என் மலர்tooltip icon

    மதுரை

    • நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
    • கலையும் கலாச்சாரமும்" 2023- என்ற நிகழ்ச்சி நடந்தது.

    மதுரை

    மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் புதிய பாதை-360, வெல்பேர் கிளப் இணைந்து "கலையும் கலாச்சாரமும்" 2023- என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் உதவிகள் மூலம் உணர்வுகளை பெறுவோம் என்ற தலைப்பில் மாணவ-மாணவிகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் சினேகன் நடுவராக பங்கேற்ற பட்டிமன்றம் நடந்தது, இந்நிகழ்ச்சிக்கு தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச் சங்கத் தின் தலைவர் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசி னார். முன்னதாக புதிய பாதை வாசகன் வர வேற்றார்.

    சிறப்பு விருந்தினர்களாக தேசிய மனிதவள உதவும் கரங்கள் நிறுவனர் டாக்டர் முகமது பக்ஸ், தென் மாவட்ட திரைப்பட கலை ஞர்கள் நலச்சங்க பொதுச் செயலாளர் எம்.மணி கண்டன், ஆலோசகர் செல்வவேல் பாண்டி, நடிகர் சங்க நிர்வாகிகள் டாக்டர் சின்னச்சாமி, பிரகாஷ் , மாநகர் காவல் உதவி ஆணையர் (கோவில் சரகம்) பா.காமாட்சி, கோல்டன் சினிமா நிர்வாக இயக்குனர் டி.ஆர்.குமரன் ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் புதிய பாதை சிமியோன் நன்றி கூறினார்.

    • இளம்பெண் உள்பட 2 பேர் மாயமானtர்கள்.
    • பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கடச்சனேந்தல் அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் தம்பிராஜ். இவரது மகன் பால்பாண்டி(வயது30). இவருக்கு திருமணமாகி வினோதினி என்ற மனைவி உள்ளார். கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையை பார்த்துவிட்டு வருவதாக பால்பாண்டி, மனைவியிடம் கூறி சென்றார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வினோதினி அப்பன்திருப்பதி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்பாண்டியை தேடி வருகின்றனர்.

    இளம்பெண்

    மதுரை அவனியா புரத்தை அடுத்துள்ள பெருங்குடி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் சிவரஞ்சனி(20). சம்பவத்தன்று பெற்றோர் வேலைக்கு சென்றுவிட வீட்டில் இருந்த சிவரஞ்சனி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு ரூ.21 ஆயிரம் மதுபாட்டில்கள் திருடப்பட்டுள்ளது.
    • மூடை மூடையா கட்டி திருடி சென்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் ஒத்தக்கடை ேபாலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பொருசுபட்டியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம்(வயது41) என்பவர் மேற்பார்வை யாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு மாணிக்கம் மற்றும் ஊழியர்கள் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள் அங்கிருந்த பின்புற சுவற்றில் துளையிட்டு உள்ளே புகுந்தனர்.

    அங்கு கல்லாபெட்டியை திறந்து பார்த்தபோது அதில் பணமில்லை. இதனால் அதிருப்தியடைந்த திருடர்கள் டாஸ்மாக் கடையில் இருந்து விலை உயர்ந்த மதுபாட்டில்களை மூடை மூடையா கட்டி திருடி சென்றனர். மறுநாள் மதியம் மாணிக்கம் மற்றும் ஊழியர்கள் டாஸ்மாக் கடையை திறந்து பார்த்தபோது சுவரில் துளையிட்டு கொள்ளை நடந்திருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து மாணிக்கம் ஒத்தகடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையில் திருடிய நபர்களை தேடி வருகின்றனர். திருடுபோன மதுபாட்டில்களின் ரூ.21 ஆயிரம் ஆகும்.

    • சர்வ சாதாரனமாக நடக்கும் கஞ்சா-புகையிலை விற்பனை செய்யப்படுகிறது.
    • இதனை போலீசார் தடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்.

    மதுரை

    மதுரை மாநகரில் சட்டவிரோதமாக கஞ்சா, புகையிலை பாக்கெட்டுகள் விற்பது சர்வசாதாரனமாக நடந்து வருகிறது. குறிப்பாக சமூக விரோதிகள் பள்ளி, கல்லூரி அருகில் மற்றும் ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதிகளில் கஞ்சா, புகையிலை பாக்கெட்டு களை விற்கின்றனர்.

    இளைஞர்கள், மாணவர்களை குறிவைத்து நடக்கும் கஞ்சா, புகையிலை பாக்கெட்டுகளின் விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன். மதுரை நகரில் கடைகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது கஞ்சா விற்றதாக 7 பேரும், புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்றதாக கடைக்காரர்கள் 12 பேரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல் மதுபாட்டில் களை அதிக விலைக்கு விற்றதாக 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரையில் கடந்த சில மாதங்களாக போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. அரசால் தடைசெய்யப்பட்ட புகை யிலை பாக்கெட்டுகள் கடை களில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் பகுதி,பெரியார் பஸ் நிலையம், காமராஜர் சாலை, ஜெய்ஹிந்துபுரம், வில்லாபுரம், அவனியாபுரம், வண்டியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறிய கடைகளில் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அதனை போலீசார் கண்டு கொள்வதில்லை.

    மேலும் ஆற்றுப்பகுதி, திருப்பரங்குன்றம், விளாச்சேரி, புதூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை நடக்கிறது. இதனை போலீசார் தடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றனர்.

    • தமிழகத்திற்கு ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடியை இதுவரை பிரதமர் மோடி ஒதுக்கீடு செய்துள்ளார் என்று அண்ணாமலை கூறினார்.
    • துணை தலைவர் ஜோதி மணிவண்ண உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் நடைபயணத்தின் தொடர்ச்சியாக நேற்று மதுரையில் யாத்திரையை தொடங்கினார். மதுரை மாநகர் பகுதியில் ராமகி–ருஷ்ணா மடத்தில் மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. ஊடகப்பிரிவு சார்பில் மாவட்ட தலைவர் ரவிச்சந் திர பாண்டியன் தலைமை–யில்,

    மாவட்ட துணை தலை–வர்கள் ராமச்சந்திரன், வேல்பாண்டியன், செயலா–ளர்கள் கருணாகரன், முத்து விக்னேஷ், மாரி ராஜா ஆகியோர் முன்னிலையில் ராமகிருஷ்ணா மடத்தின் முன்பாக உள்ள விவேகா–னந்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

    அதன் பின்பு அவருக்கு மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் ரிசர்வ் லயன் சந்திப்பில் பூரண கும்ப மரியாதையுடன் மேளதாளம் முழங்க பரிவட்டம் கட்டி பலத்த வரவேற்பு அளிக்கப் பட்டது. அப்போது அவர் பேசியதாவது:-

    என் மண், என் மக்கள் யாத்திரை மாறுபட்ட யாத் திரையாகும். பிரதமர் மோடி தமிழகத்திற்கு இது–வரை ரூ.10 லட்சத்தி 76 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய அரசு நலத்திட்டங்களால் தமிழ–கத்தில் மிகப்பெரிய வளர்ச்சி மற்றும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க. எம்.பி.க்கள் மக்கள் பிரச்சனை குறித்து இதுவரை பேச–வில்லை. மக்களைப் பற்றி தி.மு.க.வுக்கு கவலை இல்லை. தி.மு.க. ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது.

    நெஞ்சுவலி வந்து ஒரு அமைச்சர் புழல் சிறையில் தூங்குகிறார். எந்த வேலை–யும் செய்யாமல் அமைச்சர் சம்பளம் வாங்குகிறார். ஊழல் செய்த அமைச்சருக்கு ஊதியம் கொடுக்கிறார் முதலமைச்சர். 5 ஆம் தமிழ்சங்கம் என குறிப்பிட் டால் அதற்கு காரணம் மோடி என குறிப்பிடலாம். தமிழ்மொழி பயில வேண் டும் என மோடி கூறினார். திருக்குறளையும், ஆத்தி–சூடியையும், மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார். உலகத்தின் தொன்மையான மொழி தமிழ் என மாண–வர்களிடம் குறிப்பிட்டார்.

    தமிழை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் தி.மு.க. பேனா சிலை வைக்கிறது. ஆனால் தமிழை வளர்க்க எந்த முயற்சியும் இல்லை எந்த நிதியும் ஒதுக்கவில்லை, கடந்த கல்வி ஆண்டில் 54 ஆயிரம் மாணவர்கள் தமிழ் தேர்வில் தோல்வியடைந் துள்ளனர். 1967-ல் இருந்து 5 முறை ஆட்சி செய்தார்கள் இதுதான் தமிழ்வளர்க்கும் லட்சணமா? மோடி பெய–ரில் எந்த திட்டமும் இல்லை. பிரதமர் என்ற பெயரில் இருக்க வேண்டும் என விரும்பி திட்டங்களுக்கு பெயர் வைத்துள்ளார்.

    இவ்வாறு அவர் பேசி–னார் .

    இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் பேரா–சிரியர் ராம சீனிவாசன், பெருங்கோட்ட பொறுப்பா–ளர் கதலி நரசிங்க பெரு–மாள், மாவட்ட பார்வையா–ளர் கார்த்திக் பிரபு, மாவட்ட பொது செயலாளர் ராஜ் குமார், பாலகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் ஜோதி மணிவண்ண உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மதுரை முதியோர் இல்ல தாத்தா, பாட்டிகள் நடனமாடி இன்ஸ்டாகிராமில் சாதித்த வீடியோ வெளியானது.
    • பொதுமக்கள் அதிகமாக பார்த்து வருவது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது

    மதுரை

    கூட்டுக்குடும்பம் சிதைந்து போனதால் சிற–கொடிந்த பறவைகளை போன்று தங்களது கடைசி காலத்தை கழிக்க போராடும் மூத்த குடிமக்களுக்காக உருவானதுதான் முதியோர் இல்லங்கள். பிள்ளைகள் இருந்தும் பல்வேறு கார–ணங்களுக்காக தனித்தும், துரத்தியும் விடப்படுப–வர் களை கண்டறிந்து அவர்க–ளின் வாழ்க்கையை இனி–தாக்கும் முயற்சியில் தொடங்கப்பட்ட முதியோர் இல்லங்கள் இன்று எண் ணில–டங்காமல் முளைத்து–விட்டது.

    ஒத்த வயதுடையவர்களை உறவினர்களாக நினைத்து வாழ்வின் இறுதி நாட்களை கழித்துவரும் முதியோர் களும் நாகரீகத்திற்கேற்ப தங்களை மாற்றி வருகிறார் கள் என்பதற்கு சமூக ஊட–கங்களே சாட்சி.

    எத்தனை நாளைக்குத் தான் வரலாற்று கதைகளை நினைவு கூர்ந்து, அனுபவ்ட களை பகிர்ந்து–கொண்டு காலத்தை கடத்துவது? காலத்தின் சூழலுக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள முதியோர்களும் தயாராகி–விட்டனர் என்பதற்கு மதுரை முதியோர் இல்லமும் சான்றாக அமைந்துள்ளது. அதிலும் சமூக ஊடகங்களில் வீடியோக்களை வெளி–யிட்டு லைக்குகளை பெறுவ–திலும் அவர்கள் முன்னேற் றம் கண்டுள்ளனர். அதுபற் றிய விபரம் வருமாறு:-

    மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள திருநகரில் அடைக்கலம் என்கிற முதி–யோர் இல்லம் செயல் பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டு–களாக இலவசமாக நடத்தப் பட்டு வரும் இல்லத்தில் கணவரை இழந்தவர்கள், மனைவியை இழந்தவர்கள், சாலையோரம் தவித்தவர் கள், தனிமையில் வாடுபவர் கள் என தற்போது 14 பாட்டிகளும், 11 தாத்தாக்க–ளும் தங்கியுள்ள–னர்.

    இதுவரை 14 பேர் இறந்துள்ள நிலையில் 58 பேர் வசித்துள்ளனர். முதி–யோர்களின் உடல் நிலையை பரிசோதித்து அவர்களுக் கேற்ற உணவுகள் தவறாமல் வழங்கப்படுகிறது. பொழுதை கழிக்க பழங்கதை பேசியவர்கள் தற்போது ஆண்டிராய்டு போன்கள் பற்றியும் அறிந்து, தெரிந்து பழகிக்கொண்டுள்ளனர்.

    அந்த வகையில் இந்த இல்லத்தைச் சேர்ந்த முதிய–வர்கள் சினிமா பாட–லுக்கு நடனமாடும் காட்சிகள் இன்ஸ்டாகிராமில் அடைக்க–லம் என்கிற பெயரில் வீடியோக்கள் வைரலாகி மில்லியன் கணக்கில் பார் வை–யாளர்களை பெற்று சாதனை படைத்துள் ளது.

    மணப்பாறை மாடு கட்டி, மாயவரம் ஏறு பூட்டி வயக்காட்ட உழுதுபோடு செல்லக்கண்ணு... என்ற புதிய ரீமேக் பாடலுக்கு ஏற்ப நளினமாக ஆடிய நடனம் பார்வையாளர்க–ளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இதுகுறித்து அந்த முதி–யோர் இல்லத்தில் வசித்து வரும் ராஜகோபால் மற்றும் ராக்காயி கூறியதாவது:-

    குடும்ப சூழ்நிலை கார–ணமாக இங்கு வந்தோம். இங்கு எங்களை நல்லபடி–யாக பார்த்துக் கொள்கி–றார்கள். நடனம் ஆடுவதில் ஆர்வம் இருந்த காரணத்தால் நடனமாடி வீடியோ எடுத் தோம். மேலும் இதுபோன்ற விஷயங்களை செய்வது மூலம் எங்கள் கஷ்டங்களை மறந்து மகிழ்ச்சியாக இருக்கி–றோம்.

    மனதில் அடக்கி வைத்தி–ருந்த கஷ்டங்கள் காணாமல் போய்விட்டது. இந்த வீடியோ காட்சிகள் எதார்த்தமாக நாங்கள் எடுத்தோம். ஆனால் தற்போது இதை பொதுமக்கள் அதிகமாக பார்த்து வருவது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்றனர்.

    • தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருப்பரங்குன்றம் கூடல்மலை தெருவை சேர்ந்தவர் மாடசாமி மகன் திருச்செல்வம் (வயது30).

    இவர் டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சிவரக்கோட்டை பகுதியில் ஆசிரமம் கட்டும் பணியில் டைல்ஸ் கல் ஒட்டி கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

    சக தொழிலாளர்கள் உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து திருச்செல்வம் அண்ணன் முத்தையா கொடுத்த புகாரின் பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா.
    • உள்துறை மந்திரி அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தனர்.

    மதுரை:

    மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38-வது பாராளுமன்ற கூட்டத் தொடர் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    உள்துறை மந்திரி அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவரின் நடைபயணம் மதுரையை அடைந்தது. அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, மு.க.ஸ்டாலினுக்கு ஆங்கிலமோ, இந்தியோ தெரியாததால் மத்திய மந்திரி அமித்ஷா கூறியதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நமது தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்று அமித்ஷா கூறினார். இந்த விவகாரத்தில் தி.மு.க. இன்னும் அரசியல் செய்து வருகிறது. ஸ்டாலினும், உதயநிதியும் ஸ்டாலினுக்கு மக்களிடம் பேச வேறு விஷயமில்லை. பிரதமர் மோடி உலக சுற்றுப்பயணத்தில் தமிழ் மொழியின் பெருமை பற்றி பேசினார். பிரான்சில் திருவள்ளுவர் சிலையை நிறுவப் போகிறார். வரும் தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையும் என்பது உறுதி என தெரிவித்தார்.

    • பகல் நேரத்தில் கொளுத்தும் வெயிலால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
    • வெயிலின் தாக்கம் குறையாததால் கூழ், இளநீர், மோர், குளிர்பான கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

    மதுரை

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை கேரளாவில் தாமதமாக தொடங்கியது. இந்த நிலையில் தமிழகத்தின் பெரும்பா–லான பகுதிகளில் மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் அவ்வப்போது மட்டுமே மழை பெய்து வருகிறது. ஆனால் அதே வேளையில் மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. மேலும் அனல் காற்றும் வீசுகிறது.

    மதுரை–யில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தினசரி 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்ப நிலை பதிவாகி உள்ளது. மழையும் இல்லாத தால் வெப்பத்தின் தாக்கம் பகலிலும், இரவிலும் அதிகமாக உள்ளது.

    காலை முதலே வெயில் சுட்டெரிக்கிறது. வழக்கத்தை காட்டிலும் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.கோடை காலம் முடிந்து தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் படிப்படி யாக குறையும் என பொது மக்கள் எதிர்பார்த்த நிலை யில் வெயில் தொடர்ந்து வாட்டி வதைத்து வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் அடிக்கடி மின்வெட்டும் ஏற்படுவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் வயதானவர்கள், குழந்தை–கள் அவதிப்படுகின்றனர்.

    வெயிலின் தாக்கம் குறையாததால் கூழ், இளநீர், மோர், குளிர்பான கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

    இதற்கிடையே தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 2 வீடுகளில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • தொடர் சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செங்கப்படை கிராமத்தைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி (வயது67). இவர் ஊர் காவலராக இருந்து வருகிறார். இவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    இவரது ஒரு மகன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். மற்றொரு மகன் கோவில்பட்டியில் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டின் அருகிலேயே மகள் வசித்து வருகிறார்.

    தனுஷ்கோடியும், அவரது மனைவியும் தோட்டத்தில் உள்ள வீட்டில் இரவு தூங்குவது வழக்கம். சம்பவத்தன்று காலையில் தோட்டத்து வீட்டில் இருந்து வந்தனர். வீட்டை திறந்து பார்த்தபோது பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தன. பொருட்கள் சிதறிக்கிடந்தது.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் பீரோவில் பார்த்தபோது ரூ.1½ லட்சம், 4½ பவுன் நகைகள் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் தனுஷ்கோடி புகார் செய்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே மேலஉப்பிலிகுண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி இருளாயி. இவர்கள் வீட்டின் பீரோவில் 4½ பவுன் நகை, ரூ.10 ஆயிரம் வைத்திருந்தனர். இந்த நிலையில் இன்று பீரோவில் பார்த்தபோது லாக்கர் கதவை உடைத்து நகை மற்றும் பணம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து கூடக்கோவில் போலீஸ் நிலையத்தில், இருளாயி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலத்தை சுற்றியுள்ள கிராமப்பகுதி களில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டு மென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
    • பா.ஜ.க. கூட்டணி எம்.பி. மதுரையில் வெற்றி பெற வேண்டும் என அண்ணாமலை பேசினார்

    மதுரை

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை "என் மண், என் மக்கள்" பயணத்தை ராமேசுவரத்தில் தொடங்கி னார். ராமநாதபுரம், சிவ கங்கை மாவட்டங்களை தொடர்ந்து நேற்று மதுரை மாவட்டத்தில் அவர் பய ணத்தை மேற்கொண்டார்.

    இன்று காலை ஒத்தக்கடை நரசிங்க பெருமாள் கோவில் பகுதியில் அண்ணாமலை நடை பயணத்தை தொடங்கி னார். ஒத்தக்கடை தேவர் சிலை அருகே நிர்வாகிகள், தொண்டர்கள் அவரை வரவேற்றனர். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் ஊழல் மிகுதியாக இருக்கிறது. "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது போல தமிழகத்தில் நடைபெறும் மொத்த ஊழலுக்கு கிழக்கு தொகுதி சாட்சியாக இருக்கிறது. அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை செயல்பட்டிருந்தால் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும்.

    மற்ற மாநிலங்களில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு ரூ. 600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.2 ஆயிரத்து 600 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் 22 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

    ஆண்டிற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை தருகிறோம் என்று கூறிய தி.மு.க. குரூப் 4 தேர்வு நடைபெற்று 13 மாதங்கள் ஆகியும் 2 ஆயிரம் பேருக்கு தான் வேலை கொடுத்தி ருக்கிறார்கள். மதுரை அரசு மருத்துவமனையில் 1300 நர்சுகளுக்கு பற்றாக்குறை உள்ளது. அதேபோல் பள்ளி ஆசிரியர்களுக்கும் அதிகளவில் பற்றாக்குறை உள்ளது.

    மதுரையில் நெசவா ளர்கள் அதிகமாக உள்ள னர். ஆனால் தி.மு.க. அரசு அவர்களுக்காக திட்டங்கள் எதுவும் கொண்டு வர வில்லை. ஆனால் மத்திய அரசு முதல் கட்டமாக ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்து விருது நகரில் ஜவுளி பூங்கா திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இதனால் 25 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.

    மதுரை எம்.பி. மோடியை பற்றி மட்டும் குறை கூறுகிறார். காவிரி நீர் குறித்து பேசவில்லை. கேரளாவில் இருந்து மருந்து கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது குறித்து பேசவில்லை. எனவே மதுரை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி. வெற்றி பெற வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெறும் தமிழகம், பாண்டிச் சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மாவட்ட தலைவர் ராஜசிம்மன், கிழக்கு மாவட்ட தலைவர் நாகராஜன், கிழக்கு மண்டல் தலைவர் பூமிநாதன், ஓ.பி.சி. அணி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், பொதுச்செய லாளர்கள் மூவேந்திரன், கண்ணன், நிர்வாகிகள் கட்கம் ரவி, கல்வாரி தியாகராஜன், வெள்ளைச்சாமி, குறிஞ்சி அரவிந்த், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர்கள் ரவிச்சந்திர பாண்டியன், செல்வமாணிக்கம், வழக்கறிஞர் பிரிவு பிரபாகரன், நெசவாளர் பிரிவு கிருஷ்ணகுமார், சோலை மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

    தொடர்ந்து நத்தம் ரோடு ராமகிருஷ்ணா மடத்தில் இருந்து மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், பொதுச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் மதுரை மாநகர் பகுதியில் அண்ணாமலை பயணத்தை தொடங்கினார்.

    • கலைஞர் நூலகத்திற்கு தனி இணையதளம் உருவாக்கப்படும்.
    • தினமும் ஏராளமானோர் நூலகத்திற்கு வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

    மதுரை

    மதுரை மாநகரில் புது நத்தம் சாலையில் ரூ.218 கோடியில் 8 தளங்களுடன் அதிநவீன வசதிகள் கொண்ட நூலகம் கட்டி முடிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 15-ந் தேதி முதல்-அமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதைத் தொடர்ந்து இந்த நூலகம் செயல்பட தொடங்கியுள்ளது. தினமும் ஏராளமானோர் நூலகத்திற்கு வந்து பார்வையிட்டு செல்கின்றனர். பள்ளி, கல்லூரிகளில் இருந்தும் மாணவர்கள் இந்த நூலகத்தை பார்வையி டுவதற்காக அழைத்து வரப்படுகின்றனர்.

    இந்த நிலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் பெயரில் புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பேரில் தமிழ்நாடு பொது நூலகத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து www.kalaignarcentenarylibrary.org என்ற பெயரில் புதிய இணையதள பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த இணையதள பக்கம் வாயிலாக நூலகம் பற்றிய தகவல்கள், உறுப்பினர் சேர்க்கை, நூலகத்தில் உள்ள புத்தகங்கள் தொடர்பான விவரம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பிப்பது குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

    மேலும் வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில் உள்ள இளைஞர்களும் பொதுமக்களும் இந்த இணையதள மூலம் புத்தகங்கள், எழுத்தாளர்கள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளும் வசதியும் உள்ளது.

    கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் உறுப்பினர் சேர்க்கையை விரைவில் ஆன்லைன் முறையில் கொண்டுவர திட்டமிடப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து டுவிட்டர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களையும் கலைஞர் நூலகத்திற்கென உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×