சுவரில் துளையிட்டு ரூ.21 ஆயிரம் மதுபாட்டில்கள் திருட்டு

டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு ரூ.21 ஆயிரம் மதுபாட்டில்கள் திருடப்பட்டுள்ளது. மூடை மூடையா கட்டி திருடி சென்றனர்.
சுவரில் துளையிட்டு ரூ.21 ஆயிரம் மதுபாட்டில்கள் திருட்டு
Published on

மதுரை

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை ேபாலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பொருசுபட்டியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம்(வயது41) என்பவர் மேற்பார்வை யாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு மாணிக்கம் மற்றும் ஊழியர்கள் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள் அங்கிருந்த பின்புற சுவற்றில் துளையிட்டு உள்ளே புகுந்தனர்.

அங்கு கல்லாபெட்டியை திறந்து பார்த்தபோது அதில் பணமில்லை. இதனால் அதிருப்தியடைந்த திருடர்கள் டாஸ்மாக் கடையில் இருந்து விலை உயர்ந்த மதுபாட்டில்களை மூடை மூடையா கட்டி திருடி சென்றனர். மறுநாள் மதியம் மாணிக்கம் மற்றும் ஊழியர்கள் டாஸ்மாக் கடையை திறந்து பார்த்தபோது சுவரில் துளையிட்டு கொள்ளை நடந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மாணிக்கம் ஒத்தகடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையில் திருடிய நபர்களை தேடி வருகின்றனர். திருடுபோன மதுபாட்டில்களின் ரூ.21 ஆயிரம் ஆகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com