என் மலர்

  நீங்கள் தேடியது "Kudamurutty"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • எதிர்பாராத விதமாக ஆற்றில் ஏற்பட்ட சுழலில் சிக்கியதால் அவர் அடித்துச் செல்லப்பட்டார்.
  • உத்தாணி குடமுருட்டி ஆற்றின் வடகரை பகுதியில் பாலமுருகன் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

  பாபநாசம்:

  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருப்பாலத்துறை வடக்குமட வளாகத்தை சேர்ந்த பிச்சை செல்வம் மகன் பாலமுருகன் (வயது16). இவர் 11ம் வகுப்பு படித்து வந்தவர். இந்நிலையில் தன் தாயார் மகாதேவியுடன் திருப்பாலத்துறை குடமு ருட்டி ஆற்றில் பாலமுருகன் குளிப்பதற்காக சென்றார்.

  அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் ஏற்பட்ட சுழலில் சிக்கியதால் அவர் அடித்துச் செல்லப்பட்டார். சம்பவ இடத்திற்கு பாபநாசம் தீயணைப்புத் துறையினர் மற்றும் கிராம மக்கள் உதவியுடன் தொடர்ந்து ஆற்றில் இறங்கி பாலமுருகனை தேடி வந்தனர். இந்நிலையில் உத்தாணி குடமுருட்டி ஆற்றின் வடகரை பகுதியில் பாலமுருகன் உடல் சடல மாக மீட்கப்பட்டது. பின்னர் பாலமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ×