என் மலர்
நீங்கள் தேடியது "Balamurugan"
- இந்த கோவிலின் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழாவுக்காக கடந்த மாதம் 26-ந் தேதி முகூர்த்தகால் நடப்பட்டது.
- விழாவில் முனிசிப ல்காலனி மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட முனிசிபல்காலனி பாப்பாத்திகாடு 2-வது வீதியில் பாலமுருகன் கோவில் உள்ளது. இங்கு செல்வகணபதி, தர்ம சாஸ்தா, சிவகாமசுந்தரி, அம்பிகை சமேதே கைலாச நாதர் மற்றும் லட்சுமி நாராயணர், ராம பக்த ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன.
இந்த கோவிலின் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழாவுக்காக கடந்த மாதம் 26-ந் தேதி முகூர்த்தகால் நடப்பட்டது. கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 4-ந் தேதி காலை கணபதி பூஜை, நவக்கிரஹ, மகாலட்சுமி ஹோமத்துடன் தொடங்கியது.
அன்று மாலை ரக்ஷா பந்தனம், 108 திரவியங்களால் திரவியாகுதி, திருமறை பாராயணம் நடந்தது.
நேற்றுவேத பாராயணம், மகா பூர்ணாகுதி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. இதில் சிவாச்சாரி யார்கள் பங்கேற்று கோவிலின் கும்பம், மூலவர் மற்றும் பரிவார பீடங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு செய்து வைத்தனர்.
விழாவில் முனிசிப ல்காலனி மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர். விழாவை யொட்டி பக்தர்களுக்கு அன்ன தானமும் வழங்கப்பட்டது. நாளை (வியாழக்கி ழமை) முதல் மண்டல பூஜைகள் தொடங்க உள்ளது.
- எதிர்பாராத விதமாக ஆற்றில் ஏற்பட்ட சுழலில் சிக்கியதால் அவர் அடித்துச் செல்லப்பட்டார்.
- உத்தாணி குடமுருட்டி ஆற்றின் வடகரை பகுதியில் பாலமுருகன் உடல் சடலமாக மீட்கப்பட்டது.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருப்பாலத்துறை வடக்குமட வளாகத்தை சேர்ந்த பிச்சை செல்வம் மகன் பாலமுருகன் (வயது16). இவர் 11ம் வகுப்பு படித்து வந்தவர். இந்நிலையில் தன் தாயார் மகாதேவியுடன் திருப்பாலத்துறை குடமு ருட்டி ஆற்றில் பாலமுருகன் குளிப்பதற்காக சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் ஏற்பட்ட சுழலில் சிக்கியதால் அவர் அடித்துச் செல்லப்பட்டார். சம்பவ இடத்திற்கு பாபநாசம் தீயணைப்புத் துறையினர் மற்றும் கிராம மக்கள் உதவியுடன் தொடர்ந்து ஆற்றில் இறங்கி பாலமுருகனை தேடி வந்தனர். இந்நிலையில் உத்தாணி குடமுருட்டி ஆற்றின் வடகரை பகுதியில் பாலமுருகன் உடல் சடல மாக மீட்கப்பட்டது. பின்னர் பாலமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.