1,102 ஏக்கரில் ஆசியாவில் மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி பூங்கா, 40 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 248 தொடக்கப் பள்ளிகள் தொடக்கம், 117 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்வு, 1079 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம்உயர்வு, 604 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகள் தரம் உயர்வு, 52 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி திட்டம், மேலும் 13 லட்சம் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம், கறவை மாடு ஆடுகள் திட்டம், பசுமை வீடு திட்டம், ஒரு கோடியே 87 லட்சம் குடும்பங்களுக்கு விலை யில்லா மிக்ஸி, கிரைண்டர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டது. ஆனால் தமிழகத்தின் கடன் சுமை உயரவில்லை. ஆனால் தற்போது எந்த திட்டமும் செய்யாமல் தமிழகத்தின் கடன் சுமை இந்தியா விலேயே முதல் இடத்தில் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- போராட்டம் நடத்திய 2 பெண் வக்கீல்கள் கைது செய்யப்பட்டனர்.
- இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை
மதுரையை சேர்ந்தவர் வக்கீல் நந்தினி. இவர் சட்டக்கல்லூரியில் படிக்கும்போதே டாஸ்மாக் கடைக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார். தொடர் போராட்டங்களால் போலீசாரால் நந்தினி பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் இன்று காலை மதுரை காந்தி மியூசியம் முன்பு நந்தினி தனது சகோதரி வக்கீல் நிரஞ்சனாவுடன் வந்தார். மத்திய-மாநில அரசுகளை கண்டித்து பதாகைகளை ஏந்திய அவர்கள் திடீரென கோஷமிட்டு போ ராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியும், தவறான பொருளாதார கொள்கையை கடைபி டிக்கும் மோடி அரசை கண்டித்தும் போராட்டம் நடத்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் கூடும் பொது இடத்தில் போ ராட்டம் நடத்த அனுமதி யில்லை. எனவே போ ராட்டத்தை கைவிடுமாறு தெரிவித்தனர். ஆனால் நந்தினி, நிரஞ்சனா தொடர்ந்து கோஷமிட்டபடி போராடினர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






