என் மலர்
மதுரை
- உசிலம்பட்டியில் அ.தி.மு.க. மாநாடு அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் வழங்கினார்.
- இதற்கான அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி உசிலம் பட்டி நகர அலுவலகத்தில் நடந்தது.
உசிலம்பட்டி
மதுரையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு வருகிற 20- ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி உசிலம் பட்டி நகர அலுவலகத்தில் நடந்தது. நகர செயலாளர் பூமாராஜா தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு மரக்கன்றுகளையும், அழைப்பிதழ்களையும் வழங்கினார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசன், எஸ்.எஸ்.சரவணன், மாணிக்கம், பேரவை துணைச் செயலாளர்கள் வெற்றிவேல், இளங் கோவன், துரைதனராஜன், மாவட்ட கவுன்சிலர் சுதாகரன், மாணவரணி செயலா ளர் மகேந்திர பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் செல்லம்பட்டி ராஜா, சேடபட்டி பிச்சை ராஜன், ஏழுமலை வாசிமலை, நகர நிர்வாகிகள் லட்சுமணன், உக்கிரபாண்டி, ரகு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதி பள்ளி மாணவ, மாணவிகள் 11 பேர் காயம் அடைந்துள்ளனர்.
- இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற் பட்டது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திரு–மங்கலம் அருகே உள்ள மீனாட்சிபுரம், வலையபட்டி ஆகிய அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவி–கள் 11 பேர் கள்ளிக்குடி கே.வெள்ளாகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வ–தற்காக இன்று காலை ஆட் டோவில் புறப்பட்டு சென்றனர்.
அந்த ஆட்டோ கே.வெள் ளாகுளம் பகுதிக்கு வந்தபோது இருசக்கர வாகனம் முந்திச்செல்ல முயன்றது. இதில் நிலை தடுமாறி கட் டுப்பாட்டை இழந்த அந்த மோட்டார் சைக்கிள் ஆட் டோவில் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ நடுரோட்டில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் இந்துஜா (10), பகதீஷ் ஸ்ரீ, சரண் (9), முத்தமிழ் அன்பு (10), பன் னீர்செல்வம் (12), கவிதா (12), ஆதிஸ்வரன் (12), கார்த்திகா (11), நாகலட் சுமி (12), சாதனா (11) ஆகிய 11 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு கை, கால் மற்றும் முகத்தில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன.
அவர்களை உடனடியாக அந்த பகுதியைச் சேர்ந்த–வர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்து–வமனைக்கு அனுப்பி வைத் தனர். மேலும் இந்த விபத் தில் காயம் அடைந்த ஆட்டோ டிரைவரான பொன்னையம்பட்டியை சேர்ந்த பெருமாள், இரு–சக்கர வாகனத்தில் வந்த பூபதி ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்துஜா, கவிதாஸ்ரீ, மகாலட்சுமி ஆகிய மூன்று பேரும் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் காயம் அடைந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர் கள் பதறி அடித்துக்கொண்டு திருமங்கலம், விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற் பட்டது.
- ஆடி கடைசி வெள்ளியான இன்று அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
- திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை
தமிழ் மாதங்களில் அம்மன் வழிபாட்டுக்கு உகந்த மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. இதனால் ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் திருவிழாக்கள் கொண்டா டப்படுவது வழக்கம்.
குறிப்பாக ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப் படும். பக்தர்களுக்கு கூழ் வார்த்தல், நேர்த்திக் கடன் செலுத்துதல், முளைப்பாரி திருவிழாக்கள் நடைபெறும். அம்மனுக்கு தீச்சட்டி, பால்குடம், ஆயிரம் கண் பானை, மாவிளக்கு எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர்.
இதில் பிரசித்தி பெற்ற ஆடி கடைசி வெள்ளிக் கிழமையான இன்று அனைத்து அம்மன் கோவில்களிலும், பிற முக்கிய கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷே கங்கள் நடந்தன. ஏராள மான பெண்கள் பொங்கலிட்டும், விளக்கேற்றியும் வழிபட்டனர்.
மதுரை சுந்தரராஜபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி உற்சவ விழா மற்றும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை யொட்டி வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் போலீசார் ஊர்வலமாக வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மடப்புரம் பத்திரகாளி யம்மன் கோவிலிலும் ஆடி வெள்ளிக்கிழமையை யொட்டி திரளான பக்தர் கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்ட னர்.
ரிசர்வ் லைன் மாரியம் மன் கோவில், திருப்பரங் குன்றம் வெயிலுகந்த அம்மன் கோவில், ஜெய்ஹிந்துபுரம் வீரகாளியம்மன் கோவில், மறவர்சாவடி தசகாளி யம்மன் கோவில், சொக்க லிங்கநகர் சந்தனமாரி யம்மன் கோவில், பி.பி.சாவடி பஸ் நிறுத்தம் காளியம்மன்-மாரியம்மன் கோவில், பழங்காநத்தம் நேருநகர் அங்காள ஈஸ்வரி கோவில், புதூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட நகரில் உள்ள பல்வேறு கோவில் களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப் பட்டு பூஜைகள், தீபாரா தனை நடந்தது.
அழகர்கோவில், நூபுர கங்கை, ராக்காயி அம்மன் கோவிலில் ஏராளமானோர் வழிபட்டு நீராடினர். சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப் பட்டு பூஜைகள், தீபாராதனை நடந்தது.
- கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபடுகின்றனர்.
- வழிப்பறி கொள்ளையர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை
மதுரை அருகே உள்ள சிலைமான் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (39). இவர் சம்பவத்தன்று ஆரப்பாளையம் சோனையாகோவில் தோப்பு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டில் பழனிவேலிடம் ரூ.1300-ஐ பறித்து சென்றார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வழிப்பறியில் ஈடுபட்டது ஆரப்பாளையம் கிராஸ் ரோடு கிருஷ்ணாபாளையம் 2-வது தெருவை சேர்ந்த மாடசாமி மகன் ஆனந்த குமார் (24) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
மதுரை மேலத்தொப்பு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(31). இவர் சம்பவத்தன்று புதுமா காளிப்பட்டி ரோடு சந்திப்பில் நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணத்தை பறித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் வழிப்பறியில் ஈடுபட்டது சோலை அழகுபுரம் முதல் தெரு பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேகர் மகன் உமையகுமார் என்ற பெரிய எலி (23), சோலையழகுபுரம் ஜானகி நகர் முதல் தெரு சுரேஷ்குமார் மகன் மணிகண்டன் என்ற பாட்டில் மணி (22), சோலை அழகுபுரம் பாண்டி மகன் மாரிச்செல்வம் (22) என தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மதுரை நகரில் அண்மை காலமாக வழிப்பறி, நகைப்பறி போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பட்டப்ப கலிலும் தனியாக செல்லும் பெண்கள், முதியவர்களை குறிவைத்து தைரியமாக வழிப்பறியில் ஈடுபடு கின்றனர். மேலும் கத்தியை காட்டி மிரட்டு வதும் சில சமயங்களில் ஆயுதங்களால் பொதுமக்களை தாக்கு வதும் நடந்து வருகிறது. எனவே போலீசார் கூடுதல் ரோந்து சென்று வழிப்பறி கொள்ளையர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை
மதுரை வண்டியூர் சிவசக்தி நகர் டி.பி.எஸ்.நகரை சேர்ந்தவர் விக்னேஷ்வரன். இவரது மனைவி சுபா (37). இவர் அரசு வேலையில் சேர்வதற்காக கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதி வந்தார்.
ஆனால் அவருக்கு அரசுக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த சுபா சம்பவத்தன்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தெப்பக்குளம் செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார்(45). இவருக்கு நிரந்தர வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதில் விரக்தியடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மனைவி சாரதா கொடுத்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மதுரை சாகர் தொலைக்காட்சியில் ஜோதிடர் கரு .கருப்பையா இன்று இரவு பேசுகிறார்.
- இது ஒரு நேரடி ஒளிபரப்பாகும்.
மதுரை
மதுரையில் இருந்து ஒளிபரப்பாகும் சாகர் தொலைக்காட்சியில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணிக்கு பிரபல ஜோதிடர் மடப்புரம் விலக்கு கரு.கருப்பையா வழங்கும் அதிர்ஷ்டமான நேரம் என்ற ஜோதிட நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பா–கிறது. அதன்படி இன்று இரவு 8 மணிக்கு நேரலையாக ஒளிபரப்பாகும் இந்த ஜோதிட நிகழ்ச்சியில் நேயர்கள் அலைபேசி (94431 65504) மூலமாக, குறிப்பிட்ட அந்த நேரத்தில் தொடர்பு கொண்டு அதிர்ஷ்ட பெயர், ஜோதிட ஆலோசனைகள், வாஸ்து பற்றிய கேள்விக–ளுக்கு நேரடியாக விளக்கம் பெறலாம்.
இது ஒரு நேரடி ஒளிபரப்பாகும். மேற்கண்ட தகவலை ஜோதிடர் கரு.கருப்பையா தெரிவித்துள்ளார்.
- கடைசி ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் நடந்தது.
- சோழவந்தான், காடுபட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
சோழவந்தான்
ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர் உள்பட 21 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து சண்முகவேல் அர்ச்சகர்பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்.
சோழவந்தான் வடக்கு வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் மகளிர் குழு சார்பில் தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டது. மேளதாளத்துடன் 4 ரத வீதியும் சுற்றி வந்து ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக கம்பத்தில் அபிஷேகம் செய்தனர். பின்னர் கூழ் வார்த்து பக்தர்களுக்க வழங்கினர்.
திரவுபதி அம்மன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், உச்சி காளியம்மன் கோவில், தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் கோவில், உச்சி மகா காளியம்மன் கோவில், திருவேடகம் விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், ஏடகநாதர்-ஏலவார் குழலி அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. சோழவந்தான், காடுபட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- வட்டக் கிளை தலைவர் மணி தாங்கினார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டக் கிளை தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பாக வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி எழுத்தர், ஊர் புற நூலகர்கள், கிராம உதவியாளர்கள், வனத்துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.7850 வழங்கக்கோரி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக் கிளை தலைவர் மணி தாங்கினார்.
துணைத் தலைவர்கள் ராமகிருஷ்ணன், காமாட்சி, இணைச்செயலாளர்கள் ஆறுமுகம், சுந்தர லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டச் செயலாளர் வேல் மயில், மாவட்ட பொருளாளர் ஜெயராமன், மாவட்ட இணைச்செயலாளர் பானு ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார். முடிவில் வட்ட கிளை பொருளாளர் பாண்டியம்மாள் நன்றி கூறினார்.
- படைப்பாற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சிமுகாம் நடந்தது.
- செயலாளர் நாகேஸ்வரன் தலைமை தாங்கினார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி பொட்டுலுப்பட்டியில் அரசு உதவிபெறும் காந்திஜி ஆரம்பபள்ளியில் நிறுவனர் பொன்னு தாய்அம்மாள் நினைவு தினத்தையொட்டி படைப்பாற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சிமுகாம் நடந்தது.
செயலாளர் நாகேஸ் வரன் தலைமை தாங்கினார். பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் பொறியாளர் தன பாலன் முன்னிலை வகித் தார். தலைமைஆசிரியர் வெங்கடலட்சுமி வரவேற் றார்.
முகாமில் மாணவ-மாணவி களுக்கு விஜய லட்சுமி கோகுல கிருஷ்ணன் யோகாவும் நாடகஆசிரியர் செல்வம் நாடகபயிற்சி மற்றும் நடிப்பு, பொம்ம லாட்டம், கைவிளைபொருள் தயாரித்தல் உள்ளிட்ட தனித்திறன்மேம்பாட்டு பயிற்சியளிக்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் ஆசீர் வாதம் பீட்டர், எஸ்தர் டார்த்தி, சுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- முத்திரையிடப்படாத எடையளவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- இந்த தகவல்களை சிவகங்கை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தெரிவித்தார்.
மதுரை
தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி லட்சுமிகாந்தன் ஆணைபடியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிர மணியன் ஆலோசனையின் பேரில், சிவகங்கை தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து, தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் வேலா யுதம், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் தீனதயாளன், வசந்தி, மகாலட்சுமி ஆகியோர் மானாமதுரை வாரச்சந்தையில் ஆய்வு செய்தனர்.
அப்போது முத்திரை யிடப்படாத மின்னனு தராசுகள்-7, மேஜை தராசு-8, விட்டத்தராசு -10. இரும்பு எடைகற்கள்-34 மற்றும் தரப்படுத்தப்படாத எடையளவுகள்-6 ஆக மொத்தம் 65 எடைய ளவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
முத்திரையிடப்படாமல் எடையளவுகள் பயன்படுத்தி னால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் எடையளவுகளை முத்திரையிட்டு பயன்படுத்துமாறும், மின்னனு தராசுகள் வருடத்திற்கு ஒரு முறையும், விட்டத்தராசுகள் மற்றும் படிக்கற்கள் 2 வருடத்திற்கு ஒருமுறையும் முத்திரை யிட்டும், அதன் சான்றிதழை உடன் வைத்திருக்குமாறும், மேலும் பொட்டலப் பொருட்களில் பொருளின் பெயர், பொருளின் நிகர எடை, அதிகபட்ச சில்லரை விற்பனை விலை, தயாரிப் பாளர் முழு முகவரி, நுகர்வோர் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் ஆகிய சான்றுரைகள் இடம் பெற்றிருக்க வேண்டும்.
இல்லையெனில் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப் படும் என்றும் சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வணிகர்களை கேட்டுக்கொண்டார்.
இந்த தகவல்களை சிவகங்கை மாவட்ட தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தெரிவித்தார்.
- அலங்காநல்லூர் வியாபாரி கொலையில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
- முன்விரோதம் காரணமாக இந்த கொலையை செய்ததாக போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோவில்பாப்பாகுடி பகுதியில் கீ செயின் தயாரிக்கும் கம்பெனி வைத்து விற்பனை செய்து வருபவர் பாலன் (வயது45). இவர் கடந்த 8-ந் தேதி இரவு வழக்கம்போல் கம்பெனியை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்ற போது எஸ்.வி.டி நகர் பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் பாலனை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பித்துச் சென்றனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த அலங்கா நல்லூர் போலீசார் தனிப்படை அமைத்து குற்ற வாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் மதுரை, கோச்சடையைச் சேர்ந்த கோடீஸ்வரன் (21), மற்றும் ஆரப்பாளையம், நாக நகரை சேர்ந்த பொன்முருகன் என்ற ஆதி (19) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்தனர்.
பாலனுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலையை செய்த தாக போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் தெரி வித்துள்ளது.
தொடர்ந்து இருவரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டனர்.
- அனைத்து ஊராட்சிகளிலும் சுதந்திர தின கிராமசபை கூட்டம் நடந்தது.
- 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான வருகிற 15-ந் தேதியன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட் சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், தூய்மை யான குடிநீர் விநியோ கத்தினை உறுதி செய்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்து தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன் இயக்கம், மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.
மேற்படி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் அவ்வூராட்சியில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். மேலும், கிராம சபை விவாதங்களில் பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
எனவே மதுரை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு விவாதிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






