கலைஞர் நூலகத்திற்கு தனி இணையதளம் உருவாக்கம்

கலைஞர் நூலகத்திற்கு தனி இணையதளம் உருவாக்கப்படும். தினமும் ஏராளமானோர் நூலகத்திற்கு வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.
கலைஞர் நூலகத்திற்கு தனி இணையதளம் உருவாக்கம்
Published on

மதுரை

மதுரை மாநகரில் புது நத்தம் சாலையில் ரூ.218 கோடியில் 8 தளங்களுடன் அதிநவீன வசதிகள் கொண்ட நூலகம் கட்டி முடிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 15-ந் தேதி முதல்-அமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து இந்த நூலகம் செயல்பட தொடங்கியுள்ளது. தினமும் ஏராளமானோர் நூலகத்திற்கு வந்து பார்வையிட்டு செல்கின்றனர். பள்ளி, கல்லூரிகளில் இருந்தும் மாணவர்கள் இந்த நூலகத்தை பார்வையி டுவதற்காக அழைத்து வரப்படுகின்றனர்.

இந்த நிலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் பெயரில் புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பேரில் தமிழ்நாடு பொது நூலகத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து www.kalaignarcentenarylibrary.org என்ற பெயரில் புதிய இணையதள பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதள பக்கம் வாயிலாக நூலகம் பற்றிய தகவல்கள், உறுப்பினர் சேர்க்கை, நூலகத்தில் உள்ள புத்தகங்கள் தொடர்பான விவரம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பிப்பது குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில் உள்ள இளைஞர்களும் பொதுமக்களும் இந்த இணையதள மூலம் புத்தகங்கள், எழுத்தாளர்கள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளும் வசதியும் உள்ளது.

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் உறுப்பினர் சேர்க்கையை விரைவில் ஆன்லைன் முறையில் கொண்டுவர திட்டமிடப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து டுவிட்டர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களையும் கலைஞர் நூலகத்திற்கென உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com