என் மலர்tooltip icon

    மதுரை

    • தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • .இதில் ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நொண்டி கோவில்பட்டியில் ஆதிபராசக்தி கோவில் உள்ளது. இதன் 27-ம் ஆண்டு வருடாந்திர ஆடிப்பூர திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு ஏராளமான பெண்கள் அக்னிச்சட்டி ஏந்தியும், விவசாயம் செழிக்க முளைப்பாரி எடுத்தும், கஞ்சி களையம் சுமந்தும், சில பக்தர்கள் நேர்த்திக்கடனாக அலகு குத்தியும் நொண்டி கோவில் பட்டியில் உள்ள கோவிலில் இருந்து புறப்பட்டு மேலூர் அழகர்கோவில் ரோடு, பெரிய கடை வீதி, செக்கடி பஜார், பஸ் நிலையம், சேனல் ரோடு வழியாக நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து மீண்டும் கோவிலை வந்து அடைந்தனர்.அதனைத் தொடர்ந்து ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் முன்பாக அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தான் பகுதிகளில் பிரதோஷ நடந்தது.
    • இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பிரசித்தி பெற்ற பிரளயநாத (சிவன்) கோவி லில் பிரதோஷ வழிபாட்டில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடை பெற்று, மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் பிர தோஷ வழிபாட்டில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர். இதேபோல் மன்னாடி மங்கலம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், சோழவந்தான் பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில், திருவாவய நல்லூர் மீனாட்சி சுந்தரேசு வரர் கோவில், விக்கி ரமங்கலம் கோவில்பட்டி மருததோய ஈஸ்வர முடையார் கோவில் தென் கரை அகிலாண்டேசுவரி சமேத மூலநாதசுவாமி கோவில் உள்பட இப்பகுதி உள்ள சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • மேலவளவு கிராம பகுதிகளில் சி.சி.டி.வி. கேமரா அமைப்பது குறித்து போலீஸ் நிலையத்தில் ஆலோசனை நடந்தது.
    • சப்-இன்ஸ் பெக்டர் பிரகாஷ் தனிப் பிரிவு ஏட்டு ரஞ்சித் ஆகி–யோர் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது மேலவளவு காவல் நிலை–யம். இதற்கு உட்பட்ட கிரா–மங்களில் குற்ற சம்பவங் களை தடுக்கும் பொருட்டு பொது இடங்களில் சி.சி.டி.வி. கேமரா அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பாக மேல–வளவு போலீஸ் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர்க–ளுடன் கலந்தாய்வுக்கூட்டம் மேலூர் இன்ஸ்பெக்டர் மன்னவன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத் தில் அ.வல்லாளப்பட்டி பேரூராட்சி சேர்மன் கும–ரன்,

    மேலவளவு ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் மலைச்சாமி, கிடாரிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா மதிவாணன், சேக்கிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பிரபு,அ.வலையபட்டி ஊராட்சி மன்ற தலைவர் தீபா தங்கம், மேலவளவு சப்-இன்ஸ் பெக்டர் பிரகாஷ் தனிப் பிரிவு ஏட்டு ரஞ்சித் ஆகி–யோர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெகன் மற்றும் வடக்கு ஒன்றிய பாக முகவர்கள் கலந்து கொண்டனர்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய தி.மு.க. வாக்குச் சாவடி பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் சீமானூத்து வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி தலைமை தாங்கினார்.

    அவைத் தலைவர் பெத்தணன், ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயச்சந்திரன், குமுதா, பாலகிருஷ்ணன், அன்னைராஜா, ஒன்றிய பொருளாளர் ஆண்டி, மாவட்ட பிரதிநிதிகள் பிரசாத், எபினேசர், துரைப்பாண்டி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் கலைவாணன், கலை இலக்கிய மாவட்ட துணை அமைப்பாளர் பிரசாந்த், கீரிபட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெகன் மற்றும் வடக்கு ஒன்றிய பாக முகவர்கள் கலந்து கொண்டனர்.

    • 14 மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
    • போட்டியில் வெற்றிபெறும் ஒலிபெருக்கி உரிமையாளர்களுக்கு வருகிற 22-ந்தேதி அமைச்சர் பி.மூர்த்தி பரிசு மற்றும் கோப்பைகளை வழங்குகிறார்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அமைந்துள்ளது தும்மக்குண்டு கிராமம். இங்கு மறைந்த பின்னணி இசை பாடகர் டி.எம்.சவுந்தரராஜனின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இசையில் புதிய பரிணாமங்கள் தலையெடுத்த போதிலும் பழமைக்கு என்றுமே மவுசு உண்டு என்பதை இந்த கிராம மக்கள் மெய்ப்பித்து உள்ளனர்.

    அந்த வகையில் தமிழ்நாடு ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் இசை போட்டி திருவிழா தும்மக்குண்டு கிராமத்தில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

    அவர்கள் கூம்பு வடிவிலான ஒலிபெருக்கி மூலம் பாரம்பரிய முறைப்படி கிராமபோன் ரெக்கார்டு மூலம் பழைய டி.எம்.சவுந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோரின் பாடல்களை ஒலிக்க வைத்து போட்டிகளை நடத்தினர்.

    இரு தரப்பினரிடையே யாருடைய பாடல் அதிக சத்தத்துடன் ஒலிக்கப்படுகிறதோ அவர் வெற்றியாளராக கருதப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது. மூன்று சுற் றுக்களாக நடைபெறும் இந்த போட்டியில் வெற்றிபெறும் ஒலிபெருக்கி உரிமையாளர்களுக்கு வருகிற 22-ந்தேதி அமைச்சர் பி.மூர்த்தி பரிசு மற்றும் கோப்பைகளை வழங்குகிறார்.

    நலிவடைந்து வரும் இந்த தொழிலை மீட்டெடுக்கவும், ஒலிப்பெருக்கி உரிமையாளர்களுக்கு அரசு உதவி தொகை வழங்க நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தும் விதமாகவும் இது போன்ற போட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருவதாகவும், இந்த ஆண்டு டி.எம்.சவுந்தரராஜனின் நூற் றாண்டு விழாவை முன்னிட்டு வெகுவிமரிசையாக இந்த போட்டி நடைபெற்று வருவதாகவும் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

    • அன்வர்ராஜா பா.ஜ.க.வுக்கு எதிராக பேசியதால் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்.
    • மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க.வின் பிரமாண்ட எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.

    மதுரை:

    மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பிறகு நடைபெறும் முதல் மாநில மாநாடு என்பதால் தொண்டர்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரை திரட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் வியூகம், பாரதிய ஜனதா கட்சியுடனான உறவு, கூட்டணி கட்சிகளின் அணுகுமுறை மற்றும் கட்சி வளர்ச்சி தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் சசிகலா, டி.டி.வி.தினகரன் தொடர்பாகவும் முக்கிய தீர்மானங்கள் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக அண்ணாமலை வந்தது முதல் தொடர்ந்து அ.தி.மு.க. குறித்தும், முன்னாள் அமைச்சர்கள் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்.

    கடந்த வாரம் பேட்டி அளித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பிரதமர் மோடி எங்களை பற்றி புரிந்துகொண்ட அளவுக்கு கூட அண்ணாமலை புரிந்து கொள்ளவில்லை என்றார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் சமீபத்தில் நடைபயணம் தொடங்கி மதுரை வந்த அண்ணாமலை, அரசியல் விஞ்ஞானிகளுக்கெல்லாம் பதில் கூறி என்னை தரம் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என்று செல்லூர் ராஜூவை விமர்சனம் செய்தார். இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே உச்சக்கட்ட வார்த்தைபோர் ஏற்பட்டு தற்போது அமைதி நிலவுகிறது.

    இதையடுத்து அண்ணாமலை திடீரென தனது பாதயாத்திரையை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார். 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் விருதுநகரில் நடைபயணத்தை தொடங்கிய அவர் அ.தி.மு.க. குறித்து எதுவும் பேசாமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.

    ஆனால் அவரது நெருங்கிய ஆதரவாளரும் மதுரை பா.ஜ.க. தலைவருமான மகா சுசீந்திரன், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகளை வெளியிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

    மேலும் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 66 இடங்களில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. அதன் பிறகு நடந்த, உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜனதா கூட்டணியின்றி தனித்துப் போட்டியிட்டபோது தோல்வியடைந்தது என்று கூட்டணிக்கு தலைமை தாங்கும் அ.தி.முக.வை மிரட்டும் வகையில் கடிதம் எழுதியிருந்தார்.

    இந்த கடிதம் பகிரங்கமாக வெளியான பிறகும் மகா சுசீந்திரனின் இந்த கடித விவகாரத்தில் அண்ணாமலை எதுவும் கூறாததால், பா.ஜ.க. மாவட்டத் தலைவருக்கு அவர் ஆதரவாகவே இருப்பதாக அ.தி.மு.க.வினர் கருதுகிறார்கள்.

    இதனிடையே கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க.வுடன் கூட்டணி வைத்திருந்தபோது, பா.ஜ.க. 19 சதவீத வாக்குகளை பெற்றது என்றும், அதேபோல் வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் மூன்றாவது அணி அமைத்து போட்டியிட அண்ணாமலை ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுத்து வருவதாகவும், கூறப்படுகிறது.

    இந்த அணியில் அ.ம.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. மற்றும் பிற கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைத்து போட்டியிட்டால் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடிக்கு மக்கள் ஆதரவு அதிகரிக்கும். இதனால் தமிழகத்தில் அ.தி.மு.க.வை விட அதிக வாக்குகளை பெறமுடியும். அதே கூட்டணி 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் அதிக தொகுதிகளை வெல்லலாம் என்றும் பா.ஜ.க. கணக்கு போட்டு வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. தன் பங்கிற்கு, அக்கட்சியின் சிறுபான்மை பிரிவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜாவை மீண்டும் கட்சியில் இணைத்துள்ளது. அன்வர்ராஜா பா.ஜ.க.வுக்கு எதிராக பேசியதால் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்.

    தற்போது அவர் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்கப்பட்டது பா.ஜனதாவுக்கு எதிராக விமர்சனத்தை தொடர்வதற்காகவே என்று பா.ஜனதா மாநில தலைமை நினைக்கிறது.

    இதற்கிடையே மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க.வின் பிரமாண்ட எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பாராளுமன்ற தேர்தல் குறித்து, முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மற்றும் அ.தி.மு.க. தலைவர்களின் பேச்சுக்கள் பாராளுமன்ற தேர்தல் வியூகத்தைக் குறிக்கும் வகையில் அமையும் என்றும் கூறப்படுகிறது. எனவே தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி வருகிற பாராளுமன்ற தேர்தலில் தொடருமா என்ற கேள்விக்கு அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் விடை கிடைக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

    • மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படுகிறது.
    • ஆம்னி பஸ் நிலையமும் சீரமைக்கப்படுகிறது.

    மதுரை

    மதுரை மட்டுமல்லாது தென் தமிழகத்தின் முக்கிய பஸ் நிலையமாகவும், சந்திப்பு மையமாகவும் மாட்டுத்தாவணி ஒருங்கி ணைந்த எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் உள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் இந்த பஸ் நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

    மதுரை நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததால், 3 இடங்களில் செயல்பட்டு வந்த பேருந்து முனையங்களுக்கு மாற்றாக மாட்டுத்தாவணியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. மதுரை மாநராட்சி சார்பில் ரூ.10 கோடி செலவில், சுமார் 10 ஏக்கர் பரப்பில் இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டு 1999-ம் ஆண்டில் திறக்கப்பட்டது. இது ஐஎஸ்ஓ 9001:2000 தரச் சான்று பெற்ற பஸ் நிலையமாகும்.

    தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. தற்போது எட்டு பகுதிகளாக இந்த பஸ் நிலையம் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் தடத்தில் சென்னை, கடலூர், நெய்வேலி , சிதம்பரம், பெங்களூரு, மைசூர், திருப்பதி, எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் பிற மாநிலங்களுக்கான பஸ்களும், 2-வது தடத்தில் திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர் மற்றும் பெரம்பலூர், 3-வது தடத்தில் சிவகங்கை, தோண்டி, கொட்டைபட்டினம், தஞ்சாவூர், சிதம்பரம், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் கர்நாடக பஸ்களும், 4-வது தடத்தில் காரைக்குடி, வேதாரண்யம், வேளாங்கண்ணி, தேவகோட்டை, மேலூர், அறந்தாங்கி, பட்டுகோட்டை, பொன்னமராவதி, சிங்கம்புணரி பஸ்களும், 5-வது தடத்தில் ராமநாதபுரம், ஏர்வாடி, ராமேஸ்வரம், பரமக்குடி, சாயல்குடி, கமுதி, கீழக்கரை பஸ்களும், 6-வது தடத்தில் ராசபாளையம், தென்காசி, செங்கோட்டை, ஸ்ரீவில்லி புத்தூர், சங்கரன்கோவில், பாபநாசம் மற்றும் கடைய நல்லூர் பஸ்களும், 7-வது தடத்தில் அருப்புக்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர் மற்றும் விளாத்திகுளம் பஸ்களும், 8-வது தடத்தில் திருநெல் வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், கோவில்பட்டி, களியக்காவிளை, வள்ளியூர் மற்றும் கேரள மாநில பஸ்களும் இயக்கப்படு கின்றன.

    போலீஸ் அவுட் போஸ்ட், தாய்மார்கள் ஓய்வறை, டிக்கெட் முன்பதிவு மையங்களும் இங்கு உள்ளது.

    தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் இங்கிருந்து பஸ்கள் இயக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதையடுத்து ஆம்னி பஸ்களுக்கென 2014-ம் ஆண்டு தனி பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கிருந்து சென்னை, பெங்களூர், திருப்பதி, மங்களூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கும், முக்கிய நகரங்களுக்கும் தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் தற்போதைய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு 24 ஆண்டுகள் ஆகி விட்டது. இந்த நிலையில் பஸ் நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு சேத மைடந்து அடிக்கடி உதிர தொடங்கியது. இதனால் பயணிகளுக்கும், வியாபாரி களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. தாய்மார்கள் ஓய்வறை பராமரிப்பின்றி இருந்ததால் அதனை பயன்படுத்துவதை தவிர்க்க தொடங்கினர்.

    மேலும் கழிவறைகள் பழுதடைந்து காணப்பட்டன.இதையடுத்து பஸ் நிலையத்தை முழுமையாக புனரமைப்பு செய்ய திட்ட மிடப்பட்டது. பயணி களுக்கான இருக்கைகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, கழிவறை, வாகன நிறுத்துமிட வசதிகளை மேம்படுத்தவும் மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் புதுப்பிப்பு, ஆம்னி பஸ் நிலையம் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக டெண்டர் விடும் பணிகளை மாநகராட்சி ெதாடங்கி உள்ளது. டெண்டர் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்ற னர்.

    சேதமடைந்த மேற்கூரை கள், பைப் லைன்கள், மின் இணைப்புகளை முழுமை யாக புனரமைப்பு செய்ய வும், காத்திருப்போர் மற்றும் பயணிகள் அமருவதற்கான வசதிகளை மேம்படுத்தவும், சுகாதார வசதிகளை மேம்படுத்தவும், தாய்மார் கள் பாலூட்டும் அறையை முழுமையாக புதுப்பிக்கவும், பஸ் நிலையத்திற்குள்ள ரோடுகளை செப்பனிட்டு சீரமைக்கவும் திட்டமிடப் பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சுதந்திர தினத்தைெயாட்டிமதுரையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • ரெயில், விமான நிலையங்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மதுரை

    இந்திய திருநாட்டின் 77-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழு–வதும் உள்ள விமான நிலை–யங்கள், வழிபாட்டு தளங் கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரெயில், பஸ் நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டு உள் ளது. மதுரையில் தீவிர பாது–காப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

    மதுரை விமான நிலை–யத்துக்கு வரும் வாகனங் களை பிரதான நுழைவாயில் பகுதியிலேயே நிறுத்தி சந்தேகப்படும் வாகனங் களை பாதுகாப்பு படையி–னர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்கின்றனர். வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் விமான நிலையம் முழுவதும் பரிசோதிக்கின்ற–னர்.

    விமான நிலைய வளாகத் தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து வந்து கண்காணிக்கின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மோப்ப நாய் களுடன் மதுரை விமான நிலையத்தின் உள்பகுதிக–ளில் தீவிரமாக சோதனை செய்து கண்காணித்து வரு–கின்றனர். முக்கிய பிரமுகர் கள் வரும்போது வழங்கப்ப–டும் பாஸ்களுக்கு கட்டுப் பாடு விதிக்கப்பட்டு உள் ளது.

    விமானங்களுக்கு எரி–பொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பா–டுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள கண்கா–ணிப்பு கேமராக்களு–டன் கூடுதலாக கேமராக்களை அமைத்து விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் தொடர்ந்து கண் காணிக்கப்பட உள்ளது. விமான பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் மேலும் ஒருமுறை விமானங் களில் ஏறும் முன் சோதனை செய்ய திட்டமிடப்பட்டு உள் ளது.

    பயணிகள் எடுத்து வரும் உடைமைகள் ஸ்கேனிங் எந்திரம் மூலம் சோதனை செய்யப்படுகிறது. விமானங் களில் சரக்கு பார்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவி–ரமாக கண்காணித்து, பல–கட்ட சோதனைக்கு பின் ஏற்ற அனுமதிக்கப்படுகின் றன. விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால் உள் நாட்டு பயணிகள் விமானம் புறப்படும் நேரத்துக்கு 1.5 மணி நேரம் முன்னதாகவும், சர்வதேச பயணிகள் 3.5 மணி நேரத்துக்கு முன்னதா–கவும் வருவதற்கு மதுரை விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மதுரை விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    வருகிற 20-ந்தேதி நள்ளி–ரவு வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரி–வித்துள்ளனர். இதேபோல் அசம்பாவிதங்கள் ஏற்படமால் தடுக்கும் வகையில் தென்மண்டல ஐ.ஜி. நரேந்திரன்நாயர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதி–களிலும் மாட்டுத்தா–வணி, ஆரப்பாளையம், பெரியார் பஸ் நிலையங்க–ளில் போலீஸ் பாதுகாப்பு அதி–கரிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் நட–மாட்டத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    மதுரை ரெயில் நிலையத் தில், ரெயில்வே பாதுகாப்புப் படையினர் தீவிர பாது–காப்பு பணிகளில் ஈடுபட் டுள்ளனர். சந்தேகத்திற்கிட–மாக சுற்றித் திரிபவர்களை உடனடியாக பிடித்து விசா–ரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரெயில்வே தடங்க–ளிலும், நடைமேடைகளிலும் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தப்படுகிறது. பயணிகள் மற்றும் அவர்க–ளது உடைமைகள் மெட்டல் டிடெக்டர் சோத–னைக்கு பின்னரே அனும–திக்கப்ப–டுகின்றனர்.

    மேலும் நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடு–பட்டு வருகின்றனர். நகர் பகுதியின் எல்லையில் உள்ள சோதனை சாவடிக–ளில் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.

    மேலும் மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் பஸ் நிலையங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள தங்கும் விடுதிகளிலும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்ப–டுத்தியுள்ளனர்.

    இதேபோல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் சுப்பிர–மணிய சுவாமி கோவில், அழகர் கோவில்கள் மற்றும் முக்கிய வழிபாட்டுத் தலங்க–ளிலும் போலீசார் கண்கா–ணித்து வருகின்றனர்.

    • மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழா இன்று தொடங்கியது.
    • 25-ந்தேதி சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூல திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா ஆகியவை பிரசித்தி பெற்றவை.

    இந்த ஆண்டு ஆவணி மூல திருவிழாவை முன்னிட்டு நேற்று (12-ந் தேதி) வாஸ்து சாந்தி நடந்தது. தொடர்ந்து இன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. கொடி மரத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பிரியா விடையுடன் சுந்தரேசுவர ரும், மீனாட்சி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். அவர்க ளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியையும், அம்மனையும் தரிசனம் செய்தனர்.

    30-ந்தேதி வரை 19 நாட்களுக்கு ஆவணி மூல திருவிழா சிறப்பாக நடை பெற உள்ளது. இந்த நாட்களில் கோவில் சார்பாகவோ, உபயதாரர் கள் சார்பாகவோ தங்க கவசம், வைர கிரீடம், உபய திருக்கல்யாணம், தங்க ரத உலா சேவைகள் நடத்தப் படாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    திருவிழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் காலை, மாலை 2 வேளைகளிலும் 4 ஆவணி மூல வீதிகளிலும் சுவாமியும், அம்மனும் பஞ்ச மூர்த்திக ளுடன் வீதிஉலா வந்து மண்டகப்படிகளில் எழுந்த ருளி பின்பு கோவிலை வந்தடைவர்.

    இன்று முதல் 18-ந்தேதி வரை சந்திரசேகர் உற்சவம், 2-ம் பிரகாரம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும். வருகிற 19-ந்தேதி ஆவணி மூல திருவிழா முதல் நாள் உற்சவத்தில் கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளை யாடல் நடைபெறும்.

    தொடர்ந்து 20-ந்தேதி நாரைக்கு மோட்சம் அளித்தல், 21-ந்தேதி மாணிக்கம் விற்றல், 22-ந்தேதி தருமிக்கு பொற்கிழி அருளியது, 23-ந்தேதி உலவாக் கோட்டை அருளியது, 24-ந்தேதி பாணனுக்கு அங்கம் வெட்டியது, இரவு திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தல வரலாறு திருவிளையாடல், 25-ந்தேதி வளையல் விற்ற திருவிளையாடல் நிகழ்ச்சி யும், இரவு 7.35 மணிக்கு சுந்தரேசுவரருக்கு பட்டாபி ஷேகமும் நடைபெறும். 26-ந்தேதி நரியை பரியாக்கியது, குதிரைக்கு கயிறு மாறியது, 27-ந்தேதி பிட்டுக்கு மண் சுமந்தது, 28-ந்தேதி விறகு விற்றல் ஆகிய திருவிளை யாடல் நிகழ்ச்சிகள் நடை பெறும்.

    27-ந்தேதி பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையா டல் நிகழ்ச்சியில் அதிகாலை யில் சுவாமியும், அம்மனும் பஞ்ச மூர்த்திகளுடன் பிட்டு தோப்புக்கு செல்வர். அங்கு பிட்டு திருவிழா நடை பெறும். இந்த திருவிழாவில் திருவாதவூர் மாணிக்கவாசக ரும், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமியும் மதுரைக்கு எழுந்தருளுவர்.

    அன்று இரவு 9.30 மணிக்கு பிறகு மீனாட்சி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்தற்கு அனுமதிக்கப் படுவர். அன்றைய தினம் இரவு வடக்கு கோபுரம் வழி யாக ஆயிரம்கால் மண்ட பத்தை பார்வையிடுவதற்கும் அனுமதி அளிக்கப்படும்.

    • அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன.
    • இதுகுறித்து திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை சிம்மக்கல் வக்கீல் புதுத்தெரு பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அந்த பகுதியில் பணியில் இருந்த தூய்மை பணி மேற்பார்வையாளர் போலீசுக்கு தகவல் கொடுத்தர். திலகர் திடல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்

    மதுரை ரெயில் நிலைய கிழக்கு நுழைவு வாயில் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கி கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 1989-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் நடந்ததை நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார்
    • ஒத்திகை பார்த்து ஜெயலலிதா நடத்திய நாடகம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் தெரிவித்திருந்தார்

    மக்களவையில் மணிப்பூர் சம்பவத்தையோட்டி பேசிய தி.மு.க. எம்.பி. கனிமொழி துரியோதனன் சபையில் திரவுபதியின் துயில் உரித்தது போன்று நடக்கிறது என்று பேசினார்.

    இதற்கு பதில் அளித்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் அவமானப்படுத்தப்பட்டு ஜெயலலிதாவின் சேலையை இழுத்த கட்சி தி.மு.க. என்று குற்றம் சாட்டினார்.

    இதற்கு பதில் அளிக்கின்ற வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சம்பவம் ஒரு திட்டமிட்ட நாடகம் என்று பொய் சொல்கிறார். இவ்வளவு நாள் தூங்கிக் கொண்டிருந்தார் போல் தெரிகிறது. நான் அந்த சம்பவம் நடக்கும்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். நானும் அந்த அவையிலே இருந்து அதை நேரில் பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன். அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி முன்னிலையில் பெண் என்றும் பாராமல், ஒரு எதிர்க்கட்சி தலைவர் என்றும் பாராமல் ஒரு கொடூர தாக்குதல் நடந்தது.

    திட்டமிட்டே அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி முன்பே தி.மு.க. எல்.எல்.ஏ.க்கள் அம்மாவை கடுமையாக தாக்கினார்கள். அப்போது திருநாவுக்கரசும் அதனை தடுத்தார். அப்போது, தற்போதைய மூத்த அமைச்சர் சேலையை பிடித்தும், தலைமுடியை பிடித்து இழுத்தும் ஒரு கோர தாக்குதலை நிகழ்த்தினார்கள்.

    இதுபோன்ற சம்பவம் எந்த மாநிலத்திலும், எந்த ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினருக்கும், எந்த எதிர்க்கட்சி தலைவருக்கும் நடந்தது கிடையாது. இன்னும் அந்த சம்பவம் எங்கள் நெஞ்சில் இருந்து நீங்காமல் இருக்கிறது. அந்த சம்பவம் நடைபெற்ற தினத்தை கருப்பு தினமாகவே நான் கருதுகிறேன். நான் மீண்டும் சட்டமன்றத்தில் நுழைகின்ற பொழுது தமிழக முதல்-அமைச்சராக நிச்சயம் சட்டமன்றத்துக்கு நுழைவேன் என்று சபதம் ஏற்று அம்மா வெளியில் சென்றார்.

    அதன்படி 1991 தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் நானும் வெற்றி பெற்றேன். அதன் மூலமாக உண்மை வென்றது, தர்மம் வென்றது, நியாயம் வென்றது. இன்றைய தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறான தகவலை, பொய்யான தகவலை வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யான செய்தி வெளியிட்டு தான் ஒரு பொம்மை முதல்வர் என்பதை நிரூபித்துள்ளார்.

    இது கடும் கண்டனத்திற்குரியது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் இதற்கு தகுந்த பாடத்தை புகட்டுவார்கள். இன்றைக்கு எவ்வளவு பாலியல் வன்கொடுமைக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒரு பெண் மீது ஒரு நாட்டினுடைய முதலமைச்சர் கண்ணெதிரே சட்டத்தை பாதுகாக்க கூடிய ஒரு அரசாங்கம் பெண் என்று பாராமல் எதிர்க்கட்சித் தலைவர் என்று பாராமல் அவருடைய சேலையை பிடித்து இழுத்த போது தாக்குதல் நடத்தியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.

    அவர்களை டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும். இப்படி ஒரு நிகழ்வு தாக்குதல் நடத்தியவர்களின் தங்கைக்கோ, சகோதரிக்கோ, தன் மகளுக்கோ ஏற்பட்டிருந்தால் எப்படி மனம் வேதனைப்பட்டு இருக்கிறது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

    மேலும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் தேர்வுக்கு ரத்து என்று சொல்லிய முதல்வர் இதுவரை ஏன் செய்யவில்லை. நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை? எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து இதற்காக குரல் கொடுத்திருக்க வேண்டியதுதானே.

    நாங்கள் காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அ.தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் கூட்டணி கட்சியாக இருந்த போதிலும் பாராளுமன்றத்தை 22 நாள் தொடர் போராட்டம் மூலம் முடக்கினோம். அந்த தில் தி.மு.க.வுக்கு இல்லை. இதெல்லாம் ஒரு பொய்யான தேர்தல் வாக்குறுதி. சட்டத்திற்கு முன்பு எல்லோரும் சமம். எல்லா மாநிலத்திலும் நீட் தேர்வு நிறைவேற்றப்பட்ட நிலையில் தமிழகத்தில் ரத்து செய்வோம் என்று கூறுவது வேடிக்கையான ஒன்று.

    தற்போது எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று கூடி இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து இருக்கிறார்கள். இந்த கூட்டம் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள சென்ற முதல்வர் இந்த கூட்டணியில் இணைவது என்றால் காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று நிபந்தனை வைத்திருக்க வேண்டியது தானே. அப்படி வைத்திருந்தால் இப்போது காவிரியில் தண்ணீர் வந்திருக்கும். விவசாயிகளின் கவலை தீர்ந்திருக்கும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே ஜாதி சண்டை, மத சண்டை வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உடல் தகுதி தேர்வில் தோல்வியால் என்ஜினீயரிங் பட்டதாரி தற்கொலை செய்தார்.
    • விஜய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக மேலூர் அரசு மருத்து–வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள புலி–மலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி–யன் மகன் விஜய் (வயது 27). சிவில் என்ஜினீயரிங் பட்ட–தாரியான இவர் படிப்பை முடித்துவிட்டு தகுதியான வேலையை தேடிக்கொண்டு இருந்தார். இதற்காக அவர் பல்வேறு நேர்முகத்தேர்வு–களையும் சந்தித்துள்ளார்.

    ஆனாலும் உரிய வேலை கிடைக்கவில்லை. இதற்கி–டையே அவர் தனது நண்பர் களின் ஆலோசனைப்படி வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல விரும்பினார்.

    இதற் காக அவர் விண்ணப் பித்து இருந்தார். கடந்த சில மாதங்க–ளுக்கு முன்பு விஜய்க்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது.

    அதற்காக தகுந்த சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கான உடல் தகுதி தேர்வினை தனியார் நிறுவனம் நடத்தி–யுள்ளது. இதில் அவர் தோல்வி அடைந்தார்.

    இத–னால் மிகுந்த மன விரக்திக்கு ஆளான விஜய் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெ–டுத்தார்.

    இதையடுத்து இன்று காலை வீட்டில் இருந்த அவர் தனி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து–கொண்டார். வெளியில் சென்றிருந்த அவரது பெற் றோர் மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து கதறித்துடித்தனர். இதுபற்றி அவர்கள் கீழவளவு போலீ–சாருக்கும் தகவல் தெரிவித்த–னர்.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மேலூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் மன்னவன், கீழவ–ளவு சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் மற்றும் போலீ–சார் தற்கொலை செய்து–கொண்ட விஜய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக மேலூர் அரசு மருத்து–வமனைக்கு அனுப்பி வைத் தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகி–றார்கள்.

    ×