search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுமண தம்பதிகள் போட்டோ சூட் நடத்த ரூ.5 ஆயிரம் கட்டணம்
    X

    புதுமண தம்பதிகள் 'போட்டோ சூட்' நடத்த ரூ.5 ஆயிரம் கட்டணம்

    • மதுரை ரெயில் நிலையத்தில் புதுமண தம்பதிகள் ‘போட்டோ சூட்’ நடத்த ரூ.5 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    • ரெயில்வே துறையின் வருவாய் பிரிவு செயல்படுத்தி வருகிறது.

    மதுரை

    இருமனங்கள் இணையும் திருமணம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கிய தருணமாகும். அப்படிப்பட்ட திருமண நிகழ்வு காலத்திற்கும் நம் மனதில் நினைவுகளாக இருப்பதற்கு முக்கிய சாட்சியாக இருப்பதில் புகைப்படங்க ளும் ஒன்று.

    தற்போது திருமணத்திற்கு முன்பு, திருமணத்திற்கு பின்பு என மணமக்களை விதவிதமாக போட்டோசூட் எடுப்பது தற்போது டிரெண்டாகி வருகிறது. சிலர் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளிலும், சிலர் மலை உச்சிகளிலும் போட்டோ சூட் நடத்துவது வழக்கம்.

    அப்படி போட்டோ சூட்டிங்கிற்கு ஆர்வமுள்ள நபர்களுக்காகவே ஒரு புதுமையான ஸ்பாட் கிடைத்துள்ளது. தற்போது ரெயில் நிலையங்களில் புதுமண தம்பதிகள் போட்டோ சூட் நடத்திக் கொள்ள தெற்கு ரெயில்வே அனுமதி வழங்கி உள்ளது.

    ரெயில் நிலையங்களில் சினிமா திரைப்படங்க ளுக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. பல்வேறு வழிகாட்டு நெறிமுறை களுடன் அனுமதிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சி யாக, தற்போது இளை ஞர்கள் மத்தியில் பிரபல மாக அறியப்பட்டு வரும் திருமண ஜோடிகள் போட்டோ சூட், வெட்டிங் சூட் எடுப்பதற்கு அனுமதி வழங்கி, அதற்கான கட்டணமும் நிர்ணயிக்கப் பட்டு உள்ளது.

    இந்திய ரெயில்வே துறை வருவாயை பெருக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ரெயில்வே நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு பிளாட்பார்ம் கட்டணம் வசூல் செய்வது, ரெயில் நிலையங்களுக்கு வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது, ரெயில் பெட்டிகளில் விளம்பரம் செய்ய அனுமதிப்பது என பல வழிகளில் வருமானத்தை பெருக்கும் நடவடிக்கை களை ரெயில்வே துறையின் வருவாய் பிரிவு செயல்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் மதுரை ரெயில் நிலையத்தில் புதுமண தம்பதியர் ரூ.5 ஆயிரம் கட்டணம் செலுத்தி புகைப் படங்கள் எடுத்துக் கொள்ளலாம். ரெயில் பெட்டியை சேர்த்து புகைப்படங்கள் எடுக்க வேண்டுமென்றால் கூடுதல் கட்டணம் ரூ.1500 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மற்ற ரெயில் நிலையங்களுக்கான கட்டணம்

    ரூ.3ஆயிரமும், ரெயில் பெட்டிக்கு முன்பு எடுக்க கூடுதலாக ரூ.1000-மும் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.

    Next Story
    ×