என் மலர்
மதுரை
- கட்டி முடித்து 5 ஆண்டுகளாகியும் அங்கன்வாடி மையம் பயன்பாட்டுக்கு வரவில்லை.
- அங்கன்வாடி மையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில் கடந்த 2017-18-ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.8.50 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத அங்கன்வாடி மையத்தால் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சமுதாயக்கூடத்தில் பயின்று வருவது பெற்றோர்கள் மத்தியில் வேதனையை உருவாக்கி யுள்ளது.
அங்கன்வாடி மையம் பயன்பாட்டிற்கு வராமலேயே கடந்த 2022-23-ம் ஆண்டில் அங்கன் வாடி மையம் பராமரிப்பு செய்தல் என்ற பெயரில் 1.75 லட்சம் மதிப்பில் மராமத்து பணியும் செய்துள்ளது பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளா க்கியுள்ளது.
மேலும் பேவர் பிளாக் அமைத்தல் என்ற பெயரில் 4.55 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி முன்பு பேவர் பிளாக் அமைத்து சாலையும் அமைத்துள்ள ஊரக வளர்ச்சித் துறையினர் அங்கன்வாடி மையத்தை திறப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் குழந்தைகள் தற்போது சமுதாய கூடத்தில் உள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளாக திறக்கப்ப டாமல் உள்ள நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் குழந்தை களை தங்கி படிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் அங்கன்வாடி மையத்தை திறக்க அதிகா ரிகளிடம் பொதுமக்கள் சார்பிலும் ஊராட்சி மன்றத்தின் சார்பிலும் தொடர்ந்து முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் குழந்தை களை சமுதாய கூடத்தில் தொடர்ந்து தங்க வைக்க முடியாத நிலை உள்ளது. ஆகையால் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாநாட்டில் அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பம், குடும்பமாக கலந்துகொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
- முன்னாள் அமைச்சர்களிடம் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
மதுரை:
மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டுப் பணிகளை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க. வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி மதுரை ரிங் ரோடு வலையங்குளம் பகுதியில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மாநாட்டில் அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பம், குடும்பமாக கலந்துகொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதற்கேற்ப சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றவாறு பந்தல் அமைக்கப்படுகிறது.
வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் இருந்து வாகனங்களை நிறுத்துவதற்கு தனித்தனியாக விரிவான பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் முக்கிய பணிகள் இரவு, பகலாக நடைபெற்று வருகின்றன. இதற்காக பணியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் மாநாட்டு திடலில் முகாமிட்டு பணிகளை முடுக்கி விட்டு வருகிறார்கள்.
வருகிற 16-ந்தேதிக்குள் மாநாட்டு பணிகள் அனைத்தும் நிறைவடைய உள்ள நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை திடீரென மாநாடு நடைபெறும் வலையங்குளம் பகுதிக்கு வந்தார்.
இதற்காக இன்று அதிகாலை சேலத்தில் இருந்து காரில் புறப்பட்ட அவர் மாநாட்டு திடலுக்கு வருகை தந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அ.தி.மு.க.வினர் வந்தனர். மாநாட்டு திடலுக்கு எடப்பாடி பழனிசாமி வந்ததும் அவரை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், கே.டி.ராஜேந்திர பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., ஐ.டி. பிரிவு ராஜ் சத்யன் உள்ளிட்டோர் வரவேற்றனர் .
இதைத்தொடர்ந்து அங்கு முன்னாள் அமைச்சர்களிடம் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். அப்போது மாநாட்டில் மேடை மற்றும் பந்தல் அமைப்பு, பார்க்கிங் வசதி, சமையல் கூடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்வது தொடர்பான வரைபடத்தை முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்தனர்.
அப்போது அவரும் அதை பார்த்து மாநாட்டு பந்தல் மற்றும் சமையல் கூடங்கள் அமைய உள்ள பகுதிகளை சுற்றிப் பார்த்தார். மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து சில ஆலோசனைகளையும் வழங்கினார்.
வாகனங்கள் நிறுத்துமிடங்களில் கூடுதலாக வாகனங்களை நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யவும், மாநாட்டுக்கு வருபவர்கள் நெரிசலில்லாமல் செல்லவும் பொது மக்களுக்கு இடையூறு இன்றி வாகனங்களை நிறுத்தவும் ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மாநாட்டு திடலில் இருந்த எடப்பாடி பழனிசாமி கப்பலூர் பகுதிக்கு சென்று காலை உணவு அருந்திய பின்னர் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
- கிளெஸ்டர் அளவிலான போட்டிகளில் ஆயிரக்கணக்கான கிராமப்புற இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
- அலங்காநல்லூரில் நடைபெற்ற வாலிபால் போட்டியை தமிழக பத்திரப் பதிவு துறை அமைச்சர் திரு. மூர்த்தி தொடங்கி வைத்தார்.
ஈஷா அவுட்ரீச் சார்பில் தென்னிந்திய அளவில் நடத்தப்படும் 15-வது 'ஈஷா கிராமோத்வசம்' திருவிழாவின் விளையாட்டு போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் இன்று (ஆக.12) கோலாகலமாக தொடங்கியது.
70-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற கிளெஸ்டர் அளவிலான இப்போட்டிகளில் ஆயிரக்கணக்கான கிராமப்புற இளைஞர்கள் விளையாட்டு வீரர், வீராங்கணைகளாக கலந்து கொண்டனர். மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற வாலிபால் போட்டியை தமிழக பத்திரப் பதிவு துறை அமைச்சர் திரு. மூர்த்தி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடங்கி வைத்தார்.
இதேபோல், புதுச்சேரி கூடப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியை புதுச்சேரி பொது விநியோகம் மற்றும் சமூக மேம்பாட்டு துறை அமைச்சர் திரு. சாய் சரவணக்குமார் அவர்களும், ஈரோட்டில் நடைபெற்ற த்ரோபால் போட்டியை பாஜக சட்டமன்ற உறுப்பினர் திருமதி. சரஸ்வதி அவர்களும் தொடங்கி வைத்தனர்.

இதுதவிர, கோவை, திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், கடலூர், வேலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போட்டிகளில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த நிர்வாகிகள், கவுன்சிலர்கள், காவல் துறையினர் என பல தரப்பினர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று தொடங்கி வைத்தனர்.
இந்த கிளெஸ்டர் போட்டிகள் இன்றும் நாளையும் நடைபெறும். முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும், தேர்வாகும் அணிகள் அடுத்த மாதம் நடைபெறும் டிவிஸினல் போட்டிகளில் கலந்து கொள்ள முடியும். தென்னிந்திய அளவிலான இறுதிப் போட்டிகள் கோவையில் ஆதியோகி முன்பு செப்.23-ம் தேதி மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
- கொலை முயற்சியில் தொடர்புடைய 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் கண்காணித்து வந்தனர்.
மதுரை
மதுரை கீரைத்துரை மேலத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் நிறைகுளத்தான். இவரது மகன் சதீஷ்குமார் (வயது24). இவர் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டி ருந்தார். அவரை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இதில் அவர் பொதுமக்க ளுக்கும், பொது அமைதிக் கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து நடந்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து சதீஷ் குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தென்மண்டல ஐ.ஜி.யும், மதுரை நகர் கூடுதல் பொறுப்பு போலீஸ் கமிஷனருமான நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து சதீஷ்கு மாரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
காமராஜர்புரம் திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் மணிகண்டன் என்ற குட்டமணி (22). இவர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர். அவரை போலீசார் கண்காணித்து வந்தனர்.
இதில் பொதுமக்க ளுக்கும், பொது அமை திக்கும் குந்தகம் விளை விக்கும் வகையில் செயல் பட்டு வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நரேந்திரன்நாயர் உத்தரவின் பேரில் போலீசார் மணி கண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
கீரைத்துரை மேல தோப்பு 3-வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் சரவணன் என்ற கோபி சரவணன். கொலை வழக்கில் சம்பந்தப் பட்ட இவர் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து நரேந்திரன் நாயர் உத்தர வின்பேரில் போலீசார் சரவணனை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
மதுரையில் ஒரே நாளில் 3 வாலிபர்களை போலீசார் அதிரடியாக குண்டர் சட்டத் தில் கைது செய்துள்ளனர்.
- மதுரையில் வீட்டின் கதவை உடைத்து ரூ.6 லட்சம் நகை-பணம் திருட்டு சம்பவம் நடந்தது.
- மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை தனக்கன்குளம் பைரவர் நகர் 6-வது குறுக்கு தெரு திருவள்ளுவர் நகர் விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது45). இவர் குடும்பத்து டன் வெளியூர் சென்றிருந் தார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 11 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 500-ஐ கொள்ளை யடித்து சென்று விட்டனர்.
வெளியூரில் இருந்து பாஸ்கரன் திரும்பி வந்து பார்த்தபோது நகை-பணம் கொள்ளை போனது தெரிய வந்தது.
இதுகுறித்து திருநகர் போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்ற னர்.
அண்ணா நகர் மஸ்தான் பட்டி மீனாட்சிபட்டியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான டவர் ஒன்று உள்ளது. இந்த டவரில் 24 பேட்டரிகள் பொருத்தப் பட்டிருந்தன. இங்கு காவலாளியாக சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சந்திரன் (40) என்பவர் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் டவரில் பொருத்தப்பட்டிருந்த 24 பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து சந்திரன் அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆழ்துளை கிணறு விபத்து தடுப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
- பல வேளைகளில் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டத்தில் உள்ள பராமரிப்பு இல்லா மல் கைவிடப்பட்ட நிலை யில் உள்ள திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், குவாரிக்குழி கள் போன்றவை மனிதர்க ளுக்கு குறிப்பாக குழந்தை களுக்கு பெரிய அச்சுறுத்த லாக உள்ளன. இதனால் பல வேளைகளில் உயிரிழப்பு களும் நிகழ்கின்றன. இதைத் தவிர கால்நடைகள் உள்ளிட்ட பிற உயிர்க ளுக்கும் இவ்வகையான கிணறுகள் அச்சுறுத்தலாக உள்ளன.
ஆழ்துளை கிணறு விபத்துக்களை தடுப்ப தற்கான பாதுகாப்பு வழி காட்டு நெறி முறைகளை 2010-ம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றம் வகுத்தளித்தி ருக்கிறது. அந்த வழிகாட்டி நெறி முறைகள் அனைத்தை யும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்த பணிகளை மேற்கொள்வதற்கு மாவட்டங்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள பசுமை நிதி மாவட்டக் கனிம நிதி ஆகிய நிதி ஆதாரங்களைப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.
திறந்த வெளிகிணறுகள், ஆழ்துளை கிணறுகள், சாலையோர கட்டுமான பள்ளங்கள், சாலையோர கால்வாய்கள், கைவிடப் பட்ட குவாரி கிடங்குகள் ஆகியவற்றில் விபத்து ஏற்படாவண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக தலைமை செயலரும் ஆலோசனை வழங்கி உள்ளார்.
அந்த ஆலோசனையின் படி அனைத்து கிராமங்க ளிலும் உள்ள திறந்த வெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், சாலையோரங்க ளில் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள், ஆழமான கால்வாய்கள் ஆகியவை குறித்து கணக்கெடுப்பு செய்ய வேண்டும். அவற்றில் அந்தந்த துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட விபத்து தடுப்பு நடவடிக்கை கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- மதுரை மாவட்டத்தில் நடந்த 31,750 மரக்கன்றுகள் நடும் திட்ட தொடக்க விழாவில் கலெக்டர் பங்கேற்றார்.
- அனைத்து ஊராட்சிகளிலும் மரக்கன்று நடும் பணி நடைபெறும்.
மதுரை
மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில் என் மண் என் தேசம் நிகழ்ச்சி மூலமாக அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மதுரை மாவட்டத்தில் உள்ள 420 கிராம ஊராட்சிகளில் 75 மரக்கன்றுகள் வீதம் 31,750 மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் ஆண்டாள் கொட்டாரம் கிராமத்தில் உள்ள பள்ளியில் மரக்கன்று நடும் பணியை மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அரவிந்த், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, நேரு யுவகேந்திரா இணை இயக்குனர் செந்தில்குமார் உள்பட பல கலந்து கொண்டனர். அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள முன்னாள் ராணுவத்தினர் மற்றும் தியாகிகளின் பங்களிப்புடன் இந்த மரக்கன்று நடும் பணி நடைபெறும் என்றும், மேலும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளிலும் இந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புதிய சாலை அமைக்கும் பணிகள் 20 நாட்களில் தொடங்கப்படும்
- சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் மூர்த்தியிடமும், மதுரை மாவட்ட கலெக்டரிடமும் கோரிக்கை மனு கொடுத்தனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தனியாமங்கலம், சாத்தமங்க லம், சருகுவலையப்பட்டி ஆகிய பகுதிகளில் ஆற்று ஓரத்தில் மண் சாலை உள்ளது. இங்கு தார் சாலை அமைத்து தர வேண்டும் என அந்த பகுதி விவசாயி கள் சில நாட்க ளுக்கு முன்பு அமைச்சர் மூர்த்தியிடமும், மதுரை மாவட்ட கலெக்ட ரிடமும் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் இன்று அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதா, வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகி யோர் அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட னர். விவசாயிகள் பயன் பெறும் வகையில் புதிய சாலைகளை அமைப்பதற்கு ஏதுவாக பாதை உள்ளதா? என அவர்கள் ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் கூறுகையில், புதிய தார் சாலை அமைக்கும் பணி இன்னும் 20 நாட்களில் தொடங்கப்படும் என்றார்.
ஆய்வின் போது மேலூர் நகர் தலைவர் முகமது யாசின், ஒன்றிய செயலா ளர்கள் பாலு, ராஜராஜன், மூர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைபுகழேந்தி, வேலாயுதம், பொது குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சுபைதாஅப்பாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அருள் ஆனந்தர் கல்லூரியின் 54-வது ஆண்டு விளையாட்டு விழா நடக்கிறது.
- உடற்கல்வித்துறைத் தலைவர் வீரபரமேஸ்வரி நன்றி கூறினார்.
மதுரை
மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியின் 54-வது ஆண்டு விளையாட்டு விழா போதை பொருள்களுக்கு எதிரான மாணவர்களின் உறுதிமொழியுடன் தொடங்கியது. கல்லூரி விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான இன்னாசி வரவேற்றார்.
இவ்விளையாட்டு விழாவில் கல்லூரி முன்னாள் மாணவரும் (பழனி)மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முத்துக்கருப்பன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கல்லூரி மாணவ, மாணவிகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-
இக்கல்லூரி அனைத்து விதமான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்து மாணவர்களை உற்சாகப்படுத்தி வருகிறதை ஒரு முன்னாள் மாணவனாக கண்டு மகிழ்கிறேன். மேலும் மாணவர்கள் சமுதாய அக்கறை உள்ளவர்களா கவும் வளர வேண்டும் என்றார். தொடர்ந்து பேசி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார்.
மதுரை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வினோத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்திப் பேசி போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு களும், சான்றிதழ்களும் வழங்கினார்.
கல்லூரி அதிபர் ஜான் பிரகாசம் செயலர் அந்தோ ணிசாமி, முதல்வர் அன்ப ரசு, இணை முதல்வர் சுந்தர ராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
உடற்கல்வி இயக்குநர் வனிதா 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான விளையாட்டு விழா ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. உடற்கல்வித்துறைத் தலைவர் வீரபரமேஸ்வரி நன்றி கூறினார்.
- மண்டல ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது.
- கூட்டத்தில் 14-ந்தேதி வைகோ பேசுகிறார்.
மதுரை
மதுரையில் வருகிற 14-ந்தேதி நடைபெறும் ம.தி.மு.க. மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் வைகோ எம்.பி. சிறப்புரையாற்றுகிறார்.
இது தொடர்பாக மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115-வது பிறந்தநாள் மாநாடு அடுத்த மாதம் 15 -ந் தேதி மதுரையில் சிறப்பாக கொண்டாடப்படு கிறது. இதையொட்டி மதுரை மண்டல ம.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வருகிற 14-ந்தேதி
(திங்கள்கிழமை) மாலை 5 மணி அளவில் தெப்பக்குளம் நோட்புக் அரங்கில் நடைபெறுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் எம்.எல்.ஏ., மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மார்நாடு, தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராகவன், தேனி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், ராமநாத புரம் மாவட்ட செயலாளர் சுரேஷ், சிவகங்கை மாவட்ட செயலாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வைக்கிறார்கள்.
கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. சிறப்புரையாற்று கிறார். மேலும் தலைமை கழக நிர்வாகிகள் அவை தலைவர் அர்ச்சுனராஜ், பொருளாளர் செந்தில திபன், முதன்மை செயலா ளர் துரை வைகோ, துணை பொதுசெயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி மணி, ஆடுதுறை முருகன், ராஜேந்திரன், ரொஹையா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
முடிவில் மாவட்ட அவைத் தலைவர் சுப்பையா நன்றி கூறுகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை மாநகர், தெற்கு, வடக்கு மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- அன்னை பாத்திமா கல்லூரி சார்பில் மரம் நடும் விழா நடந்தது.
- இதற்கான ஏற்பாட்டை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனியாண்டி செய்தி ருந்தார்.
திருமங்கலம்
திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அணி எண் 113 சார்பாக கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் தத்தெடுத்த கிராமங்களுள் ஒன்றான மைக்குடி கிராமத்தில் தாளாளர் எம்.எஸ்.ஷா மற்றும் பொருளாளர் எம்.எஸ்.ஷகீலா ஷா ஆகியோரின் வழிகாட்டுதலுடன் மரம் நடுவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் தலைமை தாங்கினார். மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டி சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டார்.
மைக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் பாண்டி யம்மாள் மற்றும் மைக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளி தலைமை யாசிரியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மாவட்ட பசுமலை வனச்சரகர் கிரிதரன் மற்றும் வனக்காவலர் உமையவேல் ஆகியோர் 300 மரக்கன்றுகளை வழங்கினர்.
இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், மைக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனியாண்டி செய்தி ருந்தார்.
- அலங்காநல்லூர் அருகே இளம்பெண்ணை கொன்று உடல் கிணற்றில் வீசினார்.
- எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையளிகள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குலமங்கலம்-குமாரம் செல்லும் சாலையோரத்தில் உள்ள விவசாய கிணற்றில் அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் மிதப்பதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் 1 மணி நேரம் போராடி கயிற்று கட்டிலை கிணற்றில் இறக்கி சடலத்தை மீட்டனர். தொடர்ந்து கைரேகை மற்றும் தடயவியல் நிபு ணர்கள் வரவ ழைக்கப்பட்டு பரிசோதனை நடந்தது.
அப்போது இளம்பெண் கால்கள் மற்றும் இடுப்பில் கயிறு கட்டப்பட்டிருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பிரேதத்தை மதுரை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
கிணற்றில் அழுகிய நிலையில் கை, கால்கள் கட்டப்பட்டு இறந்து கிடந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. அவரை அடையாளம் காண அருகிலுள்ள காவல் நிலையத்தில் காணாமல் போன புகார் உள்ளதா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இளம் பெண்ணை கொலை செய்து கிணற்றில் வீசி சென்றது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையளிகள் யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.






